Saturday, January 28, 2012

முல்லை பெரியாறு- பாகம் 33

பாகம்-32 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.



உறுதியோடு போராடும் மக்கள் 

டிசம்பர் மாதம் 22ம் தேதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் விஷமப் போக்கைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பல ஆயிரம் விவசாயிகள் திரண்டு பேரணி நடத்தினர். அப்போது தபால் அலுவலகம் ஒன்றை சூறையாடினர்.

கேரளாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது புதிய அணை தேவையில்லை என்று வலியுறுத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையை விஜயகாந்த்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தேமுதிகவைச் சேர்ந்த மேடைப் பேச்சாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் ,தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தேமுதிகவில் மேடைப் பேச்சாளராக இருக்கிறார். 30 வயதான இவர் விருத்தாச்சலம் வந்து . அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி. பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடந்த இந்தப் போராட்டத்தால் இந்த மாவட்டங்களில் மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அத்தனை கடைகளும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன.
 முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது தடைபட்டுள்ள நிலையில் தற்போது கறிமாடுகள் கிடைக்காமலும் கேரளா வியாபாரிகள் திணறினார்.

இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகை கறிக்கோழி, மாடு இல்லாத பண்டிகையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கூறினர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.பிரதமர் தலைமையில் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து, பூகம்பத்தால் முல்லைப் பெரியாறு பகுதிக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக் குறித்து தன்னெழுச்சியானப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மக்களை ஒடுக்கும் முயற்சியை மேற்கொள்வது என்பது தமிழகத்தின் நலனுக்கு எதிரானதாகும். என்று தமிழக அரசுக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் தென்காசியில் ஆர்பாட்டம்.

டிசம்பர் மாதம் 23ம் தேதி

முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் அபாயம் இருப்பதாக கேரள அரசு கூறி வருவது சரியானதா, இல்லையா என்பதை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த உயர் அதிகாரி குழுவின் நிபுணர்கள் இரண்டு பேர் அணையில் நேரடி ஆய்வை மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் நிலைபாட்டைக் கண்டித்து  கோவையில் ஆட்டோ ஸ்டிரைக் நடந்தது.

டிசம்பர் மாதம் 24ம் தேதி

எங்களுடைய நிலைப்பாடானது கேரளத்துக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பதுதான். அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேச கேரளா தயாராகவே இருக்கிறது. தற்போது வழங்கும் தண்ணீரை விட தமிழக அரசு கூடுதல் தண்ணீர் கேட்டாலும் தருவதற்கு கேரளா அரசு தயாராக இருக்கிறது. இது பற்றி ஒப்பந்தமும் போட்டுக்கொள்ளலாம் இவ்வாறு கேரள பாசன துறை அமைச்சர் ஜோசப் கூறியுள்ளார்.(நயவஞ்சக பேச்சு )
  
மக்களின் போராட்டத்தால் , மதிமுக சாலை மறியலால் கேரளாவிற்கு செல்ல வேண்டிய காய்கறிகள் , பால் , இறைச்சி போன்ற வை தட்டுபாடு நிலவியது , ஒருவேளை கேரளா மக்கள் இதை உணர ஆரம்பித்து அரசுக்கு எதிராக போராட கிளம்பி விட்டால் என்ன செய்ய என கேரளா அரசு பேசி தீர்க்கலாம் என நயவஞ்சகமாக தமிழகத்தை அணுகுகிறது , மேலும் மத்திய அரசும் அதற்கு துணையாக இருக்கிறது.

                                                  தொடரும்............................



Thursday, January 26, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-5

பாகம்-4 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


இன்றைய கள நிலவரம் 

கொஞ்சம் சுறுசுறுப்பு பெற்றுள்ளது சங்கரன்கோவில் இடைதேர்தல் களம் .

அதிமுக பக்கம் 
===============

ஆளும்கட்சியாக இருப்பதாலும் , தொகுதி ஏற்கனவே வென்றதாலும் , இந்த களத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு ,அமைச்சர்ர் பெருமக்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது கட்சி தலைமை.

