Thursday, March 29, 2012

நாம் யார் -40

பாகம்-39 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

ஆங்கிலராட்சியும் அதன் நன்மைகளும்

ஆங்கிலராட்சி, 18 ஆம் நூற்றாண்டிடையில் தோன்றி, இருபதாம் நூற்றாண்டின் இடையில் நீங்கியது. அரசினர் அலுவலகங்களிலும், பெருஞ் சாலை களிலும், பொது விடங்களிலும், புகைவண்டிகளிலும், மின்வண்டி களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் வகுப்பு வேற்றுமை நீக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி எல்லா வகுப்பார்க்கும் பொது வாயிற்று. எல்லாத் துறை யிலும் பொய்யும் புரட்டும் கட்டுங் கதையுமான ஆரியத் தொல்கதை (புராண) முறைக் கல்வி யின்றி, உண்மையும் அகக்கரண வாற்றலை வளர்ப்பதும் அறியாமையையும் அடிமைத் தனத்தையும் அறவே அகற்றுவதுமான அறிவியற்கல்வி புகட்டப் பட்டது. கல்வித் திறமைமிக்க அனைவர்க்கும் வகுப்பு வேற்றுமை யின்றிப் படிப்புதவி (Scholarship) யளிக்கப்பட்டது. இந்தியா முழுதும் படிப்படியாக ஒரு பேரரைய ஆட்சிக்குட் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலராட்சி யிருந்த இலங்கை ,காழகம் (பர்மா) மலையா , தென்னாப்பிரிக்கா முதலிய பல வெளிநாடுகளிலும், இந்தியர் குடியேறித் தமக்கேற்ற தொழிலும் அலுவலும் பெற்று ஏந்தாக வாழ்ந்தனர். ஆங்கில வரசு மதத்துறையில் தலையிடவே யில்லை. குலமத கட்சி யின வேறுபாடின்றி, எளியார்க்கும் வலியார்க்கும் ஏழைகட்கும் செல்வர்க்கும் ஒரே நடுநிலை நயன்மை (நீதி) வழங்கப்பட்டது.

இதனால், ஆங்கிலராட்சி நேர்மையையும், புதுச்சேரி காரைக்கால் தெரு நேர்மையையும் ஒருங்கு நோக்கி ,"பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும்"என்று பழமொழியாக வழங்குமாறு, பொது மக்கள் புகழ்ந்து பாராட்டினர். சமுதாய இன்ப வாழ்க்கைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையா யிருந்த உடன்கட்டை யேறல், செடிற்குத்தல் (hook-swinging), குழந்தை மணம், நரக்காவு (human sacrifice) முதலிய குருட்டுப் பழக்கவழக்கங்களும்; தக்கர், பிண்டாரியர், தீவட்டிக் கொள்ளைக்காரர் முதலியகொடிய கயவர் கூட்டங்களும் அறவே ஒழிக்கப்பட்டன.

அருமையான அஞ்சல் துறையும், குறைந்த செலவில் விரைந்து வழிச் செல்லும் இருப்புப் பாதைகளும், அழகிய மாடமாளிகைகளும் மலைநகர் களும், இந்தியாவெங்கும் அமைந்தன. உயிருக்கும் பொருட்கும் சேதமின்றி அமைதியாக வாழுமாறு சிறந்த ஊர்காவலொழுங்கும், கலகமும் போருங் கனவிலுங் காணாவாறு மாபெரும் படையமைப்பும் ஏற்பட்டன.எல்லாத் திணைக் களங்களிலும் (departments), இந்தியர் தத்தம் கல்விக்கும் திறமைக்கும் தக்கவாறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப்பெற்றனர். 

இந்தியா முழுதும் ஒன்றுபட்டுநாளடைவில் தன்னாட்சி பெறுமாறு இந்தியத் தேசியப் பேராயம் (Indian National Congress) கியூம் (Hume, Allen Octavian)என்னும் ஆங்கிலப் பெருமகனாரால் 1855-ல் தோற்றுவிக்கப்பெற்றது. அதன் பயனாக, பேராயத்தலைவர்கள், ஆங்கிலர் நேரடியாட்சி மண்டலங்களில் மட்டு மன்றி, எல்லா உள்நாட்டு மன்னர் நாடுகளுள்ளும் உரிமையொடும் பாதுகாப்பொடும் புகுந்து, விடுதலைப் போராட்டத்திற்கு விதைகளை வாரியிறைத்துவந்தனர். இறுதியில், 1947ஆம் ஆண்டு முழு வெற்றியும் பெற்றனர். தந்தை மகனிடத்திற் சொத்தையும், அரசன் இளவரசனிடத்தில் நாட்டையும், தகுந்தபருவத்தில் ஒப்படைப்பதுபோல், ஆங்கிலரும் பேராயத் தலைவரிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட்டு அமைதியாய் அகன்றனர். அதனாற்பிரெஞ்சியரும் போர்த்துக்கீசியரும் சற்றுப்பிந்தி இந்தியாவை விட்டு நீங்க நேர்ந்தது. 

