Saturday, March 10, 2012

நாம் யார் -25

பாகம்-24 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பிராமண வுயர்த்தம்

தொடக்கத்தில் பூணூலும் குண்டிகையும் முக்கோலும் மணையும் கொண்டு திரியும் நாடோடிப் பிராமணர்க்கும், பின்னர் வேத மோதிய எல்லாப் பிராமணர்க்கும், தமிழ்த் துறவியர்க்குரியஅந்தணன் முனிவன் என்னும் பெயர்களை மட்டுமன்றி,இறைவனுக்குரிய பகவன் கடவுள் என்னும் பெயர்களையும், ஆரியரும் தமிழரும் வழங்கத்தலைப்பட்டு விட்டனர்.

தம்மை அந்தணரென்று பெருமையாகச் சொல்லிக் கொண்ட கபிலர், வேதம் ஓதினவரோ இல்லையோ . பொதுவாக, பார்ப்பான் என்னும் பெயர் இல்லறத்தார்க்கும் , அந்தணன் என்னும் பெயர் துறவறத்தார்க்கும் உரியனவாகும். வேள்வித்துறை முற்றிப் பார்ப்பன வாகை சூடிய,சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனும், அந்தணன் என்னும் பெயரை மேற்கொள்ளவில்லை.

நால்வரணம் நிலைநாட்டப்பட்டது

நால்வரணக் கொள்கையை நன்றாக நாட்டுதற்கு, மதுரைக் கோட்டை மதில் நான்கிலும், வெண்மை செம்மை பொன்மை கருமை ஆகிய நானிற வரணப் பூதவடிவுகளும், முறையே வரையப்பட் டிருந்தன.

நாடகம் பார்ப்பவர் அனைவரும் காணுமாறு, நால்வரணப் பூதங்களையும் வரைந்த வண்ணப்படம் நாடக அரங்கின் மேல் வைக்கப்பட்டது.

தொழிலாளரைத்தாழ்த்தல் 

பாண்டியன் பெயரொடு வரிசை பெற்றவனாயிருந்தும், "விலங்குநடைச் செலவு" என்னுந் தொடருக்கு, "இழிகுலத் தோனாதலின்,உயர்ந்தோர் வந்தவிட மெங்கும் விலங்கிநடத்தல்." என்று குறிப்புரைகாரரும், "மேன்மக்களைக் கண்டு ஒதுங்கி நடத்தல்" என்று அடியார்க்கு நல்லாரும் உரை வரைந்துள்ளனர். இதனால், அக்காலத்திலேயே, ஆரியர்ச்சூழ்ச்சியால் சில தமிழ் வகுப்பாரிடைப்பிணக்கேற்பட்டிருந்ததாகத் தெரிகின்றது.

தனியின வாழ்வு (Apartheid)

பிராமணர் தமிழரொடு கலந்து குடியிராது, தனித் தெருவிலும் தனிச் சேரியிலும் தனியூரிலுமேகுடியிருப்பது வழக்கம். அவர் தம் குடியிருப்புப் பகுதியை அக்கிரகாரம் என்பர். மயிலைநாதர்அதைப் பார்ப்பனச் சேரி என்பர். பிராமணர் குடியிருப்பிற்கு வேந்தர் கொடுத்த தனியூர் சதுர்வேதிமங்கலம் எனப்படும். மதுரைக்குக் கிழக்கேயுள்ள வேம்பற்றூர், கடைக்கழகக் காலத்தில் பிராமணர்க்குப் பிரமதேயமாகக் குலசேகரன் என்னும் பாண்டியனால் கொடுக்கப்பட்ட தென்றும்,அதனால் அது குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றதென்றும் சொல்லப்படுகின்றது.வேந்தர் அரசியலதிகாரிகட்குப் பட்டம் வழங்கும்போதும், பிராமணர்க்குப் பிரமராயன் அல்லது பிரமமாராயன் என்று வழங்குவதே மரபு.எல்லா வகையிலும் பிரிந்தும் தனித்தும் வாழ்வதே பிராமணர் வழக்கம். சுடுகாடு கூட அவர்க்குத் தனியாகவுண்டு.

இனங்காத்தல்

சேரன் செங்குட்டுவன் தன் வடநாட்டுச் செலவிடையில் நீலமலையில் தங்கியிருந்த போது,சில வழிப்போக்குப் பிராமணர் அவனிடம் சென்று,தம்மை வானியங்கும் சித்தர்போல் காட்டி, "நீபனி மலைக்குச் செல்வதாயின், அங்குள்ள பிராமணரைக் காத்தல் வேண்டும்" என்றுகட்டளையிட்டுச் சென்றனர். முத்தமிழ் நாட்டாருள்ளும் பிராமணர்க்கு முந்தியடிமைப்பட்டவரும் முற்றும் அடிமைப் பட்டவரும் சேரநாட்டாரே.

நூற்றுக்கணக்கினரும் ஆயிரக்கணக்கினருமான பிராமணர் கொழுக்க வுண்டு காலங் கழிக்குமாறு, வேந்தரைக் கொண்டு பெரு வேள்விகள் வேட்பதும் வேட்பிப்பதும், இனங்காத்தலை ஒரு பயனாகக் கொண்டதே.

                                                                                                 தொடரும்..............................

No comments:

Post a Comment