Wednesday, March 28, 2012

தமிழக அரசு நிதி நிலை அறிக்கை - 2012-13

தமிழக அரசின் நிதி நிலை பல்வேறு திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது , மேலும் முன்னவர்கள் என்ன செய்தார்களோ அதை அதான் இவர்களும் செய்து உள்ளார் கள் , இரு வேறு கட்சிகளாக ஆட்சி அதிகாரம் செய்தாலும் இலவச திட்டங்கள் என்பதை பொதுக் கொள்கையாக வைத்து செயல்படுவது நல்லவையாக இல்லை. முழுமையான நிதி நிலை அறிக்கையை விமர்சிக்க வேண்டும் என்றால் குறைந்தது இருபது பதிவுகளாக எழுத வேண்டும் , அதற்கு பதிலாக சுருக்கமாக நிதி நிலை அறிக்கையின் நிதி நிலவர திட்ட அட்டவணை யை மட்டும் எடுத்து ,பழையவைகளை ஒப்பிட்டு எழுதுவோம் மக்களாக தெளிவு பெறாதவரை ஏமாற்ற பட்டு கொண்டேதான் இருப்பார்கள் .வரவு -செலவு என்பதை மட்டும் பார்க்க போகிறோம்

மாநிலத்தின் மொத்த வருவாய் 


மாநிலத்தின் மொத்த வருவாய் இரு பிரிவுகளின் கீழ் நிதி சேர்க்கிறது .

1 ) மாநிலத்தின் சொந்த வருவாய்
 
       a ) . மாநில வரிகள் மூலம் வரும் வருவாய்
       b ) . வரிகள் தவிர்த்த மற்ற வருவாய்

2 ) மத்திய அரசிடமிருந்து பெறப்படுபவை
     
      a ) . மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு செல்லும் வரிகளில் இருந்து பங்கு .
      b ) . மத்திய அரசு தரும் மானியங்கள்

மேலும் ஒரு பிரிவு திட்டங்களுக்க கடன்கள் மூலம் பெறப்படும் நிதி .

மொத்த வருவாய் 

2012-13 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 1,00,589. 92 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 17.58 % அதிகம்

2011-12 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 82,552.85  கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 21.89 % அதிகம்

2010-11 ஆம் நிதி யாண்டு வருவாய் -70,187.62  கோடி
இது 2009-10 ஆம் நிதி யாண்டு விட 26.7 % அதிகம்

2009-10ஆம் நிதி யாண்டு வருவாய் -55,397.75  கோடி 

ஆண்டுக்கு ஆண்டு வருவாய் பெருக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு. 26.7%  யிலிருந்து 21.89 %  ஆக குறைவதற்கு திமுக அரசு போகும் ஆரமித்து விட்டு போக , சிறந்த நிர்வாகம் தருவோம் என சொல்லி வந்த அதிமுக அரசு முடிவில் வருவாயை இழந்து விட்டது , அதை விட அடுத்த ஆண்டுக்கு 21.89 %  யில் 17.58 % ஆக மதிப்பிடே செய்துள்ளார்கள் என்றால் வருவாய் இழப்பு சரி செய்ய வரிகள் ,விலை உயர்வை செய்தார்கள் , இது தான் சிறந்த நிர்வாகம் போல ...

மொத்த வருவாய் வளர்ச்சி குறைய காரணங்கள் என்ன , மாநிலத்தின் சொந்த வருவாய் பெரும் பகுதி வரிகளை நம்பியுள்ளது , இது முறையாக குறைந்து கொண்டே வந்துள்ளது

மாநிலத்தின் சொந்த வருவாய் பெருக்க என்ன செய்யா வேண்டும் வெறுமன வரிகளை உயர்த்தினால் போதுமா , வரிகள் உயர்வு மக்களை தான் பாதிக்கும் மாறாக உற்பத்தி திறனை அதிக படுத்த வேண்டும் , அதான் மூலம் வருவாய் உயரும் , நமது உற்பத்தியே விவசாயம் சார்ந்த உற்பத்தி அதை அதிகரிக்க வேண்டும் .

மேலும் மத்திய அரசியில் இருந்து கிடைக்கும் வருவாய் , வரி பங்கீடு , மானியம் என்பதே , மத்திய வரி அதிகமானால் நமது பங்கும் அதிகமும் இதற்கும் தீர்வு ஏனைய உற்பத்தியை பெருக்குவது தான் .

வருடத்திற்கு வருடம் அதிகமாக இருக்கு வேண்டிய மத்திய அரசின் மானிய தொகையின் அதிகபடுத்தால் 2010-11 யில் 24.04 % இருந்து 2011-12 யில் 7.65 % ஆக குறைந்து , இப்போது 2012-13 யில் 9.52 % ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

செலவுகள் 

செலவுகளை வட்டியில்ல செலவுகள் , கடன் திருப்பி தருதால் , கடன் களுக்கான வட்டி செலுத்து தால் என சொல்லபடுகிறது .

