பாகம்-30 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
ஊராளி
தொழில் - பெரும்பாலும்பயிர்த்தொழில்.
பிரிவு - ஏழ் அகமண நாடுகள். கரை அல்லதுகாணியாட்சி என்னும் புறமண உட்பிரிவுகள் உண்டு.
பட்டம் - கவுண்டன்.
ஓதுவார்
தொழில் - சிவன் கோவிலில் பூசைசெய்தல்.
இனப் பிரிவு - ஓதுவார், பண்டாரம்,குருக்கள், புலவர்.
பட்டம் - ஓதுவார்.
கடசன்
தொழில் - கூடை முடிதல்,சுண்ணாம்புக்கல் சுடுதல்.
பிரிவு - பட்டங்கட்டி, நீற்றரசன்என்னும் அகமணப் பிரிவுகள்.
பட்டம் - பட்டங்கட்டி, கொத்தன்.
கணக்கன்
தொழில் - ஊர்க்கணக்கு எழுதுதல்.
பிரிவு - சீர், சரடு, கைகாட்டி,சோழியன் என்னும் நான்கு.
பட்டம் - பிள்ளை.
கணிகை (பெண்)
தொழில் - நாடக வரங்கிலும் கோவிலிலும் நடஞ்செய்தல்.
பிரிவு - நாடகக் கணிகை, தேவகணிகை.
கள்ளன்
பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் (பசுக்கூட்டங்களைக்) களவில் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர்.
தொழில்-பண்டைநாளில் போர்த்தொழில். இன்று பயிர்த் தொழிலும் கல்வித் தொழிலும்.
பண்டை இடம் - சோழநாடு.
பிரிவு-மேல்நாடு சிறு குடிநாடு முதலிய பத்து அகமண நாடுகள் (மதுரை), பதினால் நாடுகள் (சிவகங்கை). வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன நாட்டின் புறமண உட்பிரிவுகள்.
தலைவன் பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான், இராசாளி
குலப் பட்டம்- நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன் முதலியன.
காராளர் உழுதுண்ணும் வேளாளர்.
சேலம் சேர்வராயன் (சேரவரையன்) மலையாளிகளுள் ஒரு சாரர் தம்மைக் காராளர் என்கிறார்கள்.
தொழில் - மட்கலம் வனைதல்.
பட்டம் - வேளான், செட்டி, உடையார்,பிள்ளை.
தொழில்- பெரும்பான்மை மயிர்சிரைத்தலும் வெட்டுதலும், சிறுபான்மை மருத்துவமும்அறுவையும் (Surgery).
பட்டம் - பண்டிதன்.
தொழில் - இரப்பு.
குலம்- இரப்போன் , நோக்கன் ,கொங்கு வெள்ளாளன் ,முடவாண்டி, கைக்கோளன் ,பொன்னம்பலத்தான், பேரிச்செட்டி ,வீரமுட்டி
தொழில் - வேட்டையாடல், கூடைமுறம்முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல்,திருடல்.
பெண்களின் தொழில் - குறிசொல்லுதல், பச்சை குத்துதல்.
பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன், நாடோடி.
ஊர்க்குறவன் பிரிவு - தப்பை(மூங்கில்வேலை), கொங்கன், உப்பு.
பல அகமணப் பிரிவுகள்.
மலங்குறவன் பிரிவு - குன்றக் குறவன், பூங்குறவன் (வேலன்), காக்கைக் குறவன் (கக்கலன்), பாண்டிக் குறவன் (நாஞ்சில் குறவன்).
நாடோடிகள்-காளிக்கோட்டம் வரை பல்வேறு நாடு சென்று,அந்த அந்த நாட்டு மொழி பேசி, வெவ்வேறு பெயர் கொண்டு, வேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில்செய்பவர்.
குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழி பேசுபவன்.
தலைவன் பட்டம்-பெரிய மனிதன்(மனுசன்), ஊராளி, பணிக்கன்.
