Showing posts with label முல்லை பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லை பெரியாறு. Show all posts

Monday, January 30, 2012

முல்லை பெரியாறு- பாகம் 35

பாகம்-34 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தற்காலிக தீர்வு

முல்லை பெரியாறு அணை விவகார போராட்ட முழுவிவரம்  , நதி நீர் உருவாக்கம் ,அந்த பயணம் போன்றவையும்  , யாருக்கு எந்த அளவு பயன்படுகிறது எனவும் பார்த்தோம்.

கேரளாவின் வன்மம்

கேரளா உண்மையில் புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை , மாறாக இருக்கும் அணையை உடைப்பதுதான் அவர்களின் நோக்கம்.

இந்த அணை உடைந்தால் இந்த நீர் நேராக இடுக்கி அணைக்கு போகும் அங்கே இருக்கும் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிப்பது தவிர வேறு பயன் எதுவும் கிடையாது .

நீதிமன்ற தீர்ப்பு

ஏற்கனவே சொன்ன தீர்ப்பை மதிக்காத கேரளா இனி வரபோகும் தீர்ப்பை ஏற்கவா போகிறது என சந்தேகம் இருக்கிறது , மேலும் அதை வைத்து புதிய வழக்கு தொடுக்காமல இருந்தேலே பெரிய விஷயம் தான்

தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என பார்த்தால் முழுக்க முழுக்க தமிழகம் பக்கம்தான் உண்மை உள்ளது தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும்.இப்போது  நாம் நீதி மன்றத்தை நம்பியே இருக்கிறோம்


இப்போதைய  நமக்கு தேவை

நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக இரு மாநிலங்களும் ஏற்க மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்

தீர்ப்பிற்கு பிறகு உடனடியாக அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த வேண்டும்.

அணையின் பாதுகாப்பு தமிழக அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் , இதை  கேரளா ஏற்காத பட்சத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் அணை பாதுகாப்பு ஒப்படைக்க வேண்டும் .

மேலும் சில பாக்கி உள்ள பராமரிப்பு வேலைகளை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும் .

இதன் பின் அணையின் நீர்மட்டம் 152 என்பதை உயர்த்த வேண்டும்.

பொருளாதார உதவி

கேரளா நம்மிடம் எதாவது பொருளாதார உதவி கேட்கும் பட்சத்தில் ஒருவேளை குத்தகை பணம் அதிகமாக கேட்டால் தமிழக அதை தந்து விடலாம் , பணம் ஒரு பொருட்டு அல்ல , மாறாக ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வு என்பதை மனதில் கொள்வோம்.

நீதி மன்ற தீர்ப்பை ஒட்டி இதை உடனே செய்ய வேண்டிய பணிகள் , இதை கேரளா ஏற்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும் , அதை " குறிகிய கால நடவடிக்கை " என பார்ப்போம் , ஒருவேளை கேரளா ஏற்காத பட்சத்தில் என்ன செய்ய?

                                              தொடரும்.......................



Sunday, January 29, 2012

முல்லை பெரியாறு- பாகம் 34

பாகம்-33 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


இறுதிகட்ட போராட்டம்

டிசம்பர் மாதம் 25ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா, சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிடுகிறார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக எல்லைகளில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் கேரளாவில் காய்கறி, பழங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கும், வெண்டைக்காய் ரூ.130க்கும் விற்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக வந்த தொழில்நுட்பக் குழுவினரிடம் திமிராகப் பேசிய வாக்குவாதம் செய்த கேரள என்ஜீனியர்கள், பின்னர் ஆய்வைப் புறக்கணிப்பதாக செல்போன் மூலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கேரளத்தின் இந்த செயலுக்கு மத்திய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு கடும் கண்டனம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுமாறு கேரளாவை அது அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.,இதில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தலைநகர் சென்னையிலும் போராட்டம் முன் எடுக்க பட்டது.


டிசம்பர் மாதம் 26ம் தேதி

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்

ஏதோ இரண்டு நாடுகள் மோதிக் கொள்வதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர் கருணாநிதி மனு கொடுத்துள்ளார்.

டிசம்பர் மாதம் 27ம் தேதி

கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என அனைத்து அண்டை மாநிலங்களும் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. விரைவில் தமிழக நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க புதுமையான போராட்டத்தை நடத்துவேன்.மற்ற கட்சிகளுடன் இணைந்து போராடவும் நான் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

போராட்டத்தின் விளைவாக , முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த அவசர கால குழுவை நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பது போல தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த 40 சமுதாய சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு தீவிரப் போராட்டத்தில் குதிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 28ம் தேதி

புதிய அணை கட்டத் தேவையில்லை என்றதால் நீக்கப்பட்ட கேரள போராட்டக் குழுத் தலைவர் ,இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் சி.பி.ராய். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்தார்.

முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையினைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளில் பதற்றம் தணியாத காரணத்தினால் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு முதல் நாள் தொடங்கப்பட்ட பஸ் போக்குவரத்து, மறுநாளே  நிறுத்தப்பட்டது.

தேனி அருகே உள்ள சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி(35) என்பவர் முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக விஷம் குடித்தார். தற்கொலை செய்து கொண்டார் .

டிசம்பர் மாதம் 29ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் கண்டன பேரணி நடத்தினர்.

கட்சி, சாதி, மத எல்லைகளை கடந்து மொத்த தமிழகமும் முல்லைப்பெரியாறை காக்க கிளர்ந்து எழுந்துள்ளது. எனவே, வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முனைய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார் வைகோ .

வருடம் முடிவில் போராட்டமும் மெல்ல தனிய ஆரமித்து , மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழகத்திற்கு சாதகமாக இருப்பது அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் தணிந்தது. மீண்டும் எதாவது பிரச்சனை செய்தல் இதை விட போராட்டம் பலமாக இருக்கும் என்ற வகையில் நாமும் தீர்வு களை நோக்கி பயணிப்போம் .


                                             தொடரும் ...............................




Saturday, January 28, 2012

முல்லை பெரியாறு- பாகம் 33

பாகம்-32 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.



உறுதியோடு போராடும் மக்கள் 

டிசம்பர் மாதம் 22ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் விஷமப் போக்கைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் விவசாயிகள் திரண்டு பேரணி நடத்தினர். அப்போது தபால் அலுவலகம் ஒன்றை சூறையாடினர்.

கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது புதிய அணை தேவையில்லை என்று வலியுறுத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையை விஜயகாந்த்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தேமுதிகவைச் சேர்ந்த மேடைப் பேச்சாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் ,தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தேமுதிகவில் மேடைப் பேச்சாளராக இருக்கிறார். 30 வயதான இவர் விருத்தாச்சலம் வந்து . அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி. பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடந்த இந்தப் போராட்டத்தால் இந்த மாவட்டங்களில் மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அத்தனை கடைகளும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன.
 முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது தடைபட்டுள்ள நிலையில் தற்போது கறிமாடுகள் கிடைக்காமலும் கேரளா வியாபாரிகள் திணறினார்.

இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகை கறிக்கோழி, மாடு இல்லாத பண்டிகையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கூறினர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.பிரதமர் தலைமையில் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து, பூகம்பத்தால் முல்லைப் பெரியாறு பகுதிக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் குறித்து தன்னெழுச்சியானப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஒடுக்கும் முயற்சியை மேற்கொள்வது என்பது தமிழகத்தின் நலனுக்கு எதிரானதாகும். என்று தமிழக அரசுக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் தென்காசியில் ஆர்பாட்டம்.

டிசம்பர் மாதம் 23ம் தேதி

முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் அபாயம் இருப்பதாக கேரள அரசு கூறி வருவது சரியானதா, இல்லையா என்பதை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த உயர் அதிகாரி குழுவின் நிபுணர்கள் இரண்டு பேர் அணையில் நேரடி ஆய்வை மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் நிலைபாட்டைக் கண்டித்து  கோவையில் ஆட்டோ ஸ்டிரைக் நடந்தது.

டிசம்பர் மாதம் 24ம் தேதி

எங்களுடைய நிலைப்பாடானது கேரளத்துக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதுதான். அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச கேரளா தயாராகவே இருக்கிறது. தற்போது வழங்கும் தண்ணீரை விட தமிழக அரசு கூடுதல் தண்ணீர் கேட்டாலும் தருவதற்கு கேரளா அரசு தயாராக இருக்கிறது. இது பற்றி ஒப்பந்தமும் போட்டுக்கொள்ளலாம் இவ்வாறு கேரள பாசன துறை அமைச்சர் ஜோசப் கூறியுள்ளார்.(நயவஞ்சக பேச்சு )
  
மக்களின் போராட்டத்தால் , மதிமுக சாலை மறியலால் கேரளாவிற்கு செல்ல வேண்டிய காய்கறிகள் , பால் , இறைச்சி போன்ற வை தட்டுபாடு நிலவியது , ஒருவேளை கேரளா மக்கள் இதை உணர ஆரம்பித்து அரசுக்கு எதிராக போராட கிளம்பி விட்டால் என்ன செய்ய என கேரளா அரசு பேசி தீர்க்கலாம் என நயவஞ்சகமாக தமிழகத்தை அணுகுகிறது , மேலும் மத்திய அரசும் அதற்கு துணையாக இருக்கிறது.

                                                  தொடரும்............................