வட்டியில்ல செலவுகள் 

1. சம்பளங்கள் (கல்விக்கான மானியங்கள் உட்பட )

2.ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பலன்களும்

3.ஊதியம் அல்லாத செயல்பாடுகளும் பராமரிப்புகளும்

4.உதவித் தொகைகளும் நிதி மாற்றங்களும்

5.ஏனைய வருவாய்ச் செலவினங்கள்

6.மூலதன ஒதுக்கீடு

7.நிகரக் கடன் வழங்கல்

2012-13 ஆம் நிதியாண்டு திட்ட மதிப்பீடு - 1,09,476. 73 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 0.65 % குறைந்துள்ளது


2011-12 ஆம் நிதியாண்டு திட்ட மதிப்பீடு - 92,916.11  கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 11.03 % குறைந்துள்ளது


2010-11 ஆம் நிதி யாண்டு வருவாய் -78,425.80  கோடி

ஆண்டுக்கு ஆண்டு செலவுகளை சதவீத அடிப்படையில் தமிழக அரசு. குறைத்து கொண்டு வரவேண்டிய நிலை 11.03 %  குறைந்து இருந்தது அடுத்த ஆண்டும் இன்னும் குறைய வேண்டும் ஆனால் 0.65 %  குறைக்க  திட்டம் மதிப்பீடு செய்தது தான் சிறந்த நிர்வாகம் தருவோம் என சொல்லி வந்த அதிமுக அரசு .

எப்படி செலவுகளை குறைப்பது , ஆடம்பரம் இல்லை என சொன்னலும் முதல்வரின் விமான பயணம் என்பதை தவிர்க்க வேண்டும் .

வட்டி சொலுத்துதல்

2012-13 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 10,945.31 கோடி என கணக்கிட பட்டுள்ளது .இது 2011-12 ஆம் நிதி யாண்டு விட 18.54 % அதிகம்

2011-12 ஆம் நிதி யாண்டு திட்ட மதிப்பீடு - 9,233.40 கோடி என கணக்கிடபட்டது. இது 2010-11ஆம் நிதி யாண்டு விட 9.81 % அதிகம்

2010-11 ஆம் நிதி யாண்டு வட்டி செலுத்தியது -8,408.45  கோடி
இது 2009-10 ஆம் நிதி யாண்டு விட 26.48 % அதிகம்

2009-10ஆம் நிதி யாண்டு   வட்டி செலுத்தியது -6,648.06 கோடி

வட்டியும் கடனும் வருட வருடம் அதிகமாக செலுத்த வேண்டிய நிலையில் குறைத்து கொண்டே வந்ததுள்ளது .

தொலை நோக்கு திட்டம் 2023 

இந்த திட்டத்தின் அடிப்படையில் தனி நபர் வருமானம் பத்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிக்க போவத சொல்லிருக்கிறார் , அதாவது 600 % பத்து ஆண்டுகளுக்கு என்றால் ஒரு ஆண்டுக்கு 60 % உயர்த்த படவேண்டும் , இந்த ஆண்டு முடிவில் பார்ப்போம் 60 % உயர்கிறத என . தனி நபர் வளர்ச்சி 60 % சத்தியமா என சிந்தித்து திட்டங்கள் போட்டார்களா , இல்லை வெறுமன அறிவிப்பு செய்தால் போதும் என நினைத்து விட்டார்கள் போல .

சங்கரன்கோவிலுக்கு அல்வா 


நிதி நிலை அறிக்கையில் ஆரம்பத்தில் சங்கரன்கோவில் வெற்றியே புகழ்ந்து உள்ளார்கள், அந்த மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமா , அந்த தொகுதியில் ஒரு அரசு கல்லூரி இல்லை என்பதை நிறைவேற்ற முனைய வில்லை , 68, 000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு அல்வா தான் , தொகுதி நெல்லை மாவட்டம் தானே .

கல்லூரி வந்தால் படித்து விவரம் வந்து விட்டால் மறுபடியும் ஓட்டு வித்தியாசம் அதிகமாக கிடைக்காது என்பது உணர்ந்தவர்கள் போல , மக்களுக்கு எப்போது இது புரிய போகுதோ ....

Tuesday, March 27, 2012

நாம் யார் -39

பாகம்-38 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

மதத் துறை

கடவுள் மத மறைப்பு

ஊர் பேர் குணங்குறி யின்றி எங்கும்நிறைந்திருக்கும் பரம்பொருளை, உருவமின்றிஉள்ளத்தில் கண்டு தொழும் கடவுள் நெறியை, உலகில்முதன்முதல் தெளிவாகக் கண்டவர் தமிழரேயாயினும்,அதனாற் பிராமணர்க்குப் பிழைப் பில்லையென்றும், தமிழர் அறிவொளி பெறக்கூடா தென்றும்,அந் நெறி அடியோடு மறைக்கப்பட்டுள்ளது.

