Wednesday, December 28, 2011

முல்லை பெரியாறு- பாகம் 16

பாகம்-15  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம் 


போராட்ட காலம் தொடர்ச்சி 
================================

2007ஆம் ஆண்டு

பேரணி , மாநாடு , மனு கொடுத்தல் , மறியல் , என செய்து பார்த்த வைகோ , இப்போது உண்ணாவிரதம் என டிசம்பர் 7 , மதுரையில் பல அமைப்புகளை சேர்த்துக் கொண்டு , ஒரு உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினார்

2007ஆம் ஆண்டு

டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று டெல்லிக்கு முதல் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த இரண்டு மாநில முதல்வர்களும் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தும்படி,பிரதமர் மன்மோகன் சிங் யோசனை கூறினார்.

இதன்படி கருணாநிதியும் ,அச்சுதானந்தனும், இரண்டு மாநில பாசனத் துறை அமைச்சர்களும் கலந்து பேசினார்கள்

அப்போது,முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து உண்மையைக் கண்டறிந்திட, இரு தரப்பினருக்கும் பொதுவாக மத்திய அரசே இரு மாநிலத்தையும் சேராத பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு கணக்கெடுத்துக் கூறட்டும், தமிழ்நாட்டிற்கு அதிலே ஆட்சேபணை இல்லை என்று கருணாநிதி தெரிவிக்க

ஆனால் கேரள முதல்வர், அது குறித்து பரிசீலிப்பதாகவும், அதிகாரிகளை கலந்து கொண்டு முடிவினை தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால் எந்த பரிசீலனையும் கேரள அரசினால் நடத்தப்படவில்லை;

2007ஆம் ஆண்டு

இதுவரை செலவு கணக்கு

முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழக அரசு இதுவரை ரூ.48.82 கோடி செலவிட்டுள்ளது

1990 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வழக்கு தொடர்பான வக்கீல் கட்டணமாக மட்டும் ரூ.22.33 கோடி செலவாகியுள்ளது.

1980-2007 காலகட்டத்தில் அணையை பலப்படுத்துவதற்காக ரூ.18.02 கோடி செலவானது.

அணை பாதுகாப்புக்காக இதுவரை கேரள போலீசாருக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் வழங்கியுள்ளது.

குத்தகைப் பணமாக 2007ம் ஆண்டு வரை ரூ.72.18 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அணை பாதுகாப்புக்காக கடந்த 1979ல் கேரள போலீசுக்கு அளித்த தொகை ரூ.22 ஆயிரத்து 951ஆக இருந்தது. இந்த தொகை 2005ம் ஆண்டில் 22.51 லட்சமானது

2008 ஆம் ஆண்டு

இந்த ஆண்டும் முழுவது அவ்வபோது வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது , தமிழகமும் வாய்த்த மேல் வாய்த்த வாங்குகிறது , கேரளாவும் தமிழகமும் வாய்த்த மேல் வாய்த்த வாங்குகிறது ,இந்த ஆண்டும் சிறப்ப இந்த முன்னேற்றமும் இல்லை

ஒருவேளை ஈழ பிரச்சனை இருந்தால் இதை ஒத்திவைத்து விட்டார்களோ , ஈழ பிரச்சனையை தமிழக அரசு எப்படி எல்லாம் உதவியது என அனைவருக்கும் தெரியும் ,

2009 ஆம் ஆண்டு

ஜூலை 4,தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முல்லைப் பெரியாறு அணைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

(இந்த காலகட்டத்தில் தமிழக முதல்வர் என்ன செய்தார் என அனைவரும் தெரியும்.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லாம் )

2009 ஆம் ஆண்டு

செப்டம்பர் 20,மத்திய அரசிடம் இருந்து கேரள அரசுக்கு , புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்திருப்பதாக ஒரு செய்தி பரவுகிறது.

இதற்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி , அதிகார பூர்வமாக இதுவரை எந்தவிதமான கடிதமும் தரவில்லை என மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கினார்.

உண்மை ஆய்வு நடத்த அனுமதியை கேரளா வாங்கி விட்டது.

