Tuesday, February 7, 2012

நாம் யார் -2

பாகம்-1படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


குமரி கண்டம் மொழி 


சைகை மொழி 


மாந்தன்கள் ஆரம்பம் குமரிக்கண்டம் தான் என முடிவானது , இவர்களின் மொழி என்னவாக இருக்கும், கி.மு.5,00,000-1,00,000 ஆண்டுகள் வரை . குமரிகண்ட மாந்தன்,  நிலையான குடும்ப உறவின்றி விலங்குபோல் அவ்வப்போது தன் வேட்கைகளைத் தணித்துக்கொண்டு, மொழியும் மொழியுணர்ச்சியுமின்றி இயற்கை யான உணர்ச்சி யொலிகளையும் விளியொலிகளையுமேயுடையவ தாக இருந்தது , பெரும்பாலும் சைகைகளாலேயே தன் கருத்தை வெளிப் படுத்தி வந்தான். ஆகையால், அவன் மொழி சைகை மொழியாகவே இருந்தது. உடற்சைகை, உறுப்புச்சைகை எனச் சைகை இரு திறப்படுமாதலால், முகச்சைகையாகிய வலிச்சமும் சைகைகளை கொண்டு தனது தகவல்களை பரிமாறி கொண்டான் .


மொழியற்ற நிலையில், மாந்தன் கருத்தும் எண்ணமும் உருவ ஒலியாக இருந்துவந்தன. உருவலிப்பாவது, ஓர் இடத்தையோ, பொருளையோ, நிகழ்ச்சியையோ உள்ளத்திற் படம் பிடித்தல்.


உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, எண்ணம், தீர்மானம், அகக்காட்சி, இன்புறவு, பொந்திகை (திருப்தி), மகிழ்ச்சி, துன்புறவு, சினம் அல்லது வெறுப்பு ஆகிய பல்வேறு உளநிகழ்ச்சி களும், நமக்கிருப்பது போன்றே மொழியற்ற மாந்தனுக்கும் இருந்தன. இதுமாதிரி இன்றும் வாய்பேச முடியதவர்களிடம் இருக்கிறது .


இயற்கை மொழி 


சைகை மொழியிலிருந்து கொஞ்சம் முன்னேறி ,கி.மு. 1,00,000-50,000 ஆண்டுகள் வரை குமரி கண்டத்தில் பேசப்பட்ட மொழி இயற்கை மொழி என பட்டது எழுத்து, உச்சரிப்பும், சொற்பொருத்தும் இன்றிப் பெரும்பாலும் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி, இயற்கை மொழி என பொருள் படுகிறது ,இது முழைத்தல்மொழி எனப்படும், இது 


இதன் ஒலிகள் எழு வகை படுகிறது 

(1) உணர்ச்சி ஒலிகள் (Emotional Sounds)

இன்ப துன்ப உணர்ச்சியை வெளியிடும் ஒலிகள் உணர்ச்சி ஒலிகள் எனப்பட்டது.
ஆ, ஈ, ஊ, ஓ, ஐ

(2) விளி ஒலிகள் (Vocative Sounds)

பிறரை விளிக்கும் (அழைக்கும் )ஒலிகள் விளியொலிகள் எனப்பட்டது . 
ஏ, ஏய், ஓ, ஏலா, எல்லா.

(3) ஒப்பொலிகள் (Imitative Sounds)

                  இருதிணைப் பொருள்களும் செய்யும் ஒலிகளை ஒத்தொலிப்பவை ஒப்பொலிகள் எனப்பட்டது.
கூ (கூவு), கா கா-(காகம்), காக்கா (காக்கை), இம் (இமிழ்), உர் (உரறு), ஊள் (ஊளை), குர் (குரங்கு). 

வாயொலியின்றி வாய்வழியும் மூக்குவழியும் செவிப்புல னாகும் காற்றுமட்டும் வெளிவரும் செயல்கட்கும், ஒப்பொலி முறையில் சொற்கள் தோன்றியுள்ளன.