இறைவனொடு தொடர்பின்மை

சிவனியமும் மாயோனி யமும் தூய தமிழ் மதங்களாயிருந்தும், அன்பான தந்தையுடன் அவனுடைய அருமைமக்கள் நேரடியாய்ப் பேச முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, மக்கள் கருத்தை அல்லது விருப்பத்தைத் தானே அவர் கட்குத் தெரியாத அயன்மொழியில் தந்தைக்குத் தெரிவித்தல் போல், கோவிலிலுள்ள பரம திருத்தந்தையும்அருட்கடலுமான இறைவன் உருவிற்கு, தமிழர் தாமே தம்நெஞ்சார்ந்த அன்பு கனிந்த வணக்கத்தைத் தம்தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து,பேரின்பப் பெருமகிழ்ச்சி பெற முடியாவாறு,மேனாட்டினின்று வந்த பிராமணன் இடைநின்று, படைப்புத் தேங்காயை வாங்கி யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குந் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழி யாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட்டதைச்சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்திலும் (Bank) வரியகத்திலும் பணங் கட்டியவர் திரும்புவது போல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை கேடானதீவினை!

உயிரிழப்பு

சிறந்த சிவனடியாராக ஒழுகிய குற்றத்தினால், நந்தனார் என்னுந் தூயர்,பட்டப் பகலிற் பலர் காணச் சுட்டெரிக்கப்பட்டார். இத்தகைய கொடிய நிலைமையும் 1940ஆம் ஆண்டுவரை தென்னாட்டி லிருந்துவந்தது.

பொருளாட்சித் துறை

பொது விழப்பு 

பிராமணர், மூவேந்தரிடத்தும் கோவலன் போன்ற செல்வரிடத்தும் பல்வகை தானமாகப் பெற்ற பொன்னிற்கும் ஆவிற்கும் நிலத்திற்கும் பிறபொருள்கட்கும் கங்குகரை யில்லை.

சில வகுப்பாரிழப்பு

மாட்டிறைச்சி யுண்ட தனாற் புலையர் என்று இழித்திடப்பட்டு, 11ஆம் நூற் றாண்டிற்குப் பின் தம் தொழிலையும் வருவாயையும்இழந்தனர்.

ஐரோப்பியரும் அவர் வழியினரும்அராபியரும் யூதரும் இன்றும் மாட்டிறைச்சி யுண்பவரே. ஆரியப் பூசாரியரும் வேதக் காலத்தில்அதை விரும்பி யுண்டவரே.

தவத்திற் சிறந்த பரத்து வாசர் தம் புதல்வனுடன் காட்டில் வாழ்கையில், விருது என்னும் தச்சனிடம் பல ஆக்களை வாங்கிக் கொன்றுதின்றார் .

செம்மறியாட்டிறைச்சியால் நான்குமாதம் வரையும், வெள்ளாட் டிறைச்சி யால் ஆறு மாதம் வரையும், காட்டெருமைக் கடா விறைச்சியால் பத்துமாதம் வரையும், தென்புலத்தார் (பிதுர்க்கள்) பொந்திகை (திருப்தி)  யடைகின்றனர் என்று மனுதரும சாத்திரத்திற் கூறப்பட்டுள்ளது.

பாணர் இசைத்தொழிலை இழந்ததனால்,பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவு முறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலிய பண் நுட்பங் களையும் விளக்குவார் இன்று எவரும்இல்லை.

சென்னை இராயபுரம் பாதாளவிக்கினேசுவரர் கோவில் தெருவிலுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர்,புதுக்கோட்டைத் தட்சிணா மூர்த்தியார் போற்கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார்என்பதுபற்றி, அவரை அரங்கில் கழைப்பார் ஒருவருமில்லை.

தனித்தமிழ்ப் புலவர் இழப்பு

மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர்,எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங்கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும்பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை.

பாணர் இசைத்தொழிலை இழந்ததனால்,பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவு முறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலிய பண்நுட்பங் களையும் விளக்குவார் இன்று எவரும்இல்லை.

சென்னை இராயபுரம் பாதாளவிக்கினேசுவரர் கோவில் தெருவிலுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர்,புதுக்கோட்டைத் தட்சிணா மூர்த்தியார் போற்கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார்என்பதுபற்றி, அவரை அரங்கிற் கழைப்பார்ஒருவருமில்லை.

தனித்தமிழ்ப் புலவர் இழப்பு:மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர்,எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங்கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும்பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை.



