Monday, January 2, 2012

முல்லை பெரியாறு- பாகம் 20

பாகம்-19 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 



2010 ஆம் ஆண்டு

தமிழகத்தில் போராட்டம் களமாக இருந்த நேரத்தில் , கேரளா அரசு
ஜூலை 16, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணிகள் முடிந்து விட்டதாக அறிவித்தது,  தற்போது உள்ள அணையில் இருந்து 366 மீ தொலைவில் பெரியார் புலிகள் சாரணாலய பகுதி உட்பட வனப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த நில ஆய்வு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இங்கு மண் பரிசோதனையும் முடிக்கப்பட்டுள்ளது.

5 இடங்களில் துளை போட்டு பாறையின் உறுதி தன்மை சோதிக்கப்பட்டது. மேலும் புவி ஆராய்ச்சி துறை கேட்டு கொண்டதின் பேரில் மேலும் 10 இடங்களில் துளையிட்டு பாறை உறுதி தன்மை பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இதற்காக விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று கேரளா புதிய அறிவிப்பை செய்கிறது.

2010 ஆம் ஆண்டு

செப்டம்பர் 1,முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு செய்து விட்டது கேரளா. எப்போது வேண்டுமானாலும் அணை உடைக்கப்படலாம் என்றும் .முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பேராபத்தை உண்டாக்கி உள்ளது. கேரள அரசு பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.380 கோடி ஒதுக்கியுள்ளது. 700 மீட்டர் நீளத்தில் 7  மீட்டர்  அகலத்தில் 154 அடி உயரத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது.என தகவல்களை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்லுகிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.(இதுவரை இதற்கு கேரளா அரசு ஒரு மறுப்பை கூட தெரிவிக்கவில்லை , அப்படியென்றால் இது உண்மைதானே )

2010 ஆம் ஆண்டு

மேலே சொன்ன கருத்தை உணமையாக்கும் வகையில் ,
செப்டம்பர் 16,அன்று ,கேரள நீர்ப்பாசன வரைவு ஆராய்ச்சி வாரியத்தினர் தற்போது புதிய அணை குறித்த விவரங்களை தீர்மானித்து முடித்துள்ளனர்.

அதன்படி, புதிய அணையை 700 மீட்டர் நீளம், 148 அடி உயரம், 7 மீட்டர் அகலம் கொண்டதாக கட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அணையின் உயரத்தை குறைக்குமாறு அணைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து கூடுதல் செயலாளரும், சபரிமலையின் சிறப்பு அதிகாரியுமான ஜெயக்குமார் தலைமையில் ஐடிஆர்பி முதன்மைப் பொறியாளர் சி.என்.சதி, முன்னாள் முதன்மைப் பொறியாளர் எம்.சசிதரன் ஆகியோர் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழுவை கேரள அரசு அமைத்தாது.
  
2010 ஆம் ஆண்டு


டிசம்பர் 10 , ஒரு குறும்பட சிடி கேரளா அரசே வெளிடிடுகிறது , இந்த குறும்பட இப்போது உள்ள அணை உடைவது போலவும் , அதனால் மக்கள் சாவது போலவும் கிராபிக்ஸ் கட்சிகள் மூலம் சித்தரித்தது

45 நிமிடங்கள் ஓடும் இந்த சிடியில் அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகும் ஆபத்து இருப்பதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன், நீர்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன், எதிர்கட்சி தலைவர் உம்மன்சாண்டி, முல்லை பெரியாறு கமி்ட்டி தலைவர் பரமேஸ்வரன் நாயர் ஆகியோர் ஆவேசமாக பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த சிடி லட்ச கணக்கில் கேரளா முழுவது விநியோகிக்க படுகிறாது.

2010 ஆம் ஆண்டு

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆனந்த தலைமையில் ஆன ஐந்து பேர் கொண்ட கமிட்டி டிசம்பர் 20 முதல் 22ம் தேதி வரை வரை ஆய்வு செய்தது.

ஆய்வு குழுவிலும் குழப்பம் ஏற்படுத்திய கேரளா

டிசம்பர் 21, கே.டி.தாமஸ் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போர்பை அணையை பார்வையிட செல்லலாம் என்றார். இதனைக்கேட்ட தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினரான நீதிபதி லட்சுமணன், ஏற்கனவே திட்டமிட்டபடி அணையின் பலம் குறித்த ஆய்வுக்கு மட்டுமே செல்ல வேண்டும், இல்லை என்றால் நான் என்னுடைய பயணத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் என்று குழுத்தலைவரான நீதிபதி ஆனந்திடம் தெரிவித்தார்.

உடனே குழுத் தலைவரான நீதிபதி ஆனந்த், லட்சுமணனின் கருத்தை ஏற்று, வேறு எங்கும் இந்த குழு செல்லாது, அணைப்பகுதியை மட்டும் ஆய்வு செய்து விட்டு கொச்சிக்கு புறப்பட்டு செல்லும் என்று கூறிவிட்டு காரில் ஏறி வி்ட்டார்.பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய வந்த நிபுணர் குழுவை திசை திருப்ப முயன்ற கேரள அதிகாரிகளை குழுத் தலைவர் நீதிபதி .எஸ்.ஆனந்த் தார். ஒரு கட்டத்தில், தமிழக பிரதிநிதியான நீதிபதி .ஆர்.லட்சுமணன், நான் இத்துடன் எனது பயணத்தை முடித்துக் கொள்கிறேன் என்று கூறும் அளவுக்கு கேரளாவின் குசும்புத்தனம் அதிகமாக இருந்தது.

                                               தொடரும்................................

பின் குறிப்பு

இனி ஒரு (2011 ஆம் ) ஆண்டு முழுவதும் நடந்த போராட்டம் கேரளாவின் மோசடி வேலைகள் எழுத வேண்டி உள்ளது , அதற்கு பிறகு , மாற்று திட்டங்கள் , தமிழகத்திற்கு தண்ணீரை கொண்டு வருவது எப்படி, போன்ற வற்றையும் எழுதுவோம்.

No comments:

Post a Comment