கொட்டாவி விடும்போது ஆவென்றும், நெருப்பெரிக்கவும் விளக்கணைக்கவும் சூடான பொருளை ஆற்றவும் நோவு தீர்க்கவும் ஊதும்போது ஊவென்றும் ஒலித்தற்கேற்ப, வாயினின்று காற்று வெளி வருதலும்; உரக்க மூச்சு விடும்போதும் இளைக்கும் போதும், மூசு என்று கேட்குமாறு மூக்கினின்று காற்று வெளிவருதலும் ஒலி வந்ததே ஒப்பொலிகள் என பட்டது.

(4) குறிப்பொலிகள் (Symbolic Sounds)

சில கருத்துகளைப் பிறர்க்குத் தெரியும் வகையில் குறிக்கும் ஒலிகள் குறிப்பொலிகளாம்.

தோ தோ (துவா துவா) என்று நாயையும், பேபே (போ போ) என்று கோழியையும், வேசு வேசு என்று பூனையையும், பாய் பாய் என்று ஆட்டையும் விளிக்கும் ஒலிகள் விளியொலிகளாயினும் வழக்கம்பற்றிக் குறிப்பால் உணரப்படுவதாற் குறிப்பொலிகளாம்.

(5) வாய்ச்செய்கை யொலிகள் (Gesticulatroy Sounds)

மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற்கேற்ற வாய்வடிவை அமைத்து, அந்த ஒலிகளின் வாயிலாய் அச் சொற்களுக்கு மூலமான சொற்களைப் பிறப்பித் திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ் வொலிகள் வாய்ச் செய்கை ஒலிகள் எனப்பட்டது.
ஆ-அ-அங்கா. அங்காத்தல் = வாய்திறத்தல்.
அவ்-கவ்-வவ். அவ்-அவ்வு-கவ்வு-வவ்வு.
பிற்காலத்தில் அவ்வுதல் என்னும் சொல் கவ்வுதல் என்னும் சொல் ஆக வந்தது.


கவ்வு என்னும் சொல், கவ்வை, கப்புதல், கப்பு, கப்பித்தல், கப்பை, கவட்டி, கவட்டை, கவடு, கவடி, கவண், கவணை, கவண்டு, கவண்டி, கவர், கவர்வு, கவல், கவலை, கவவு, கவளம், கவளி, கவளிகை, கவுள், கவறு, கவான், கவை, காவு, கா, காவடி, காவட்டு, காதல், காமம் முதலிய பல சொற்களைப் பிறப்பித்துள்ளது.

(6) குழவிவளர்ப் பொலிகள் (Nursery Sounds)

குழவிவளர்ப்பில் குழவிகள் இயல்பாக ஒலிக்கும் ஒலிகளி னின்று தாய்மார் சில சொற்களை அமைத்துக் கொள்வதுண்டு. அத்தகைய ஒலிகள் குழவிவளர்ப்பொலிகள். அவை மிகச் சிலவே.

இங்கு - இங்கா = பால்.

குழவிப் பருவத்தினும் பெரியது குழந்தைப் பருவம். அப் பருவத்தில், சோறு என்பதைச் சோ, சோய், சோசி என்று குழந் தைகள் கொச்சையாய்ச் சொல்பவை குழவி வளர்ப் பொலிகளாகா. டும் டும் (tom tom), பீப்பீ(pipe) என்பன போன்றவை குழந்தைகள் சொல்லும் ஒப்பொலிச் சொற்கள்.

 மாந்தர் நாகரிக நிலையிலேயே மாட்டைப் பாலிற்காக வளர்க்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவதால், தாயை விட்டு நீங்கிய கன்றுக்குட்டியின் கதறலினின்று, அம்மா என்னுஞ் சொல்லைத் தமிழர் அன்னையைக் குறிக்க அமைத்துக்கொண்டனர் என்று கொள்வது மிகப் பொருத்தமாம். பின்பு, அது அப்பா என்று வலித்துத் தந்தையைக் குறித்திருக்கின்றது.

(7) சுட்டொலிகள் (Deictic Sounds)

சுட்டிக்காட்டும் ஒலிகள் சுட்டொலிகள்.