சாதகங்கள் 

ஆளும் கட்சி என்ற பிரமாண்டத்தோடு களத்தில் இறங்கி விட்டார்கள் , கடந்த நான்கு முறை தொகுதியை கைபற்றியவர்கள் என ஒரு மாய தோற்றத்தோடும் களத்தில் உள்ளது அதிமுக 

சட்டமன்ற உறுப்பினரின் மறைந்த சில நாள்களிலே இலவசங்களை வரி இறைக்க ஆரமித்து விட்டது 

அமைச்சர்கள் தேர்தல் பனி செய்வதால் அனைத்து அரசு ஊழியர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். 

இவர்கள் பெரிதும் நம்பி களம் காண்பது இலவசங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை 

பாதகங்கள் 

ஆளும்கட்சி என முழு பலம் இருந்தாலும் , அரசு எடுத்த முடிவுகள் மக்களிடம் கேட்ட பெயர் வாங்கி உள்ளது , இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே , சமசீர்கல்வி , அரசு கட்டிடங்களை மாற்றுவது , விலை வாசி உயர்வு , மூன்று பேர் தூக்கு விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான முடிவுகள் என தங்களுக்கு தாங்களே வெறுப்பை பெற்று கொண்டார்கள்.

தலைமை யின் பண்புகள் தேர்தலில் எதிர் ஒலிக்குமானால் இவர்களுக்கு பெரும் சிக்கலே , நீதிமன்ற வழக்குகள் மக்கள் மனத்தில் வைத்தால் ஓட்டுகள் குறையும்.

தன் யுக அடிப்படையில் வேலை செய்யும் அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சிக்கு நிகராக கோஷ்டிகள் என ஒரு இறுக்கமான , மெத்தன போக்கோடு களத்தில் இருக்கிறது அதிமுக .

மேலும் விசை தறி தொழிலார்களின் போராட்டம் தலைமேல் கத்தியாக இருக்கிறது 

வேட்பாளர் 

தேர்தல் அறிவிக்கும் முன்னே வேட்பாளரை அறிவித்து விட்டது , இது எதிர்கட்சிகளுக்கு ஒரு நிர்பந்ததை ஏற்படுத்தவதுதான் . இவர்களின் வேட்பாளர்கள் மாற்றும் பாணி  இங்கேயும் நடக்குமா என தெரியவில்லை .

இப்போது அறிவித்து உள்ள வேட்பாளர் படித்தவர் , ஒரு பெண்மணி என்ற பலம் இருந்தாலும் தனி செல்வாக்கு என்ற ஓன்று இல்லை , மேலும் இவர் சங்கரன்கோவில் நகரமன்ற தலைவியாக இருக்கிறார் , பதவிக்கு வந்து ஆறுமாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரையே வேட்பாளராக நிறுத்துவது என்பது நல்ல அணுகுமுறை அல்ல 

இந்த தேர்தல் முடிந்த யுடன் நகரமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் சங்கரன்கோவில் , அரசு பணமும் தேர்தல் ஆணையத்தின் வேலை நேரமும் தேவை இல்லாமல் வினவதை மக்கள் சிந்தித்தால் , பெரும் பாதகமாக முடிவுகள் இருக்கும் ,

மதிமுக பக்கம் 
===============

நாம் ஏற்கனவே சொன்னது போல போட்டியில் இருப்பது மதிமுக மட்டுமே , ஏனோ தெரியவில்லை மற்ற கட்சிகள் இன்னும் ஆரம்ப பணிகளை கூட தூடங்கவில்லை , இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் கள பணிகளை விறுவிறுப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள் , வெற்றி பெற்றால் இவர்களின்  அரசியல் வழிவிலே ஒரு பெரிய மாற்றம்தான் , எனவே "மாற்றம் வேண்டும் " என்ற முழக்கத்தோடு களத்தில் மதிமுக 

சாதகங்கள் 

இவர்களின் பிரசார உத்திகள் , தலைமை , பேச்சாளர்கள் , போராட்ட வாழ்வு என பின்புலமாக கொண்டு களத்தில் பம்பரமாக சுற்றி வருகிறார்கள் .

