Saturday, January 14, 2012

சினிமா அல்ல இது சீற்றம்


உச்சிதனை முகிர்ந்தால் 

சினிமா பற்றிய செய்திகளை எழுத கூடாது என இருந்த மக்களாட்சியை அசைத்து பார்த்து விட்டது இந்த உச்சிதனை முகிர்ந்தால் காவியம்

புனிதவதி

இது வெறும் ஈழ சிறுமி புனிதவதியின் கதை மட்டுமில்லை , மாறாக புலிகளை போற்றும் விதமாகவும் இல்லை ,மொத்த சமூக அவலங்களை  எடுத்து சொல்லி  ஈழத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு ஒரு பலத்தை உருவாக்கிய காவியம் .

இயக்கம்.

நறுக்காக விடுதலை புலிகளின் அவசியத்தையும் , மக்கள்தான் புலிகள் , புலிகள் தான் மக்கள் என சுருங்க சொல்லிய இயக்குனர் , சமூக அவலங்களையும் போர் குற்றங்களையும் விளாசி உள்ளார் , ஒருஇடத்தில் சிறு சறுக்கல் , பெண்களை ராணுவ வீர்ர்கள் இழுத்து வரும் கட்சியில் ஒரு பெண்ணாவது எதிர்த்து போராடுகிற மாதிரி காட்சி வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் , வெறுமன பெண்களை இழுத்து செல்வது போல இல்லாமல் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக இருந்திருக்கலாம் , மற்றபடி சரியாக அமைத்துள்ளார் இயக்குனர்.

போச்சுரிமை 

பேச்சுரிமையின் அவசியத்தை நீதிமன்ற தீர்ப்பில் குரலில், பேராசிரியராக வரும் நடிகர்  சத்தியராஜ் யின் குரலிலும் ஓங்கி ஒலிக்கிறது.

தாய்மையின் அவசியம்

இங்கே மூன்று வித தாய் களை காட்டுகிறார்கள் , செய்வது அறியாது தவிக்கும் புனிதவதியின் தாய் ,நாயின் உயிர் முக்கியமாக பார்க்கும் தாய் , தவறான கருவை சுமக்கும் பொது மொத்தமாக அழிக்க நினைப்பது என வேதனையின் வெளிப்படகாக ஒரு தாய்

பாதிவரை வந்த புனிதாவின் தாய் போன பிறகு அந்த இடத்தை விட்டு நிரப்பும் பேராசிரியரின் மனைவியாக வரும் நடிகை சங்கீதா , கடைசி காட்சிவரை புனிதாவும் அவளில் குழைந்தை யும் தான் குழந்தையாக போற்றும் தாய்.

தன் நலன் சார்ந்தே சிந்திக்கும் சங்கீதாவின் தாயாக வரும் பெண் கொஞ்சம் எரிச்சலையும் , எதிர் தன்மையையும் வெளிபடுத்தி வீட்டு போகிறார் .

இனபடுகொலை

ஒரு படம் வரைந்த தற்காக கண்ணையும் , கைகளையும் காட்டி , துப்பாக்கிகளால் சுட்டு கொள்ளும் கட்சிகளிலும் புனிதவதியின் முடிவையும்  இனபடுகொலை  சாட்சியாக தெரிகிறது

புலிகளும் மக்களும்

விடுதலை புலிகள் யோடு உறவாடும் மக்கள் , மக்களுக்காக புலிகள் என காட்சிகள் விளக்கும் , பெண் புலியாக வரும் துர்கா ,பின் கரும்புலியாக கிளம்பும் பொது , அவளும் பெண் தானே என்ற உணர்வை காட்டும் காட்சிகள் அருமை.

அதிகாரியும் மருத்துவரும்

அதிகாரிகளும் உணர்வு உள்ளவர்கள் தான் என காவல் துறை அதிகாரியாக வரும் இயக்குனர் சீமான் வெளிபடுத்து கிறார்

சட்டங்களை விட மனித உயிர்களை பெருது என நினைத்து சிகிச்சை தரவேண்டும் என்பதை சொல்லும் மருத்துவ தம்பதிகள் நடிகர்  நாசரும் , பெண் மருத்துவர் ரேகாவும் உணர்த்து கிறார்கள்.

பெண்களின் பிரச்சனைகள்

பெண்களின் கர்ப்ப காலங்களிலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ,கரு களைப்பால்  உடல் ரீதியாக வரும்  பிரச்சனையை காட்சியாகவும் , வசனமாகவும் ஆண்களுக்கு பாடம் புகட்டுகிறது.

