Tuesday, January 10, 2012

முல்லை பெரியாறு- பாகம் 24

பாகம்-23 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.    
டிசம்பர் புரட்சி -2011 


டிசம்பர் மாதம் 1 ம் தேதி
முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் திட்டத்தை கண்டித்து அதிமுக எம்பிக்கள் அன்று நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.(அதிமுக கட்சி முதல் போராட்டம் )

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளளதாக கேரள அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 2 ம் தேதி

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்டக்கூடாது என்று அம்மாநில அரசை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அதிமுக எம்பிக்கள் நேரில் வலியுறுத்தி கிறார்கள்.
டேம் 999 திரைப்படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பிரதமரிடம் வலியுறுத்தி கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண ஒத்துழைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்

4 மாதங்களில் மட்டும் 22 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டு உம்மன் சாண்டிக்கு ஜெயலலிதா பதில் கடிதம்,இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புள்ளி விவரப்படி கடந்த 4 மாதங்களில் 4 சிறிய அளவிலான ìலநடுக்கங்கள் அதுவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெகுதூரத்தில்தான் ஏற்பட்டுள்ளது என பதிலடி.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி,கேரளா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கவில்லை. அதே சமயம் 116 ஆண்டு பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி நிலஅதிர்வுகள் ஏற்படுவதால் புதிய அணை கட்டுவது தான் நல்லது என்று அவர் சோனியாவிடம் தெரிவித்தார்

அதன் பிறகு அவர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசினார். அப்போது அங்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இருந்தார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று உம்மன் சாண்டி பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங், சாண்டிக்கு எந்தவிதமான உத்தரவாதமும் தரவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, சாண்டி கூறியதைக் கேட்டுக் கொண்டாராம், அவர் கொடுத்த மனுவை வாங்கிக் கொண்டாராம்.

இந்த நிலையில் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் வட்டார செயலாளர் ரோபி என்பவரது தலைமையில்,முல்லை பெரியாறு அணை தமிழக மதகு பகுதிக்கு செல்வதற்காக தேக்கடி நுழைவுவாயில் அருகே குவிந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட காங்கிரசார் அங்கு திரண்டு வந்து தேக்கடி நுழைவுவாயில் பகுதியில் முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு வெறும் 25 போலீஸாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டிசம்பர் மாதம் 3 ம் தேதி

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். உறுதியாக உள்ள முல்லை பெரியாறு அணையை உடைக்க சதி நடக்கிறது.

ஆனால் மத்திய அரசோ மெத்தனம் காட்டுகிறது. கேரளாவுக்கு சாதகமாக நடக்கிறது.

இந்த அணை உடைக்கப்பட்டால், இந்தியா துண்டு துண்டாகும் என எச்சரிக்கை செய்கிறார் வைகோ

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பது சரியாக இருக்காது என்பதால் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் கேரளாவில் தமிழர் மீது தாக்குதல்களை ஆரமித்து விட்டார்கள்

டிசம்பர் மாதம் 5 ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக, உறுதியாக உள்ளது. இப்படிப்பட்ட அணையை உடைத்தால், உடைக்க முயற்சி நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் எச்சரித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய போலீஸ் படையை அங்கு குவியுங்கள் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்

முல்லைப் பெரியாறு  அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை  வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அவசர கடிதம் அனுப்புகிறார்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை முடிவுக்கு வரும் வரை அணைப் பகுதியில் மத்திய படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த ஐவர் குழுவின் தலைவர் நீதிபதி .எஸ்.ஆனந்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி அவசர தந்தி அனுப்புகிறார் (எப்படியோ ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு தமிழகத்தை காத்தல் சரிதான் )

பாஜகவைச் சேர்ந்த  50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் கடப்பாரை, மண்வெட்டி, நீண்ட கம்புகள் ஆகியவற்றுடன் ஊர்வலமாக பேபி டேமை நோக்கிக் கிளம்பினர். பேபி டேமைத் தகர்க்கும் நோக்கில் அவர்கள் சென்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, தமிழக, கேரள எல்லைப் பகுதியில் தமிழக அதிரடிப் படைப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள கோரிக்கை நிராகரிப்பு

உச்சநீதிமன்ற நீதிபதி .எஸ்.ஆனந்த் தலைமையிலான அன்றைய கூட்டத்தின்போது பல்வேறு குழுக்கள் அளித்துள்ள ஆய்வறிக்கை நகல்களை தங்களுக்குத் தர வேண்டும் என்று கேரள அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை நிபுணர் குழு தலைவர் .எஸ்.ஆனந்த் நிராகரித்து விட்டார்.
  
நான்கு மணி நேரம் நடந்த அன்றைய கூட்டத்தின்போது பல்வேறு குழுக்கள் அணையின் பாதுகாப்பு குறித்து சமர்ப்பித்துள்ள ஆய்வறி்க்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது. பல்வேறு குழுக்களிடம் ஆய்வறிக்கையை கோரியுள்ளது. இவை அனைத்தும் கிடைத்த பின்னர் தனது அறிக்கையை ஜனவரி மாத இறுதியில், உச்சநீதிமன்றத்தில் இந்தக் குழு சமர்ப்பிக்கவுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் கேரளாவைக் கண்டித்து தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து விட்டார். கையில் பலத்த காயத்துடன் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு கையில் தீக்காயத்துடன் செல்வபாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சி மறியல்-போலீஸ் தடியடி

இந் நிலையில் பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும், பாரிமுனை குறளகம் அருகிலும் மறியல் போராட்டம் நடத்தினர்.(எல்லோரும் ஒரு பக்கம் பயணித்தால் இவர்கள் ஒரு பக்கம் பயணிப்பார்கள் )

இதுவரைக்கும் வேறு கட்சிகள் பிரச்சனையை கண்டுகொள்ளவே இல்லை ,ஏன் முக்கிய எதிர்கட்சி கூட ,பல ஆண்டுகளாக  மதிமுக , ஆளும் கட்சியாக ஆன பிறகு அதிமுக, மாநிலத்தில் ஆட்சியை இழந்தும் எதிர்கட்சி அந்தஸ்த்தை இழந்தும் , மத்திய கூட்டணி ஆட்சியில் உள்ள திமுக மட்டும் பேசி வந்தது.

இந்த நேரத்தில் கேரளாவில் வன்முறைகள் , தமிழர் மீது தாக்குதல்கள் ஆரமித்தது,

இதற்கு தமிழக மக்கள் பதில் அடி கொடுக்கும் வகையில் போரட்ட ஆரமித்தார்கள் , உடனே மற்ற கட்சிகளும் இதில் பங்கு பெற ஆரமித்தது. 
                                                  தொடரும்............................    

No comments:

Post a Comment