எந்த முடிவுகள் வந்தாலும் தங்கி கொள்ளும் தொண்டர்களை கொண்டுள்ளதால் ,மன உறுதியோடு களத்தில் பனி செய்கிறார்கள் .

இன்றைய போராட்ட கால தமிழகத்தில் , இவர்கள் முன்னோடியாக இருப்பது கூடுதல் பலம் , ஸ்டேரிலேட் ஆலை விவகாரம் , கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு , முத்தாய்பாக முல்லை பெரியாறு போராட்டம் என நல்ல பெயரோடு வலம் வருகிறார்கள்

தலைமை யின் பண்புகள் தேர்தலில் பிரதி பலித்தால் , இவர்களுக்கு சாதகம உள்ளது.

பாதகங்கள் 

ஆளும் கட்சியின் பண பலம் , அதிகார பலம் முன் இவர்களால் பணத்தை செலவு செய்ய முடியுமா என தெரியவில்லை .

மக்கள் இலவசத்திற்கு மயங்கினால் , இவர்கள் படு திண்டாட்டமே ,

நகராட்சி பகுதிகளில் இவர்களுக்கு செல்வாக்கு குறைவு என்பது உண்மை 

மற்ற கட்சிகள் ஓட்டை பிரித்தல் மிக பெரிய பாதகமே .

வேட்பாளர் 

இன்னும் வேட்பாளர் அறிவிக்க வில்லை , இவர்களின் வேட்பாளர் தேர்வு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இருக்குமா ?

வேட்பாளர் யாராக இருந்தாலும் உண்மையான வேட்பாளர் வைகோதான் என தொண்டர்கள் உற்சாகத்தோடு களத்தில் சுற்றி வருகிறார்கள் .

ஒருவேளை பொது வேட்பாளர் என்ற ஓன்று உருவாகுமா , (இது தமிழகத்தில் சாத்தியமில்லை ) 

                                        
                                                                                                                         தொடரும்...............

Wednesday, January 25, 2012

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள்

இந்தி மொழியை அரசு அலுவல் மொழியாகவும் , கட்டாய கல்வியாகவும் திணிக்க முற்பட்ட பொது அதை எதிர்த்து போரடி உயிர் தியாகம் செய்தவர்கள் நினைவாக இந்த நாளை , திராவிட கட்சிகளும் , தமிழ் அமைப்புகளும் கடைபிடுத்து வருகிறார்கள் 

முதலாம் இந்தி எதிர்ப்பு 

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா அரசில் ,1938 ஆம் ஆண்டு  அன்றைய சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக்கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு பள்ளிகளில் இந்தி படிப்பதை கட்டாயமாக்கியது. 

இதை எதிர்த்து நீதி கட்சியும் பெரியாரும் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த போராட்டத்தை ஒடுக்கிய அரசு , போராட்ட காரர்களை கைது செய்தது.

தியாக விதைகளின் ஆரம்பம் 

போராட்ட காரர்களின் கைது செய்ய பட்டவர்களின் ஒருவர்  நடராசன் என்ற தலித்து இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். காவல் துறையின் தாக்குதலால் காயமுற்று அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15 சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 

இதே போல மற்றொரு போராட்ட காரர் ,13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாக பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது காவல் துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார்.

இவர்களின் இருவரின் மரணத்தால் பெரும் போராட்டங்கள் வெடித்து , இவர்கள் இருவரும் தான் முதலில் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகள்.

இரண்டாம் கட்ட போராட்டம் 

 இந்தியா விடுதலை பெற்றபின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு இந்தியை பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது.அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது.

 திராவிடர் கழகமும் பெரியாரும் போராட்டத்தை முன் எடுத்தார் .இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த ம. பொ. சிவஞானம் மற்றும் திரு.வி.க தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.

