Showing posts with label சங்கரன்கோவில் இடைதேர்தல். Show all posts
Showing posts with label சங்கரன்கோவில் இடைதேர்தல். Show all posts

Saturday, March 17, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

இடைத் தேர்தல் கடைசி கட்ட பிரசாரம் முடிந்தது , இனி வாக்கு பதிவும் எண்ணிக்கை மட்டுமே பாக்கி உள்ளது.

கலக்கல் கலிங்கப்பட்டி 

சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராம தான் இந்த கலிங்கப்பட்டி , கூடுதல் தகவல் , மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிறந்த ஊரும் இதுதான் ,
பல நாள்களாக ஆளும் கட்சி அதிமுக தேர்தல் பணிக்குழு இந்த கிராமத்தில் தங்கி வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுவந்தார்கள்.

பல நாள்களாக இந்த கிராம மக்களிடம் என்ன என்னமோ பேசி பார்த்தார்கள் , சினிமா நடிகர்களை கொண்டுவந்து காண்பித்தார்கள் , திமுக பெரும் தலைகள் , அதிமுக பெரும் தலைகள், தேமுதிக தலைவரும் மனைவி யும் வாக்கு சேகரித்து பார்த்தார்கள், இந்த கலிங்கப்பட்டி மக்கள் தீர்க்கமாக உள்ளூர் தலைவரான வைகோவின் மதிமுகவிற்கு வாக்கு என வாக்கு சேகரிக்கும் எதிர் அணியிடம் நேரடியாகவே சொல்லி விட்டார்கள் , இதை கேட்ட அதிமுக ஆளும் தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியோடு பணம் பட்டுவாடவை துவங்கியது .

கலிங்கபட்டியில் பணம் விநியோகம் செய்த அதிமுக நிர்வாகி 
பல முறை வாக்களர்களுக்கு பணம் கொடுத்தும் யாரும் வாங்குவதாக தெரியவில்லை ,நேற்று காலையில் ஒரு குடும்பத்தில் வலுகட்டாயமாக பணத்தை திணித்த அதிமுகவினரை காவல் துறையிடம் பிடித்து கொடுத்தார்கள் கலிங்கப்பட்டி கிராம வாசிகள் .அப்படியென்றால் கலக்கல் தானே . ஒரு அரசியல் கட்சி தலைவரின் ஊரிலே இவ்வளவு துணிந்து பணம் விநியோகம் செய்கிறார்கள் என்றால் தொகுதி முழுவதும் ??? திமுக திருமங்கலம் போர்முலவை மிஞ்சி விட்டது அதிமுக

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் 

சென்னை பல்லாவரம் அதிமுக வை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் இடைத்தேர்தல் பணிக்காக இன்று கலிங்கப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளார் .

பண பட்டுவாட செய்த அதிமுக கூட்டத்தோடு பிடிபட்ட பொது இவரும் உடன் இருந்து இருக்கிறார் , மக்கள் இவர் மீது பய . அந்த மக்களுக்கு இவர் யார் என்றே தெரியாது ,இவர் வைகோவின் வீட்டை நோக்கி ஓட , அங்கு இருந்த வைகோ மக்களை சமாதான படித்தி தாக்குதலில் இருந்து இந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங்  அவர்களை காப்பாற்றி உள்ளார் , பின் காவல் துறை உதவியோடு இடத்தை களை செய்து விட்டார் , சமஉ

தாம்பரம் குபேர ஜெயசங்கர் 


யார் இந்த குபேர , இவர் யாருமில்லை கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம்பரம் நகராட்சி மதிமுக வேட்பாளராக களம் இறக்க பட்டவர் , கடைசி நேரத்தில் பணத்துக்கு ஏமாந்து அதிமுகவில் இணைந்து விட்டார்,முன்னாள் மதிமுக காரர் , இவர் அமைச்சர் டி.கே.எம். சின்னையா வின் கீழ் இடைதேர்தல் பணிக்காக கலிங்கப்பட்டி கிராமத்தில் பண பட்டுவாடவில் ஈடுபட்டுள்ளார் , கிராம மக்களிடம் பிடிபட்ட இவரை கூட்டத்தில் சிலர் தாக்கிவிட , இவரும் வைகோவை நோக்கி ஒடி தஞ்சம் புகுந்து உள்ளார் , முன்னாள் தலைவர் என்ற பாசத்தில் தலைவரே என்னை உங்க ஊர் பொது மக்கள அடைத்து விட்டார்கள் என வைகோவிடம் முறை இட்ட இந்த குபேர வை ,வைகோ மக்களிடம் இருந்து காத்து உள்ளார்.

அதிமுக தேர்தல் பணியாளர்கள் 

கலிங்கப்பட்டி வாக்காளர் களிடம் பணம் விநியோகம் செய்த அதிமுக தேர்தல் பணியாளர்கள் நிர்வாகிகளை கண்டித்தும் ,காவல் துறையிடம் பிடித்து கொடுத்தும் பொது மக்கள் செய்வதை பார்த்த ஒருவர் பொது மக்கள் மீது ஒரு அதிமுக நிர்வாகி தனது வாகனம் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட மக்களின் கோபம் அதிகமாக .அத்திரம் அடைந்த பொது மக்கள் அதிமுக வினர் மீது தாக்குதலை ஆரமிக்க சிதறி ஓடிய அதிமுக நிர்வாகிகள் .

அதிமுக நிர்வாகி ஒருவர் பெரிய சாக்கடையில் மீது இருந்த சிறிய பாலத்திற்கு கீழ் ஒழிய முற்பட்டு சாக்காட்டில் புரண்டு எழுந்து ஓடி விட்டார் .

மற்றொருவர் தங்கி இருந்த இடத்தில் கழிவறையில் ஒழிய முற்பட பொது மக்களிடம் பிடி பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்க பட்டார்

இன்னும் ஒருவர் ஊர் பொது மக்களுக்கு பயந்து கிணற்றில் குதித்து விட்டார் , அவரையும் கைப்பற்றி காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள்.

இன்னும் இரு அதிமுக நிர்வாகிகள் பணத்தோடு காட்டு வழியே ஓடு போனார்கள் , போனார்கள் வெறுமன போக வேண்டியது தானே ,காட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களிடம் பொய் , தங்கள் கையில் வைத்து இருந்த பணத்தை மறுபடியும் அவர்களிடம் கொடுத்து, இந்தாங்க அம்மா இதை வச்சிகொங்க ரெட்ட இலைக்கு ஓட்டு போடுங்க என கேட்க , அங்கு இருந்த பெண்கள் ஓன்று திரட்டு கையில் வைத்து இருந்த களைவெட்டிகளை காட்டி விரட்ட மீண்டும் ஓட்டம் பிடித்த அதிமுகவினர்.
மொத்தத்தில் கலிங்கப்பட்டி கலவர பூமியாக மாறிவிட்டது .

கோபால் சாமி 

இந்த கோபால்சாமி ,அதிமுகவை சார்ந்த ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,இவர்தான் இந்த கலிங்கப்பட்டி வட்டார இடைதேர்தல் பணி குழு விற்கு தலைமை இவர்தான் பொது மக்கள் மீது வாகனம் ஏற்ற முயற்சி செய்தவர் , ஆனால் இவர் தப்பித்து ஓடி விட இவரின் வாகன ஒட்டினர் மட்டும் மக்களிடம் மாட்டி கொண்டார் , தனது கட்சி தொண்டர்கள் , தன்னை நம்பி வந்த வெளியூர் கட்சி நிர்வாகிகளை நடு தெருவில் விட்டு விட்டு இவர் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார் ,வார பத்திரிக்கையில் இவரை பற்றி பெரிய நம்பிக்கையில் செய்தியெல்லாம் போட்டார்கள் வாக்கு சேகரித்து தருவார் என , பொது மக்களுக்கு பயந்து ஒட்டி விட்டார் இன்று .