குழந்தை பருவத்தில் எதையாவது சுட்டி காட்டுவதற்கு வாயை விரிவாய்த் திறந்து ஒலி எழுப்பியது ,பின் அதை சுட்டி காட்டிய பிறகு வாயைப் பின்னுக்கிழுக்கும் பொது வந்த ஒலி, சுட்டொலிகள் எனபடுகிறது , 


அங் , இங் என்று எழும்பிய ஒலிகள் பின்னலில் அங்கே , இங்கே என மாறி உள்ளது .


                                                                                                        தொடரும்....................

Sunday, February 5, 2012

நாம் யார் -1

வந்தேறிகள் 

இன்று தமிழகத்தில் வந்தேறிகள் வந்தேறிகள் , என்ற ஒரு வாதத்தையும் , இவர்கள் தான் தமிழர்கள் , இவர்கள் எல்லாம் திரவிடார்கள் என்ற ஒரு பிரசாரம் மேற்கொள்ள படுகிறது இது உண்மையா , நாம் யார் , எங்கு இருந்து வந்தோம் , எப்படி பிளவு பட்டு போனம் ,மொழிகளின் சிதைவு போன்றவற்றை பார்ப்போம் , ஒருவகையில் அனைவருமே வந்தேறிகள் தான்.

மனித இனம் 

மனித இனம் எப்படி வந்தது ? எங்கே இருந்து வந்தது ?  என்ற கேள்விக்கு பதிலாக அறிவியல் மூலம் பதில் சொல்லுபவார்கள் மனித இனம் குரங்கில் இருந்து வந்தது என்றும் , ஒரு சாரார் வேறு விலங்கு இனத்தில் இருந்து வந்தது எனவும் சொல்லுகிறார்கள் , ஆன்மீகவாதிகளோ கடவுள் படைத்தார் என்கிறார்கள் ,

எப்படியோ ஒரு முறையில், எங்கோ ஒரு இடத்தில் மனித இனம் தோன்றி உள்ளது , இந்த மனித இனத்தின் ஆரம்ப குமரி கண்டம் (லெமூரியா ) என ஆராயிச்சியாளர்கள் சொல்லுகிறார்கள் 

குமரி கண்டம் 

இந்த குமரி கண்டம் என்பது தமிழ்நாட்டுக்கு தெற்கே இருந்ததாக ஆராயிச்சிகள் சொல்லுகிறது ,தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்தது என சொல்ல படுகிறது ,இன்றும் இது குமரி கடலில் அடியில் உள்ளது , பல கிலோ மீட்டர் ஆழத்தில் .


இந்த தெற்கே இருந்த குமரி கடலில் ஒரு மலைத்தொடர் குமரியில் இருந்து தெற்கு நோக்கி நெடும் தூரம் வரைக்கும் , அங்கே இருந்து தென்மேற்கு பக்கமாக மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாக  எலியட்டு என்பவர்  தனது நூலில் எழுதிஉள்ளார்.


இதன் எல்லைகளாக கிழக்கே  இன்றையா ஆஸ்திரேலியா கண்டமும் , மேற்கே ஆப்பிரிக்காவையும் வடக்கே தமிழகத்தை தாண்டி இன்றைய ஆந்திரா , கேரளா , இலங்கை முழுவதும் , கர்நாடக போன்ற பரப்புகளை உள்ள அடக்கி விந்திய மலைகள் வரை வடக்கே ஒரு குறிகிய நிலபரப்பாகவும் , தெற்கே அகண்ட பரப்பாகவும் ஒரு முக்கோண வடிவில் இருந்தததாக ஆராய்ச்சிகள் சொல்லுகிறது . இன்று ஆராய்ச்சிகள் செய்து கண்டு பிடித்து இருந்தாலும் ,ஏற்கனவே தமிழ் இலக்கியங்களும் எழுத்துகளில் பதிவு செய்துள்ளது . அப்படி என்றால் தமிழனுக்கும் இந்த குமரி கண்டத்திற்கும் தொடர்பு இருந்து உள்ளது.


