Sunday, March 4, 2012

நாம் யார் -22

பாகம்-21 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

கடைக்கழகம் முடிவு

கி.பி.3ஆம் நூற்றாண்டில், உக்கிரப்பெருவழுதி காலத்தில், பாண்டிய வரசும்கடைக்கழகமும் குலைந்தன.

முதலிரு கழக இலக்கியமும் முற்றும்ஆரியரால் அழியுண்டத னால், இக்காலத்திற் சிலர்கடைக்கழகம் ஒன்றே இருந்ததெனக் கருதுவர். வையாபுரிகளோ, அதுவுமிருந்த தில்லையென்றும்,கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மதுரையில் தோன்றிய சமணசங்கம் ஒன்றே தமிழகத்திலிருந்த பண்டைத் தமிழ்க் கழகம் என்றும் கூறுவர்.

10ஆம் நூற்றாண்டினரான பட்டினத்து அடிகள்கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்னும்வடசொல்லும் பெரிய சங்கைக் குறிக்கும் சங்கம்என்னும் தென்சொல்லும் வடிவொத் திருகிறது.

கடைக்கழகக் காலக் குறுநில மன்னர்

அகுதை, அத்தி, அதிகமான், தகடூர் பொருதுவீழ்ந்த எழினி, அதிகமான் நெடுமானஞ்சி,அதிகமான் நெடுமானஞ்சி மகன் பொகுட் டெழினி,அந்துவஞ் சாத்தன், அந்துவங்கீரன், அம்பர்கிழான் அருவந்தை, அவியன், ஆதனழிசி, ஆதனுங்கன்,ஆந்தை, ஆமூர் மல்லன், ஆய் அண்டிரன், இயக்கன், இருங்கோவேள், இளங்கண்டீரக்கோ, இளங்குமணன்,இளவிச்சிக்கோ, இளவெளி மான், ஈர்ந்தூர்(ஈந்தூர்), கிழான் தோயன் மாறன், எயினன், எழினி,ஏற்றை, ஏறைக்கோன், ஏனாதி திருக்கிள்ளி,ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன், ஓய்மான்நல்லியக் கோடன், ஓய்மான் வில்லியாதன்,கங்கன், கட்டி, கடிய நெடுவேட்டுவன்,கண்டீரக்கோப்பெரு நள்ளி, கந்தன் (நாஞ்சிற்பொருநன்), கரும்பனூர்கிழான், குமணன், கொண்கானங்கிழான், சிறுகுடிகிழான் பண்ணன், சோழநாட்டுப்பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன், சோழியவேனாதி திருக்குட்டுவன், தந்துமாறன்,தருமபுத்திரன், தழும்பன், தாமான் தோன்றிக்கோன், தென்பரதவர், தேர்வண் மலையன், தொண்டைமான், நம்பி நெடுஞ்செழியன், நன்னன்,நன்னன் சேய் நன்னன், நாஞ்சில் வள்ளுவன்,நாலைகிழவன் நாகன், நெடுவேளாதன், பழையன், பிட்டங் கொற்றன், புல்லி, பூந்துறை (புன்றுறை),பொறையாறு கிழான், மல்லிகிழான் காரியாதி,மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன், மலையமான் திருமுடிக்காரி, முக்காவல் நாட்டு ஆமூர்மல்லன், முதியன், மூவன், மையற்கோமான் மாவன்,மோகூர்ப் பழையன், வல்லார்கிழான் பண்ணன்,வல்வில் ஓரி, வாட்டாற்றெழினி யாதன்,விச்சிக்கோன், வெளிமான், வேங்கை மார்பன்,வேள் எவ்வி, வேள் பாரி, வையாவிக்கோப்பெரும்பேகன் முதலியோர்.

இவர்களுள் , தொண்டைமான், நன்னன் முதலிய சிற்றரசரும், வள்ளல்களும் முடியணிந்தவராவர். கடைக்கழகக் காலத்திற் பொதுவாக மூவேந்தர் கைகளும் தாழ்ந்து விட்டதனால், குறுநில மன்னர் தலையெடுத்து முடியணிந்து கொண்டனர். சேரன்செங்குட்டுவன் ஏழரசரை வென்று, அவர் முடிகளை மாலையாக அணிந்திருந்தான்.

குறுநில மன்னர்களுள் பெருவள்ளல்கள்

அதிகமான், ஆய், ஓரி, காரி, நள்ளி,பாரி, பேகன், குமணன், நல்லியக்கோடன் என்பவர் பெருவள்ளல்கள். இவருள் முதலெழுவர் இலக்கியப் புகழ் பெற்றவர். அவருள்ளும் பாரி பெரும்புகழ் பெற்றவன். அவ் வெழுவர் கொடைப் பொறையையும் அவருக்குப் பின் நல்லியக்கோடன் ஒருவனே தாங்கினானென்றும், நல்லூர் நத்தத்தனார் பாடுவர். தன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு போந்திருந்த குமணன், பெருந்தலைச் சாத்தனார்க்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்மையால், தன் தலையை வெட்டிக் கொண்டு போய்த் தன் தம்பியிடங் கொடுத்துப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்து,  இனி, எவ்வி, நன்னன், பண்ணன் முதலிய வேறுபல வள்ளல் களுமிருந்தனர்.

இவ் வள்ளல்கள் இன்றேல், கடைக்கழகக் காலத்திற் புலவர் பாணர் கூத்தர் பொருநர் முதலிய இரவலர் வாழ்ந்திருக்கவும், தமிழும் இசையும் கூத்தும் வளர்ந்திருக்கவும் முடியாதென்றே கூறலாம். மாபெருஞ் செல்வரான மூவேந்தரும், பிராமணர்க்குத் தொண்டுந் தானமுஞ் செய்வதிலும், அவர் ஏவிய வேள்விகளை யெல்லாம் இயற்றுவதிலுமே, காலத்தையும் குடிகள் பணத்தையும் செலவிட்டு, ஏழைப் புலவர்க் கெல்லாம் எட்டாக் கையராகவே யிருந்துவந்தனர்.

மூன்று வகை வள்ளல்கள் 

ஆரியத் தொல்கதைஞர், தமிழ வள்ளல்களின் தலைத்திறக் கொடைச் சிறப்பையும் பொன்றாப் புகழையும் மறைத்தற்பொருட்டு, வரையாது கொடுப்பவன் தலைவள்ளல் என்றும், கேட்கக் கொடுப்பவன் இடைவள்ளல் என்றும், புகழக் கொடுப்பவன் கடைவள்ளல் என்றும், வள்ளல்களை மூவகைப்படுத்தி, செம்பியன் முதலிய எழுவர் தலையெழு வள்ளல்களும், அக்குரன் முதலிய எழுவர் இடையெழு வள்ளல்களும், ஆய் முதலிய எழுவர் கடையெழு வள்ளல்களும் ஆவர் என்று பொருத்தமின்றி உண்மைக்கு மாறாக வகுத்துள்ளனர். இருந்த வூர்களை யெல்லாம் இரவலருக்குக் கொடுத்த ஆயும் பாரியும், புலவனுக்குத் தலையையுங் கொடுத்த குமணனையும் ஒத்த கொடையாளிகள் .

                                                                                                       தொடரும்.............................

No comments:

Post a Comment