2009 ஆம் ஆண்டு

செப்டம்பர் 30 , அன்று முல்லை பெரியாறு அணையில்  மத்திய அரசின் ஒரு தலை பட்ச போக்கை கண்டித்தும் ,புதிய அணைக்கு ஆய்வு நடத்த அனுமதி தந்த்தை கண்டித்தும் ,சென்னையில் , வைகோ ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
  
2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 21,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு காங். துரோகம் செய்யாது. இதில் தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால் அதை எதிர்ப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இதே அக்டோபர் 21, உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் சார்பாக புதிய அணைக்கான ஆய்வு பணியை தடை விதிக்க மனு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம் கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஆய்வுப்பணி மேற் கொள்ள அனுமதி அளித்துள்ளதை வைத்து கேரளத்தில் புதிதாக அணை கட்டப்படும் என தமிழக அரசு பயப்பட தேவையில்லை. எனவே தமிழக அரசின் கோரிக்கைப்படி கேரளாவின் ஆய்வுப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சொல்லிவிட்டது
  
2009 ஆம் ஆண்டு

அக்டோபர் 23,அன்று ,ஏற்கனவே கேரளாவின்  சட்டத்திருத்தத்தை எதிர்த்து  நடக்கும் வழக்கு விசாரணைக்கு வந்தது,அன்று கேரளாவின் மீது கேள்விகளை வைத்த நீதிபதி

கோர்ட் அணையின் உயரம் குறித்து ஒரு நிர்ணயம் செய்தது. ஆனால் நீங்கள் 136 அடிதான் என்றீர்கள். அவர்கள் (தமிழ்நாடு) 152 அடி கேட்டார்கள். இரண்டுக்கும் இல்லாமல் 142 அடி என்று நாங்கள் சொன்னோம். ஆனால் நீங்கள் 136 அடிதான் என்று கூறி சட்டத்தை இயற்றி விட்டீர்கள். சட்லெஜ் யமுனை இணைப்புக் கால்வாய் குறித்த பஞ்சாபின் சட்டத்தைப் பார்த்தீர்களா. பிறகு கோர்ட்டின் புனிதத் தன்மை என்ன ஆவது..

                                         
                                             தொடரும்..................................

Tuesday, December 27, 2011

முல்லை பெரியாறு- பாகம் 15

பாகம்-14  படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்


போராட்ட காலம் ஆரம்பம் 
===============================
2006ஆம் ஆண்டு

27/ 02 / 2006 அன்று வந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காத கேரளா , மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த , அப்போது ஆண்ட இதே உம்மன்சண்டி , காங்கிரஸ் அரசு கேரளா சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வருகிறது , இந்த சட்டதிருத்த்த்தை அனைத்து கட்சிகளும் ஆதரித்தது.

கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தில் செய்ய பட்ட திருத்தம் , திருத்தம் என சொல்லுவதை விட புதிதாக சேர்க்கப்பட்ட சில அம்சங்கள் என சொல்லுவதே சரி , அதாவது

இந்த சட்டதிருத்த படி கேரளாவில் உள்ள அணைகளை பராமரிக்கவும் , தேவையான முடிவுகளை எடுக்கவும் (அதாவது உடைக்கவும் ) கேரளா அரசுக்கே உரிமை , இதில் எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது எனவும்

அணைகளின் நீர் மட்டத்தை கேரளா அரசே தீர்மானிக்கும் என சொல்லி ஒவ்வொரு அணையின் நீர்மட்டத்தை யும் பட்டியல் போட்டது , அதில் முதல் முறையாக முல்லை பெரியாறு அணையின் பெயரை சேர்த்து , அதற்கு 136 அடி நீர் மட்டம் என சட்ட திருத்தத்தை  கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, 2006ம் ஆண்டு மார்ச் 18 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது,

இதுவரை முல்லை பெரியாறு அணையின் கேரளா அரசில் எந்த சட்ட பிரிவிலும் இடம் பெறவில்லை முதல் முறையாக தமிழகத்திற்கு சொந்தமான அணையை கேரளா சேர்த்து கொண்டது (ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என கிராமத்து பழமொழி தான் நேபகம் வருகிறது )

மேலும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டவும் தீர்மானம் நிறைவேற்ற பட்டது

இந்த ஆண்டு தமிழக , கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது , இந்த தேர்தல் களத்தில் இதை இருவரும் மறந்து விட்டார்கள்

மீண்டும் இங்கே திமுக ஆட்சி , அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வந்த்து

இந்த காலகட்டத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றம் நோக்கி பயணித்து பிரச்சனை.

உரிமை காப்புப் பேரணி

நீதி மன்ற தீர்ப்பை மதிக்கவில்லை , மத்திய அரசும் என்ன எது என கேட்கவில்லை மாநில அரசும் விழா கோலங்களில் மூழ்கி போனது , இந்த நேரத்தில் மக்கள் மன்றத்தில் பிரச்சனையின் தீவிரத்தை எடுத்து போக வேண்டிய எதிர் கட்சிகளில் ஒரே ஒருவர் மட்டும் எடுத்து போனார் ,
  
