மார்கழி
மாதம்
விரதம்
மார்கழிமாதம் முழுவதும் ,
பெண்கள் விரதம் இருந்து , காலையில் எழுந்து வழி பாட்டுகள் செய்வதும் , நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள்
கோலம்
குளிர்காலத்தில் ஈ , எருப்புக்கு
உணவாக இருக்கும் வகையில் அரிசி மாவில் கோலம் போடுவார்கள் , பெண்களின் கற்பனை திறனையும் , நளினத்தியும் வெளிபடுத்த விதமாக கோலங்கள் அமைகிறது
பனித்துளி
மார்கழி
பனியில் ஒருவித அமிலத்தன்மை இருக்கிறதாம் ,
இது பெண்களின் எலும்புக்கு இந்த பனி வலு சேர்க்கும் மாம் எனவே காலையில் எழுந்து வழிபாடுகள் செய்வதும் , கோலங்கள் போடுவது இந்த நோக்கத்தில் தான் , இன்று புரட்சி பெண்கள் வந்து விட்டார்கள் , மருத்துவ மனைகளும் பெருகிவிட்டது.
மாதம் கடைசி
போகி
என கொண்டாட படுகிறார்கள் , வருட கடைசியாகவும் இருக்கிறது
பழையன கழித்து, புதியன புகவிடும், என்பது வருடம் கழிகிறது என்பதும் , பழைய தானியங்கள் தீர்ந்து , புதிய தானியங்கள் விளைந்து வீட்டுக்கு வருவதையும் தானே இந்த மாதிரி சொன்னார்கள் ,
இன்று
விவசாயம் இல்லை ,டயர்களை , பழைய பொருள்களை போட்டு கொளித்துவது தான் போகி என ஆகிவிட்டது
போகி
அன்று பூலாம்பூ வை வீட்டின் கூரையில் சொருகி
மறுநாள் வரும் வருட பிறப்பான தை முதல்
நாளை வரவேற்கிறார்கள்.
சில
இடங்களின் ஒப்பாரி வைத்து கடந்து போன
வருடத்தை வழி அனுப்பி வைக்கிறார்கள் , மேலும் இந்த நாளில் புத்தர் இறந்த தினமாக இருக்கிறது புத்தருக்கு வருடம் தோறும் அழுத தமிழ் இனம் இன்று பல வருடங்கள் அந்த
புத்தனை வழிபடும் இனத்தால் தினம் தினம் அழுகிறதே , அழிகிறதே
தை முதல்
நாள்
வருடத்தின்
முதல் நாளாக இதை , தை பொங்கலாக தமிழர்களால் கொண்டாட படுகிறது.
வருடம்
முழுவதும் உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகிறோம்
,
தை இரண்டாம்
நாள்
இயற்கைக்கு நன்றி சொல்லுவதோடு , உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்
கால்நடைகளுக்கு நன்றி செய்யும் விதத்தில் ,இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' வழிபாடுகள் செய்கிறார்கள்.
இன்று மாடுகளுக்கு பதில் இந்திரங்கள் மட்டுமே இருக்கிறது,
மாடுகளும் இல்லை மண்ணின் தன்மையும் மாறிவிட்டது.
தை மூன்றாம்
நாள்
இயற்கை
, கால்நடைக்கு நன்றி சொன்ன தமிழன் , தன்னோடு உழைத்த சக மனிதனுக்கும் , உறவுகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக , உறவுகள் கூடி கொண்டாடுகிறார்கள் , இந்த நாளில் வீர விளையாட்டுகளையும் நடத்தி தங்களின் ஒன்றுமையை உறுதி பட இருக்கிறார்கள்.
உறவுகள் இன்று செல்பேசி களில் தான் வாழ்கிறது
வரலாற்று வரிகளில் தை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல் " என புறநானூற்றிலும் , ஐங்குறுநூறுயிலும்
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என நற்றிணை யிலும்
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையிலும் இடம் பெற்று இருக்கிறது
புதிதாக
இருக்கும் அனைத்தும்
தை
திங்கள் ,புதுமைகளை கொண்டுவரும் மாதம் , ஆம் , தானியங்கள் புதிது , பானைகள் புதிது , மஞ்சள் புதிது , ஆடைகள புதிது , என அனைத்தும் புதிது
மண்
வளம் பெறட்டும் , மக்கள் நல்ல உணவு பெறட்டும் , விவசாயம் தழைக்கட்டும் ,அரசியலும் புதிய வடிவம் பெறட்டும் ,இளையவர்கள் புதிய அரசியல் பாதையை தேடட்டும் , வருவது நல்லவையாக இருக்கட்டும்
என
தை
திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் உங்களின்
No comments:
Post a Comment