போராட்ட விளைவாக பின்வாங்கிய அரசு ,இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

மூன்றாம் கட்ட போராட்டம்.

நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரிஇந்தியப் பிரதமராக பதவியேற்றார்.

நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும், பள்ளிகளில் இந்தி கட்டாயம் ஆக்கப்படும் , என உத்தரவு போட்டது 

மத்திய அரசின் உத்தரவின் போக்கில்  7 மார்ச் 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தை (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் என தீர்மானம் போட்டது .

இந்தி எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்கதமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.அதன் அலுவலர்களாக தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் இருந்தனர். அவர்களில் சிலர்: பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை முருகன், கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன் மற்றும் எல்.கணேசன்.

இவர்களால் பல போராட்டங்கள் முன் எடுக்க பட்டது , இதற்கு தொழிலதிபர்கள் ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவி அளித்தனர்.இதோடு இந்தியும் தமிழகத்தில் ஒழிந்தது , காங்கிரஸ் அரசும் ஒழிந்தது.

இதை தொடர்ந்து மதுரை யில் மாணவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் நடந்த கலவரத்தில் , பலர் பழியனார்கள், இவர்களையும் முன் பழியான தாளமுத்து , நடராசன் போன்றவரின் நினைவாக இந்த நாளை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் என கருத படுகிறது.

இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகள் தாளமுத்து, நடராஜன், தர்மாம்பாள், அரங்கநாதன் ,கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் .மொழிப்போரில் இந்திய அரசின துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் ,சிவலிங்கம்  போன்றவரை நாமும் நினைவு கூறுவோம். 








Tuesday, January 24, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-4

பாகம்-3 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


தொகுதி விவரம் 

எல்லைகள் 

கிழக்கே - கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியும் 
 
மேற்கே - வசுதேவநால்லூர் சட்டமன்ற தொகுதியும் 

வடக்கே - சாத்தூர் சட்டமன்ற தொகுதியும் 

தெற்கே - தென்காசி சட்டமன்ற தொகுதியும் 

எல்லைகளாக இருக்கிறது 

இதன் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்காசி பாராளுமன்ற தொகுதியின் கீழ் வரும் 

இந்த தொகுதியுள்ள மொத்த மூன்று ஒன்றியங்கள் 

1. சங்கரன்கோவில் ஒன்றியத்தின் ஒருபகுதி 

2. மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 

3.குருவிகுளம் ஒன்றியம் 

இந்த தொகுதியுள்ள ஒரு நகராட்சி 

சங்கரன்கோவில் 

இந்த தொகுதியுள்ள ஒரு பேருராட்சி

திருவேங்கடம் 

இந்த தொகுதியுள்ள மொத்த ஊராட்சிகள் -73 

1.சங்கரன்கோவில் ஒன்றியத்தின் ஒருபகுதி -4  ஊராட்சிகள்

2.மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் -26  ஊராட்சிகள்

3.குருவிகுளம் ஒன்றியத்தின் -43  ஊராட்சிகள்

இந்த தொகுதியுள்ள மொத்த கிராம பகுதிகள் 

1.சங்கரன்கோவில் ஒன்றியத்தின் ஒருபகுதி -21

2.மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் -82

3.குருவிகுளம் ஒன்றியத்தின் -133

4 .திருவேங்கடம் பேருராட்சி- 4 


மூன்று ஒன்றியத்தில் 73 ஊராட்சிகளிலும் , ஒரு பேருராட்சியிலும் இடம் பெரும் மொத்த கிராமங்கள் -240 

வாக்களர்களின் எண்ணிக்கை 

01 /01 /2012  அன்று திருத்த பட்ட வாக்காளர் பட்டியல் படி 

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2 ,05 ,840 

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 1 ,02 ,795 

பெண் வாக்களர்களின் எண்ணிக்கை - 1 ,03 ,045 

இங்கு கிராம புற வாக்குகள் தான் வெற்றி தேல்வியை தீர்மானிக்கும் , மேலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது , தேர்தல் தேதி அறிவிக்கும் முன் ஆளுகட்சியான அதிமுக ஒரு பெண் வேட்பாளரை அறிவித்து விட்டது.