கி மு - 5,00,000 ஆண்டுகள் 

மனித இனம் மட்டுமில்லை உயிர் இனமே இங்கே தான் தோன்றி உள்ளது என ஆய்வுகள் சொல்லுகிறது , இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட பழைய மாந்தன் எலும்புக்கூடுகளுள், சாலித்தீவில்(Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டது ."நிமிர்ந்த குரக்கு மாந்தன் "  காலம் கி.மு. 500,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 

1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் இலீக்கி (Leakey) என்னும் ஆங்கில மாந்தனூலறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய கொட்டையுடைப்பான்‘ (Nut-cracker Man or Sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்ட வன் என்றும்,

இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பட்சம் 17,50,660 ஆண்டுகளுக்கு முற்பட்டவன் என்றும், கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் ,சாலித் தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன் னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே குமரிக்கண்டம் என உறுதி படுகிறது , மாந்தன் தோற்றம் கி.மு. 5,00,000 ஆண்டுகளுக்கு முந்திய என சந்தேகம் இல்லாமல் கூறலாம்.
                                                                                                 
                                                                                           தொடரும்....................................                                                                                 

தலைக்கனம் பிடித்தவர்கள்

பிரபலமான எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் , இவரை ஒருவர் மட்டம் தட்டவேண்டும் என நினைத்து உள்ளார் , அதிகம்  தலைக்கனம் பிடித்தவன் அவன்.

ஒருநாள் அலெக்ஸாண்டர் டூமாஸ் இடமே சென்று வாதிடுகிறான் 

தலைக்கனம் கொண்டவன் :- டூமாஸ் , உங்களின் மூதாதையரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ? அவர்கள் கீழ்த்தர வகுப்பை சேர்ந்தவர் தானே ?

டூமாஸ் :- ஆமாம் 

தலைக்கனம் கொண்டவன் :- உங்களின் தந்தை என்ன சாதி ?

டூமாஸ் :- மலை சாதியினர் 

தலைக்கனம் கொண்டவன் :- உங்களின் தாத்தா ?

டூமாஸ் :- நீக்ரோ 

தலைக்கனம் கொண்டவன் :- தாத்தாவுக்கு தாத்தா ?

இதுவரை பொறுமையாக இருந்த டூமாஸ் ,கொஞ்சம் கோபமாக " தாத்தாவுக்கு தாத்தா ஒரு வால் இல்லாத குரங்கு " ,ஆனால் ஓன்று என் வம்சம் தொடங்கிய இடத்தில் உங்களின் வம்சம் முடிந்துவிட்டது , அது தெரியுமா உங்களுக்கு என்றார் அலெக்ஸாண்டர் டூமாஸ் , 

தலைக்கனம் கொண்ட அந்த மனிதன் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து போனான் .


இந்த மாதிரி தலைகனம் பிடித்தவர்கள் புதிதாக தமிழகத்தில் இப்பொது கிளம்பி உள்ளனர் , அவர் தமிழர் இல்லை, இவர் தமிழர் இல்லை என்ற புதிய கோட்பாடுயுடன் , அனைவரின் ஆதி வரலாறு ஆராய கிளம்பி உள்ளனர் , இதனால் என்ன நன்மை ,தீமைகள் என்ன ? ,என்பதை யோசிப்பதில்லை , தாங்கள் சொல்லுவது தான் சரி என வாதியிடுகிறார்கள்.

Saturday, February 4, 2012

சட்ட சபை ! சவால் சபை !!

இன்றைய நிலையில் சட்டசபை தங்களின் தனிப்பட்ட சவால்கள் விடும் சபையாக மாற்றிவிட்ட ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் 

தேமுதிக உறுப்பினர் :- பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு கேள்வி கேட்கிறார்

முதல்வர் பதில் :-இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி கேள்வி எழுப்புவது ஒன்றும் தவறில்லையே , அதற்கு ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டும் என ஆளும்கட்சி சொல்லவிட்டது.அந்த விளக்க குறிப்புகளின் படித்து தெரிந்து கொள்ளவேண்டியது எதிர்கட்சியின் பொருப்புதனே 

தேமுதிக உறுப்பினர் :- இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்கிறார்.