தனது கட்சி தொண்டனுக்கே துணை போகத சட்டமன்ற உறுப்பினர் , தனது தொகுதியில் மக்களுக்கு எப்படி துணையாக இருப்பார் ???????

மக்களின் எழுச்சியில் மதிமுக வெல்லுமா ?

சங்கரன்கோவில் தொகுதி முழுவது மக்கள் பணத்திற்கும் , இலவசத்திற்கு மயங்க வில்லை , மக்களிடம் நல்ல ஒரு எழுச்சி தெரிகிறது , இந்த எழுச்சியில் மதிமுக வெல்லுமா வாக்குகளை அள்ளுமா என தெரியவில்லை ,

வாக்கு பதிவை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறலாம் , யார் வென்றாலும் பெரிய வாக்கு வித்தியாசம் ஓன்று இருக்காது போல தொகுதி நிலவரம் இருக்கிறது , ஆளும் கட்சி மீது பெரிய அதிருப்தி நிலவுகிறது , எந்த அளவிற்கு எதிர் அணிக்கு வாக்காக மாறும் என பொறுத்து இருந்து பார்ப்போம் , மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்கு அளித்தால் நிச்சியம் பம்பரம் கோட்டையில் சுற்றுவது உறுதி ...

                                                                                                         தொடரும்............................

Thursday, March 15, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கு , அரசியல் கட்சிகளும் ஓடி, ஓடி ஓட்டுகள் கேட்கிறது , தேர்தல் ஏற்பாடுகளும் ஜோராக நடக்கிறது , மக்களும் வாக்கு செலுத்தும் மன நிலைக்கு தயார் ஆகிவிட்டனர். நாமும் தொகுதி பக்கம் பார்ப்போமே.

அதிமுக 

அமைச்சர்கள் கூட்டத்தை ஏற்கனவே இறக்கி விட்டு இருந்தது , இப்போது பத்து மாநகராட்சி தலைவர்களையும் இறக்கிவிட்டி ,கட்சியின் தலைவியும் முதல்வரும் களத்தில் இருக்கிறார்கள் , மேலும் 100 க்கு மேலான சட்டமன்ற உறுப்பினர்களும் களத்தில் உள்ளார்கள்.பணமும் தாரளமாக அள்ளி விசுகிறது, அதிகார தோரணையும் அசத்தலாக இருக்கு.சின்ன சின்ன இயக்கங்களை கெஞ்சி ,கூட்டு சேர்த்து உள்ளார்கள் .வழக்கபோல சினிமா நடிகர்களும் உண்டு.

எப்படி உள்ளது இவர்களுக்கான செல்வாக்கு , கிராமங்கள் கடுமையாக எதிர்ப்புகளை கட்டுகிறது , மேலும் நகர்புறம் அமைதியாக இருந்தாலும் வலுவாக வாக்குகள் கிடைக்குமா என்ற பயம் வந்து விட்டது அதிமுகவிற்கு .

சில இடங்களை அமைச்சர்கள் மக்களால் அசிங்க படுத்த யுள்ளார்கள் , பல இடங்களின் வம்பு சண்டை இழுக்க தொண்டர்களை ஏவியும் விடபட்டுள்ளது ,

வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு கேட்டும் ,ஓட்டு போடுவார்கள என தெரியவில்லை. பணமும் அதிகாரமும் மிஞ்சி இருக்கே தவிர அனுசரணை இல்லை .

மதிமுக 

ஏற்கனவே சொல்லிவிட்டோம் போட்டி அதிமுக - மதிமுக தான் என , இவர்களின் பக்கம் நெடுமாறனின் இயக்கமும் , தமிழருவி மணியன் இயக்கமும் , பெரியார் திராவிட கழகமும் , சில இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து பரப்புரை செய்கிறார்கள் ,

இவர்களின் பலமே பேச்சு தான் பல பேச்சாளர்களை களம் இறக்க பட்டுள்ளார்கள் , பல பேச்சுலர்களும் களம் இறங்கி உள்ளார்கள் , அது என்ன பேச்சுலர்கள் , அதான் இணைய தள நண்பர்கள் , தொகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள் மறுமலர்ச்சி கழகம் .

ஒரு பக்கம் வைகோ , ஒரு பக்கம் அவர்களின் கொள்கை பரப்பு சம்பத் , மறுபக்கம் இன்னும் சில பேச்சாளர்கள் , என நல்ல முறையில் விளக்கமாக விவரங்களை எடுத்து வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள் .

வைகோ இந்த தொகுதி காரர் என்பதால் அனைத்து மக்களும் எளிதாக அருகில் வந்து பேசுகிறார்கள் என்பது உண்மை .மக்கள் மாற்றம் கொண்டு வரவேண்டும் என இவர்கள் வைக்கும் துணுக்கு நல்லவே எடுபடுகிறது .

மற்றபடி தொண்டர்களுக்கு சரக்கு பிரியாணி சம்பளம் இது எதுவும் இல்லாமல் ஒரு பண்புள்ள பிரசார உத்திகளை கடைபிடிக்கிறார் . வெற்றி பெறுவார்களா என்றால் இன்னும் இவர்களின் உழைப்பை பொருத்து அமையும் . இறுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் .

ஒரே ஒரு சிக்கல் இவர்களின் பிரச்சாரம் திமுக விற்கு சாதகமாக வாக்குகளை பெற்று தந்து விட கூடாது.

திமுக 

எதோ குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி , முன்னாள் அமைச்சர்கள் இன்னாள் ச.ம.உ கள் , வழக்கபோல சினிமா கவர்ச்சி , பண பலம்,மிரட்டல் போற்றவை துணை கொண்டு களத்தில் இருக்கு ,நோண்டி மாடு காங்கிரஸ் யும் , சமந்தமே இல்லாமல் வி சி க வும் கூட இருந்து தொல்லைகள் தான் அதிகம்.வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கிறார்.

இவர்களின் குறி அதிமுக அல்ல , மாறாக மதிமுக தான் என்பது நல்லாவே மக்களுக்கு தெரிந்து உள்ளது , இவர்களின் முன்னாள்கள் மக்களிடம் வாங்கி கட்டியது தான் மிச்சம் வேறு எந்த பலனும் இல்லை . கடைசி நேரத்தில் பணத்தை வீச்சி மனம் காக்க பாடு படுவார்கள் போல.

தேமுதிக 

விசயகாந்த் குடும்பத்தோட பிரசாரத்திற்கு கிளம்பி விட்டார்கள் , வழக்கம் போல காமெடி காட்சிகள் தான் நிறைந்து இருக்கும் , இவர்களும் திராணிய நிறுவிக்க அனைத்து ச ம உ களையும் இறக்கி விட்டார்கள் , என்ன பயன் யாருக்கும் தேக்க வடக்க தெரியவில்லை , இவர் அதிமுகவிற்கு தான் சாவல் விடுவார்கள் என பார்த்தால் பொது மக்களுக்கு கூட சவால் விடுகிறார் விசயகாந்த்.வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கிறார்.

     
மொத்தத்தில் ஆளும் கட்சி வெற்றியின் ஒரு பக்க கயிறை இழுத்து கொண்டும் , சொந்த தொகுதி கட்சி மறுபக்க கயிறை இழுத்து கொண்டும் இருந்தாலும் இன்றைய நிலையில் ஆளும் கட்சி பக்கம் வலுவாக இழுக்க படுகிறது ,
மக்கள் மாற்றம் விரும்பினால் கயிறு பம்பரத்தை சுற்றி விட்டு விடும் என தெரிகிறது , எல்லாம் வாக்களர்களின் கையில் இருக்கு ...

                                                                                                               தொடரும்.......................

