Wednesday, March 7, 2012

நாம் யார் -23


பாகம்-22 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

எருமையூரன்

இற்றை மைசூர் நாட்டின் பழம்பெயர் எருமை நாடு என்பது. எருமைகள் மிக்கிருந்ததனால் அந்நாடு அப் பெயர் பெற்றது. அதன் தலைநகர் எருமையூர். அதிலிருந்து ஆட்சி செய்தவன் எருமை யூரன். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனால் வெல்லப்பட்ட எழுவருள்  எருமையூரனும் ஒருவன்.


எருமைக்கு வடமொழியில் மகிசம் (மகிஷ) என்று பெயர். அதனால் எருமையூர் என்பதைப் பிராமணர் மகிசபுரி என மொழி பெயர்த்தனர். அச்சொல் அதன் ஆங்கில வடிவையொட்டி இன்று மைசூர் எனவழங்குகின்றது.

"மாவா ராதே"என்னும் புறப்பாட்டைப் பாடிய எருமை வெளியனார் என்னும் புலவர், எருமையூரினராவர். "இருள்கிழிப்பதுபோல்" என்னும் அகப்பாட்டைப் பாடிய கடலனார் இவர் மகனார் ஆவர்.

நன்னன்

எருமை நாட்டிற்கும் குடமலைக்கும் மேற்கிலுள்ள தென் கன்னடப்பகுதி, கொண்கானம் என்னும் பெயர் கொண்டதாகும். கொண்கு துறைமுகம் அல்லது கடற்கரை. கொண்கன் நெய்தல் நிலத்தலைவன். கொண்கானம் கடற்கரை நிலமாதலால் அப் பெயர் பெற்றுள்ளது போல ,

கடைக்கழகக் காலத்தில் கொண்கானத்தை ஆண்டவன் நன்னன். அவன் தலைநகர் கடம்பின் பெருவாயில் என்பர். ஏழிற் குன்றம் என்னும் பெருமலையையும் பாழி, பாரம், வியலூர்,பிரம்பு என்னும் பேரூர்களையும் உடையது கொண்கானம். அவ்வூர்களுள் பாழி ஒரு வல்லரண் நகர். அது ஏழில்மலையின் எழு குவடுகளுள் ஒன்றான பாழியை அரணாகக் கொண்டதாகத் தெரிகின்றது. நன்னன் ஒரு கொடையாளியாகவும் இருந்தான்.

ஏழில்மலை என்பதைப் பிராமணர் சத்தசைலம் (ஸப்த சைல) என மொழி பெயர்த்தனர்.பின்னர் ஏழில்மலை என்பது எலிமலை எனத்திரிந்தபோது, ஏழில்மலை நாட்டை அவர் மூசிகநாடு என்றனர். மூசிகம் (மூஷிக) என்பது எலியைக்குறிக்கும் வடசொல். பாழிச்சிலம்பு என்பது பாழிக்கல்என்றும் வழங்கும். அது இன்று பாட்கல் எனத்திரிந்துள்ளது. வியலூர் என்பது, இன்று கன்னடமொழியியல்பிற்கேற்பப் பெயிலூர் (Bailur)என்று வழங்குகின்றது.

கொண்கானத்தின் கடலோர வடபகுதி துளுநாடு எனப்படும். அங்குத் தோகைக்கா என்ற ஊருள்ளது. மயில்கள் நிறைந்த சோலையினால் அவ்வூர் அப் பெயர் பெற்றது.

கொண்கானம் என்பது கடைக்கழகக்காலத்திலேயே கொங் கணம் எனத் திரிந்துவிட்டது.

வெளியன் வேண்மான் ஆய் எயினன்

கொண்கானத்தின் தென்கீழ்ப் பகுதி புன்னாடு எனப்பட்டது. அதை ஆண்ட வெளியன் வேண்மானார் மரபில் வந்தவன் வெளியன் வேண்மான் ஆய் எயினன்.அவன் தலைநகர் வாகை. 