ஊர்ப்பெயர் மாற்றம்

தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பலஊர்ப் பெயர்கள் வட சொல்லாக மாற்றப்பட்டுள்ளன.

எ-டு


தென்சொல் 
வடசொல்
குடமூக்கு - குடந்தை 
கும்பகோணம்
குரங்காடுதுறை 
கபித்தலம்
சிலம்பாறு 
நூபுரகங்கை
சிற்றம்பலம் 
சிதம்பரம்
பழமலை, முதுகுன்றம்
புள்ளிருக்கு வேளூர்
விருத்தாசலம்
வினைதீர்த்தான் கோவில் 
வைத்தீசுவரன் கோயில்
பொருநை 
தாம்பிரபரணி
மயிலாடுதுறை 
மாயூரம்
மரைக்காடு - மறைக்காடு 
வேதாரணியம்

வடமொழியை யெதிர்த்து வெல்லும் வலிமை தமிழுக்கே யிருப்பதால், ஆரியக்
கட்டுப்பாடு தமிழ்நாட்டிலேயே மிகக் கடுமையாகப்புகுத்தப்பட்டுள்ளது.


                                                                                                            தொடரும்........................


Monday, March 26, 2012

நாம் யார் -38

பாகம்-37 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

பண்பாட்டுத் துறை

மறமிழப்பு

ஆயர் குலம், இன்று பெண்டிர் மட்டுமன்றி ஆட வரும் ஆட்டுக்குட்டிகள் என்னுமாறு, அடங்கியொடுங்கி யமைந்தது. அன்று கூற்றுவனும் நடுங்குமாறு கோவர் (ஆயர்) நடத்தி வந்த கொல்லேறு கோடல்விழா இன்று மறவராற் சல்லிக்கட்டு என்னும் பெயரில் காட்சியளவாக நடைபெற்று வருகின்றது. பொதுவர் கல்லூரி அல்லது கோவர் கல்லூரி என்று அழகிய பெயரிடவும் துணிவின்றி, யாதவர் கல்லூரி என்று ஒருவடநாட்டரசன் பெயர் பற்றிய வடசொல்லை ஆண்டுள்ளனர். 

பகுத்தறிவிழப்பு

தமிழருள் தலைமையான குலத்தானாகக் கருதப்படும் மரக்கறி வெள்ளாளன், பொற்கலத்தில் நன்னீர் கொடுப்பினும் குடிக்க மறுக்கும் பிராமணன், வெள்ளாளனின் மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படும் இடைச்சி, பழமட்கலத்தில் தண்ணீர் கலந்து விற்கும் தயிரை, வானமுதம் போல் வாங்கிக்குடிப்பது கண்டும், தான் அவனின் தாழ்ந்தவனென்று மானமின்றிச் சொல் கின்றான்.

பிராமணரில்லா மற்ற நாடுகளிலெல்லாம் என்றும் மாறக்கூடிய தொழில் பற்றியே மக்கள் வகுப்புகள் ஏற்பட்டிருத்தல் கண்டும் , பிரா மணருள்ள இந்நாட்டில் மட்டும் குலங்கள் இறைவன் படைப் பென்று கருதுவது, பகுத்தறிவின்மையைத் தெளிவாகக்காட்டும்.

தன்மான மின்மை

முதற்குலோத்துங்கன் காலத்தில், பையற் பருவத்து ஆளவந்தார் வித்துவ சனகோலாகலன் என்னும் ஆக்கி யாழ்வானோடு தருக்கித்து, அரசி வேத வுரைப் படிகற்பிழந்தவ ளென்று, வேத்தவையில் அரசன் முன் சொன்னதை அவையோர் ஒப்புக் கொண்டதும் அவ்வாறே நச்சினார்க்கினியரும் தொல் காப்பியவுரை வரைந்திருப்பதும், கோழிக்கோட்டு மன்னரான சாமொரின் குடியினர் தாம்மணந்த பெண்டிரை முதல்முந்நாள் பிராமணன்நுகரவிட்டதும், தமிழரின்அல்லது தமிழ் வழியினரின் தன் மானமின்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.

நெஞ்சுரமின்மை

திருவரங்கத்தில் அரங்கநாயகி மூக்குத்தியைத் திருடிய பிராமணப்பெண், அத் தெய்வம் ஏறியவளாக நடித்து,கழுநீர்ப் பானையினின்று அம் மூக்குத்தியை எடுத்துக் கொடுத்த போது, தஞ்சை விசயராகவலுநாயக்கர் தண்டியாது விட்டதும்;

இறுதியாக ஆண்ட திருவாங்கூர் மன்னர் இங்கிலாந்து சென்று மீண்டவுடன், அவரது பதுமநாபர் கோவிலுக்குத் தீவைத்த பிராமணப் பூசாரியைத் தீக்கரணியம் வினவியபோது, அது மன்னர் மேனாடு சென்றதனாற் பொங்கிய தெய்வச்சினம் என்று விடையிறுத்ததைக் கேட்டு, வாளாவிருந்ததாகச் சொல்லப்படுவதும்;

தென்மொழி' ஆசிரியர் பாவலர் பெருஞ்சித்திரனார், திருநெல்வேலித்திரவியம் தாயுமானவர் தென் மதக் கல்லூரித் திருவள்ளுவர் விழாவிற் சொற்பொழி வாற்றியபோது தடுத்ததும்; தமிழ் திரவிடரின் நெஞ்சுரமின்மையைத் தெற்றெனத் தெரிவிக்கும்.