Tuesday, March 6, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-10

பாகம்-9 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மின் தட்டுபாடு தொடர்ச்சி 


மத்திய அரசு மின் நிலைய உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 


அனல் & அணு மின் நிலையங்கள் மூலம்

நெய்வேலி TS 1 (Relief to TNEB )- 475  மெகாவாட்

NTPC - 659  மெகாவாட் 

நெய்வேலி TS 2 - 466  மெகாவாட் 

நெய்வேலி TS 1 (Expansion )- 226  மெகாவாட் 

Talcher St 2- 498  மெகாவாட்

MAPS - 330 மெகாவாட்

KAPS- 171  மெகாவாட்

மொத்தமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு - 2861 மெகாவாட்

இன்றைய நாள் தமிழகத்திற்கு  கிடைக்கும் பங்கு -2193 மெகாவாட்

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :- 52.628 மில்லியன் யூனிட்/ நாள்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த  பங்கு - 3130 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த   மின் அளவு -58.48 மில்லியன் யூனிட்/ நாள்


தமிழகத்தில் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் தமிழக அரசு வாங்கும் அளவு 


தனியார் மின் உற்பத்தி நிலையம் உற்பத்தி மின்சாரம் அதிக பட்சமாக - 1180 மெகாவாட் ,

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -1000 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-21.8 மில்லியன் யூனிட்/ நாள்

மரபு சாரா எரிசக்தி மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 749 மெகாவாட் ,

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -358 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-8.59 மில்லியன் யூனிட்/ நாள்

எண்ணெய் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 788 மெகாவாட் ,

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -502 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-12.069 மில்லியன் யூனிட்/ நாள்


காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக -5990.445மெகாவாட்

இன்றைய நாள் தமிழகம் வாங்கும் அளவு -680 மெகாவாட்

இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-16.7 மில்லியன் யூனிட்/ நாள்

இன்றைய நாள் மொத்தமாக தனியார் இடம் தமிழகம் வாங்கும் மின்சாரம் :- 59.159 மில்லியன் யூனிட்/ நாள்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த   மின் அளவு -44 மில்லியன் யூனிட்/ நாள்

வெளி சந்தையில் இன்றைய நாள்  தமிழகம் வாங்கும் மின் அளவு :-19.8 மில்லியன் யூனிட்/ நாள்


2009-2010 ஆம் ஆண்டு வெளி சந்தையில்   தமிழகம் வாங்கிய   மின் அளவு -19.04 மில்லியன் யூனிட்/ நாள்

மின் பற்றாகுறை காரணம் என்ன ?


மத்திய அரசு மின் நிலையங்களில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச அளவில் இருந்து 24 % சதவிதம் குறைந்து உள்ளது , இதை ஏன் தட்டி கேட்கவில்லை மாநில அரசு , அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் , ஒரு வேளை இடை தேர்தலில் இதை மறந்து விட்டார்களோ ?

மேலும் நாளுக்கு நாள் அதிகமாகும் மின் தேவைக்கு தகுந்தவாரு மத்திய அரசு தொகுப்பில் இருந்து கூடுதலாக மின்சாரம் பெற வேண்டாமா மாநில அரசு ?

2009-2010 ஆம் ஆண்டு மத்திய அரசு தந்த மின்சார அளவு ,நமது பங்கைவிட 9 % அதிகம் தந்து உள்ளது .அப்படியெனில் மத்திய தொகுப்பு அதிகமாக தரக்கூடிய சாந்தியங்கள் இருந்து உள்ளது தானே ? ஆனால் இங்கே பாருங்கள் கிடைக்க வேண்டிய அளவு குறைந்து உள்ளது ,


தமிழகத்தில் தனியார் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி பல ஆயிரம் மெகாவாட் இருந்தாலும் தமிழகம் வாங்கவில்லை என்பது தெரிகிறது , இந்த அரசு மட்டும்தான் வாங்கவில்லை என்பது இல்லை 2009-10 ஆம் ஆண்டு புள்ளிவிவர படி முந்தைய அரசும் வாங்க வில்லை என்பது தெரிகிறது , இப்படி நமது மாநிலத்தை நம்பி தொழில் ஆரம்த்தவர்களிடம் நாம் வாங்குவதே இல்லை என்பது வேதனை தான் , நமது மின் தேவை இருந்தும் வாங்காமல் இருப்பது என்பது அரசுகளின் கவன குறைவு தானே ?

ஆனால் ஒன்றும் மட்டும் பாருங்கள் இடைத்தரகர் மூலம் வெளி சந்தையில் கிடைக்கும் மின்சார அளவை மட்டும் இரு அரசுகளும் சரியாக வாங்கி வந்து உள்ளது. உள் ஊர் உற்பத்தியாளர்களை கண்டு கொள்ளவில்லை என்பது தெரிகிறது .

நான்கு நாளுக்கு முன் முன்னாள் முதல்வர் ஒரு பழமொழியை எடுத்து காட்டி உள்ளார் , அதாவது வெண்ணையை வைத்து கொண்டு நெய் க்கு அழைகிறோம் என்று , இது அவர் சொல்ல காரணம் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க ,ஆனால் இவர்கள் இருவரும் உள்ளூர் உற்பத்தியை கண்டு கொள்ளவில்லை என்பது உண்மை.

இப்போது நாம் சொல்லுவோம் , கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய் க்கு அழையும் இந்த திமுக , அதிமுக அரசுகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் , சங்கரன்கோவில் மக்களே உங்களின் கையில் இருக்கிறது , மாற்றம் என்பதை ஏற்படுத்துங்கள் , மாற்று அரசியலை சிந்தியுங்கள் ,இதை எல்லாம் எடுத்து சொல்ல வேண்டியா எதிர்கட்சி சட்டசபையில் சண்டை போட்டு கொண்டு இருக்கு என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

செயற்கை ஆக ஒரு மின்வெட்டை ஏற்படுத்து கிறத மாநில அரசு ? அல்லது அரசுக்கு நிர்வாக திறன் இல்லையா ?
   
                                                                                                    தொடரும்..........................


                                                                   

Monday, March 5, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-9

பாகம்-8 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மின் தட்டுபாடு

இன்றைய தமிழகத்தில் மிக பெரிய பிரச்சனை இந்த மின் தட்டுபாடுதான் , உண்மையிலே மின் தட்டுபாடு உள்ளதா , இல்லை ஒரு செயற்கை ஆன மின் தட்டுப்பாட்டை உருவாக்க பட்டுள்ளதா , அப்படயென்றால் , செயற்கை மின் தட்டுபாட்டால் கூடங்குளம் அணு உலை திறக்க மறைமுக உதவி செய்கிறதா தமிழக அரசு.

மின் தட்டுபாடு பற்றி தமிழக நிதி நிலை அறிக்கையிலே ,இன்று இடைதேர்தல் களத்தில் ஓயாமல் பணிகளை செய்து கொண்டு இருக்கும் ஒ.பன்னீர் செல்வமே சொல்லி உள்ளார் ,



நிதி நிலை அறிக்கையில் உள்ள விவரம் தான் இது

10,237 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் நம்மிடம் இருந்தாலும் நாம் 8,000 மெகாவாட் தான் உற்பத்தி செய்கிறோம் என்பதை சொல்லியுள்ளார் , அப்படியெனில் முந்தையா திமுக அரசு சரியாக செயல் படவில்லை என்பது தெரிகிறது , மேலும் இவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக என்ன செய்தார்கள் என்பதையும் பார்ப்போம்

இன்றைய நமது மின் தேவை :- 10,859 மெகாவாட்/ 240 மில்லியன் யூனிட் ஒரு நாளைக்கு

அமைச்சர் சொன்ன கணக்கு படி நம்மிடம் உள்ள உற்பத்தி வசதி :- 10,237 மெகாவாட்

அடுத்தவரை நம்மி இருக்க வேண்டிய அளவு :- 622 மெகாவாட்

இது மட்டும் இல்லை சில நேரங்களில் புனல் மின் நிலைய உற்பத்தி குறையும் பொது மேலும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் அளவு அதிகமாகும் என்பது உண்மைதான்.