அதிமுகவிற்கு போட்டியாக மதிமுக மட்டும் களத்தில் பம்பரமாக சுற்றி வருகிறது , ஏனோ தெரியவில்லை மற்ற யாரும் இன்னும் முனைப்பு காட்டவில்லை 
                                                                                                                                                                                                                                     
                                                                            தொடரும் .........................



Monday, January 23, 2012

முல்லை பெரியாறு- பாகம் 32


பாகம்-31 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்

வொகுண்ட எழுந்த தமிழகம்


டிசம்பர் மாதம் 21ம் தேதி

கேரளா செல்லும் பாதையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிமுக ,பழ.நெடுமாறன் தலைமையில் முல்லை பெரியாறு அணை மீட்பு குழு ,கம்பம் .அப்பாஸ் தலைமையிலான ஐந்து மாவட்ட முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் , கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிட கழகம் ,தியாகு தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை இயக்கம் , நாகை.திருவள்ளுவன் தலைமையிலான தமிழ் புலிகள் ,தமிழ்நாடு கள் இயக்கம் ,கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் ,விவசாயிகளின் கூட்டமைப்பு ,மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ,தமிழநாடு கொங்கு இளைஞர் பேரவை ,இந்து மக்கள் கட்சி ,அகில இந்தியா பார்வர்டு பிளாக் , பாரதீய பார்வர்டு பிளாக் ,என பல அமைப்புகள் சேர்ந்து நடத்திய போராட்டம் .

13 சாலைகளிலும் முற்றுகை போராட்டத்தை நடத்துவதற்காக வைகோ , நெடுமாறன், கம்பம் குமுளிக்கு செல்லுகின்ற வழியில் காவல்துறையினர்
உத்தமபாளையம் தாலுகா எல்லையில் 144 தடை உத்தரவு இருப்பதை கூறி தடுத்து நிறுத்தினார்.

கேரள முதல்வருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறினார்.மதிமுக பொதுச் செயலாளர்கள்.

வைகோ கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படித்தியது , கைது செய்து அழைத்து சென்ற பொது மக்கள் கூடி தடுத்தார்கள் , சீலம்பட்டி கிராம மக்கள் சாலையில் தடைகளை ஏற்படித்தி காவல் துறை வாகனத்தை நகரவிடவில்லை , பிறகு வைகோ , நெடுமாறனின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்கள் வழி விட்டார்கள்.பிறகும் நெடுதூரம் வைகோவின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் மக்கள் அணி வகுத்தனர்.

மீண்டும் அடுத்த கிராமத்திற்கு தகவல் போக அவர்களும் சாலைக்கு வந்து வைகோ கைது செய்த காவல் துறையை தடுத்தார்கள், இதற்காகவே பல வழி தடங்கள் மாற்றி , மாற்றி சுற்றி காவல்துறை அழைத்து வந்தது.

கூடலூரில் கூடி இருந்த மக்களுக்கு வைகோ வரவில்லை என்ற ஏமாற்றத்தோடு , குமுளியை நோக்கி முன்னேறிய மக்களை தடுத்த போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஓட ஓட விரட்டியடித்ததால் பெரும் பதட்டம் நிலவியது 5 முறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனார்.

செங்கோட்டையில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது. உனக்கும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம். நீங்கள் விரதம் இருந்த ஐயப்ப சாமிகளை அடித்து தாக்குகின்றீர்களே, இந்தியாவில் இதுபோல் எங்காவது நடந்தது உண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் கேரள செல்லும் லாரிகளில் சரக்கு புக்கிங் நிறுத்தப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படும் வரை சரக்கு புக்கிங் நிறுத்த ஏஜென்டுகள் முடிவு செய்தனர்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் முடிதிருத்துனர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இதனால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டது.

                                         தொடரும்...................................