Sunday, March 18, 2012

நாம் யார் -30

பாகம்-29 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

நால்வரணத் தோற்றமும் விளக்கமும்

குலங்கள் இயற்கையாகத் தொழில் பற்றியே தோன்றின. மாந்தன் வாழ்கைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டியிருப்பதால், அவற்றை யெல்லாம் விளைவிக்கவோ தேடவோ செய்யவோ பல்வேறு குலங்கள் ஏற்பட்டன. அப் பொருள்களுள், இன்றியமை யாதவற்றிற்கு முன்னும்,தேவையான வற்றிற்குப் பின்னும், இன்புறுத்துவனவற்றிற்கு அதன் பின்னும், நாகரிகச் சிறப்புப் பற்றியவற்றிற்கு இறுதியிலும் குலங்கள்எழுந்தன.

பல்வேறு பொருள்களையும் ஒரு வழித்தொகுத்தற்குப் பண்டமாற்றுத் தொழிலும், அவற்றைக் காத்தற்குக் காவல் தொழிலும், அவைதோன்றிய அன்றே அமைந்தன. தெய்வ வழிபாடும்,நோயும் துன்பமும் இன்றிக் காக்கும் காவல்பற்றித் தோன்றியதே.

"மகனறிவு தந்தை யறிவு" என்றமுறைப்படி, தந்தையின் தொழில் திறமையும் மனப்பான்மையும் இயற்கையாகவே மகனுக்கமைவதாலும்,மக்கள்தொகை மிகாத தொடக்கக் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் சொல்லளவிலுந் தோன்றாமை யாலும், எல்லாத் தொழில்களும் தொல்வரவாகவே தொடர்ந்து செய்யப் பட்டு வந்தன.தலைமுறை மிக மிகத் தொல்வரவுத் தொழில் திறமை மிகுவதனாலும், அத் தொடர்ச்சி மேன்மேலும் போற்றப்பட்டு வந்தது. ஒருவன் தன் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு, எச் சமையத்திலும் தொழில் மாற முடியுமேனும், அதற்கேதுவான நிலைமை அக்காலத்தில் ஏற்படவில்லை.

உழவனை உயர்த்திய பழங்காலம் 

துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம்,அதிகாரம் முதலியன பற்றியன்றி, பிறப்பினால்ஏற்றத்தாழ்வு எவருக்கும் ஏற்றிக் கூறப்படவில்லை.

எல்லா உயிர்வாழ்க்கைக்கும்இன்றியமையாத உணவை விளைப்பதனாலும், நிலையாகக்குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமை யாகவிறுத்து அரசை நிலைநிறுத்துவதனாலும்,போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருது வெற்றியுண்டாக்கு வதனாலும், இரப்போர்க் கீந்துதுறப் போர்க்குத் துணையா யிருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே  உயர்ந்த குடிவாணனாகவும்தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப்பக்கத் துணை வராகவே கருதப்பட்டனர்.

வெளிநாட்டு அரும்பொருள்களையெல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக் கவ்வப்போது பணமுதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன்,உழவனுக்கடுத்த படியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரராலும் பகைவராலும் அதிகாரி களாலும் கடுவிலங்குகளாலும், உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமற் காக்கும் அரசன், பணிவகையில் வணிகனுக்கு அடுத்த படியாகவும்,அதிகார வகையிற் கண்கண்ட கடவுளாகவும்கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணிபுரி பவனும், ஆக்கவழிப் பாற்றலுள்ளவனுமான அந்தணன், இறைவனுக் கடுத்தபடி தெய்வத் தன்மையுள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம் உழவு, வாணிகம், காவல், கல்விஎன்னும் நாற் றொழிலே தலைமையாகக்கொள்ளப்பட்டு, எல்லாக் கைத்தொழில் களும்உழவுள் அடக்கப்பட்டன.

வேளாளர் வணிகர் அரசர் அந்தணர் என்பதே வரலாற்று முறையாயினும், அந்தணர்க்கும் அரசர்க்கும் சிறப்புக் கொடுத்தற்பொருட்டு அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என எதிர்முறையிற் கூறினர்.

இந் நாற்பாற் பகுப்பையே, பிராமணர் ,சத்திரியர் ,வைசியர் சூத்திரர் எனத் திரித்தனர் ஆரியப் பூசாரியர்.

இற்றைப் பிறவிக் குலங்கள்

அகம்படியன்

தொழில் - பண்டைநாளில் மறவர்குலமன்னர் மாளிகைகளில் அகம்படித் தொண்டு(இல்லப்பணி) செய்தவர். இன்று தென்மாவட்டங்களிற் பயிர்த்தொழிலும்வடார்க்காட்டு மாவட்டத் திற் கொத்த (கட்டட)வேலையும் செய்பவர்.