தமிழகத்தில் உள்ள உற்பத்தி வசதிகள்

புனல் மின் நிலையம் - 2191 மெகாவாட்

அனல் மின் நிலையம் - 2970 மெகாவாட்

தனியார் மின் நிலையம் - 1180 மெகாவாட்

எரிவாயு மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி - 516 மெகாவாட்

எண்ணெய் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி - 788 மெகாவாட்

மரபு சாராத எரிசக்தி மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி - 749 மெகாவாட்

காற்றாலை மின்சார உற்பத்தி - 6008 மெகாவாட்

மத்திய அரசு மின் நிலையங்களில் நமக்கான பங்கு- 2861 மெகாவாட்

மொத்த மின் உற்பத்தி - 17,263 மெகாவாட்

இது முழுவதும் நமக்கே கிடைக்குமா என்றால் இல்லை , சில நேரங்களில் புனல் மின் நிலையம் மின்சார உற்பத்தி குறையும் , ஆனால் பெரும்பாலான அளவு உற்பத்தியை நாம் பயன் படுத்தலாம் , தேவை ஏற்படின் வெளி சந்தையில் வேறு மாநிலங்களில் இருந்து மத்திய அரசிடம் இருந்து மின் சாரம் வாங்கி தேவையை சரியாக பூரத்தி செய்யலாம் .

இன்றைய நிலையில் கிடைக்கு மின்சார அளவு

(3.3.2012 அன்று கிடைத்த தகவலின் படி )

மின்சார வாரியத்தால் உற்பத்தி செய்ய படும் அளவு
புனல் மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 950 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :- 9.347 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 15.393 மில்லியன் யூனிட்

அனல் மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 2350 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :-52.623 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 53 மில்லியன் யூனிட்

எரிவாயு மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக - 236 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :-5.555 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 5.967 மில்லியன் யூனிட்

காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிக பட்சமாக -17.555 மெகாவாட் ,

இன்றைய நாள் கிடைக்கும் மின் அளவு :-0.0326 மில்லியன் யூனிட்

2009-2010 ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நாள் சராசரி - 0.0326 மில்லியன் யூனிட்

மொத்த உற்பத்தி செய்ய வேண்டிய அளவு :- 5694 மெகாவாட்

இன்றைய நிலையில் உற்பத்தி செய்யும் அளவு :- 3554 மெகாவாட்

மின் உற்பத்தி குறைந்த காரணம் என்ன ?

குறைவான மழை காரணமாக ,புனல் மின் நிலையத்தில் உற்பத்தி குறைய வாய்ப்புகள் ஓரளவு இருந்தாலும் இந்த அளவுக்கு 57 சதவிதம் குறைந்து இருப்பது அரசின் மெத்தன போக்குதானே ?,இதை ஈடு செய்ய தனியார் ,மத்திய தொகுப்பு ,வெளி சந்தையில் எவ்வளவு வாங்கி உள்ளார்கள் என்பதை பின்னாடி பார்ப்போம் .

புனல் மின் நிலையம் தான் மழை அளவு , நீர் வரத்தை போற்றவற்றால் பதித்தது என்றால் அனல் மின் நிலையத்தின் உற்பத்தி குறைந்த காரணம் என்ன ? ,அதுவும் 21 சதவிதம் குறைந்து இருப்பது அரசின் மெத்தன போக்குதானே ?

எரிவாயு மூலம் கிடைக்கும் உற்பத்தியும் குறைந்து உள்ளது, இது 54 சதவிதம் குறைந்துள்ளது .

நாளுக்கு நாள் உற்பத்தி அதிகபடுத்த வேண்டியா வளர்ச்சி பாதையில் இருக்கும் பொது உற்பத்தி குறைந்தால் எப்படி மின் வெட்டு இல்லாமல் இருக்கும் , முந்தைய அரசு தான் சரியாக செயல் படவில்லை என்றால் , இந்த ஒன்பது மாத கால அரசு என்ன செய்கிறது , மந்திரிகளை இடைதேர்தல் பணிக்கு அனுப்பும் இந்த அரசு , எத்தனை முறை இந்த மின் உற்பத்தி நிலையங்களை பார்க்க அனுப்பியது , இல்லை மந்திரிதான் போனார?, சங்கரன்கோவில் மக்களே இதை எல்லாம் கேளுங்கள் , அவர்களிடம் இருந்து பதில் வரவே வராது , அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும், மாற்றத்தை யோசிக்க வேண்டும் , இவர்களை திருத்த பாடம் கற்பிக்க வேண்டும் , மாற்றம் என்பது முன்பு ஆண்டவர்கள் இல்லை , அவர்களும் இந்த நிலைக்கு காரணம் தான் .


                                                                                                               தொடரும்........................

Saturday, March 3, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-8


பாகம்-7 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

விலை வாசி உயர்வு 

இந்த இடைதேர்தல் களம் சுறுசுறுப்பு அடைந்து இருக்கிறது , அதே வேளையில் மக்களின் மனங்கள் புண்பட்டு இருக்கிறது என்பது உண்மை.

விலைவாசி உயர்வில் பால் விலை உயர்வு அதிக படி பாதிப்பை ஏற்படித்தி உள்ளது .அரசு காலத்தின் கட்டியம் விலை உயர்வு என சொல்லலாம் அதற்காக இந்த அளவ விலைகள் உயரும் , தனி மனித வருமானம் உயரவில்லை , ஆனால் விலை வாசி மட்டும் உயர்ந்து விடுகிறது.

பால் உற்பத்தி 

தமிழக மாநிலத்தில் மொத்த பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு - 158 லட்சம் லிட்டர் 

அரசு பொது துறை நிறுவனம் ஒரு நாள் பயன் படுத்தும் பால் - 20 லட்சம் லிட்டர் 

மீதம் எங்கே போகிறது தனியார் மூலம் தான் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கு வருகிறது , இந்த வகையில் ஒரு நாள் பயன் படுத்தும் பால் - 138 லட்சம் லிட்டர் 

இந்த விலை ஏற்றம் நேரடியாக அரசுக்கு எந்த அளவு பயன் பட போகிறது என்பதை விட தனியார்க்கு அதிக லாபம் 

அரசுக்கு இந்த விலையேற்றம் மூலம் வரபோகும் பங்கு -12.66 சதவீதம் 

தனியார் கைக்கு போகபோவது - 87.43 சதவீதம் 

அரசு ,பொது துறை நிர்வாகம் மென்படித்தி மாநில பால் உற்பத்தில் ஒரு 50 % கையாளும் அளவிற்கு முன்னேறினால் ,குறைந்த அளவு விலை ஏற்றினாலும் மிக பெரிய லாபம் அரசுக்கு கிடைக்கும் , அதை விட்டு விட்டு அரசு நிர்வாகத்தை சுருக்கிக் கொண்டு , ஒரே அடியாக பணம் பெருக்கும் வகையில் பால் விலையை உயர்த்துவது என்பது மக்களை பாதிக்கும் செயல் , தனியார் கொள்ளை லாபம் சம்பத்திக்க அரசு துணை போகிறது , இது தான் சிறந்த நிர்வாகமோ ?

பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றும் அரசு 

ஒரு பக்கம் பால் விலையை உயர்த்தி மக்களை வதைக்கும் அரசு ,மறுபக்கம் 
ஏழை , எளிய மக்கள் எதாவது மாடுகளை வைத்தாவது காலம் தள்ளலாம் என நினைக்கும் மக்களை ஏமாற்று கிறது அரசு 

பால் உற்பத்தியளர்களுக்கு அரசு அதிக படித்திய தொகை லிட்டருக்கு 2 ரூபாய் மட்டுமே .