என்ன கேள்வி இது , ஏற்கனவே விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தின் மீது கேள்வி கேட்கவேண்டியது தானே , எப்போது உயர்த்தினால் என்ன மக்களுக்கு தானே சீரமம், ஒருவேளை அப்போது உயர்த்தி இருந்தால் எதிர்கட்சி என்ன செய்து இருக்கும் , விலைவாசி உயர்வை காட்டு படுத்துவது எப்படி என எதிர்கட்சி ஆலோசனை சொல்லுவதை விட்டு விட்டு , கால கொடுவை பற்றி விவாதிப்பது யாருக்கு நன்மை.

முதல்வர் பதில் :-விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக சொல்லுகிறார்.உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும் விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

விலைவாசி என்ன உயர்த்தினாலும் இடைதேர்தலில் ஆளும்கட்சிக்குதான் மக்கள் ஒட்டு போடவேண்டும் என்ற கட்டாயத்தை ஏன் மக்கள் மீது திணிக்க வேண்டும். உறுப்பினர் சமந்தமில்லாத கேள்வி கேட்டால் ,முதல்வரும் சம்மந்த மில்லாத பதில்தான் சொல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார். 

 திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது. பின்னர் தனது ஸ்டைலில் உதட்டை மடித்து மிரட்டுவது போல பேசுகிறார். நாடி நரம்பு புடைக்க கோபமாக பேசுகிறார்.ஏன் நீங்க அங்கே  தோற்கவில்லையா , இங்கே தொர்கவில்லையா என பேச்சை தொடர்கிறார் 

இதற்கு பிறகு நடந்த கூச்சல் குழப்பத்தால் தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்ற படுகிறார்கள்.

அவை அடக்கத்தை கடைபிடிக்காத எதிர்கட்சி , தனிப்பட்ட சவால்கள் விடும் ஆளும்கட்சி என்ற காட்சிகள் நிறைவு பெற்று எதிர்கட்சி தலைவர் பத்து நாள் இடைநீக்கம் செய்ய படுகிறார் . தமிழக மக்களில் மீது கத்தி போல பிரச்சனைகளை வைத்து கொண்டு மக்கள் பிரதிநிதிகள் அது பற்றி கவலை கொள்ளாமல் , இவர்களின் தனிபட்ட சவால்கள் விட வேறு இடமில்லையா 

ஒரு பக்கம் முல்லை பெரியாறு ,மறுபக்கம் மீனவர் படுகொலை , தெற்கே கூடங்குளத்தில் 150 நாட்களுக்கு மேலாக போராடும் மக்கள் , வடக்கே புயலால் மொத்தமாக வாழ்வாதாரங்களை இழந்து விட்டு இருக்கும் மக்கள் என பிரச்சனைகள் பற்றி பேசாமல் தீர்வுகளை பற்றி பேசமால் , இவர்களின் தனிப்பட விரோதங்களை பேசவா மக்களை இவர்களை தேர்ந்தெடுத்தார்கள் 

சங்கரன்கோவில் 

இவர்கள் சவால் விடும் சங்கரன்கோவில் இடைதேர்தலில் மக்கள் இந்த ஆளும் கட்சியையும் எதிர்கட்சியையும் ஒரே அடியாக புறக்கணித்தால் , ஒரு மாற்றத்தை ஏற்படித்தினால் இவர்களுக்கு பாடம் புகட்டயாது போல இருக்கும். இந்த மாதிரி சவால்களை இனி யாரும் விடாமல் இருக்க தீர்வாக இருக்கும் .அதற்காக ஏற்கனவே ஆண்டவர்களை கொண்டு வந்து விடாதீர்கள் அவர்கள் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் கிடையாது , மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி வேண்டாம் என்றுதானே எதிர்கட்சி அந்தஸ்த்து கூட கொடுக்காமல் விட்டோம் என்பதையும் மனதில் வைக்கவேண்டும். 

Thursday, February 2, 2012

இந்தியா என்னும் ஈர்ப்பு -எதிர்ப்பு


ஈர்ப்பு 

தமிழர்கள் போல இந்தியாவின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் வேறு யாருமில்லை , இன்று வஞ்சிக்க பட்ட நிலையிலும் இந்தியாவின் மீது  பிடிப்போடு இருக்கிறார்கள் , என்றால் இன்று நேற்று வந்த ஈர்ப்பு அல்ல  இது ஆதி முதல் வந்தது.