பிட்டங்கொற்றன்

கொண்கானத்திற்குக் கிழக்கில், குடமலைத் தொடரிலுள்ள குவடுகளுள் ஒன்று குதிரைமலை. அம் மலை நாட்டை யாண்டவன் பிட்டங்கொற்றன்.

குதிரைமலைப் பகுதியிலுள்ள வடகரை மேற்கரை என்னும் இடப்பெயர்கள், இன்று 'படகரா', 'மர்க்கரா' என்று உருமாறி வழங்குகின்றன.

குதிரைமலை நாட்டுத் தலைநகர்ப் பெயரான கொற்றன் கருவூர் என்பது, இன்றும் 'கொத்தகனவூர்' 

இருங்கோவேள்

கொண்கானத்தின் வட பாலிருந்தது கடம்பரின் பங்களநாடு. அவ்விரு நாடுகட்கும் கிழக்கில் குடமலைத் தொடரின் கீழ்பால் இருந்தது வேளிரது வேணாடு. அந் நாட்டுத் துவரை நகரைத் தலைநகராகக் கொண்டு இருங்கோவேள் ஆண்டுவந்தான்.

துவரை (துவாரசமுத்திரம்) இன்று எருமையூர்நாட்டைச் சேர்ந்தது.

வேம்பாய்ப் (Bombay)பைதிரம் (பிரதேசம்) முழுதும் முன் காலத்தில்வேணாடா யிருந்தது. முன்னர் நைசாம் அரையத்தைச்சேர்ந்திருந்த எல்லோரா (Ellora),பழைய பட்டையங்களில் (சாஸனங்களில்) வேளூர்என்றும் வேளூரகம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.வேம்பாய்ப் பைதிரத்துச் சோழாபுரம் (Sholapur)மாவட்டத்தில் ஒரு நகர் வேளாபுரம்(Velapur)என்ற பெயர் கொண்டுள்ளது. அகமதுநகர் வட்டத்தில்வேளாபுரம் என்றும், பூனா மாவட்டத்தில் வேளகம்என்றும், பல நகரங்கள் உள்ளன. அப் பைதிரத்தைச்சேர்ந்த வேளகம் (வேள் கிராமம் (?)) என்னும்மாவட்டத் தலைநகர் பெல்காம் (Belgaum)என்றும், வேள்பட்டி என்னும் ஊர் பேல்ஹூட்டி (Belhutti)என்றும் வழங்குகின்றன. ஒய்சள மன்னரின்பட்டப்பெயரான பெல்லாள என்பது வேளாளன் என்பதன்திரிபாகவே கருதப்படுகின்றது.  

தொடக்கக் காலத்தில், வேணாடுமராட்டிய நாட்டில் மட்டுமன்றி கூர்ச்சரத்திலும் பரவியிருந்தது. கத்தியவார் கச்சுப் (Cutch)பைதிரங்களில், இன்றும் பலவூர்கள் வேளா என்பதன் திரிபான பேலா(Bela) என்னும் பெயர் கொண்டுள்ளன. அகத்தியர் துவராபதிப் போந்து பதினெண்குடி வேளிருள்ளிட்டாரைக் கொண்டுவந்தார் என்னும் நச்சினார்க்கினியர் கூற்று.

பிற்காலத்துத் தோன்றிய சளுக்கியர் வேணாட்டை ஆண்ட தனாலேயே, "வேள்புல வரசர்சளுக்கு வேந்தர்" என்று திவாகரமும் பிங்கலமும் கூறுகின்றன.

கங்கர்

இற்றை எருமையூர் (மைசூர்) நாட்டின் ஒருபகுதியை, அஃதாவது, பண்டைக் குணகொங்கின் வடபாகத்தில் ஒரு பகுதியை, கங்கர் என்னும் மரபினர் கடைக்கழகக் காலத்திலேயே ஆண்டு வந்தனர். கொங்கன் என்னும் பெயரே கங்கன் என்று திரிந்திருக்கலாம்.
                                                                                                                                             தொடரும்..................................

No comments:

Post a Comment