ஏற்கனவே பல போராட்டங்களை நடத்திய ஐந்து மாவட்ட விவசாய சங்கம் , பழ.நெடுமாறன் அவர்களின் அமைப்புகளை சேர்த்து கொண்டு , மதிமுக கட்சியின் பொது செயலாளர் வைகோ , 19.09.2006 அன்று மதுரையில் முல்லை பெரியாறு உரிமை காப்புப் பேரணியை நடத்தினார் , முல்லை பெரியாறு அணைக்கு அரசியல் கட்சி நடத்திய முதல் போராட்டம் இதுவாக இருக்கும், போராட்டம் வலுவாக இருந்திருந்தால் (அனைவரும் ஒத்துழைத்து இருந்தால் ) புறசூழல் தன்மையையும் நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதும் பொது கணக்கில் கொள்ளும் என நினைத்திருப்பார் போல வைகோ (சட்டம் படித்தவர் அல்லவா )

2006ஆம் ஆண்டு

25.9.2006 அன்று உச்சநீதிமன்ற ஒரு ஆணை பிறபித்தது, அதில் , மத்திய நீர்வள ஆதார அமைச்சர், தமிழக-கேரள அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும் என சொன்னது

2006ஆம் ஆண்டு

24.11.2006 அன்று வைகோ ஒரு மனுவை கொண்டு சென்று இந்தியா பிரதமரிடம் தருகிறார் , மனுவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த கேரளா அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என கேட்டு இருக்கிறார் ,

2006ஆம் ஆண்டு

மத்திய நீர்வள ஆதார அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் 29.11.2006 அன்று டெல்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி ,அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், தலைமைச் செயலாளரும் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 கேரளா அரசு சார்பிலும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டானர் , இதில் என்ன பேசினார்கள் , என்ன முடிவு எடுக்க பட்டது என தெரியவில்லை

2006ஆம் ஆண்டு

ஒரு பக்கம் மனுவை தந்து விட்டு , மறுபக்கம் போராட்டத்தை தொடங்குகிறார் வைகோ, 18.12.2006 முதல் 23.12.2006 வரை 6 நாள் நடைபயணம் போடுகிறார்,

இந்த நடைபயணத்தை மதுரையில் தொடங்கி கூடலூர் வரை நடந்தே சென்று மக்களிடம் அணையின் அவசியம் கேரளாவின் சதிகளை எடுத்து வைக்கிறார்.

2007ஆம் ஆண்டு

நடைபயணத்தை முடித்தது , ஒருவேளை அணையை கேரளா உடைத்து விட்டால் என்ன செய்வது , பாதுகாப்புக்கு இருப்பதும் கேரளா காவல் துறைதனே , ஜனவரி 2 தேதி வைகோ , இந்தியா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுத்துகிறார் , முல்லை பெரியாறு அணைக்கும் மத்திய தொழில் பாதுக்காப்பு படையை அனுப்பி , அணையை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் ,(கூட்டனி கட்சியாக இருத்தலே கண்டுக்க மாட்டார்கள்)

2007ஆம் ஆண்டு

மார்ச் மாதம் 31 தேதி பல விவசாய சங்கங்கள் சேர்ந்து, வைகை-முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடத்த பட்டது , அதிலும் சிறப்பு பேச்சாளராக வைகோ விற்கும் ஒரு அழைப்பு

2007ஆம் ஆண்டு

மே மாதம் 09 தேதி , இதுவரை பேரணி , மேடையில் பேசிக்கொண்டு இருந்தவர்கள் வைகோ தலைமையில் மதுரை , பரமகுடி , உத்தமபாளையம் இன்னும் சில இடங்களில் அணைக்காக மறியல் போராட்டத்தை தொடங்கி விட்டார்கள்.

                                              தொடரும் ........................

Monday, December 26, 2011

முல்லை பெரியாறு- பாகம் 14

பாகம்-13   படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்,   


நீருக்காக நீதி மன்றங்கள் நோக்கி பயணம் 

==============================================

1998ஆம் ஆண்டு

மகபூப் பாட்ஷா, கே.எம்.அப்பாஸ், ரத்தினசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார்கள். அதில் வைக்கப்பட்ட இரு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று அணையின் பாதுகாப்பு மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும்.

இன்னொன்று அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்த வேண்டும் என்பதுதான். சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் இப்பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து என்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.                 