இந்தியா என்று உருவாக்கும் முன்னே இன்றையா இந்தியா நிலபரப்பை மொத்தமாக சொந்தம் கொண்டாடினான் தமிழன் ,

" மன்னும் இமயமலை எங்கள் மலையே " என்றும்  , காவிரியும் கங்கையும் எங்கள் நதியே " என்றும்  , "பஞ்சநதி பாயும் பழனத் திருநாடுஎங்கள் நாடே" ,   என பாடினான் தமிழன், இந்த ஈர்ப்பு இன்றும் உள்ளது.

எதிர்ப்பு 

இன்று நிலை தலைகீழ் , இந்தியா தேசத்தின் மீது முதல் கோபத்தை செலுத்துவது தமிழன் தான் , தன் உறவுகளை பறிகொடுத்த வேதனை , தானும் வஞ்சிக்க படுகிறோம் என்ற கோபம், ஆட்சி அதிகாரம் செலுத்துவர்களின் மெத்தன போக்கு இதை எல்லாம் அவனை எதிர்க்க கற்றுகொடுத்தது.

வந்தவரை வாழவைத்த தமிழன்

வனமாக கிடந்த நிலத்தை தன் உழைப்பால் சீர் படித்தில் விளைநிலமாக மாற்றினான் , தன் வேளாண்மை உத்தியால் உற்பத்தியை பெருக்கினான்,
எங்கு இருந்து வந்தவர்களுக்கு வட நாட்டை விட்டு கொடுத்து விட்டான் , ஏன் விட்டு கொடுத்தான் தென்னாட்டில் அடர்த்தியாக இருந்த தமிழன் , வட நாட்டில் எண்ணிக்கையில் குறைவு எனவே வந்தவர்களுக்கு வழி விட்டு தென்னாடே என் நாடு என இருந்து விட்டான்.இன்றும் இந்தியாவின் எல்லை ஓரம் உள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தை சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கிறது.

இமயம் மீது காதல்

ஆரியர்களின் ஆக்கிரமிப்பு செய்து அவர்களின் நாடாக வடநாட்டை ஆக்கி கொண்டாலும் ,என்னதான் தென் நாட்டில் இருந்தாலும் தமிழன் வட நாட்டை தன் நாடாகவும் ,இமயமலையை சொந்தம் கொண்டாடினான் , இதற்கு தடையாக இருந்தவர்களை எதிர்த்து இமயத்தில் கொடி நாட்டினான்.
 
விற்கொடி

இது சேர்ர்களின் கொடி வில் பொறித்த கொடி ,சேர மன்னர்களின் ஒருவனான நெடுஞ் சேரலாதன் என்பவன் இமயமலை வரை படையெடுத்து சென்றான்.எதிர்த்த வட நாட்டு ஆரிய மன்னர்களை வென்றான் , சிறை படித்தினான் , இமயமலையில் வில் கொடியை ஏற்றி " இமய வரம்பன் " என்னும் புகழை பெற்றான்.

புலி கொடி

பழங்கால சோழ மன்னர்களில் மொத்த குலப் பெருமையெல்லாம் தன் பெருமை ஆக்கி கொண்டவன் கரிகால் சோழன் என்ற திருமாவளவன் ,இவனும் வட நாட்டின் மீது படையெடுத்தான் பலரை வென்றான் இமயத்தை அடைந்தான் , புலி கொடியை பறக்க விட்டான்.

வெற்றி முகத்தோடு தென்னாடு நோக்கி திரும்பிய கரிகாலனுக்கு வழியில் வச்சிர நாட்டு மன்னன் வரவேற்று முத்து பந்தலை பரிசாக தந்தான்.

அவனை கடந்து வந்த கரிகாலனை , மகத நாட்டு அரசன் தடுத்து போர் புரிந்தான், தோற்று போன மகத நாட்டு மன்ன்ன் வளவனுக்கு பட்டிமண்டபத்தை இட்டு வணக்கினான்.

அவந்தி நாட்டு மன்ன்ன் தோரணவாயில் ஒன்றை பரிசாக தந்தான்.
  
