பாகம்-34 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
தற்காலிக தீர்வு
முல்லை
பெரியாறு அணை விவகார போராட்ட முழுவிவரம் , நதி நீர் உருவாக்கம் ,அந்த பயணம் போன்றவையும் , யாருக்கு எந்த அளவு பயன்படுகிறது எனவும் பார்த்தோம்.
கேரளாவின் வன்மம்
கேரளா
உண்மையில் புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை , மாறாக இருக்கும் அணையை உடைப்பதுதான் அவர்களின் நோக்கம்.
இந்த
அணை உடைந்தால் இந்த நீர் நேராக இடுக்கி அணைக்கு போகும் அங்கே இருக்கும் மின்
நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பது தவிர வேறு பயன் எதுவும் கிடையாது .
நீதிமன்ற
தீர்ப்பு
ஏற்கனவே
சொன்ன தீர்ப்பை மதிக்காத கேரளா இனி வரபோகும் தீர்ப்பை ஏற்கவா போகிறது என சந்தேகம் இருக்கிறது , மேலும் அதை வைத்து புதிய வழக்கு தொடுக்காமல இருந்தேலே பெரிய விஷயம் தான்
தீர்ப்பு
யாருக்கு சாதகமாக இருக்கும் என பார்த்தால் முழுக்க முழுக்க தமிழகம் பக்கம்தான் உண்மை உள்ளது தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும்.இப்போது நாம் நீதி மன்றத்தை நம்பியே இருக்கிறோம்
இப்போதைய நமக்கு தேவை
நீதிமன்ற
தீர்ப்பை முழுமையாக இரு மாநிலங்களும் ஏற்க மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்
தீர்ப்பிற்கு பிறகு உடனடியாக அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த வேண்டும்.
அணையின் பாதுகாப்பு தமிழக அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் , இதை கேரளா ஏற்காத
பட்சத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் அணை பாதுகாப்பு ஒப்படைக்க வேண்டும் .
மேலும் சில பாக்கி உள்ள பராமரிப்பு வேலைகளை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும் .
இதன் பின் அணையின் நீர்மட்டம் 152 என்பதை உயர்த்த
வேண்டும்.
பொருளாதார உதவி
கேரளா நம்மிடம் எதாவது பொருளாதார உதவி கேட்கும் பட்சத்தில் ஒருவேளை குத்தகை பணம் அதிகமாக கேட்டால்
தமிழக அதை தந்து விடலாம் , பணம் ஒரு பொருட்டு அல்ல , மாறாக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வு என்பதை மனதில் கொள்வோம்.
நீதி மன்ற தீர்ப்பை ஒட்டி இதை உடனே செய்ய வேண்டிய பணிகள் , இதை கேரளா ஏற்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும் , அதை " குறிகிய கால
நடவடிக்கை " என பார்ப்போம் , ஒருவேளை கேரளா ஏற்காத பட்சத்தில் என்ன செய்ய?
தொடரும்.......................
No comments:
Post a Comment