தமிழ்ப்பற்றின்மை

சில கட்சித்தலைவரும் பாவிசைப் பாளரும், கட்டாய இந்தியை ஏற்பதும் கோவில் தமிழ் வழிபாட்டைத் தடுப்பதும் தாய்மொழிப் பற்றின்மை யாலேயே.

மொழித்துறை

மொழியிழிபு 

சிவனியம் மாலியம் என்னும் இரு மதமும் தோன்றிய தமிழ் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டது.

சொல்லிழிபு

சோறு, தண்ணீர் முதலிய தூய தமிழ்ச்சொற்கள் பள்பறை வழக்கென்று தமிழராலும் பழிக்கப்பட்டன.

சொல் வழக்கு வீழ்வு 

கழுவாய் (பிராயச்சித்தம்), சூள்(ஆணை) முதலிய நூற்றுக்கணக்கான அருமை யான தமிழ்ச்சொற்கள்,வழக்கு வீழ்த்தப்பட்டன.

சொல்லிறப்பு

ஆயிரக்கணக்கான இரு வழக்குத் தமிழ்ச் சொற்களும் இறந்துபட்டன.இறந்த சொற்கு என்றும் எடுத்துக் காட்டில்லை.

சொற்பொருளிழப்பு

உயிர்மெய் என்பது, ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட உயிரொடு கூடிய மெய் (living thing).பிராணி என்னும் வடசொல் வழக்கினால்,உயிர்மெய் என்னும் சொல் தன் பொருளை இழந்தது,உயிரி என்றொரு சொல்லுந் தோன்ற வில்லை.

புஜம் என்னும் வடசொல் வழக்கினால்,தோள் என்னும் தமிழ்ச் சொல் தன் பொருளையிழந்து, தோள்பட்டையைக் குறித்து, சுவல் என்னும் தென் சொல்லை வழக்கு வீழ்த்தியும் உள்ளது.

தமிழையும் தமிழ்ச்சொற்களையும் போற்றிக் காக்க வேண்டு மென்னும் உணர்வு, இன்றும், முப்பல்கலைக்கழகத் துணைக் கண்காணகர்க்கும் கல்வியமைச்சர்க்கும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கும் இல்லை.

இலக்கியத் துறை

பல்லாயிரக் கணக்கான முதலிரு கழக நூல்களும் பெயருமின்றி அழிக்கப் பட்டுவிட்டன. தொல்காப்பியமும் திருக்குறளுந் தவிர,கிறித்துவிற்கு முற்பட்ட எல்லா நூல்களும் இல்லாவாயின. பொது விலக்கியத்தைச் சேர்ந்த, பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பாடற்றிரட்டுகளும் கீழ்க்கணக்குப் பனுவல்களும் அல்லாது, அறிவியலும் கலையும் பற்றிய கடைக்கழகக்காலச் சிறப்பிலக்கியம் ஒன்று கூட இன்றில்லை.பதிற்றுப்பத்து முதலும் ஈறும் இன்றி நிலை பெற்றுவிட்டது. அகத்தியம் முதுநாரை பரதம் ஆகிய முத்தமிழ்ப் பிண்ட நூல்களும், அவற்றிற்கு முந்திய முத்தமிழ் மாபிண்ட நூல்களும் இறந்துபட்டன.

பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத்தேவர், அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான அரிய பண்டைத் தமிழ் ஏட்டுச்சுவடிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கக்கட்டடத்தில் ஐந்திலே ஒன்று வைக்கப்பட்டன.

ஆரியக் கருத்துகளைப் புகுத்தித்தமிழிலக்கியத்தை ஆரிய வண்ண மாக்கு தற்பொருட்டே, தொல்காப்பியர் காலம் முதல், நூல்களும் நூலுரைகளும் பிராமணத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக் கின்றன.

பிராமணர் அண்டிப் பிழைக்க வந்தஅயலினச் சிறு குழுவாரா யிருந்தும், தமிழ்நாட்டுக் கோவில்களில், தமிழர்க்குப் பயன்படா வாறும், தமிழ் கெடுமாறும், பல கல்வெட்டுகள் வடமொழியிற் பொறிக்கப்பட்டுள்ளன.