பசும் பாலுக்கு - ரூ 18 இருந்து ரூ 20 யாகவும் 

எருமை பாலுக்கு - ரூ 26 இருந்து ரூ 28 யாகவும் 

உயர்த்தி உள்ளது அரசு, அதாவது உற்பத்தியாளர்களுக்கு விலையில் சராசரியாக 9 % உயர்த்தி உள்ளது.ஆனால் விற்பனை பால் விலையை 35 % உயர்த்தி உள்ளது , எப்படி ஏமாற்ற பட்டுள்ளார்கள் .

பால் விலை உயர்வு 

பால் விற்பனை விலையை அரசு அதிக படித்திய தொகை லிட்டருக்கு 6.25 ரூபாய் 

அரசு பொது துறை நிர்வாகம் ஒரு நாளைக்கு விற்பனை செய்யும் பால் - சுமார் 20 லட்சம் லிட்டர் 

பொது துறை நிறுவனம் பால் வாங்கும் கூடுதல் செலவு 

ஒரு நாளைக்கு -சுமார் ரூ 40 லட்சம் 

ஒரு மாதத்திற்கு -சுமார் ரூ 12 கோடி 

ஒரு வருடத்திற்கு -சுமார் ரூ 144 கோடி 


பால் விலை உயர்வால் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கு கூடுதல் வருவாய் 

ஒரு நாளைக்கு -சுமார் ரூ 1.25 கோடி 

ஒரு மாதத்திற்கு -சுமார் ரூ 37.5 கோடி 

ஒரு வருடத்திற்கு -சுமார் ரூ 450 கோடி 


ரூ 144 கோடி என்ற சின்ன மீனை போட்டு ரூ 450 கோடி பெரிய மீனை பிடித்து அதில் ரூ 306  கோடி லாப கணக்கில் சேர்த்து விடுகிறது , இதை தட்டி கேட்கும் மக்களுக்கு மாடுகள் இலவசம் என்ற பெயரில் வருடத்திற்கு ரூபாய் ரூ 56  கோடி வீச உள்ளது அரசு , இது தான் சிறந்த நிர்வாகமோ? இதற்கு சற்றும் குறைந்தது அல்ல முந்தைய அரசு , இந்த திமுக , அதிமுக அரசுகள் இரண்டும் இலவசம் என்னும் மாய ஜால வித்தை காட்டி மக்களின் நலனை பேணுவது இல்லை என்பது உண்மை .

சங்கரன்கோவில் மக்கள் இதற்கு சவுக்கடி தருவார்ளா ? மாற்றம் கொண்டுவருவார்களா ? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

                                                                                                             தொடரும்.......................

Thursday, February 23, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-7

பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது , களத்தில் பணிகளை ஆரமித்து விட , ஆனால் பறக்கும் வேலைகள் நடக்கிறது தலைவர்கள் மத்தில் திட்டம் போடுவது , அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுவது என ஒருபக்கம் மொத்த தமிழக அரசியலும் சங்கரன்கோவில் நோக்கி போகிறது.

அதிமுக   

வேட்பாளர் பெயர் :- எஸ்.முத்துசெல்வி

படிப்பு :- பொறியியல் பட்டதாரி

தொழில் :- இல்லத்தரசி

அரசியல் பின்னணி :- சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் மகள்

மதிமுக 

வேட்பாளர் பெயர் :- டாக்டர் .சதன் திருமலை குமார்

படிப்பு :- மருத்துவம்

தொழில் :-மருத்துவர்

அரசியல் பின்னணி :- மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர். இவர் முன்னாள் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ

திமுக

வேட்பாளர் பெயர் :- ஜவஹர் சூரியகுமார்,

படிப்பு :- எம்.ஏ.பி.எல். பட்டம்

தொழில் :- வழக்கறிஞர்

அரசியல் பின்னணி :- முன்னாள் காங்கிரஸ் மத்திய மந்திரி அருணாசலத்தின் உறவினர் , சங்கரன்கோவில் நகர தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.

தேமுதிக

வேட்பாளர் பெயர் :- முத்துக்குமார்

படிப்பு :- பி.இ., எம்பிஏ பட்டப் படிப்பு

தொழில் :- சொந்த தொழில்

அரசியல் பின்னணி :- கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர்தேமுதிக மாவட்ட நிர்வாகி .


அதிமுக போடும் முத்தரப்பு கணக்கு 

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் வேகத்தோடு அரசியல் முத்தரப்பு கணக்கு போட்டுள்ளது .

1.எதிர்கட்சிகளை ஓன்று சேர விடாமல் ஓட்டுக்களை பிரித்து சுலபமாக வெல்வது.இதனாலே சவால்கள் விட்டு வலுகட்டாயமாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது தேமுதிக , இவர் விட்ட சவால் விஜயகாந்துக்கு மட்டுமில்லை , மறைமுகமாக கருணாநிதிக்கும் தான்.

2.தேர்தல் முடிவை பொறுத்து புதிய கூட்டணி முயற்சி , இருந்த தேமுதிக கழட்டி விட பட்டது அவரின் அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதால்.தமிழக அளவில் மூன்றாவது அணி அமைத்து போட்டி போட்டு வென்று விட்டு , மத்தியில் யார் அதிக இடங்களை வெல்கிரார்களோ அவர்கள் உடன் பின் ஒப்பந்த அடிப்படையில் கூட்டு , பாஜக ,காங்கிரஸ் யாராக இருந்தாலும் சரி 

3. தேமுதிகவை களத்தில் இறக்கி விட்டுள்ளத்தால் , ஏற்கனவே மதிமுக களத்தில் ஆளும் கட்சிக்கு இணையாக பணியில் இருப்பதாலும் , திமுக நான்காம் இடத்துக்கு தள்ளவேண்டும் என்ற நோக்கமும்.

திமுக போடும் முத்தரப்பு கணக்கு 

1.தேமுதிக தன் பக்கம் கூட்டணிக்கு இழுத்து ,2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புது கூட்டணி என்ற நிலை உருவாக்குவது.

2.ஒருவேளை இந்த இடைதேர்தலில் தனது வேட்பாளரை திரும்ப பெற்று கொண்டு , தேமுதிகவை ஆதரித்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை .

3. இந்த இடைதேர்தலில் தோற்று போவோம் என தெரிந்தே திமுக களம் காணுகிறது , எதனால் தன்னிடம் இருந்து போன மதிமுக செல்வாக்கு பெற்றுற கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது , இதனாலும் தேமுதிகவை ஆதரிக்கும் நோக்கம் வலுபெற்று உள்ளது

மற்ற கட்சிகள் , இந்த இரண்டு பெரும் கட்சிகளை மீறி எப்படி இந்த தேர்தல் களத்தை பயன் படுத்த போகிறார்கள் , இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்து பெரிய அரசியல் மாற்றத்திற்கு தமிழகம் காத்து இருக்கிறது , அது சங்கரன்கோவில் தொகுதி மக்களின் கையில் இருக்கிறது. இலவசம் , பணம் இரண்டையும் மக்கள் வெறுத்து வாக்கு செலுத்தினால் , நிச்சயம் சங்கரன்கோவில் ஒரு மாற்றத்தில் ஆரம்பமாக கூட அமைய வாய்ப்புகள் அதிகமே ...

கூர் மழுங்கி போன அரிவாள்கள் , சத்தமில்லாத முரசு ,ஆனால் பம்பரத்தின் வேகம் அதிகமாகவே இருக்கிறது.

                                                                                                 தொடரும்................................

Saturday, February 18, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-6


பாகம்-5 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேர்தல் ஆணையம்
==================

ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை ஆரமித்தலும் சங்கரன்கோவில் இடைதேர்தல் தேதி யை இப்போது தான் வெளியீட்டு உள்ளது தேர்தல் ஆணையம் .

