Monday, March 26, 2012

நாம் யார் -38

பாகம்-37 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

பண்பாட்டுத் துறை

மறமிழப்பு

ஆயர் குலம், இன்று பெண்டிர் மட்டுமன்றி ஆட வரும் ஆட்டுக்குட்டிகள் என்னுமாறு, அடங்கியொடுங்கி யமைந்தது. அன்று கூற்றுவனும் நடுங்குமாறு கோவர் (ஆயர்) நடத்தி வந்த கொல்லேறு கோடல்விழா இன்று மறவராற் சல்லிக்கட்டு என்னும் பெயரில் காட்சியளவாக நடைபெற்று வருகின்றது. பொதுவர் கல்லூரி அல்லது கோவர் கல்லூரி என்று அழகிய பெயரிடவும் துணிவின்றி, யாதவர் கல்லூரி என்று ஒருவடநாட்டரசன் பெயர் பற்றிய வடசொல்லை ஆண்டுள்ளனர். 

பகுத்தறிவிழப்பு

தமிழருள் தலைமையான குலத்தானாகக் கருதப்படும் மரக்கறி வெள்ளாளன், பொற்கலத்தில் நன்னீர் கொடுப்பினும் குடிக்க மறுக்கும் பிராமணன், வெள்ளாளனின் மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படும் இடைச்சி, பழமட்கலத்தில் தண்ணீர் கலந்து விற்கும் தயிரை, வானமுதம் போல் வாங்கிக்குடிப்பது கண்டும், தான் அவனின் தாழ்ந்தவனென்று மானமின்றிச் சொல் கின்றான்.

பிராமணரில்லா மற்ற நாடுகளிலெல்லாம் என்றும் மாறக்கூடிய தொழில் பற்றியே மக்கள் வகுப்புகள் ஏற்பட்டிருத்தல் கண்டும் , பிரா மணருள்ள இந்நாட்டில் மட்டும் குலங்கள் இறைவன் படைப் பென்று கருதுவது, பகுத்தறிவின்மையைத் தெளிவாகக்காட்டும்.

தன்மான மின்மை

முதற்குலோத்துங்கன் காலத்தில், பையற் பருவத்து ஆளவந்தார் வித்துவ சனகோலாகலன் என்னும் ஆக்கி யாழ்வானோடு தருக்கித்து, அரசி வேத வுரைப் படிகற்பிழந்தவ ளென்று, வேத்தவையில் அரசன் முன் சொன்னதை அவையோர் ஒப்புக் கொண்டதும் அவ்வாறே நச்சினார்க்கினியரும் தொல் காப்பியவுரை வரைந்திருப்பதும், கோழிக்கோட்டு மன்னரான சாமொரின் குடியினர் தாம்மணந்த பெண்டிரை முதல்முந்நாள் பிராமணன்நுகரவிட்டதும், தமிழரின்அல்லது தமிழ் வழியினரின் தன் மானமின்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.

நெஞ்சுரமின்மை

திருவரங்கத்தில் அரங்கநாயகி மூக்குத்தியைத் திருடிய பிராமணப்பெண், அத் தெய்வம் ஏறியவளாக நடித்து,கழுநீர்ப் பானையினின்று அம் மூக்குத்தியை எடுத்துக் கொடுத்த போது, தஞ்சை விசயராகவலுநாயக்கர் தண்டியாது விட்டதும்;

இறுதியாக ஆண்ட திருவாங்கூர் மன்னர் இங்கிலாந்து சென்று மீண்டவுடன், அவரது பதுமநாபர் கோவிலுக்குத் தீவைத்த பிராமணப் பூசாரியைத் தீக்கரணியம் வினவியபோது, அது மன்னர் மேனாடு சென்றதனாற் பொங்கிய தெய்வச்சினம் என்று விடையிறுத்ததைக் கேட்டு, வாளாவிருந்ததாகச் சொல்லப்படுவதும்;

தென்மொழி' ஆசிரியர் பாவலர் பெருஞ்சித்திரனார், திருநெல்வேலித்திரவியம் தாயுமானவர் தென் மதக் கல்லூரித் திருவள்ளுவர் விழாவிற் சொற்பொழி வாற்றியபோது தடுத்ததும்; தமிழ் திரவிடரின் நெஞ்சுரமின்மையைத் தெற்றெனத் தெரிவிக்கும்.

