பாகம்-20 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
2011 ஆம் ஆண்டு
2011 ஆம் ஆண்டு
ஜனவரி மாதம்
ஜனவரி 5முதல் வரும் 7-ம் தேதி வரை மத்திய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி அணையை ஆய்வு செய்தனார்
மத்திய மண் வள ஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் ராஜ்பால்சிங் தலைமையிலான இந்த குழுவில் மத்திய மண் வள ஆராய்ச்சி நிலையம், மத்திய நீர் மற்றும் மின்சாரம் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த 5 நிபுணர்கள் இடம்பெற்றனார்.
மார்ச்
மாதம்
மார்ச் 14,அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது , டெல்லி, மத்திய மண் வளம் மற்றும் கனிம வள ஆய்வு ஊழியர்களும், காவிரி தொழில்நுட்பத் துறை முதன்மை பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் செல்வராஜ், பூண்டி பொதுப்பணித் துறை ஆய்வுப் பிரிவு வல்லுனர்கள் பன்னீர்செல்வம், நிசாம் அலிகான், கனகா, சுமதி ரோஸ் ரீனா ஆகியோரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து ஹரீஷ்குமார் தலைமையில், நீரில் நீண்ட நேரம் மூழ்கி ஆய்வு செய்ய வல்ல நீச்சல் பயிற்சி பெற்ற ஏழு பேர் கொண்ட குழுவும் அங்கு சென்றது.. கேரளா சார்பில் நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், அணைக்கட்டு கண்காணிப்புத் துறை உதவி பொறியாளர்களும் பங்கேற்றனர்.
இந்த
ஆய்வில் தமிழர்கள் அதிகமாக பங்கேற்றதால் கேரளா தரப்பில் கடுகடிப்பில்
இருந்துள்ளார்கள்
ஜூன்
மாதம்
ஜூன் 22 ,முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம் என கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில நதி நீர் பிரச்னை குறித்து முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
ஜூன் 30,முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மனிதபிமான அடிப்படையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள சட்டபேரவையில் பாசனத்துறை அமைச்சர் பிஜே ஜோசப் வேண்டுகோள் விடுத்தார்.(எப்படி எல்லாம் நாடகம் போடுகிறார்கள் )
ஜூலை மாதம்
ஜூலை 5,உச்ச நீதிமன்றத்தில் புதிய அணை கட்ட வேண்டிய அவசியத்தை விளக்கி ,முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்கிறது
ஜூலை 8,முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் பணிகளுக்காக ,முதல் கட்டப் பணிகளுக்காக ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த்து . கேரள சட்டசபையில் அந்த மாநில நிதியமைச்சர் கே.எம்.மோனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பொது இந்த
அறிவிப்பையும் சேர்த்து இந்தப் பணிகளை செயல்படுத்த புதிய ஆணையகம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆகஸ்ட் மாதம்
ஆகஸ்ட் 2,மதிமுக பொது செயலாளர் -வைகோ ,அணை விவகாரம் சம்மந்தமாக ,இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை சந்தித்து முறையீடுகிறார்,
கேரள மக்களுக்குத் தேவையான பால், காய்கறிகள் அன்றாடம் தமிழகத்தில் இருந்து அனுப்பபடுகின்றன. இரு மாநில மக்களும் சகோதர - சகோதரிகள் போல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு அவசரப்பட்டு முல்லைப் பெரியாறு விவகாரத்தில் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டாம்.
கேரள அரசு புதிய அணை கட்டத் திட்டமிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில், புதிய அணையில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழகத்துக்குக் கொடுக்க மாட்டார்கள்.
அதற்குப் பிரதமர் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக கூறுகிறார்களே என்கிறார் .
அதற்கு
பிரதமரிடம் வைகோ, முல்லைப் பெரியாறு அணை அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு பலமாக இருக்கும் என்றும், அந்த அணை பலமாக இல்லை என்று யாராவது கூறினால் இந்தியாவின் மற்ற எந்த அணையும் பலமாக இருக்க முடியாது என்று விளக்குகிறார் வைகோ.
ஆகஸ்ட் 17,டெல்லி யில் அணை பிரச்சனை குறித்து பிரதமரிடம் முறையீடு செய்து விட்டது , அதன் விவரங்களை மக்கள் மாற்றத்திற்கு கொண்டு செல்லவும் , அணைக்கு வரும் ஆபத்தை தடுக்கவும் , மதுரையில் அப்பாஸ் , பழ.நெடுமாறன் , போன்றவர்களையும்
இணைத்து கொண்டு மதிமுக பொது செயலாளர் வைகோ உண்ணாவிரத போராட்டம் நடத்து கிறார்
ஆகஸ்ட் 31,முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான உயர் மட்டக் குழுவின் கூட்டம் டெல்லியில் நடந்தது. தமிழகத்தின் சார்பில் இரு வக்கீல்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் வாதத்தை எடுத்து வைத்தனர். அப்போது முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக இருப்பதால் புதிய அணை தேவையில்லை. புதிய அணை தமிழகத்தின் தென் மாவட்டங்களை பாலைவனமாக்கி விடும் என்று வாதிட்டனர்.
பொதுவாக
நவம்பர் , டிசம்பர் மாதங்கள் குளிர்காலம் என இருந்த தமிழகம், வழக்கத்திற்கு மாறாக அனலாக கொதித்து எழுந்தார்கள் தமிழர்கள்
தொடரும்........................
No comments:
Post a Comment