குலப்பட்டம் - சேர்வைகாரன், பிள்ளை, கவுண்டன் முதலியன.
தொழில் - குறும்பாடு மேய்ப்பு, முரட்டுக் கம்பளி நெசவு, தேனெடுப்பு முதலியன.
பிரிவு - காட்டுக் குறும்பு ,நாட்டுக்குறும்பு.
தேன்(ஜேன்) குறும்பு , பன்றிக் குறும்பு முதலியன உட்பிரிவுகள்.
பட்டம் - மூப்பன்.
பெயர் - கைக்கோளன் (தமிழ்நாட்டின் நடுபகுதி தென் பகுதியும்).
செங்குந்தன் (தமிழ்நாட்டின் வடபாகம்).
கையிற் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன் கைக்கோளன்.
தொழில் - நெசவு.
பிரிவு (சில இடங்களில்) - சோழியன், இறாட்டு, சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவகவிருத்தி.
நாட்டுப்பிரிவு-72 நாடு.
வழக்கம் - ஒவ்வொரு குடும்பமும் ஒருபெண்ணைக் கோவிலுக்குத் தேவ கணிக்கையாக விடுதலும், அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும். இவ் வழக்கம் இப்போது நின்றுவிட்டது.
தலைவன் பட்டம் - பெரியதனக்காரன்,பட்டக்காரன், புள்ளிக்காரன்,
குலப்பட்டம் - அடவியார் , நயினார் , முதலியார் , மூப்பர்.
வகையும் தொழிலும் - ஐங்கொல்லர்(ஐங்கம்மாளர்).
மரக்கொல்லன் - தச்சன்.
கற்கொல்லன் - கற்றச்சன், கம்மியன்.
பொற்கொல்லன் - தட்டான்,கம்மாளன்.
செப்புக் கொல்லன் - கன்னான்.
இருப்புக் கொல்லன் - கருமான்(கருமகன்), கொல்லன்.
முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன் தொழில் கொல் எனப்பட்டது. முதல் காலமாகிய கற்காலத்தில், மரத்தினாலும் கல்லாலுமே வீடு கட்டப்பட்டது. அதன் பின்னரே பொன்னும் செம்பும் உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்கலக்கன்னாரும் செப்புக் கன்னாருள் அடங்குவர்.
நாட்டுப்பிரிவு - பாண்டியம், சோழியம், கொங்கம் என்னும் மூன்று அகமணப் பிரிவுகள்.
தலைவன் பட்டம் - நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).
குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.
தொழில் - நெசவு
பிரிவு - நாடுகள் என்னும் பெரும்பிரிவும் குப்பங்கள் என்னும் சிறு பிரிவும்.
பட்டம் - 'ஈசன்' என்னும் வடசொல் அடைமொழி.
சவளக்காரன்
தொழில் - ஓடம் விடுதல், பயிர் விளைத்தல், இசைக்குழல் ஊதல், ஈட்டிப் போர்புரிதல், தாதுக்கனி தோண்டுதல்.
பட்டம் - படையாட்சி (பயிர்த்தொழிலாளர்) , அண்ணாவி (இசைத்தொழிலாளர்).
சாயக்காரன்
தொழில் - சாயங் காய்ச்சுதல்.
சாலியன்
தொழில் - நெசவு.
பிரிவு - 24 புறமணவீடுகள்.
பட்டம் - அடவியார்.
சான்றான் (சாணான்)
பெயர்: சான்றோர் = போர்மறவர்.
சான்றோர்-சான்றார்
தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், வாணிகம் செய்தல், குடிக்காவல், படைக்கலம் பயிற்றல்.
பிரிவு - கருக்குமட்டையன், மேனாட்டான், கொடிக்கால், நட்டாத்தி, பிழுக்கை.
ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை.
குலப்பட்டம்-நாடார், சேர்வைகாரன். முக்குந்தன்.
தொழில் - வேட்டையாடல்.
No comments:
Post a Comment