Saturday, March 10, 2012

நாம் யார் -26

பாகம்-25 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பழந்தமிழ் வேந்தரைப் பழித்தல்

மாவலி என்பவன் பாரதக் காலத்திற்குமுற்பட்டுச் செங்கோலாட்சி செய்த மாபெரும் சேர வேந்தன். சேர நாட்டுத் தமிழரின் பின், அவர் வழி யினரான மலையாளியர், இன்றும் அவ் வேந்தனைஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியாய்க் கொண்டாடி வருகின்றனர். பிராமணர் அவனை ஓர்அசுரனாக்கி, அவன் திருமாலால் கொல்லப்பட்டதாகக் கதையுங் கட்டிவிட்டனர்.

மாவலியின் மகன் பிள்ளை பேர்த்தியான உழை, கண்ணபிரானின் மகன் பிள்ளை பேரனான அநிருத்தனை மணந்தாள்.மாவலியின் மரபில் வந்த சீர்த்தியை, கோவலன் காலத்துக் கிள்ளிவளவன் மணந்தான். சோழநாட்டின் ஒரு பகுதியான நடுநாட்டை 14ஆம் நூற்றாண்டுவரை, வாண கோவரையர் என்னும் மாவலி மரபினர் சிற்றரசராக இருந்த ஆண்டுவந்தனர்.

வடநாட்டிலும் தென்னாட்டிலும் பலஅரசரும் அறிஞரும் பிராமணியத்தை எதிர்த்ததனால், அசுரன் என்னுஞ் சொற்குக் கொடியவன் என்னும்பொருளை ஊட்டிவிட்டனர்.

தமிழர் ஒற்றுமைக் குலைவு

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்,ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக்காரிக்கண்ணனார், மூவேந்தர்க்குள்ளும் ஓரளவு ஒற்றுமை யிருந்த கடைக்கழகக் காலம்வரை, அந்நியர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முடியவில்லை. அதன் பின்னரே,ஒன்றன் பின் ஒன்றாகப் பல அயலாட்சிகள் தோன்றி, மூவேந்தரும் மறைந்தனர். அன்று மூவேந்தர் ஒற்றுமையைக் குலைத்த ஏஎதிரிகள் கூட்டம்,இன்றும் தமிழரிடையிருந்து ஒற்றுமையைக் குலைத்துவருகின்றது.

நடுநிலை திறம்பல்

தானங்களெல்லாம் பிராமணர்க்கே செய்யப்பட்டன.  தாமப்பல் கண்ணனார் சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பிராமணர்க்குத் தனிச் சலுகை காட்டியுள்ளான் .

தமிழ்க்கு இழிவு 

தமிழ் வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாத மொழியென்று தள்ளப்பட்டது.

பிராமணர் தமிழகம் வந்து தமிழரையண்டித் தமிழாலேயே வாழினும், தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்த வேண்டுமென்றே தேவை இல்லாத வடசொற்களைப் புகுத்தினர்.

வடசொல் வழக்கு

தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் செய்யுட்கு வட சொல் வேண்டியதே யில்லை. ஆனலும், வேதத்திலும் இதிகாச புராணங்களிலும் நூற்றுக்கணக்கான தென் சொற்களிருப்பதனாலும், அக் காலத்தில் வரலாற்றையும் மாந்தனூலையும் துணைக்கொண்ட மொழியாராய்ச்சி யின்மையாலும், வட மொழியிலுள்ள தென் சொற்களை யெல்லாம் வடசொல் என்றே கருதினதனாலும், வடமொழி தேவமொழியாதலால் ஒரு மொழி யினின்றும் கடன் கொள்ளாதென்னும் தவறான கருத்துப் புகுத்தப் பட்ட தனாலும்,  வடமொழி வெறியரானபிராமணர் ஒருசில வேண்டாத வடசொற் களைத் தமிழில் புதிதாகப் புகுத்தினார்.

இலக்கியத் துறை

வீட்டின்பம் அளிக்கும் இறைவனைச் சிவன் அல்லது திருமால் என்னும் பெயரில் வணங்கி வந்ததனால், தமிழரே அறம் பொருளின்பம் வீடென்னும் நாற்பொருளை வகுத்தவராவர்.சிறு தெய்வங்கட்குக் காவு கொடுத்து வேள்வி வளர்க்கும் ஆரியர்க்கு, விண்ணுலகப் பேறேயன்றி வீடுபேறில்லை.

ஒரு நாடகக் கதையை அல்லது பனுவலைஅமைக்கும் போது அல்லது இயற்றும் போது, அக் கதைதலைவனின் குலத்திற் கேற்பப் பொருளை வகுக்க வேண்டுமன்பது, நூன்முறை யாகிவிட்டது. இதைக் கழகப் பாண்டியருள் ஒருவனும் நாடக நூலாசிரியனுமான மதிவாணனும் கடியாது மதிவீணனாயினன்.  

                                                                                                                   தொடரும்.............

No comments:

Post a Comment