தமிழ்ப்பற்றின்மை

சில கட்சித்தலைவரும் பாவிசைப் பாளரும், கட்டாய இந்தியை ஏற்பதும் கோவில் தமிழ் வழிபாட்டைத் தடுப்பதும் தாய்மொழிப் பற்றின்மை யாலேயே.

மொழித்துறை

மொழியிழிபு 

சிவனியம் மாலியம் என்னும் இரு மதமும் தோன்றிய தமிழ் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டது.

சொல்லிழிபு

சோறு, தண்ணீர் முதலிய தூய தமிழ்ச்சொற்கள் பள்பறை வழக்கென்று தமிழராலும் பழிக்கப்பட்டன.

சொல் வழக்கு வீழ்வு 

கழுவாய் (பிராயச்சித்தம்), சூள்(ஆணை) முதலிய நூற்றுக்கணக்கான அருமை யான தமிழ்ச்சொற்கள்,வழக்கு வீழ்த்தப்பட்டன.

சொல்லிறப்பு

ஆயிரக்கணக்கான இரு வழக்குத் தமிழ்ச் சொற்களும் இறந்துபட்டன.இறந்த சொற்கு என்றும் எடுத்துக் காட்டில்லை.

சொற்பொருளிழப்பு

உயிர்மெய் என்பது, ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட உயிரொடு கூடிய மெய் (living thing).பிராணி என்னும் வடசொல் வழக்கினால்,உயிர்மெய் என்னும் சொல் தன் பொருளை இழந்தது,உயிரி என்றொரு சொல்லுந் தோன்ற வில்லை.

புஜம் என்னும் வடசொல் வழக்கினால்,தோள் என்னும் தமிழ்ச் சொல் தன் பொருளையிழந்து, தோள்பட்டையைக் குறித்து, சுவல் என்னும் தென் சொல்லை வழக்கு வீழ்த்தியும் உள்ளது.

தமிழையும் தமிழ்ச்சொற்களையும் போற்றிக் காக்க வேண்டு மென்னும் உணர்வு, இன்றும், முப்பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர்க்கும் கல்வியமைச்சர்க்கும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கும் இல்லை.

இலக்கியத் துறை

பல்லாயிரக் கணக்கான முதலிரு கழக நூல்களும் பெயருமின்றி அழிக்கப் பட்டுவிட்டன. தொல்காப்பியமும் திருக்குறளுந் தவிர,கிறித்துவிற்கு முற்பட்ட எல்லா நூல்களும் இல்லாவாயின. பொது விலக்கியத்தைச் சேர்ந்த, பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பாடற்றிரட்டுகளும் கீழ்க்கணக்குப் பனுவல்களும் அல்லாது, அறிவியலும் கலையும் பற்றிய கடைக்கழகக்காலச் சிறப்பிலக்கியம் ஒன்று கூட இன்றில்லை.பதிற்றுப்பத்து முதலும் ஈறும் இன்றி நிலை பெற்றுவிட்டது. அகத்தியம் முதுநாரை பரதம் ஆகிய முத்தமிழ்ப் பிண்ட நூல்களும், அவற்றிற்கு முந்திய முத்தமிழ் மாபிண்ட நூல்களும் இறந்துபட்டன.

பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத்தேவர், அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான அரிய பண்டைத் தமிழ் ஏட்டுச்சுவடிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கக்கட்டடத்தில் ஐந்திலே ஒன்று வைக்கப்பட்டன.

ஆரியக் கருத்துகளைப் புகுத்தித்தமிழிலக்கியத்தை ஆரிய வண்ண மாக்கு தற்பொருட்டே, தொல்காப்பியர் காலம் முதல், நூல்களும் நூலுரைகளும் பிராமணத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக் கின்றன.

பிராமணர் அண்டிப் பிழைக்க வந்தஅயலினச் சிறு குழுவாரா யிருந்தும், தமிழ்நாட்டுக் கோவில்களில், தமிழர்க்குப் பயன்படா வாறும், தமிழ் கெடுமாறும், பல கல்வெட்டுகள் வடமொழியிற் பொறிக்கப்பட்டுள்ளன.

                                                                                                               தொடரும் .......................

No comments:

Post a Comment