Tuesday, March 27, 2012

நாம் யார் -39

பாகம்-38 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

மதத் துறை

கடவுள் மத மறைப்பு

ஊர் பேர் குணங்குறி யின்றி எங்கும்நிறைந்திருக்கும் பரம்பொருளை, உருவமின்றிஉள்ளத்தில் கண்டு தொழும் கடவுள் நெறியை, உலகில்முதன்முதல் தெளிவாகக் கண்டவர் தமிழரேயாயினும்,அதனாற் பிராமணர்க்குப் பிழைப் பில்லையென்றும், தமிழர் அறிவொளி பெறக்கூடா தென்றும்,அந் நெறி அடியோடு மறைக்கப்பட்டுள்ளது.

இறைவனொடு தொடர்பின்மை

சிவனியமும் மாயோனி யமும் தூய தமிழ் மதங்களாயிருந்தும், அன்பான தந்தையுடன் அவனுடைய அருமைமக்கள் நேரடியாய்ப் பேச முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, மக்கள் கருத்தை அல்லது விருப்பத்தைத் தானே அவர் கட்குத் தெரியாத அயன்மொழியில் தந்தைக்குத் தெரிவித்தல் போல், கோவிலிலுள்ள பரம திருத்தந்தையும்அருட்கடலுமான இறைவன் உருவிற்கு, தமிழர் தாமே தம்நெஞ்சார்ந்த அன்பு கனிந்த வணக்கத்தைத் தம்தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து,பேரின்பப் பெருமகிழ்ச்சி பெற முடியாவாறு,மேனாட்டினின்று வந்த பிராமணன் இடைநின்று, படைப்புத் தேங்காயை வாங்கி யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குந் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழி யாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட்டதைச்சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்திலும் (Bank) வரியகத்திலும் பணங் கட்டியவர் திரும்புவது போல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை கேடானதீவினை!

உயிரிழப்பு

சிறந்த சிவனடியாராக ஒழுகிய குற்றத்தினால், நந்தனார் என்னுந் தூயர்,பட்டப் பகலிற் பலர் காணச் சுட்டெரிக்கப்பட்டார். இத்தகைய கொடிய நிலைமையும் 1940ஆம் ஆண்டுவரை தென்னாட்டி லிருந்துவந்தது.

பொருளாட்சித் துறை

பொது விழப்பு 

பிராமணர், மூவேந்தரிடத்தும் கோவலன் போன்ற செல்வரிடத்தும் பல்வகை தானமாகப் பெற்ற பொன்னிற்கும் ஆவிற்கும் நிலத்திற்கும் பிறபொருள்கட்கும் கங்குகரை யில்லை.

சில வகுப்பாரிழப்பு

மாட்டிறைச்சி யுண்ட தனாற் புலையர் என்று இழித்திடப்பட்டு, 11ஆம் நூற் றாண்டிற்குப் பின் தம் தொழிலையும் வருவாயையும்இழந்தனர்.

ஐரோப்பியரும் அவர் வழியினரும்அராபியரும் யூதரும் இன்றும் மாட்டிறைச்சி யுண்பவரே. ஆரியப் பூசாரியரும் வேதக் காலத்தில்அதை விரும்பி யுண்டவரே.

தவத்திற் சிறந்த பரத்து வாசர் தம் புதல்வனுடன் காட்டில் வாழ்கையில், விருது என்னும் தச்சனிடம் பல ஆக்களை வாங்கிக் கொன்றுதின்றார் .

செம்மறியாட்டிறைச்சியால் நான்குமாதம் வரையும், வெள்ளாட் டிறைச்சி யால் ஆறு மாதம் வரையும், காட்டெருமைக் கடா விறைச்சியால் பத்துமாதம் வரையும், தென்புலத்தார் (பிதுர்க்கள்) பொந்திகை (திருப்தி)  யடைகின்றனர் என்று மனுதரும சாத்திரத்திற் கூறப்பட்டுள்ளது.

பாணர் இசைத்தொழிலை இழந்ததனால்,பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவு முறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலிய பண் நுட்பங் களையும் விளக்குவார் இன்று எவரும்இல்லை.

சென்னை இராயபுரம் பாதாளவிக்கினேசுவரர் கோவில் தெருவிலுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர்,புதுக்கோட்டைத் தட்சிணா மூர்த்தியார் போற்கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார்என்பதுபற்றி, அவரை அரங்கில் கழைப்பார் ஒருவருமில்லை.

தனித்தமிழ்ப் புலவர் இழப்பு

மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர்,எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங்கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும்பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை.

பாணர் இசைத்தொழிலை இழந்ததனால்,பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவு முறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலிய பண்நுட்பங் களையும் விளக்குவார் இன்று எவரும்இல்லை.

சென்னை இராயபுரம் பாதாளவிக்கினேசுவரர் கோவில் தெருவிலுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர்,புதுக்கோட்டைத் தட்சிணா மூர்த்தியார் போற்கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார்என்பதுபற்றி, அவரை அரங்கிற் கழைப்பார்ஒருவருமில்லை.

தனித்தமிழ்ப் புலவர் இழப்பு:மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர்,எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங்கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும்பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை.



ஊர்ப்பெயர் மாற்றம்

தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பலஊர்ப் பெயர்கள் வட சொல்லாக மாற்றப்பட்டுள்ளன.

எ-டு


தென்சொல் 
வடசொல்
குடமூக்கு - குடந்தை 
கும்பகோணம்
குரங்காடுதுறை 
கபித்தலம்
சிலம்பாறு 
நூபுரகங்கை
சிற்றம்பலம் 
சிதம்பரம்
பழமலை, முதுகுன்றம்
புள்ளிருக்கு வேளூர்
விருத்தாசலம்
வினைதீர்த்தான் கோவில் 
வைத்தீசுவரன் கோயில்
பொருநை 
தாம்பிரபரணி
மயிலாடுதுறை 
மாயூரம்
மரைக்காடு - மறைக்காடு 
வேதாரணியம்

வடமொழியை யெதிர்த்து வெல்லும் வலிமை தமிழுக்கே யிருப்பதால், ஆரியக்
கட்டுப்பாடு தமிழ்நாட்டிலேயே மிகக் கடுமையாகப்புகுத்தப்பட்டுள்ளது.


                                                                                                            தொடரும்........................


1 comment:

  1. முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

    Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html

    ReplyDelete