திருநங்கைகள்

இதுவரை பிச்சை காரர்களாக , பாலியல் தொழிலாளியாக திருநங்கைகளை சித்தரித்த சினிமா ,இதில் சமூக அவலங்களை போராடும் பெண்களாக காட்டும் சினிமா , காவல் நிலையத்தில் சமமாக இருக்கையில் உக்கரவைத்து பேசும் காட்சி , அவர்களும் சமமாக நடத்த படவேண்டும் என காட்டுகிறது ,

எயிட்ஸ் நோய்

இது ஒரு தோற்று நோய் அல்ல என அழுத்தம் திருத்தமாக சொல்லி உள்ளார்கள் , சிறுவர்கள் மீது ஏவபட்ட பாலியல் கொடுமைகளால் வரும் எயிட்ஸ் நோய் எந்த அளவு பதிக்கிறது என மருத்துவ நீதியாக சொல்லுகிறது .

போரின் தாக்கம்

ஒரு சிறு பிள்ளைக்கும் போரின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை விமானங்கள் பறந்தாலே அது போர்விமானம் , பட்டாசு வெடித்தாலே அது குண்டு போடும் சத்தம் என ஒடி பதுங்கும் புனிதவதி உணர்த்து கிறாள்

இசையும் பாடலும்

திரைகதை யோடு வரும் பின்னணி இசை , பாடல்களுக்கு மெருகேற்றும் இசை என இசை அமைப்பு சரியாக அமைந்துள்ளது

பாடல்கள் அதிகம் இல்லை என்றாலும் , இருக்கும் பாடல்கள் இன்னும் பல ஆண்டு ஒலிக்கும் வகையில் வரிகளை தீட்டி உள்ளார் உணர்ச்சி கவி காசி ஆனந்தன் , இவரின் உழைப்பு பாடலோடு மட்டுமில்லாமல் பாடம் முழுவது இருந்திருக்கும் என நினைக்க தோற்று கிறாது.

நடிப்பு

ஒவ்வொருவரும் தனக்கும் கொடுக்க பட்ட கதாப்பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர் , தன் மொத்த உணர்வையும் வெளிகாட்டும் பேராசிரியராக நடிகர் சத்தியா ராஜ், அவரின் உணர்வுயோடு சேர்ந்து பயணிக்கும் அவரின் மனைவியாக ஒரு தாயாக நடிகை சங்கீதா , பிரிந்த மருத்தவ தம்பதிகளாக வரும் நாசர், அவரின் மனைவியாக வரும் லட்சுமி அவர்கள் , போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் சீமான் , ஆட்டோ ஓட்டுனராக வருவாவர் , கதையின் நாயகி புனிதவதி யாக வரும் சிறுமி என அனைவரும் தங்களின் பங்களிப்பை சரியாக  செய்துள்ளனர் ,ஏன் நாய் கூட நல்லா நடித்து உள்ளது .

திரைகதை

ஒன்றுக்கு ஒன்று சம்மந்தபடித்தி , பேராசிரியர் குடும்பம் , புனிதவதி குடும்பம் , மருத்துவர் குடும்பம் , அதிக பங்களிப்பு இல்லாவிட்டாலும் காவல் துறை அதிகாரி குடும்பம் என நாலு குடும்பம் அதான் சார்ந்த சிலர், மருத்துவமனை பயணம் என்ற ரீதியில் மிக எளிமையாக திரைகதை அமைக்கபட்டுள்ளது.

வசனங்கள்

தமிழருவி மணியன் வசனம் எழுதினாலும் சினிமாவில் ஆங்கில வார்த்தை இல்லமால் வசனம் எழுத முடியாது என்பதாக இருந்தாலும் , நல்ல சூடோடு சொரனையை , சவுக்கடி போல சொல்லும் வசனங்கள் அமைந்துள்ளது, பல இடங்களில் மணியன் எழுதிய வசனங்களை மத்திய தணிக்கை குழு மணி அடித்து உள்ளது(சென்சார் செய்ய பட்டுள்ளது )

குறிப்பிட வசனங்கள்  

அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை , நாங்கள் ஏன் இருக்குறோம் என தெரியவில்லை

அவள் செத்து கொண்டே இருந்தாள் ,நாங்கள் பார்த்து கொண்டே இருந்தோம்

இன்னும் ஏராளம் காட்சியோடு பார்த்தால் புரியும் .

பின் குறிப்பு 

இது சினிமா விமர்சனம் அல்ல , மக்களாட்சியின் பார்வையை தான் சொல்லுகிறோம் , அடுத்தவரின் படைப்பை விமர்சிக்க கூடாது என்பது மக்களாட்சியின் விருப்பம் , மேலும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டுகிறது மக்களாட்சி 

No comments:

Post a Comment