Wednesday, January 11, 2012

முல்லை பெரியாறு- பாகம் 25

பாகம்-24 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.  


சூடு பிடித்த போராட்டம் 
  
டிசம்பர் மாதம் 6 ம் தேதி


முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், ஐயப்ப பக்தர்களையும், தமிழக வாகனங்களையும் விஷமிகள் தொடர்ந்து தாக்கி வருவதைத் தொடர்ந்து தமிழக, கேரள மாநில எல்லையில் உள்ள குமுளியில் 144 தடை உத்தரவை இடுக்கி கலெக்டர் பிறப்பித்தார்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரசியல் சட்டத்தை மதிக்காத கேரள அரசை மத்திய அரசு கலைத்தாலும் தவறில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுகிறார் (முதல் முறையாக )

தமிழகத்துடனான உறவு கெடும்படியான வன்முறைச் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்தார்.(பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலும் ஆட்டும் உம்மன் சாண்டி)

தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்தது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்துப் பேச்சு நடத்த வருமாறு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.(நரியின் நாட்டமை ).

தமிழக, கேரள மக்களுக்கிடையே துவேஷத்தை அதிகரிக்கும் வகையிலும், குரோதத்தை அதிகரிக்கும் வகையிலும் நடைபெற்று வரும் வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் ஊக்கமளித்து வரும் கேரள அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார் (கேரளா பாஜக அணையை உடைக்க புறப்பட்டது வன்முறை இல்லையா பொன்.ராதா )

கேரளாவில்  நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கோர்ட்டுக்கு வெளியே முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசித் தீர்க்கலாம் என்று தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதேசமயம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்டும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.(பேசிக்கிட்டே கழுத்தில் கத்தி வைப்பது )

கேரளாவுக்கு சிமென்ட் அனுப்புவதை எதிர்த்து நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டும், கேரள லாரிகளை மறித்து நிறுத்தியும் போராட்டம் நடந்துள்ளது.மக்கள் சக்தி மன்றம் சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் போட்டனர்.(மெல்ல மற்ற பகுதிகளிலும் போராட்டம் பரவியது )

டிசம்பர் மாதம் 7 ம் தேதி

பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையிலிருந்து தேனி  நோக்கி நடைபயணத்தைத் தொடங்குகிறார். 8ம் தேதி கூடலூரில் அவர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருந்தார்.

பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நலலெண்ணத்தை அழித்து விடாதீர்கள்- கேரள மக்களுக்கு ஜெ. வேண்டுகோள்.

கேரளாவில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதை கேரள அரசும் தடுக்கவில்லை,மத்திய அரசும் தடுக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் திமுக தனது செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவை எடுக்கும் என்றார் திமுக தலைவர் கருணாநிதி.(ஊரே ஒன்னு கூடி போராடுது இனிதான் முடிவே எடுக்க போகிறார்கள் )

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை ,தடுத்து நிறுத்தக் கோரி பாமக இன்று போராட்டம் ,மாலை 3 மணிக்கு ஆரமித்து சில மணி நேரத்தில் முடிந்து விட்டது.

இடுக்கி ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தப்பிவந்த பெண்கள் தங்களை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மிக மோசமான முறையில் நடத்தியதாக கூறியுள்ளனர். (பெண்களை தாக்கும் கேரளா வீரர்கள்)

கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபாவிலிருந்து வெளிநடப்புச் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

கேரளாக்காரர்கள் எல்லைப் பகுதியில் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு கை கட்டி வேடிக்கை பார்ப்பது வேதனை என்று ராஜ்யசபாவில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின.(தாக்குவதே இவர்கள் கட்சி தொண்டார்கள் தான் ).

பலவீனம் முல்லைப் பெரியாறு அணையில் இருப்பதாக தெரியவில்லை. மாறாக கேரள அரசியல்வாதிகளிடம்தான் உள்ளதாக தெரிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.(மக்களே தானாக போராடி கொண்டு இருந்த நேரத்தில் முதல் முறையாக அறிக்கை விடும் எதிர்கட்சி ),

ஒரு பக்கம் கேரளாவில் உள்ள அனைத்து தேசிய கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் , மறுபக்கம் தேசிய தலைமைகளும் மாநில நிர்வாகிகளும் ஒருவரை ஓருவர் குற்றம் மட்டுமே சொல்லுகிறார்கள்,

இவ்வளவு பிரச்னைக்கும் மத்தியிலும் , தடை உத்தரவு போட்ட போதும் , அணை ஆபத்தாக இருக்கு என கூப்பாடு போட்டு கொண்டு இருக்கும் கேரளா ,

முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி நீர்த்தேக்கத்தில் படகு சாவரியை நிறுத்தவில்லை கேரளா

தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 12 படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகு சவாரி மிகவும் பிரபலம். இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாது தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வார்கள். தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் வருகிறது.

அப்படி என்றால் கேரளா செய்வது வீண் சண்டித்தனம் தானே தவிர , உணமையான போரட்டமில்லை ,

உண்மைக்கு போராடவேண்டிய தமிழகம் பக்கத்தில் எதிர்கட்சி அறிக்கை விடுகிறது,முன்னாள் முதல்வர் இனிதான் முடிவு எடுக்க போகிறதாம் , மக்களும்,வயதான காலத்திலும்  ஐயா நெடுமாறன் , பல வருடமாக போராடும் ஐயா கம்பம்.அப்பாஸ் , சட்டமன்ற பிரதிநிதிதுவமே இல்லாத மதிமுக -வைகோ தவிர வேறு யாரும் இதுவரை போராட்ட களத்திற்கு வரவில்லை என்பதே உண்மை. ஆளும் கட்சி என்னத்த சொல்ல? பிள்ளைபூச்சிகள் போல மந்திரிகள்,செருப்படி வாங்கியதுதான் மிச்சம்.
                                                  தொடரும்..................... 

No comments:

Post a Comment