                                                                                                               தொடரும் .......................

Sunday, March 25, 2012

நாம் யார் -37

பாகம்-36 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

இனஇழிபு

முதல் நிலை 

பார்ப்பாரும் அந்தணரும் (ஐயரும்) பிராமணரேயென்று,தமிழப் பார்ப்பாரும் அந்தணரும் தம்நிலையினின்று தள்ளப்பட்டமை.

இரண்டாம் நிலை 

உழுவித்துண்ணும்வேளாளராகிய வெள்ளாளரும் சூத்திரருள் அடக்கப் பட்டமை.

மூன்றாம் நிலை

 அரசரும் வணிகரும்உட்படத் தமிழ ரெல்லாரும் சூத்திரர் எனப்பட்டமை.
வெள்ளாளர் தம்மை உயர்த்தக் கருதிச்சற்சூத்திரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டது சிரித்தற்குரிய செயலாம்.

நாலாம் நிலை 

 இசை நாடகத்தொழிலும் உழவுத் தொழிலுஞ் செய்து வந்த சிலவகுப்பாரைத் தீண்டாராக்கி, அவரை ஐந்தாங்குலத்தினர் (பஞ்சமர்) என்றமை.
முதற்கண் பாணரும், பின்னர்ப் பறையரும், அதன்பின் பள்ளரும் தீண்டாராக்கப் பட்டனர். இறுதியில் சான்றாரையும் தீண்டாராக்கத் தொடங்கினர். ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் கிறித்தவ நெறியும் பரவியதால், சான்றார் விழித்தெழுந்து தப்பிக்கொண்டது மன்றித் தம்மை உயர்த்தியுங்கொண்டனர்.

சில வகுப்பார்தீண்டாராகவே,அவருக்குப் பணி செய்யும் வண்ணானும் மஞ்சிகனும்(மயிர்வினைஞனும்) ஆகிய குடிமக்களும், பூசை செய்யும்பண்டாரமும் தீண்டாராயினர்.

ஐந்தாம் நிலை 

தீண்டார் நாளடைவில் பிராமணருக்குக் காணார் ஆக்கப்பட்டனர். அதனால், தீண்டுவார் ,தீண்டார் ,அண்டார்,காணார் எனத் தமிழர் பிராமணரை நோக்கி நால்வகைப்பட்டனர்.

ஆறாம் நிலை

தீண்டார் மேல் வகுப்பாரான தமிழருள்ளும் சிலர்க்கு 30 எட்டுத்தொலைவிலும் சிலர்க்கு 60 எட்டுத் தொலைவிலும் விலகி நிற்க நேர்ந்தது.

ஏழாம் நிலை 

மலையாள நாட்டுத்தீண்டாருள் ஒரு வகுப்பாரான நாயாடிகள், தமிழருக்கும் அல்லது மலையாளியர்க்கும் காணார்ஆயினர். தாழ்த்தப்படாத தமிழக் குலத்தாருள்ளும்,உயர்வு தாழ்வுபற்றி ஒற்றுமைக் குலைவு ஏற்பட்டது.

பிராமணர்,நிறத்திலும் துப்புரவிலும் நாகரிகத்திலும் தமக்கு எத்துணையும் தாழ்வில்லா மரக்கறி வெள்ளாளர் சமைத்ததையும் தொட்ட உணவை கூட இன்றும் உண்பதில்லை. தமிழருள் மரக்கறி வெள்ளாளரே தலைமையாகக் கருதப்படுபவர். அவருந் தாழ்த்தப்பட்டதனால், தமிழினம் முழுதும் தாழ்த்தப் பட்டதேயாகும். இன்று தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர் உண்மையில் ஒடுக்கப்பட்டவரே யாவர். 

பிராமண உணவுச்சாலைகளில், முதலில்,தமிழர் தலைவாயிலை யடுத்த கூடத்திலும், பிராமணர் மறைவான உள்ளறையிலும் படைக்கப்பட்டனர். அன்று,பிராமணர் எச்சிலையினின்று கறிவகைகள் எடுத்துத்தமிழர்க்குப் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதை வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் கண்ணாரக் கண்டு, தாமரைத் திரு. வ.சுப்பையாப் பிள்ளையிடம் சொல்லியிருக்கின்றார். நாகர்கோவில் வாணரான ஆறுமுகம் பிள்ளை என்னும் தொடக்கப்பள்ளி யாசிரியர், ஒருபிராமண உணவுச் சாலைக்கு உண்ணச் சென்றபோது, இத்தகைய இழிசெயலைக் கண்ணாரக் கண்ட அவருடைய பிராமண நண்பர், அவரை உண்ண வேண்டா வென்று தடுத்ததாக, அவர் காலஞ் சென்ற பர். இராசமாணிக்கனாரிடம் சொல்லியிருக் கின்றார். தில்லைஇராமசாமிச் செட்டியார் உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் திரு. சாமிநாத முதலியாரும்,அவர்தந்தையார் ஒரு பிராமணர் வீட்டில் இத்தகைய இழிநிலைக்கு ஆளாக விருந்து தப்பியதாக சில புத்தகக் குறிப்பில் இருக்கிறது

