Thursday, March 8, 2012

நாம் யார் -24

பாகம்-23 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

கட்டியர்

கங்கநாட்டிற்குக் கிழக்கிலிருந்தபண்டைக் குணகொங்குப் பகுதியைக் கங்கர்ஆண்டுவந்ததாகத் தெரிகின்றது.

வடக்கில் பல்லவர் தலையெடுத்த பின்பும், தெற்கில் அதிகமானர் கை தாழ்ந்த பின்புமே? கங்கநாடும் கட்டிநாடும் தெற்கே தள்ளி வந்திருத்தல் வேண்டும்.

காவிரிப்பூம்பட்டினம் கடலில்மூழ்கியது

சேரன் செங்குட்டுவன் பத்தினித்தெய்வத்திற்குப் படிமை நிறுவி விழா வெடுத்தபின், காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது.அன்றோ அதற்குச் சற்றுமுன்போ குமரியாறும் கடலுள்மூழ்கிற்று. அதன்பின் தமிழகத்தின் தென்னெல்லையும் கடலாயிற்று.

கடைக்கழக் கால வாணிக வளர்ச்சி
நில வணிகமும் நீர்வணிகமும் கடைக்கழகக் காலத்தில் பெரு வளர்ச்சி யடைந்திருந்தது.

சட்டை யணிந்த வரும் பாதக்கூடு (boots) மாட்டிய வருமான மேலையாசியரும் மேனாட்டாரும், மிளகு பொதிகள் கொண்டு செல்லும் கோவேறு கழுதைச் சாத்தொடு கூடி, மலைபடு செல்வமுல் கடல் படு செல்வமுமான பல அரும்பொருள்களை, அரசன் நிறுத்தியவிற்படைஞர் இரவும் பகலுங் காத்திருக்கும் சுங்கப்பெருவழிகளிற் சென்று விற்றுத் திரிந்தனர்.

கடாரம் (பர்மா ) , மலையா முதலிய கீழை நாடுகட்கும், சுமதுரை சாலி (சாவகம்) முதலிய கீழைத்தீவுகட்கும், நீர்வாணிகர் சென்று வணிகம் செய்து வந்தனர். அவர் இக்காலத்து நாட்டுக்கோட்டைச் செட்டிமார்போல் தங்கள் குடும்பங்களை இங்கேயே விட்டுச் சென்றனர்.

கீழ்கரை யிலிருந்த கொற்கை தொண்டி புகார் முதலிய துறை நகரங்களுள், புகார் மிகப்பெரிதாகவும் உலகிலேயே தலைசிறந்த தாகவும் இருந்தது. அது காவிரிக் கயவாயில் அமைந்த அழகிய துறைநகரமாதலால் காவிரிப்பூம்பட்டினம் என்றும், அவ்வாறு கடலிற் புகும் இடத்திலிருந்ததனால் புகார் என்றும் பெயர் பெற்றது. துறைநகரைப் பட்டினம்என்பது பண்டை வழக்கு.  

பாண்டியன் உரோம நாட்டுத் தொடர்பு

பாண்டியன் அகத்தசு (Augustus-கி.மு.44 - கி.பி.14) என்னும் உரோம நாட்டுப் பேரரசனுக்குத் தூது விடுத்ததாகவும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏற்கெனவே இரு நாடுகட்கும் இடையே இருந்த வாணிகத்தொடர்பொடு

தூதாண்மைத் தொடர்பும் ஏற்பட்ட தன் விளைவாக, ஒரு சிறு உரோமக் குடியேற்றம் மதுரையில் அமைந்ததாகவும், பாண்டியன் மெய் காவற்படை உரோமப் பொருநரைக் கொண்டிருந்ததாகவும் தெரிகின்றது. மதுரை மாநகர்க் கோட்டை வாயிலையும், கோவலன் காலத்தில் உரோமப்படைஞர் காத்து நின்றது.

ஏமாற்று

நோயால் இறந்த அரசருடம்பைப்பிராமணன் தருப்பையிற் கிடத்தி வாளால் வெட்டி, அவருயிரை விண்ணுலகத்திற் கேற்றும் வாள் போழ்ந்தடக்கலும்; பாலைக் கௌதமனார், பத்துப் பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வி வேட்கையில், தம் மனைவி யாருடன் விண்ணுலகடைந்தா ரென்பதும்; பாண்டியன் அரசியற் பணியாளர் வார்த்திகனைச் சிறையிலடைத்தவுடன், காளிகோயிற் கதவம் தானே சாத்திக்கொண்ட தென்பதும் துணிச்சலான ஏமாற்றுவினைகளாம்.

பொருள் கவர்வு

தமிழ வேந்தரின் பொற்செல்வப் பெருக்கையும் ஏமாளித் தன்மையையுங் கண்ட பிராமணர், அவரிடமிருந்து இயன்றவரை பொன்னும் நிலமும் பறிக்கத் திட்டமிட்டுப் பதினாறு தானங்கள் வகுத்துள்ளனர். அவையாவன:

(1)துலாபுருடதானம் ஆள்நிறைப் பொற்கொடை.
(2)இரணிய கருப்பதானம் பொற் கருப்பைக் கொடை.

(3) 
பிரமாண்ட தானம் பொன் நிலவுருண்டைக் கொடை.
(4) 
கல்ப பாதப தானம் விண்மரப் பொற்கொடை
(5) 
கோசகசிரம் ஆயிர ஆக் கொடை.
(6) 
இரணிய காமதேனு தானம் பொன்னாக் கொடை.
(7) 
இரணியாசுவ தானம் பொற்குதிரைக் கொடை.
(8) 
இரணியாசுவரத தானம் பொற்குதிரைத் தேர்க்கொடை.
(9) 
ஏமாத்தித தானம் பொன்யானைத் தேர்க் கொடை.
(10) 
பஞ்சலாங்குல பூதானம் ஐயேர் நிலக்கொடை.
(11) 
தரா தானம் பொன்நிலக் கொடை.
(12) 
விசுவ சக்கர தானம் வியனுல காழிப் பொற்கொடை.
(13) 
மகா கல்ப லதா தானம் பெருவிண்கொடிப் பொற்கொடை.
(14) 
சப்த சாகர தானம் எழுகடற் கொடை.
(15) 
இரத்தினதேனு தானம் மணிப்பொன் னாக்கொடை.
(16) 
மகா பூத கடதானம் ஐம்பூதப் பொற்கலக் கொடை.

 எழுகடற் கொடை என்பது நன்னீர்,உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு ஆகியவற்றை எழு குண்டங்களில் நிரப்பிச்சடங்குசெய்து கொடுப்பது.

பிராமணருக்குக் கொடுக்கும் நிலத்திற்குப் பிரமதாயம் என்றும்,ஊர்க்குப் பிரமதேயம் என்றும் பெயர்.

                                                                                                   தொடரும்..............................

No comments:

Post a Comment