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் :- 16.02.2012

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் :- 22.02.2012

வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் :-29.02.2012

வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள் :- 01.03.2012

வேட்பு மனு திரும்ப பெரும் இறுதி நாள் :-03.03.2012

வாக்குபதிவு நடைபெறும் நாள் :-18.03.2012      (காலை:- 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை )

வாக்குகள் எண்ணப்படும் நாள் :- 21.03.2012

வாக்கு பதிவு மின்னணு வாக்கு பதிவு இந்திரங்கள் மூலம் நடைபெற இருக்கிறது.

அதிமுக
=======

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே வேட்பாளர் அறிவித்து விட்டு , 26 அமைச்சர்களை தேர்தல் பணிக்கு அனுப்பி விட்டது ,ஏன் இந்த பயம் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு , ஒரு வேளை கடந்த எட்டுமாத அரசு மேல் மக்களின் கோபம் இடைதேர்தலில் காலைவாரிவிட்டால் என்ன செய்ய , என்ற பயத்தில், லாரி , லாரியாக இலவசங்களை கொண்டு பொய் அனைத்து தரப்பிலும் முழு மூச்சில் தர , தமிழக அரசின் ஓட்டு மொத்த கவனமும் , ஏன் மொத்த அரசாங்கமே அங்கே முகாம் இட்டு தேர்தல் பணி செய்து வருகிறது .முதலில் உளவு துறை அறிக்கை ஆளும் கட்சிக்கு சாதகமாக வரவில்லை என்பது உண்மை.இவர்கள் பெரிதும் நம்பி இருப்பது நகர்புற வாக்குகளையும் , பெண்களின் வாக்குகளையும் தான் , அதான் நகர்மன்ற தலைவியாக இருக்கும் பெண் வேட்பாளர்.

மதிமுக
=======
இவர்கள் அதிமுக வை விட முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டார்கள் , வேட்பாளர் மட்டும் அறிவிக்க வில்லை , தனது ஊத்திகளை எல்லாம் பயன் படுத்த ஆரமித்து விட்டார் , மதிமுக பொது செயலாளர் வைகோ , இவர்களின் தேர்தல் வேலைகளை பார்த்த அதிமுக திடுக்கிட்டு பொய் அவசர அவசரமாக வேட்பாளர் அறிவிப்பு , தேர்தல் பணி தொடக்கம் என ஆரமித்தார்கள் , உண்மையில் இவர்களை கண்டு அதிமுக அஞ்சியது உண்மை , வைகோ , ஒரு வழக்கறினார் குழுவை தேர்தல் களத்தில் இறக்கி விட்டு உள்ளார் , வழக்குகள் வந்தால் உடனுக்கு உடன் சந்திக்க அவர்களும் தயாராக இருக்கிறார்கள் . இன்னும் சில யுத்திகளை கையாள தயாராக இருக்கிறது மதிமுக முகாம் , இளைஞர் பட்டாளம் வேறு ஒருபக்கம் தயாராகி கொண்டு இருக்கிறது ,இவர்கள் வைக்கும் சுவர் விளம்பரங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது , இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை , அதிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து உள்ளார்கள் .பெரும்பாலும் இவர்கள் கிராம புற வாக்குகளை அள்ளுவார்கள் என தெரிகிறது . நகர் புறத்தில் கொஞ்சம் பம்பரம் மெதுவாக சுற்றுகிறது , ஒருவேளை சட்டையை சுழற்றினால் , வேகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது .

திமுக
=====

இவர்கள் ஏனோதானோ என எதோ தேர்தல் வேளை செய்ய வேண்டும் என்ற ரீதியில் களத்தில் அங்கு அங்கே தென்படுகிறார்கள் , காங்கிரஸ் கட்சிக்கு இணையாக கோஷ்டிகள் வேற , மூன்றாவது இடம் பிடித்தால் நல்ல வேளை என நினைத்து களத்தில் இருக்கிறார்கள் , ஆளும் கட்சி மேல் வெறுப்பு என்றால் அது நமக்கு தானே ஓட்ட விழும் என்ற வீண் கனவில் இருக்கிறார்கள் , மக்களின் கோபம் எட்டு மாதத்திற்கு முன் இருந்த இவர்களின் ஆட்சியும் மீது சேர்த்து தான் என்பது புரியாமல் பேசி கொண்டு இருக்கிறார்கள்.வேட்பாளர் அறிவித்து விட்டார்கள் , வேளைக்கு ஆள்கள் அமர்த்துவது போல தேர்தல் பணிகளை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் .

தேமுதிக
========

சும்மா இருந்தவர்களை சட்டமன்றத்தில் சீண்டி விட்டார்கள் ,முதலில் இவர்கள் போட்டி போட வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள் , இவர்கள் போட்டி போடாமல் இருந்து இருந்தால் இவர்கள் பிரிக்கும் வாக்குகள் மதிமுகவிற்கு சென்று விட்டால் அவர்கள் வெல்வது உறுதி செய்ய பட்டுவிடும் , எனவே இவர்களை சீண்டி விட்டு வலுகட்டாயமாக தேர்தல் களத்திற்கு இழுத்து கொண்டு வந்துள்ளது ஆளும்கட்சி .கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இவர்கள் இப்போது இருக்கிறார்கள்.

இடதுசாரிகள்
============

இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் எனோ தெரியவில்லை இந்த இடைதேர்தல் எல்லாம் நேர விரையம் என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டார் .(தோழர்கள் இப்படியே எல்லா தேர்தலிலும் சொல்லிருவார்களோ ).ஜனநாயக அமைப்பு ஓன்று தேர்தல் நேர விரையம் என சொல்லுவது என்ன நியாயம் தெரியவில்லை.ஆனால் அதான் மற்றொரு மூத்த தலைவர் மதிமுகவிற்கு ஆதரவு தரும் எண்ணத்தில் இருக்கிறார் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி போடலாம இல்லை , விஜயகாந்தை ஆதரிக்கலாமா என்ற ஒரு குழப்ப நிலையில் இருக்கிறார்கள் , ஏனோ சிகப்பு துண்டு காரர்களுக்கு கருப்பு துண்டு காரரை ஆதரிக்க முன் வருவதில்லை ,(ஒருவேளை அவரின் முல்லை பெரியாறு போராட்டம் இவர்களுக்கு பிடிக்கவில்லையோ )

இதர கட்சிகள்
=============

காங்கிரஸ் , என்னதா சொல்ல எதோ இருக்கிறார்கள் , கூட்டனி தருமம் காக்க திமுகவை ஆதரிக்க போகிறார்களோ என்னவோ , அவர்கள் தான் உள்ளாட்சி தேர்தலில் கூட்டனி தர்மத்தை மீறி தனித்து போட்டி போட்டார்களே , என்ன செய்ய?, கிணத்தில் போட்ட கல்லாக காங்கிரஸ் கட்சி.

கிருஷ்ணசாமி யின் புதிய தமிழகம் போட்டி இடுவார்கள் என தெரிகிறது , இவருக்கு போட்டியாக ஜான் பாண்டியனின் கட்சியும் களத்திற்கு வருவார்கள் போல ,(இல்லை ஒருவேளை வைகோவை ஆதரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது).

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் ,கிருஷ்ணசாமி ,ஜான் பாண்டியனை மீறிய செல்வாக்கு இவர்களுக்கு இல்லை அதனால் தனித்து களம் காண மாட்டார்கள் ,யாருக்காவது ஆதரவு தருவார்கள் , இந்த தொகுதி தனி தொகுதியாக இருந்தாலும் இவர்கள் ஒதுங்கி இருப்பார்கள் என தெரிகிறது.

பாமக , என்ன காமெடி பண்ணுகிறார் களா என தொகுதி மக்கள் மக்களாட்சியை பார்த்து கேட்பது தெரிகிறது , எழுதும் பொது அனைவரையும் சேர்த்து தானே எழுத வேண்டும் , பிறகு மருத்துவர் கோபத்து கொள்ள மாட்டாரா(அவர் வேற 2016 ஆட்சி அமைக்க போகிறார் ) , இந்த தொகுதிக்கும் இவர்களுக்கு சமந்தமே இல்லை, அங்கே பொய் பாமக என கேட்டால் தெரியாது என்ற பதில் தான் முதலில் வரும்.

