Tuesday, March 20, 2012

நாம் யார் -32

பாகம்-31 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

செட்டி


பெயர் விளக்கம் - பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி (எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது. 

பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப் பெயராகவும் கொண்டுள்ளனர்.

(1) வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).

(2) வாணியச் செட்டி.

        தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.

        பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி   என நான்கு.

(3) நாட்டுக் கோட்டைச் செட்டி

     தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.
     பிரிவு - ஒன்பது கோவில்கள்.

(4) நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்) 

(5) காசுக்காரச் செட்டி.

     தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.

(6) பேரிச் செட்டி.

     தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.

    பிரிவு - திருத்தணியார்,அச்சிறுபாக்கத்தார் முதலிய ஐந்து அக மணப்  பிரிவுகள்.

(7) கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்) 

       தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.

(8) மளிகைச் செட்டி. 

      தொழில் - பலசரக்கு விற்பனை.

(9) மஞ்சட்குப்பத்துச் செட்டி

(10) பன்னிரண்டாஞ் செட்டி.

செம்படவன்

தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல்,  ஓடமும் பரிசலும் விடுதல்.

பிரிவு - ஏழ் நாடுகள் அல்லது புறமணப்பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.

குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.

பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனப்பட்டனர்.

தேவடியாள்

தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.

வகைகள் - தேவகணிகையர், நேர்ந்து கொண்டோர், வறுமை யால் அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர், ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர், இவ்வகையாரின் வழியில் வந்தோர்.

தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.

தொண்டைமான்

பெயர் - தொண்டைமான், சுண்ணாம்புக்காரன்.

தொழில் - சுண்ணாம்புக்கல் நீற்றல்,மேளம் தட்டுதல், இசைக் குழலூதல்.

பட்டம் = சோழகன்.

நளவன்

தொழில் - கள்ளிறக்குதல் (யாழ்ப்பாணம்).

பட்டணவன்

இடம் - கிருட்டிணாமுதல் தஞ்சை வரை கடற்கரை.

பெயர் - பட்டணவன், கரையான்.

தொழில் - கடல்மீன் பிடித்தலும் வாணிகமும்.

பிரிவு - பெரிய பட்டணவர் , சின்னப்பட்டணவர்.

பட்டம் - செட்டி.

பண்டாரம்

பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம் போன்ற உயர் பொருள் பேரறிஞன்.

பிரிவு - வெள்ளாளப் பண்டாரம் (கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர் பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).

பணிக்கன்

பெயர் - இல்லத்துப் பிள்ளை.

தொழில் - நெசவும் வாணிகமும்.

பிரிவு - பல புறமண இல்லங்கள்.

பட்டம் - பணிக்கர்.

பணிசெய்வோன் (பணிசவன்)

தொழில் - சாவறிவித்தலும் தாரை ஊதுதலும் இரத்தலும் (சேலம்).

கோவிலில் இசைக்குழல் ஊதுதலும் நட்டுவமும் (திருநெல்வேலி).

பிரிவு - வலங்கை, இடங்கை.

பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.

பரத்தை

பெயர் - விலைமகள், பொதுமகள், வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.

வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.

பரவன்

பெயர் - பரவன், பரதவன், பரதன்.படவன்-பரவன்.

இடம் - தஞ்சைக்குத் தெற்கில் குமரி வரை கடற்கரை.

தொழில் - கடல் மீன் பிடித்தலும் கடல்வாணிகமும்.

பட்டம் - செட்டி.

பரிவாரம்

வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.

தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.

பிரிவு - சின்ன வூழியம் ,பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள்.

பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன்.

                                                                                                       தொடரும்............................

No comments:

Post a Comment