பிரிவு - ஐவழி நாட்டான்,கோட்டைப்பட்டு முதலிய பன்னீரக மணப் பிரிவுகள் (Endogamoussteps).

பட்டம் - அதிகாரி, சேர்வைகாரன்,பிள்ளை, முதலியார்.

"கள்ளன் மறவன் கனத்தோர்அகம்படியன்" என்னும் பழமொழி, குலந்தோன்றியவழியைக் காட்டும்.

அம்பல(க்)காரன்

தொழில் - பயிர்த்தொழிலும்ஊர்காவலும்.

பிரிவு - முத்திரியன் (முத்தரையன்),காவல்காரன், வன்னியன், வலையன் என்னும் நாலகமணப்பிரிவுகள்.

பட்டம் - சேர்வைகாரன், முத்தரையன்(முத்தரசன்), அம்பல காரன், மழவராயன் (மழவரையன்),வன்னியன், மூப்பன்.

அளவன்

தொழில் - உப்பளத்தில் உப்புவிளைத்தல்.

பட்டம் - பண்ணையன், மூப்பன்.

இடையன்

பெயர் - அண்டன், ஆயன்(ஆன்வல்லவன்),இடையன், குடவன், கோவன் (கோன், கோனான்), கோவலன், தொறுவன், பொதுவன்.

தொழில்-ஆடுமேய்ப்பு, மாடுமேய்ப்பு,ஆனைந்து (பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்)விற்பு.

பிரிவு - தொழிற் பிரிவு: ஆட்டிடையன்,மாட்டிடையன் (ஆனாயன்).

குலப் பிரிவு : கல்கட்டி, பாசி முதலியஇருபது பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலக்காரன்,மந்திரி (மந்தையாரி), கீடாரி (கிடையாரி).

குலப்பட்டம் - கோன் (கோனான்),பிள்ளை, கரையாளன், சேர்வை, மணியக்காரன்,முக்கந்தன், மந்திரி.

"இடையனில் ஆண்டியு மில்லை,குயவனில் தாதனுமில்லை."

இருளன்

பெயர் - இருளர் (நீலமலை), வில்லியர்(செங்கழுநீர்ப்பட்டு தென்னார்க்காடுமாவட்டங்கள்), தேன் வன்னியர் (தேன்படையாட்சி), வனப் பள்ளியர்(வ.ஆ.மா.).

பிரிவு - புறமணப் (Exogamous)பிரிவுகள்.

பட்டம் - நாய்க்கன், பூசாலி (பூசாரி).

தொழில் - தோட்டவேலை, தேனெடுத்தல்,மீன் பிடித்தல்.

உடையான்

தொழில் - பயிர்த்தொழில்

பிரிவு - நத்தமான், மலைமான்,சுதர்மான், உடையான். ஒவ்வொன்றிற்கும் காணிஎன்னும் அகமணப் பிரிவுகளுண்டு.

பட்டம் - உடையார், நயினார், மூப்பன்,பண்டாரியார், பண்டாரத்தார், பாளையத்தார்,காவற்காரர்.

உப்பரவன் (உப்பளவன்)

பெயர் - உப்பிலியன்(தமிழ்நாடு),உப்பரன் (தெலுங்கு நாடு), உப்பாரன் (கன்னடநாடு).

தொழில் - உப்பு விளைத்தல்.

தலைவன் பட்டம் - பட்டக்காரன்.

குலப்பட்டம் - செட்டி.

உவச்சன் (பூசாரி)

தொழில் - காளிகோவிற் பூசை.

பிரிவு - மாராயன், பாண்டி முதலியஐம்பிரிவுகள்.

பட்டம் - புலவன்.

                                                                                                            தொடரும்..........................

3 comments:

  1. தெரியாத சேதிகள்...

    ReplyDelete
  2. வருக கோவை நேரம் ,

    இது தமிழர்களின் வரலாறுதான் பல புத்தகங்களில் தூங்கி கொண்டு இருப்பதை இங்கே எடுத்து பதிவு செய்கிறோம் ,

    தொடர்ந்து படியுங்கள் , நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் , நன்றி

    ReplyDelete
  3. இது பாதி வரலாறு மட்டும்தான்.இதுவும் முழுமையல்ல.ஆனால் அதே சமயம் இதில் உள்ளவையும் தெரியாமல் இருப்பவர்கள் அநேகர் உண்டு.

    ReplyDelete