சில தமிழ் ஆர்வ இயக்கங்கள் இந்த முறை மதிமுகவை ஆதரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது , ஆனால் கடைசி நேரத்தில் இவர்களின் எண்ணத்தையும் கலைக்கும் முயற்சியும் நடக்கிறது.

இந்த மாதிரி எதிர்கட்சிகள் அனைத்தும் தனி தனியாக பிரிக்கும் வாக்குகள் அனைத்தும் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என ஆளும் கட்சி நினைக்கிறது , முடிவுகள் எப்படி இருக்குமோ.

                                                                                                  தொடரும்.......................................

Thursday, January 26, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-5

பாகம்-4 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


இன்றைய கள நிலவரம் 

கொஞ்சம் சுறுசுறுப்பு பெற்றுள்ளது சங்கரன்கோவில் இடைதேர்தல் களம் .

அதிமுக பக்கம் 
===============

ஆளும்கட்சியாக இருப்பதாலும் , தொகுதி ஏற்கனவே வென்றதாலும் , இந்த களத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு ,அமைச்சர்ர் பெருமக்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது கட்சி தலைமை.

சாதகங்கள் 

ஆளும் கட்சி என்ற பிரமாண்டத்தோடு களத்தில் இறங்கி விட்டார்கள் , கடந்த நான்கு முறை தொகுதியை கைபற்றியவர்கள் என ஒரு மாய தோற்றத்தோடும் களத்தில் உள்ளது அதிமுக 

சட்டமன்ற உறுப்பினரின் மறைந்த சில நாள்களிலே இலவசங்களை வரி இறைக்க ஆரமித்து விட்டது 

அமைச்சர்கள் தேர்தல் பனி செய்வதால் அனைத்து அரசு ஊழியர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். 

இவர்கள் பெரிதும் நம்பி களம் காண்பது இலவசங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை 

பாதகங்கள் 

ஆளும்கட்சி என முழு பலம் இருந்தாலும் , அரசு எடுத்த முடிவுகள் மக்களிடம் கேட்ட பெயர் வாங்கி உள்ளது , இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே , சமசீர்கல்வி , அரசு கட்டிடங்களை மாற்றுவது , விலை வாசி உயர்வு , மூன்று பேர் தூக்கு விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணான முடிவுகள் என தங்களுக்கு தாங்களே வெறுப்பை பெற்று கொண்டார்கள்.

தலைமை யின் பண்புகள் தேர்தலில் எதிர் ஒலிக்குமானால் இவர்களுக்கு பெரும் சிக்கலே , நீதிமன்ற வழக்குகள் மக்கள் மனத்தில் வைத்தால் ஓட்டுகள் குறையும்.

தன் யுக அடிப்படையில் வேலை செய்யும் அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சிக்கு நிகராக கோஷ்டிகள் என ஒரு இறுக்கமான , மெத்தன போக்கோடு களத்தில் இருக்கிறது அதிமுக .

மேலும் விசை தறி தொழிலார்களின் போராட்டம் தலைமேல் கத்தியாக இருக்கிறது 

வேட்பாளர் 

தேர்தல் அறிவிக்கும் முன்னே வேட்பாளரை அறிவித்து விட்டது , இது எதிர்கட்சிகளுக்கு ஒரு நிர்பந்ததை ஏற்படுத்தவதுதான் . இவர்களின் வேட்பாளர்கள் மாற்றும் பாணி  இங்கேயும் நடக்குமா என தெரியவில்லை .

இப்போது அறிவித்து உள்ள வேட்பாளர் படித்தவர் , ஒரு பெண்மணி என்ற பலம் இருந்தாலும் தனி செல்வாக்கு என்ற ஓன்று இல்லை , மேலும் இவர் சங்கரன்கோவில் நகரமன்ற தலைவியாக இருக்கிறார் , பதவிக்கு வந்து ஆறுமாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரையே வேட்பாளராக நிறுத்துவது என்பது நல்ல அணுகுமுறை அல்ல 

இந்த தேர்தல் முடிந்த யுடன் நகரமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் சங்கரன்கோவில் , அரசு பணமும் தேர்தல் ஆணையத்தின் வேலை நேரமும் தேவை இல்லாமல் வினவதை மக்கள் சிந்தித்தால் , பெரும் பாதகமாக முடிவுகள் இருக்கும் ,

மதிமுக பக்கம் 
===============

நாம் ஏற்கனவே சொன்னது போல போட்டியில் இருப்பது மதிமுக மட்டுமே , ஏனோ தெரியவில்லை மற்ற கட்சிகள் இன்னும் ஆரம்ப பணிகளை கூட தூடங்கவில்லை , இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் கள பணிகளை விறுவிறுப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள் , வெற்றி பெற்றால் இவர்களின்  அரசியல் வழிவிலே ஒரு பெரிய மாற்றம்தான் , எனவே "மாற்றம் வேண்டும் " என்ற முழக்கத்தோடு களத்தில் மதிமுக 

சாதகங்கள் 

இவர்களின் பிரசார உத்திகள் , தலைமை , பேச்சாளர்கள் , போராட்ட வாழ்வு என பின்புலமாக கொண்டு களத்தில் பம்பரமாக சுற்றி வருகிறார்கள் .

எந்த முடிவுகள் வந்தாலும் தங்கி கொள்ளும் தொண்டர்களை கொண்டுள்ளதால் ,மன உறுதியோடு களத்தில் பனி செய்கிறார்கள் .

இன்றைய போராட்ட கால தமிழகத்தில் , இவர்கள் முன்னோடியாக இருப்பது கூடுதல் பலம் , ஸ்டேரிலேட் ஆலை விவகாரம் , கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு , முத்தாய்பாக முல்லை பெரியாறு போராட்டம் என நல்ல பெயரோடு வலம் வருகிறார்கள்

தலைமை யின் பண்புகள் தேர்தலில் பிரதி பலித்தால் , இவர்களுக்கு சாதகம உள்ளது.

பாதகங்கள் 

ஆளும் கட்சியின் பண பலம் , அதிகார பலம் முன் இவர்களால் பணத்தை செலவு செய்ய முடியுமா என தெரியவில்லை .

மக்கள் இலவசத்திற்கு மயங்கினால் , இவர்கள் படு திண்டாட்டமே ,

நகராட்சி பகுதிகளில் இவர்களுக்கு செல்வாக்கு குறைவு என்பது உண்மை 

மற்ற கட்சிகள் ஓட்டை பிரித்தல் மிக பெரிய பாதகமே .

வேட்பாளர் 

இன்னும் வேட்பாளர் அறிவிக்க வில்லை , இவர்களின் வேட்பாளர் தேர்வு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இருக்குமா ?

வேட்பாளர் யாராக இருந்தாலும் உண்மையான வேட்பாளர் வைகோதான் என தொண்டர்கள் உற்சாகத்தோடு களத்தில் சுற்றி வருகிறார்கள் .

ஒருவேளை பொது வேட்பாளர் என்ற ஓன்று உருவாகுமா , (இது தமிழகத்தில் சாத்தியமில்லை ) 

                                        
                                                                                                                         தொடரும்...............