ஆங்கிலர்க்கும் பிராமணர்க்கும்வேற்றுமை




ஆங்கிலர் 

பிராமணர்
(1)
வாணிகத்திற்கு வேண்டிய பொருளொடும், பாதுகாப்பிற்கு வேண்டிய படையொடும், ஆட்சிக்கேற்றஅறிவொடும், வந்தனர்.
 கையுங் காலுமாக வந்தனர்.
(2)
வெண்ணிறமாயிருந்தும், தம்மை மக்களென்றேகூறினர். 
வெண்ணிறம் பொன்னிறமாயும கூறினர். செந்நிறமாயும் கருநிறமாயும் மாறிய பின்னும், தாம் நிலத்தேவரென்றே கூறியே மாற்றினர்.
(3)
தம் மொழி மக்கள் மொழி யென்பதைமறைக்கவேயில்லை.
ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதா  யிருந்தும், தம் முன்னோர் மொழியையும் இந்தியா விற்புணர்த்த சமற்கிருதம் என்னும் இலக்கிய நடை மொழியையும் (literary dialect), இன்றும் தேவமொழி யென்றே துணிச்சலுடன் சொல்கின்றனர்.
(4)
தாழ்த்தப்பட்ட தமிழருள் கடைப் பட்ட பறையரைத் தம் சமையற்காரராக்கி, அவர் ஆக்கியதையும் படைத்ததையும் பிராமணரும் விரும்பியுண்ணும் படி செய்தனர்.
தமிழருள் தலைமையான வராகக் கருதப்படும் மரக்கறி வெள்ளாளர், பொற்கலத்திற் கொடுக்கும் தண்ணீரும் குடிக்கத் தகாதது போல் நடிக்கின்றனர்.
(5)
அகக்கரண வாற்றலை வளர்க்கும் உண்மையான அறிவியலைக்கற்பித்தனர். 
தமிழரை அடிமடையராக்கி, அடிமைத்தனத்துள் ஆழ்த்தும் தொல் கதைக்கல்வியைப் புகட்டினர்.
(6)
தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்திய தென்றும், மக்கள் முதன் மொழிக்கு நெருங்கிய தென்றும், கூறினர் (கால்டுவெல்).
தமிழ் சமற்கிருதக் கிளை யென்றும் பன மொழிக் கலவை யென்றும் காட்டியுள்ளனர். (சென்னைப் ப.க.க.தமிழ் அகரமுதலி)
(7)
குலம் தொழில்பற்றிய தென்றும் மக்கள் படைப்பென்றும் கூறு கின்றனர். 
குலம் பிறவி பற்றிய தென்றும் இறைவன் படைப்பென்றும் அதை இறைவனே சொன்னா னென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை)
(8)
ஆங்கிலத்திலுள்ள அயற் சொற்களை யெல்லாம் தாமே தெரிவிக்கின்றனர்.
வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற் களெல்லாம்வடசொல்லே யென்று வலிக்கின்றனர்.
(9)





(10) 










(11)    




(12)  







(13)  



(14)  






(15) 




(16)  



(17)   


கிறித்தவ மதம் உரோம நாட்டினின்று வந்து இலத்தீன் வாயிலாகப் புகுத்தப்பட்டும், தம் தாய்மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர்.

ஆட்சியினாலும் கல்வியினாலும் இந்தியா முழுவதையும் ஒற்றுமைப் படுத்தினர். 









தமிழ் தூய்மையாகப் பேசப் படுவதையே விரும்புவர். 



தம் திருமறை இறைவனால் ஏவப்பெற்ற முற்காணியரால் (தீர்க்கதரிசிகளால்) எழுதப்பட்டதென்பர். 





தாம் கண்டவற்றையும் செய்த வற்றையுமே தம் செயலாகக் கூறுவர்.  

தம் வள மனைக்குள் நல்லார் எவரையும் தாராளமாகப் புகவிடுவர். 


தமக்கு உதவிய மொழிகளையும் அயலாரையும் நன்றியறிவோடு புகழ்வர்.  

தமிழ் நூல்களை அச்சிடின், உள்ளபடியே அச்சிடுவர்.  


பிரித்தானியம் உடலைமட்டும் தாக்கி, ஆங்கிலனுடன் நீங்கி விட்டது 
சிவனியமும் மாயோனியமும் முழுத்தூய தமிழ மதங்களா யிருந்தும், தமிழர்கோவில் வழிபாட்டையும் சடங்கு களையும் அவர்க்குத் தெரியாத வடமொழியிலேயே ஆற்றி வருகின்றனர்.


ஒரேபேரினத்தைப் பல சிற்றினமாகவும், ஒவ்வொரு சிற்றினத்தையும் பற்பல அகமணப் பிறவிக்குலங்களாகவும், சின்ன பின்னமாக்கிச் சிதைத்துள்ளனர். பிரித் தாட்சிமுறையைப் பிராமணரைப் போற் கையாண்டவர்,இவ்வுலகத்தில் வேறொருவருமில்லை.


நூற்றிற்கு நூறும் வடசொற் கலந்து பேசப்படுவதையே விரும்புவர்.


ஐம்பூதச் சிறு தெய்வவழுத்து களும் ஆரிய வரலாற்றுத் துணுக்குகளுமான வேத மந்திரங்கள், இறைவனால் இயற்றப் படவில்லை யென்றும், முனிவராற் காணப்பட்டவையே யென்றும்,பிதற்றுவர்.

அயலார் நாகரிகத்தையும், இலக்கியத்தையும் தமவென்றே கூசாது பறையறைவர்.

தம் இல்லத்திற்குள் பிராமணர் அல்லார் புகின் தீட்டெனக் கருதுவர்.


தமக்கு வாழ்வளித்த தமிழையும் தமிழரையும், இழிந்தோர் மொழி (நீசபாஷை) யென்றும், சூத்திரர் என்றும் பழிப்பர்.


பழந் தமிழ் நூல்களையும் பாடல் களையும் அச்சிடும் போது,தம் குல மேம் பாட்டிற்கேற்றவாறு சொற்களை மாற்றியே அச்சிடுவர்.

பிராமணியம் ஆதனையும் (ஆன்மாவையும்) அகக்கரணங் களையும் தாக்கி, உயிர் நீங்கிய பின்னும் தொடர்வதாயுள்ளது.


                 தொடரும் .....................

No comments:

Post a Comment