Monday, March 12, 2012

நாம் யார் -27

பாகம்-26 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

களப்பாளர் (களப்பிரர்) ஆட்சி

(தோரா. கி.பி. 300-590)

கடைக்கழக முடிவிற்குப்பின் பாண்டிநாட்டை முந்நூற்றாண்டு ஆண்ட, களப்பாளர் வடநாட்டினின்று வந்தவ ரென்றும், பல வகுப்பினரென்றும், பலவாறு சொல்லப்படுகின்றது. அவர் பல வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதி பிராமணர்க்கு அளித்த வேள்விக்குடிப் பட்டையத்தை மறுத்ததனாலும்,  முருக வழி பாட்டினர் என்று சொல்லப்படுவதனாலும், தமிழராகவும் இருந்திருக்கலாம். களப்புதல் = காடு வெட்டித்திருத்துதல். நெல்லை மாவட்டத்திற் சங்கரநயினார் கோவில் வட்டத்தில், களப்பாளர்குளம் என்று ஓர் ஊர் உள்ளது. களப்பிலார் என்பதுகள்ளர் வகுப்பாரின் பட்டங்களுள் ஒன்றாக இருக்கிறது.

பல்லவர் ஆட்சி (சோழநாடு)
(கி.பி.4ஆம் நூற்.- 9ஆம் நூற்.)

பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) 
590 - 920
சோழர் ஆட்சி (சோழநாடு) 
850 - 1279
(சோழபாண்டிநாடுகள்) 
920 - 1190
பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) 
1190 - 1310
மாலிக்குகாபூர் தமிழ்நாட்டுக்கொள்ளையடிப்பு 
1310
மதுரைச் சுலுத்தானியம் 
1329-1377
செஞ்சி - 
(1) நாயக்கர் ஆட்சி 1476-1639
(2) முசல்மானர் ஆட்சி 1639-1659
(3) பீசபூர்-மராத்தியர் ஆட்சி 1677-1690
(4) முசல்மானர் ஆட்சி 1690-1698
(5) பிரெஞ்சியர் ஆட்சி 1750-1761
(6) ஆங்கிலர் ஆட்சி 1761-1947
மதுரை - 
(1) நாயக்கர் ஆட்சி 1529-1736
(2) முகமதியர் ஆட்சி 1736-1772
(3) ஆங்கிலர் ஆட்சி 1772-1947
தஞ்சை - 
(1) நாயக்கர் ஆட்சி 1532-1675
(2) மராட்டியர் ஆட்சி 1675-1855
(3) ஆங்கிலர் ஆட்சி 1855-1947 

சேரநாட்டு அரசர்கள்

கடைக்கழகக் காலத்திலேயே, மேலைச்சேரநாடாகிய குடமலை நாடு, தென்வடலாக வேணாடுகுட்டநாடு ,பொறைநாடு குடநாடு ,கொண்கானநாடு எனப் பலபிரிவுகளைக் கொண்டிருந்தது. அவற்றுள் கொண்கானநாட்டை நன்னனும், ஏனையவற்றை உதியன் மரபினரும், பொறையன் மரபினருமான இருவேறு சேரர்குடிக்கிளையினரும் ஆண்டுவந்தனர்.

கீழைச் சேரநாடாகிய கொங்குநாட்டின் தென்பகுதியான தகடூர் நாட்டை, அதிகமான் மரபினரான சேரர்குடிக் கிளையினர் ஆண்டு வந்தனர். வடபகுதியின் மேற்பாகத்துக் குடகுநாட்டைக் கோசரும், எஞ்சிய பாகத்தை எருமையூரன் ,இருங்கோவேள் ,கங்கர் கட்டியர் ஆகியோரும்ஆண்டுவந்தனர்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மேலைச்சேரர்குடிக் கிளைகள் நேர்வழித் தொடர்ச்சியற்றன. அதன் பின், பெருமாள் மரபினர் சிலர் ஆண்டு வந்தனர். அவருள் மூவர் குறிப்பிடத்தக்கவர்.

முதலாம் சேரமான் பெருமாள் (667 - 712)

இவர் பெருமாக் கோதை என்னும் இயற்பெயரையும் கழறிற் றறிவார் என்னும் சிறப்புப் பெயரையும் உடைய சிவனடியார்.

நாலாம் குலசேகரப் பெருமாள் (754 - 98)

இவர் குலசேகராழ்வார் என்னும் திருமாலடியார்.

இரண்டாம் சேரமான்பெருமாள் (798 - 834)

இவர் ஓர் 'இசலாம்' அடியார். நாட்டைப்பன்னிருவர்க்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு மெக்கா சென்றுவிட்டார். 

பன்னிரு நாடுகளாவன :

(1) கோழிக்கோடு 

(2) வள்ளுவநாடு 

(3) கொச்சி 

(4) திருவிதங்கூர்(திருவதங்கோடு) (10)பெய்ப்பூர்

(5) குறும்பரநாடு 

(6) கோட்டயம் 

(7) சிரக்கல்

(8) கடத்தநாடு

(9) பாலக்காடு

(10)பெய்ப்பூர்

(11) பரப்பநாடு (ஒரு பகுதி)

(12) பரப்பநாடு (மற்றொருபகுதி)

சேரநாட்டுத் தமிழ், 10ஆம்நூற்றாண்டிற்குப் பின் கொடுந் தமிழாகத்திரிந்து, 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் திரவிடமாக மாறிவிட்டது. சேர (சேரல) நாடும் மொழியும் கேரளம் எனப்பட்டன.

சேரல்-சேரலம்-கேரளம்.

கொங்குநாட்டு அரசுகள்

அதிகர் (அதிகமானர்) , கங்கர், கட்டியர் என்னும் மும்மரபினரும், கடைக் கழகக்காலத்திலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை,பேரரசர்க்கு அடங்கியும் அடங்காதும்,கொங்குநாட்டின் பகுதிகளை ஆண்டு வந்தனர்.

சோழர் ஆட்சி - 1004-1303

இடையிற் பாண்டியர் மீயாட்சி - 1265-1300

சோழராட்சிக்குப் பின், கேரளராட்சியும் ,ஒய்சளராட்சியும் விசயநகர நாயக்கராட்சியும் ,உடையாராட்சியும், ஐதரலிதிப்பு சுலுத்தானாட்சியும் சில சில காலம் நடைபெற்றன.

ஆங்கிலராட்சி-1799-1947

இந்திய விடுதலையும் ஒன்றியமும் (Union)(1947).

கேரள நாட்டுச் சிற்றரையங்களும்இந்திய ஒன்றியத்திற் கலந்தன.
   
                                                                                                                தொடரும் .....................

No comments:

Post a Comment