Thursday, March 1, 2012

நாம் யார் -21

பாகம்-20 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பித்தளை-Brass

பித்தளைக்கு குடவம் என்ற ஒரு பெயரும் ஓன்று , மூன்றில் இருபங்கு செம்பும் ஒருபங்கு துத்தநாகமுங் கலந்தது குடவமாகும். உரோம நகரில்கி.மு. 20-ல் குடவக் காசு இருந்தது என்றும் . தமிழகத்தில் எளியார் அணிகலமும் செய்யக் குடவம் கி.மு.3ஆம் நூற்றாண்டிற் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

மோரியப் படையெடுப்பு

(கி. மு. 3ஆம் நூற்றாண்டு)

தமிழகத்தின்மேல் முதன் முதலாகப் படையெடுக்கத் துணிந்த வட இந்திய (மகதநாட்டுமோரிய) அரசன் பிந்துசாரன் (கி.மு.301-273), ஒருபெரும்படையைத் தென்னாட்டிற்கு அனுப்பினான். அப்படை கோசர் என்னும் ஒருவகைப் பொருநரைத் துணைக்கொண்டு, தென்கன்னடம் என்னும் கொண்கானத்தின் கடற்கரைப் பகுதியான துளுநாட்டிற் புகுந்து, அதை ஆண்டு கொண்டிருந்த நன்னன் என்னும் தமிழ் மன்னனை நாட்டைவிட்டு ஓட்டிவிட்டது. 

பின்னர், கோசர் தென்கிழக்காக வந்து கொங்குநாட்டுப் பழையன் மோகூரைத் தாக்கினர். அவன் அவரைப் புறங்கண்டு துரத்தினான்.அதன்பின் கோசருக்குத் துணையாக மகத நாட்டு இருந்து  ஒரு புதுப்படை வந்தது. அது வரும்போது, அதைச் சேர்ந்த தேர்களும் சரக்கு வண்டிகளும் வருவதற்குத் தடையாயிருந்த பாறைகளை யெல்லாம் தகர்த்து,பாதையைச் செம்மைப்படுத்திக்கொண்டு வந்தது.

சோழன் இளஞ்சேட் சென்னி, தன் நாட்டைக்காக்கும் கடமையை யுணர்ந்து, கொண்கானஞ் சென்று பாழியரணை யழித்து ஒரே யடியாக மோரியரைத் தமிழகத்தினின்று துரத்திச் "செருப்பாழி யெறிந்த" என்னும் விரு அடைமொழியும் பெற்றான்.  

பொற்கையும் -மனுநீதியும் 

கீரந்தையின் வீட்டுக் கதவைத் தட்டி, அதனால் வேண்டாது தன் கையைக் குறைத்துக் கொண்ட பொற்கைப் பாண்டியனும், மகனை முறை செய்த மனுமுறை கண்ட சோழனும், கி.மு.2ஆம் நூற்றாண்டினராயிருந்திருக்கலாம்.

மனுமுறை என்றது வடமொழி மனுதருமசாத்திர முறையையன்று. அந் நூலின் காலம்கி.பி.2ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் தோன்றிய ஆரிய தருமநூல்களும், நடுநிலையின்றிக் குலத்திற்கொரு முறை கூறுவனவே. கன்றைக் கொன்றதற்குக் கழுவாய் அல்லது தண்டனை யென்னென்று சோழன் வினவிய போது, பொற்கன்று செய்து பிராமணர்க்குக் கொடுத்து, ஆநிரையொடு காடு சென்று ஒரு மாதம் புன்மேய்ந்து வரவேண்டுமென்று பிராமணர் கூறினர்.அதை சோழன் ஒப்புக்கொள்ளாது, உயிருக் குயிரேயீடென்று தன் மகன்மேல் தேரேற்றிக் கொன்றான்.வடநூல்களிற் கதிரவன் குல அரசருள் முதல்வனாகக் குறிக்கப் பெறும் மனு, தமிழ்ப்பெயர் கொண்ட ஒரு சோழனாயிருந்திருத்தல் வேண்டும். அவன் கண்ட நடுநிலை முறையையே, மகனை முறை செய்த சோழன் சிறப்புப் பெயர் குறித்தல் வேண்டும்.

திருக்குறள்

தில்லையிலிருந்து பாணினீயத்திற்கு விரிவுரை (பாஷ்யம்) வரைந்த பதஞ்சலியார் கி.மு. 2ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.

ஆரியம் தமிழகத்தில் வேரூன்றி, நால்வரணமும் பிறப்பி லமைந்தவை யென்றும், பிராமணன் நிலத்தேவன் என்றும், துறவால் மட்டும் வீடுபேறென்றும், துறவு பிராமணனுக்கே வுரியதென்றும், பிராமணன் வேள்வி வளர்ப்பதனாலேயே உலகம் நடைபெறுகின்ற தென்றும், பிராமணனுக்குத் தொண்டு செய்வதனாலேயே ஏனை மூவரணத்தாரும் நன்னிலை யடைவரென்றும், பல தீய கொள்கைகள் தமிழருள்ளத்திற் பதிக்கப்பட்டு வருவது கண்ட திருவள்ளுவர்,  தமிழரின் கண் திறக்கவும் அவரை முன்னேற்றவும் தம் திருக்குறளை இயற்றியருளினது கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும்.