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில்,தில்லையில் ஒரு பிராமண உணவுச் சாலையில் ,'பிராமணர்க்கு மட்டும்' என்று ஒரு பலகை தொங்கவிடப்பட்டு இருந்தகாக சொல்லபடுகிறது

1928-லிருந்து 1934 வரை இராசமன்னார்குடி பகுதியில் , கீரங்குடிக் கோபாலையர் உண்டிச்சாலையில், தமிழர்க்கு எடுப்புச் சாப்பாடும் இல்லா -திருந்துள்ளதாம்.

தமிழர் இங்ஙனம் தாழ்த்தப்பட்டும், பிராமணனை எதிர்க்காது, தமக்குள்ளேயே, "என்குலம் உயர்ந்தது, உன் குலம் தாழ்ந்தது" என்றும்,"எனக்கெதிரில் நீ செருப்பணிந்து நடக்கக்கூடாது" என்றும், "மேலாடையை வல்லவாட்டாக அணியக் கூடாது" என்றும், "திருமணவூர்வலத்தில் நீ பல்லக் கேறக் கூடாது" என்றும்,"குடை கொடி பிடிக்கக்கூடாது" என்றும், பலவாறுபிதற்றிக் கலாமுங் கலகமுஞ் செய்து வருவாராயினர்.

வலங்கை இடக்கை வழக்காரம்

குலப்பட்டம், குடை ,கொடி ,பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள், வெண்கவரி வீச்சு, சிவிகை குதிரை முதலிய ஊர்தி, மேளவகை, தாரை வாங்கா முதலிய ஊதிகள், வல்லவாட்டு, செருப்பு ஆகியவை பற்றிக்குலங்கட்கிடையே பிணக்கும் சச்சரவும் ஏற்பட்டதனால், கரிகாலன் என்னும் பெயர்கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-69) அவ் வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.

சோழனுக்கு வலக்கைப் பக்கம்அமர்ந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாக உய்த்துணரலாம். பகைகொண்ட இருசாரார் ஒரே பக்கத்தில் இருந்திருக்க முடியாது.

இருகையிலும் பல குலத்தார் சேர்ந்திருப்பினும், வலங்கையில் வேளாளரும், இடங்கையிற் கம்மாளருமே தலைமையானவர் என்று கருதஇடமுண்டு.

சோழராட்சிக்குப்பின் பல்வேறரசுகள் ஏற்பட்டதனாலும், பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும், ஆங்கிலர் அரசாட்சிக் காலத்தில் மீண்டும் வலங்கை யிடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்ததுள்ளது . 1809ஆம் ஆண்டு சூலை மாதம் 25ஆம் தேதி , செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத்தீர்ப்பாளர் சார்சு கோல்மன் (GeorgeColman) துரை, அவ் வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டஞ் செய்துள்ளார்.

வலங்கைக் குலங்கள்

வேளாளன், அகம்படியான், இடையன், சாலியன், பட்டணவன், சான்றான்,
குறவன், குறும்பன்,  வள்ளுவன், பறையன் முதலியன.

இடங்கைக்குலங்கள்

கம்மாளன், பேரிச் செட்டி, நகரத்துச் செட்டி, கைக்கோளன்,பள்ளி (வன்னியன்),
வேடன்,  இருளன், பள்ளன்,  இரட்டைமாட்டுச் செக்கான் முதலியன. 

இடங்கையினும் வலங்கை பெருங்கை.மேளகாரன், கணிகை (தாசி), பணி செய்வோன் முதலிய குலங்களில் இருகையு முண்டு. ஒருசில குலங்களில் ஆடவர் ஒரு கையும் பெண்டிர் ஒரு கையும் ஆவர். வடுக கன்னடநாடுகளிலும் இவ் வகுப்புகள் இருப்பதால், அந்நாட்டுப் பகுதிகள் 11ஆம் நூற்றாண்டிலும் தமிழ்நாடாயிருந்தமை அறியப்படும்.

"இத் தமிழ்நாட்டில் ஒவ்வொருநகரத்திலும் சிற்றூரிலும் இடங்கை யார் , வலங்கை யார் வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்டிருக்கின்றன. ஒருவர் வசிக்குந் தெருவி ல்மற்றொருவர் வசிப்ப தில்லை. 

