பாகம்-2 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
இலவசம்
வேண்டாம்,
கல்வி , மருத்துவம் தவிர வேறு எது கொடுத்தாலும் அது மக்களை ஏமாற்றும் செயல்தான் ,
யார் பணம் ?
இலவசங்கள் எல்லாம் என்ன ஆளும்கட்சிகளின் சொந்த பணமா என்ன , மக்களின் வரிப்பணம் , இருக்கும் வீட்டுக்கு வரி , விளையவே இல்லையென்றால் அந்த நிலத்திற்கு வரி , ஏன் பொட்டல்
காடாக இருந்தாலும் வரி , குப்பை போடும் இடமாக இருந்தாலும் , நடக்கும் ரோட்டுக்கு வரி , குடிக்கும்
தண்ணீருக்கு வரி இப்படி வரிக்காக நாம் தரும் பணம்தானே , நமக்கே இலவசமாக வருகிறாது,
எண்ணி பார்ப்போம்
ஒவ்வொரு இலவச பொருளுக்கும் விலையை போட்டுட்டு பாருங்கள் , மொத்தமாக எவ்வளவு வருகிறது, உதாரணமாக ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் மதிப்பில் இலவச பொருள் கிடக்கிறது என
வைத்து கொள்வோம் ,
வருடத்திற்கு
365 நாள் என்றால் ,5 வருடத்திற்கு 1825 நாள் வருகிறது ,
5000 ரூபாய் நாள் ஒன்றுக்கு பிரித்தால் 2 ரூபாய் 75 பைசா வரும் ,
ஏன் ஒரு குடும்பத்தில் இருவரும் வருமானத்தை பெருக்கும் விதமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் நாள் ஒன்றுக்கு 5 ரூபாய்
செகரித்தாலே ஐந்து வருடங்களில் நமக்கு தேவையான பொருள்களை நாமே வாங்கி கொள்ளலாமே ,
நாம் ஏன் கை எந்த வேண்டும் பிறரிடம் , இனியாவது இலவசத்தை கணக்கு போட்டு பார்ப்போம்.
வேலை வாய்ப்பு
அனைவரும் அரசாங்க வேலை தரமுடியாது தான் அதற்காக இலவசம் தந்தாள் நாம் வாழ்வு முன்னேறிவிடுமா என்ன ?
சிறு குறு , தொழில்கள் நாளுக்கு நாள் நசிங்கி வருகிறது , திருப்பூர் போனால் வேலை கிடைக்கும் என இருந்த நிலையில் இன்று திருப்பூர் மக்கள் எங்காவது வேலைக்கு போவோமா என நிலை வந்துள்ளது.
தொழில்களை முன்னேற்றினால் நமக்கு தேவையான பொருளை நாமே வாங்கி
கொள்ளமட்டோமா எதற்கு இலவசம்.
விவசாய நலிவு
நாளுக்கு நாள் ஒரு பக்கம் ஆள் பற்றாகுறையால் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது , விளைய வைக்கும் பொருளுக்கு சரியான விலை இல்லை , மருந்து இல்லை , உரமில்லை , தண்ணீரும் இல்லை , மின்சாரம் இல்லை , என மொத்த விவசாயமே முடங்கி போனால் நாளைய நமது உணவு தேவைக்கு எங்கே போவாம்
இன்று
இலவசமாக அரசி கிடைத்தால் சாப்பிட்டு பொழுது ஓடும் , வரும் காலத்திற்கு விளைச்சல் இருதால் தான் உணவு கிடைக்கும் , அதற்கு , இருக்கிற நிலங்களை பத்திர படித்தினால் தானே விவசாயம் செய்ய முடியும் ,
நிலங்களை தரிசாக போட்டாலோ , இல்லை பிற பயன்பாட்டுக்கு விற்று
விட்டாலோ நாளை எங்கே போவது ,
எதற்கு இலவசம் வேண்டும்
சில இலவசங்கள் வேண்டும்தான் , படிக்கும் வயதில் வறுமை வந்து படிப்பு நின்று விட கூடாது அதற்காக கல்வி சம்பந்தமாக
எந்த இலவசம் தந்தாலும் ஏற்கலாம் , ஏன் எல்லாம் இலவசம் என சொல்லுவார்கள்
எந்த கல்லூரியில் படித்தாலும் மொத்தமும் இலவசம் என சொல்லாமே.
கருவிலே உருவாகி கட்டையில் போகும் வரை மனித உயிரை காக்க வேண்டுயது அரசு கடமை ,
அதனால் எந்த மருத்தவ உதவியும் இலவசமாக தருவது ஏற்கவேண்டிய விசயமே , எவ்வளவு இலவசங்களை தரும் அரசு அனைத்து ஊர்களிலும் மருத்தவ வசதி செய்து கொடுத்து விட்டதா (எந்த நேரமும் ), இல்லையே இன்றும் விபத்தில் அடிபட்டு முதலுதவி கிடைக்காமல் போன உயிர்கள் எத்தனை ,
இன்று குழந்தைகள் சத்து குறைவாலும் , நோய்களாலும் பாதித்து ஐந்து வயதில் கண்ணுக்கு கண்ணாடி போடும் வகையில் இருக்கிறது ,
இன்னும் ஒரு இலவசம் இருக்கிறது யாருமில்லாமல் ஆதரவு அற்ற முதியவர்கள் , மனநோயாளிகள்
, குழந்தைகளை காக்க அரசு சில சலுகைகளை இலவசமாக தரலாம்
இதை தவிர்த்து வேறு எது தந்தாலும் மக்களை ஏமாற்றும் அரசுதான் அது ,இலவச போதைக்கு அடிமையாகதீர்கள்
No comments:
Post a Comment