எந்த முடிவு எடுக்க படவில்லை தமிழக அரசும் , கேரளா அரசும் இந்த வழக்கில் தங்களை இணைத்து கொண்டது ,

2000ஆம் ஆண்டு

வழக்கும் மீண்டும் உச்சநீதி மன்றத்திற்கு வந்தபோது, பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்காத்தால் , ஒரு வல்லுனர் குழுவை அமைக்கிறது நீதிமன்றம் , இந்த வல்லுனர் குழு ,அணை , அணை பகுதிகளை ஆய்வு செய்து நீதி மன்றத்திற்கு அறிக்கை தரவேண்டும் என உத்தரவு போட்டது உச்ச நீதிமன்றம்

2001ஆம் ஆண்டு

பிப்ரவரி 10 தேதி உச்சநீதி மன்றம் அணையே  ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு அமைத்தது , மிட்டல் தலைவராகவும் , மத்திய தலைமைப் பொறியாளர் இரண்டு பேர் . மத்தியப் பிரதேச அணைப் பாதுகாப்புக் குழுத் தலைவர் , உ.பி.தலைமைப் பெரியாளர் , தமிழக அரசின் சார்பில் ஒரு பிரதிநிதி , கேரளா சார்பில் ஒரு பிரதிநிதி என ஏழு பேர் குழு அமைக்கப்பட்டது

2002ஆம் ஆண்டு

ஏழு பேர் குழு அணை பகுதியை ஆய்வு செய்து , பல கட்ட ஆய்வுகளை செய்து , மண் மாதிரிகளை எடுத்தும் , அணையின் கட்டுமான பொருள்களின் மாதிரிகளை எடுத்தும் டெல்லி உள்ள மத்திய மண் வள பரிசோதனை கூடம் போன்ற இன்னும் பல பரிசோதனை கூடங்களில் ஒரு ஆண்டு காலம்  ,பல கட்ட ஆய்வுக்கு பின், ஏழு பேர் குழு அணை வலுவாக இருக்கிறது , அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என அறிக்கை உச்ச நீதி மன்றத்தில் சமர்பித்த்து.

இந்த ஆய்வு பணிகள் , அறிக்கைகளை சரிபார்த்த ஏற்றுக் கொண்டு,மத்திய அரசும்  அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என அறிக்கை உச்ச நீதி மன்றத்தில் சமர்பித்த்து.

2006ஆம் ஆண்டு

தொடர்ந்து வாத , பிரதிவாதங்கள் நடந்தது , இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 27/ 02 / 2006 அன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு தருகிறது

உச்ச நீதி மன்ற தீர்ப்பு விவரம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போது உள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம்

அணையை வலுபடுத்துவதற்கான எஞ்சிய பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளலாம்

மத்திய நீர் ஆணையம் திருப்தியடையும் வகையில் , அணையை பலபடுத்தப் படுவதற்கான எஞ்சிய பணிகள் முடிந்த பிறகு ,அணையின் நீர் மட்டத்தை 152 அடிக்கு உயர்த்தலாம்

என நல்ல ஒரு தீர்ப்பை உச்சநீதி மன்றம் தந்தது ,மேலும் கேரளாவிற்கு சில விசயங்களை சுட்டி காட்டியது உச்ச நீதி மன்றம்

கேரளாவிற்கு விழுந்த சவுக்கடி

தற்போது உள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையின் நீர் மட்டம் உயர்த்தும் போது, அணையின் பாதுகாப்பை பொறுத்த வரையில் , நில நடுக்கத்தினை எதிர்க்கும் சக்தி உட்பட அனைத்து பாதுகாப்பு கோணங்களையும் பல்வேறு அறிக்கைகள், ஆழமாக ஆராய்ந்துள்ளன. இதன்படி , முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற கவலை ஐயப்பாடு ஆகிய அனைத்தும் ஆதரமற்றவை என உச்ச நீதி மன்ற சுட்டி காட்டி உள்ளது

மேலும் , அணை பாதுகாப்பாக உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில் , இவைகள் எல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள் என்ற சாக்கு போக்கை வைத்து , அதற்கு தடை ஏற்படுத்தும் விதமான அணுகுமுறையை கேரளா அரசு கடைபிடிப்பது அனுமதிக்க முடியாது, அணையின் நீர் மட்டம் 142 அடி உயர்த்தும் போது, அணையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எந்த அறிக்கையும் சுட்டி காட்டவில்லை என உச்ச நீதி மன்ற தீர்ப்பில் உள்ளது

கேரளா சவுக்கடி வாங்கியும் திருந்தவில்லை , உச்ச நீதி மன்ற தீர்ப்பை என்ன செய்தது, அதற்கும் முட்டுக்கட்டை போடும் பணிகளை செய்ய ஆரமித்தது

                                              தொடரும்............................
பின் குறிப்பு 
இனி வருவது மக்கள் மன்ற போராட்டம் ,அரசியல் கட்சிகளின் போராட்டம் , மக்களாட்சிக்கு எந்த அரசியல் கட்சி சார்பு கிடையாது , இங்கே காமராசரையும் சுட்டி காட்டினோம் , எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் சுட்டி கட்டினோம் , இனி மேலும் சில கட்சிகளை சுட்டி காட்டுவோம்.