மீன் கொடி 

பாண்டிய மன்னர்களில் ஒருவனும் மீன் கொடியை இமயத்தில் நாட்டி உள்ளன் , சேர , சோழர்களுக்கு முற்பட்டவர்கள் என்பதால் இவர்களின் பெயர் தெரியவில்லை ,

"பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி " என பெரியாழ்வார் படுகிறார் .

ஆரிய படைகளை வென்றமையால் செழியன் என பெயர் பெற்றதாகவும்
" ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் " என்ற சிலப்பதிகார வரிகள் சொல்லுகிறது.

Wednesday, February 1, 2012

புலி தேவனாக இருந்த பூலித்தேவன்-2

பாகம்-1 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

பூலி சந்தித்த போர்கள்

1755-ஆம் ஆண்டு கப்பம் கட்டாத பாளையக் காரர்கள்   மீது , கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படையும்  ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும்  தாக்குவதற்குப் புறபட்டது.

இதுவரை பூலி முயற்சியால் பாளையக்காரர்களின் மத்தியில் ஒற்றுமை நிலவியது , கும்பினிப் படையை பார்த்த உடன்  பாளையக்காரர்களில் ஒவ்வருவராக தனக்கு ஏன் வம்பி என ஒதுங்கி கொண்டானர்.

கும்பினிப் படையும் நவாபு படைகளும்  வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் பயன்படித்தி  பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். பூலியின் படைகள் கோட்டையை விட்டு வெளியில் வரவில்லை , கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.

இந்த சமயத்தில் ஆங்கிலேய படைகளிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இதை தெரிந்து கொண்ட பூலி மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.    

போரில் தோற்ற ஆங்கிலேயர்கள் மறுபடியும் வருவார்கள் என உணர்ந்த பூலி , மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்கிறார்.

 ஆனால் பூலி யின் முயற்சி நிறைவேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள்.

சூடுபட்டு போன ஆங்கிலேயர்களும் , நவாப்பும், பாளையக் காரர் சேர்த்து கொண்டு  சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம்ஒப்படைத்தனர். பூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன்

1755-ஆம் ஆண்டு நெற்கட்டும் செவல் கோட்டை மீது மாபூஸ்கான்  தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.

1756-ஆம் ஆண்டு  களக்காடு கோட்டை மீது மாபூஸ்கான்  தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.

1757-ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் கோட்டை மீது ஆற்காடு நவாபின் தம்பி தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.

1760ஆம் ஆண்டு மீண்டும் நெற்கட்டும் செவல் கோட்டை மீது பூசுப்கான்   தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.

1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன.  பல ஆண்டுகள் போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆங்கிலேயப் படை மெல்ல முன்னேறி  தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்கு தப்பிச் சென்றார்.

1762-ஆம் ஆண்டு கோட்டையை விட்டு சென்றா பூலி ரகசியமாக படைகளைத் திரட்டு மீண்டும் தனது கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

1766ஆம் ஆண்டு வாசுதேவ நல்லூர்க் கோட்டை  கேப்டன் பௌட்சன் தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.

1767 ஆம் ஆண்டு  ஒரு முறை தோற்ற போன பூலி , பல முறை தோற்று போன ஆங்கிலேயர் ஒரு குறிகிய நிலப்பரப்பு உள்ள பாளையத்தை காப்பற்ற  ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர்.

இத்தகைய பெரும்படையை  பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்துள்ளார் . ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் பூலியின்  வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி பூலி தப்பிச் சென்றார்.

பூலியின் கைது

 தப்பிச் சென்றா பூலியை ஆங்கிலேயர்கள் தீவிரமாகத் தேடினர். இறுதியாக பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டார்.

பூலியின் இறுதி

பூலியின் மறைவு என சொல்ல முடியாது , முதல் சர்ச்சைக்குரிய மறைவு இவருடையது, கைது செய்யப்பட்ட பூலியை  பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார்  என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது , ஆம் இன்றும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மாற்று கருத்து உள்ளவர்கள் ,பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

மொத்தத்தில் இவர் தான் முதல் சர்ச்சைக்குறிய இறுதிகாலம் கொண்ட போராட்ட வீரன்..