Sunday, January 29, 2012

முல்லை பெரியாறு- பாகம் 34

பாகம்-33 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


இறுதிகட்ட போராட்டம்

டிசம்பர் மாதம் 25ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா, சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிடுகிறார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக எல்லைகளில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் கேரளாவில் காய்கறி, பழங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கும், வெண்டைக்காய் ரூ.130க்கும் விற்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக வந்த தொழில்நுட்பக் குழுவினரிடம் திமிராகப் பேசிய வாக்குவாதம் செய்த கேரள என்ஜீனியர்கள், பின்னர் ஆய்வைப் புறக்கணிப்பதாக செல்போன் மூலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கேரளத்தின் இந்த செயலுக்கு மத்திய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு கடும் கண்டனம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுமாறு கேரளாவை அது அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.,இதில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தலைநகர் சென்னையிலும் போராட்டம் முன் எடுக்க பட்டது.


டிசம்பர் மாதம் 26ம் தேதி

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்

ஏதோ இரண்டு நாடுகள் மோதிக் கொள்வதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர் கருணாநிதி மனு கொடுத்துள்ளார்.

டிசம்பர் மாதம் 27ம் தேதி

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என அனைத்து அண்டை மாநிலங்களும் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. விரைவில் தமிழக நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க புதுமையான போராட்டத்தை நடத்துவேன்.மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடவும் நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

போராட்டத்தின் விளைவாக , முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த அவசர கால குழுவை நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பது போல தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த 40 சமுதாய சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு தீவிரப் போராட்டத்தில் குதிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 28ம் தேதி

புதிய அணை கட்டத் தேவையில்லை என்றதால் நீக்கப்பட்ட கேரள போராட்டக் குழுத் தலைவர் ,இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் சி.பி.ராய். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்தார்.

முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையினைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளில் பதற்றம் தணியாத காரணத்தினால் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு முதல் நாள் தொடங்கப்பட்ட பஸ் போக்குவரத்து, மறுநாளே  நிறுத்தப்பட்டது.

தேனி அருகே உள்ள சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி(35) என்பவர் முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக விஷம் குடித்தார். தற்கொலை செய்து கொண்டார் .

டிசம்பர் மாதம் 29ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் கண்டன பேரணி நடத்தினர்.

கட்சி, சாதி, மத எல்லைகளை கடந்து மொத்த தமிழகமும் முல்லைப்பெரியாறை காக்க கிளர்ந்து எழுந்துள்ளது. எனவே, வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முனைய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார் வைகோ .

வருடம் முடிவில் போராட்டமும் மெல்ல தனிய ஆரமித்து , மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழகத்திற்கு சாதகமாக இருப்பது அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் தணிந்தது. மீண்டும் எதாவது பிரச்சனை செய்தல் இதை விட போராட்டம் பலமாக இருக்கும் என்ற வகையில் நாமும் தீர்வு களை நோக்கி பயணிப்போம் .


                                             தொடரும் ...............................




No comments:

Post a Comment