பாகம்-25 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
மக்கள் எழுச்சி
மக்களின் எழுச்சி கண்டு ஆள் ஆளுக்கு துண்டு போட கிளம்பி விட்டார்கள்.
மக்கள் எழுச்சி
மக்களின் எழுச்சி கண்டு ஆள் ஆளுக்கு துண்டு போட கிளம்பி விட்டார்கள்.
டிசம்பர்
மாதம் 8 ம் தேதி
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அதன் அதிகாரிகள், ஊழியர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளானார்கள் , ஏதோ, இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருப்பது போல தங்களது நிலை மிகவும் பேராபத்தில் உள்ளதாக அவர்கள் கூறினர். தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மொத்தம் 18 குடும்பங்கள் இங்கு தங்கியுள்ளன.
கேரளாவின் போக்கைக் கண்டித்து மதுரையிலிருந்து விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கினார் வைகோ. இந்தப் பிரசாரம் முதலில் கூடலூரில் முடிவடைதாகவும், பின்னர் கம்பத்தில் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் தற்போது அங்கு தடை உத்தரவு இருந்ததை கருத்தில் கொண்டு வைகோவின் போராட்டம் தேனிக்கு மாற்றப்பட்டது. அதன்படி காலை வைகோ தனது உண்ணாவிரதத்தை தேனியில் தொடங்கினார்.(வீண் பிரச்னையை வளக்கதா பொறுப்பான ஆளு )
அவருடன் கொளத்தூர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாலை உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைகிறது. பழ. நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்து, மீண்டும் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது. (இக்குழுவில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், நடுவண் அரசு சார்பில் நடுவண் நீர்வளத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் சி.டி.தட்டே, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் டி.கே.மேத்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.)
அந்த குழு அணையில் ஆய்வு செய்தது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அணை நீரில், வீரர்கள் மூழ்கி அடிப் பகுதியின் பலத்தை ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை பெற்றுள்ளது. குழுவில் இரு மாநில அரசு சார்பிலும் அறிக்கை அளிக்கப் பட்டுள்ள.
வைகோ மட்டுதான் உண்ணாவிரதம் இருப்பார கேரளா பக்கம் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம் முல்லைப் பெரியாறு அணை அருகே வண்டிப்பெரியாரில், சப்பத் என்ற இடத்தில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீங்க இரண்டு பேர் மட்டும்தான் உண்ணாவிரத இருப்பிங்கள , நாங்களும் இருப்போம் என திமுக கட்சித்தலைவர் கட்சி அலுவலகத்திலும் , அவரின் ஒரு வாரிசு சென்னை
தாம்பரத்திலும் உண்ணவிரதாம்.(பிரச்சனை எங்க உண்ணாவிரதம் நடத்தும் இடம் எங்கே என
பாருங்கள் ).
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கேரள வியாபாரிகள் தங்களது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்பில் குதித்தனர் . மேலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.(எதிரியாக இருக்கும் மலையாளி கூட போரட வந்துவிட்டார்கள் )
அணையை பார்வையிட வேண்டும் என்றால் தமிழக பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரளாக்காரர்கள் ஒருபோதும் அனுமதி பெறுவதில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு வருவர்கள், பார்ப்பார்கள் போவார்கள்.
அந்த வகையில், கேரள எம்எல்ஏக்கள் குழு அனுமதி பெறாமல் அணையை பார்வையிட்டனர். மேலும் கேரள பத்திரிக்கையாளர்களையும் இந்த குழுவினர் அழைத்து வந்திருந்து முக்கிய அணை, பேபி அணை, மற்றும் மதகு பகுதிகளை அவர்களுக்கு சுற்றி காட்டிய ஜோசப், அணையில் இருந்து சாதாரணமாக கசியும் நீரை காட்டி, அணை பலவீனமாக இருப்பதால்தான் நீர் கசிவதாக கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் கேரளமாநிலத்தவர் நடத்தும் கடைகள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி அவற்றின் மீது தாக்குதல் நடத்தி விட்டனர்
சிலர்,
மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை-
ரமேஷ் சென்னிதலா,தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார் .
ஒரு கல் எடுத்து விசியதற்க்கே
இந்த மாதிரி குதிக்கும் மலையாள அரசியல் வாதி அங்கே அணையை உடைக்க கம்பி, கடப்பாறை , மண்வெட்டியோடு
கிளம்பினார்கள் , பெண்களை மானபங்க படித்தினார்கள் , அரசு அதிகாரிகளை அச்சுரித்தினார்கள்,
உங்களுக்கு காணிக்கையாக
வருமானத்தை தந்த ஐயப்ப பக்தர்களை
தாக்கியதுதான் கேரளா அரசு தந்த பாதுகாப்பு, இங்கே ஆத்திர மிகுதியால் , செய்வது அறியாது ஒரு கல்லை விசினால் உடனே வந்து விட்டார் சென்னிதலா
தொடரும்.....................
No comments:
Post a Comment