முதுகுடுமி பாண்டியன்

பிராமணர்க்கு முற்றும் அடிமையாகித் தமிழகத்தைப் பாழாக்கிய பாண்டியருள் தலைசிறந்த பல்வேள்விச் சாலை (யாகசாலை) முதுகுடுமிப் பெருவழுதி, கி.மு. முதல் நூற்றாண்டினரா யிருந் திருக்கலாம்.
வேதமோதிய பிராமணரை யெல்லாம் முனிவர் என்று கூறி, அவருக்குமுன் தன் குடுமியவிழ்ந்து விழுமாறு தலை குனிந்து வணங்கும் பழக்கம் பாண்டியனுக்கு இருந்து இருக்கிறது.

நெடுஞ்செழியன்-சேரன் செங்குட்டுவன்

 கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனும், கண்ணகிக்குப் படிமை சமைத்த சேரன் செங்குட்டுவனும், தமிழினத்தின் பெருமையைக் காத்ததனில் பாராட்டத் தக்கவரே.

புதைய லெடுத்தவ னென்றுசிறையிலிடப்பட்ட வார்த்திகனை விடுதலை செய்தபின், நெடுஞ்செழியன் மன்னிப்புக் கேட்டதுடன், அதற்கும்மேல், நெடுஞ்செழியன் வார்த்திகன் காலில்விழுந்து வணங்கியது தமிழினத்திற்கே அழியாப்பேரிழிவாம். இதனால் அற்றைப் பிராமணர் கொட்டமும் தமிழர் அடிமைத்தனமும் தெளிவாகிறது.

கோப்பெருந்தேவியின் ஊடலால்ஏற்பட்ட மனக்கலக்க நிலையில், நெடுஞ்செழியன் ஆய்ந்து பாராது கோவலனைக் கொன்றது கடுங்குற்றமாயிற்று.

சேரன் செங்குட்டுவன், தமிழரசரையிகழ்ந்த கனகவிசயர் மேல், பனிமலை யிலெடுத்த பத்தினித் தெய்வப் படிமைக் கல்லை ஏற்றிக்கொணர்ந்தது, என்றும் தமிழர்க்குப் பெருமை தருவதே. ஆயினும், அக் கல்லைக் கங்கைக் கரையில் நீராட்டியபோது, மாடலன் என்னும் பிராமணனுக்குத் துலைநிறைத் தானமாக 50 துலாம் பொன் கொடுத்ததும்,கொடுங்கோளூரில் அவன் சொன்னவுடன் வேள்விசெய்ததும், அவனது ஆரிய அடிமைத்தனத்தைத் தெளிவாகக் காட்டும்.

செங்குட்டுவன் பத்தினிப் படிமைக்குக் கல்லெடுக்க வடநாடு சென்ற போது பேரியாற்றங் கரை யிலிருந்து ஒரே நாளில் தன் தலைநகர்க்குத் திரும்பிய தனாலும். நீலமலையில் தங்கினதாலும், திரும்பி வந்தக்கால் நெய்தல் நில மகளிர் வரவேற்றுப் பாடியதனாலும், அவன் காலத்தில் கொடுங்கோளூரே தலைநகராக இருந்ததாகத் தெரிகின்றது. தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுதும் அவன் அதிகாரத்திற் குட்பட்டிருந்ததனால், அவன் விரும்பியிருப்பின் கொங்கு நாட்டுக் கருவூரைமீண்டும் தலைநகராகக் கொண்டிருத்தல் கூடும்.ஆயின், அவன் முன்னோரே அதை விட்டு விட்டதனாலும்,நாட்டை வளம்படுத்தும் நீர் வணிகத்திற்குப் பூம்புகார் போல் ஒரு துறைநகரே ஏற்றதாயிருந்ததனாலும், கொடுங்கோளூரிலேயே நிலைத்துவிட்டான். திருமால் கோவிலாகியஆடகமாடம், கருவூரிற் போன்று கொடுங்கோளூரிலும் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அக்காலத்தில் பொன்னிற்குப் பஞ்சமில்லை. செங்குட்டுவன் காலத்தில் கொங்குநாட்டுப் பகுதியையாண்ட சேரர் குடியினர், தகடூர் அதிகமான் சரவடியினரே.

நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றிருந்ததனாலும், செங்குட்டுவன் படை கங்கையைக் கடத்தற்கு நூற்றுவர் கன்னர்(சாதகர்ணி? சாதவாகனர்?) உதவியதனாலும், கி.பி.2ஆம் நூற் றாண்டில் தான்.

வரலாற்றை கடந்து கொஞ்சம் கொஞ்சமாக கி.மு விலிருந்து கி.பி க்கு வந்து விட்டோம் 
                                                                                                          தொடரும் ............................

No comments:

Post a Comment