Tuesday, January 24, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-4

பாகம்-3 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


தொகுதி விவரம் 

எல்லைகள் 

கிழக்கே - கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியும் 
 
மேற்கே - வசுதேவநால்லூர் சட்டமன்ற தொகுதியும் 

வடக்கே - சாத்தூர் சட்டமன்ற தொகுதியும் 

தெற்கே - தென்காசி சட்டமன்ற தொகுதியும் 

எல்லைகளாக இருக்கிறது 

இதன் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் , தென்காசி பாராளுமன்ற தொகுதியின் கீழ் வரும் 

இந்த தொகுதியுள்ள மொத்த மூன்று ஒன்றியங்கள் 

1. சங்கரன்கோவில் ஒன்றியத்தின் ஒருபகுதி 

2. மேலநீலிதநல்லூர் ஒன்றியம் 

3.குருவிகுளம் ஒன்றியம் 

இந்த தொகுதியுள்ள ஒரு நகராட்சி 

சங்கரன்கோவில் 

இந்த தொகுதியுள்ள ஒரு பேருராட்சி

திருவேங்கடம் 

இந்த தொகுதியுள்ள மொத்த ஊராட்சிகள் -73 

1.சங்கரன்கோவில் ஒன்றியத்தின் ஒருபகுதி -4  ஊராட்சிகள்

2.மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் -26  ஊராட்சிகள்

3.குருவிகுளம் ஒன்றியத்தின் -43  ஊராட்சிகள்

இந்த தொகுதியுள்ள மொத்த கிராம பகுதிகள் 

1.சங்கரன்கோவில் ஒன்றியத்தின் ஒருபகுதி -21

2.மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் -82

3.குருவிகுளம் ஒன்றியத்தின் -133

4 .திருவேங்கடம் பேருராட்சி- 4 


மூன்று ஒன்றியத்தில் 73 ஊராட்சிகளிலும் , ஒரு பேருராட்சியிலும் இடம் பெரும் மொத்த கிராமங்கள் -240 

வாக்களர்களின் எண்ணிக்கை 

01 /01 /2012  அன்று திருத்த பட்ட வாக்காளர் பட்டியல் படி 

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2 ,05 ,840 

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 1 ,02 ,795 

பெண் வாக்களர்களின் எண்ணிக்கை - 1 ,03 ,045 

இங்கு கிராம புற வாக்குகள் தான் வெற்றி தேல்வியை தீர்மானிக்கும் , மேலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது , தேர்தல் தேதி அறிவிக்கும் முன் ஆளுகட்சியான அதிமுக ஒரு பெண் வேட்பாளரை அறிவித்து விட்டது.

அதிமுகவிற்கு போட்டியாக மதிமுக மட்டும் களத்தில் பம்பரமாக சுற்றி வருகிறது , ஏனோ தெரியவில்லை மற்ற யாரும் இன்னும் முனைப்பு காட்டவில்லை 
                                                                                                                                                                                                                                     
                                                                            தொடரும் .........................



Sunday, January 15, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-3

பாகம்-2 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.



இலவசம் வேண்டாம்,

கல்வி , மருத்துவம் தவிர வேறு எது கொடுத்தாலும் அது மக்களை ஏமாற்றும் செயல்தான் ,

யார் பணம் ?
இலவசங்கள் எல்லாம் என்ன ஆளும்கட்சிகளின் சொந்த பணமா என்ன , மக்களின் வரிப்பணம் , இருக்கும் வீட்டுக்கு வரி , விளையவே இல்லையென்றால் அந்த நிலத்திற்கு வரி , ஏன் பொட்டல் காடாக இருந்தாலும் வரி , குப்பை போடும் இடமாக இருந்தாலும் , நடக்கும் ரோட்டுக்கு வரி , குடிக்கும் தண்ணீருக்கு வரி இப்படி வரிக்காக நாம் தரும் பணம்தானே , நமக்கே இலவசமாக வருகிறாது,

எண்ணி பார்ப்போம்
ஒவ்வொரு இலவச பொருளுக்கும் விலையை போட்டுட்டு பாருங்கள் , மொத்தமாக எவ்வளவு வருகிறது, உதாரணமாக ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் மதிப்பில் இலவச பொருள் கிடக்கிறது என வைத்து கொள்வோம் ,

வருடத்திற்கு 365 நாள் என்றால் ,5 வருடத்திற்கு 1825 நாள் வருகிறது ,

5000 ரூபாய் நாள் ஒன்றுக்கு பிரித்தால் 2 ரூபாய் 75 பைசா வரும் ,
ஏன் ஒரு குடும்பத்தில் இருவரும் வருமானத்தை பெருக்கும் விதமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செகரித்தாலே ஐந்து வருடங்களில் நமக்கு தேவையான பொருள்களை நாமே வாங்கி கொள்ளலாமே ,

நாம் ஏன் கை எந்த வேண்டும் பிறரிடம் , இனியாவது இலவசத்தை கணக்கு போட்டு பார்ப்போம்.

வேலை வாய்ப்பு

அனைவரும் அரசாங்க வேலை தரமுடியாது தான் அதற்காக இலவசம் தந்தாள் நாம் வாழ்வு முன்னேறிவிடுமா என்ன ?

சிறு குறு , தொழில்கள் நாளுக்கு நாள் நசிங்கி வருகிறது , திருப்பூர் போனால் வேலை கிடைக்கும் என இருந்த நிலையில் இன்று திருப்பூர் மக்கள் எங்காவது வேலைக்கு போவோமா என நிலை வந்துள்ளது.

தொழில்களை முன்னேற்றினால் நமக்கு தேவையான பொருளை நாமே வாங்கி கொள்ளமட்டோமா எதற்கு இலவசம்.
  
விவசாய நலிவு

நாளுக்கு நாள் ஒரு பக்கம் ஆள் பற்றாகுறையால் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது , விளைய வைக்கும் பொருளுக்கு சரியான விலை இல்லை , மருந்து இல்லை , உரமில்லை , தண்ணீரும் இல்லை , மின்சாரம் இல்லை , என மொத்த விவசாயமே முடங்கி போனால் நாளைய நமது உணவு தேவைக்கு எங்கே போவாம்

இன்று இலவசமாக அரசி கிடைத்தால் சாப்பிட்டு பொழுது ஓடும் , வரும் காலத்திற்கு விளைச்சல் இருதால் தான் உணவு கிடைக்கும் , அதற்கு , இருக்கிற நிலங்களை பத்திர படித்தினால் தானே விவசாயம் செய்ய முடியும் ,

நிலங்களை தரிசாக போட்டாலோ , இல்லை பிற பயன்பாட்டுக்கு விற்று விட்டாலோ நாளை எங்கே போவது ,

எதற்கு இலவசம் வேண்டும்

சில இலவசங்கள் வேண்டும்தான் , படிக்கும் வயதில் வறுமை வந்து படிப்பு நின்று விட கூடாது அதற்காக கல்வி சம்பந்தமாக எந்த இலவசம் தந்தாலும் ஏற்கலாம் , ஏன் எல்லாம் இலவசம் என சொல்லுவார்கள் எந்த கல்லூரியில் படித்தாலும் மொத்தமும் இலவசம் என சொல்லாமே.

கருவிலே உருவாகி கட்டையில் போகும் வரை மனித உயிரை காக்க வேண்டுயது அரசு கடமை , அதனால் எந்த மருத்தவ உதவியும் இலவசமாக தருவது ஏற்கவேண்டிய விசயமே , எவ்வளவு இலவசங்களை தரும் அரசு அனைத்து ஊர்களிலும் மருத்தவ வசதி செய்து கொடுத்து விட்டதா (எந்த நேரமும் ), இல்லையே இன்றும் விபத்தில் அடிபட்டு முதலுதவி கிடைக்காமல் போன உயிர்கள் எத்தனை ,

இன்று குழந்தைகள் சத்து குறைவாலும் , நோய்களாலும் பாதித்து ஐந்து வயதில் கண்ணுக்கு கண்ணாடி போடும் வகையில் இருக்கிறது ,

இன்னும் ஒரு இலவசம் இருக்கிறது யாருமில்லாமல் ஆதரவு அற்ற முதியவர்கள் , மனநோயாளிகள் , குழந்தைகளை காக்க அரசு சில சலுகைகளை இலவசமாக தரலாம்

இதை தவிர்த்து வேறு எது தந்தாலும் மக்களை ஏமாற்றும் அரசுதான் அது ,இலவச போதைக்கு அடிமையாகதீர்கள்