சுபாசுபப்பிரயோசனங்களிலும் ஒருவரிருக்கும் வீதி வழியாகமற்றொருவர் ஊர்வலம் வருவதில்லை. பிரேதங்கொண்டு போவ தில்லை. கருமாதி யிலுமப்படியே. இருவருக்கும் பொது வாயுள்ள வீதியில் போவதற்குத் தடையிராது. சுவாமிகளுக்கு உற்சவாதிகளும்அந்தந்தக் கட்சிகளிலுள்ள வீதிகளிலே தான் நடத்துவார்கள்"

கல்வியிழப்பு

வேதம் முதலிய பன்னூலொடு பல்கலையும், பிராமணர்க்கு ஊணுடையுடன் வேத்தியற் செலவிற் கற்பிக்கப் பட்டன.தமிழர்க்கு மூவேந்தரும் ஒரு கல்வி சாலையும் ஏற்படுத்த வில்லை.

நடுநிலை நயன்மை யிழப்பு

மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணக் குற்றவாளிக்குக்கொலைத் தண்டனை யிட்டதனால்,அப் பிராமணன் ஆவி அவனை நெடுநாள் அலைக் கழித்ததென்று ஒரு கதை கட்டப்பட்டுள்ளது. மலையாள நாட்டிற் பிராமணனுக்குக் கொலைத் தண்டனையில்லை யென்று சட்டமிருந்தது.

முன்னேற்றத் தடை

 தமிழன் தன்முயற்சியினால் இம்மையில் தன் நிலைமையையுயர்த்தினாலும், தன் குலத்தை மறுமையில் தான் மாற்ற முடியும் என்றும், சூத்திரன் பல பிறப்பில் தவஞ்செய்து வைசியனாகலா மென்றும். இங்ஙனமேவைசிய நிலையிலும் சத்திரிய நிலையிலும் முயன்ற பின்னரே இறுதியிற் பிராமணனாக முடியு மென்றும், ஒருதிரிவாக்கக் (Evolution)கொள்கை புகுத்தப்பட்டது. இதை நம்பி ஏராளமானபொருளை வேள்வியிற் செலவிட்ட பேதையர் எத்தனையோ பேர்! இனி, ஆறு தாண்டலையும் கடல்கடத்தலையும் தடுத்தது அறிவு வளர்ச்சித்தடையாகும். 

                                                                                                தொடரும்...................

Saturday, March 24, 2012

நாம் யார் -36

பாகம்-35 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

ஆரிய அட்டூழியத்தால் தமிழர்க்குவிளைந்த கேடுகள்

(1) குமுகாயத் துறை

ஒற்றுமைக் கேடு: நால்வரணக் கட்டுப்பாடு



சோழ பாண்டி நாடுகள்

பிராமணர் ஊர்ப்பெயர்

சதுர்வேதிமங்கலம் 

பிராமணர் தெருப்பெயர்

அக்கிரகாரம்  

பிராமணர் வீட்டுப்பெயர்
அகம்

சேர(மலையாள)நாடு

வீட்டுப் பெயர்கள்:

பிராமணன் - இல்லம், மனை

நாயர்(பொது) - வீடு

நாயர் (தலைவன்) - இடம், தரவாடு

கொல்லர், சாலியர், ஈழவர்முதலியோர் - புரை, குடி.

கோவில் பணியாளன் - வாரியம், பூமடம்

பறையன் (குடி) - சேரி

செறுமன் - சாலை

                                                                                                  தொடரும்................

Friday, March 23, 2012

நாம் யார் -35

பாகம்-34 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

வேடன்

தொழில் - வேட்டையாடல்

பட்டம் - நாய்க்கன்.

வேட்டுவன்

வகை - (1) மலை வேட்டுவன்.

தொழில் - வேட்டையாடல், பயிரிடல்.

பட்டம் - நாய்க்கன், கவுண்டன்.

(2) பாலை வேட்டுவன் (பண்டைக்காலத்தான்).

மறைந்த குலங்கள்

இறங்கு சாத்து (செட்டிகளுள் ஒரு சாரார்), எயினர் (பாலை வாணர்), கணவாளன்,  நாட்டார் (தென்னார்க்காடு உழவர் வகுப்பார்), மழவர் (மழநாட்டுப் போர்மறவர்), மறமாணிக்கர் (மறக்குடியினர்) முதலியன. இறவுளன், கடம்பன், களப்பாளன்,  காடவன், காடுவெட்டி முதலியனவும் மறைந்த மறந்து போன குலங்கள்.

மலைவாழ் குலங்கள்

காடர் (ஆனைமலை), குன்றுவர் (பழனிமலை),பழியர் (குட மலை), மலையாளி (சேரவரையன் மலை, பச்சைமலை, கொல்லி மலை), மலசர் (ஆனைமலை), மன்னான் (குடமலை), முதுவர் (நீல மலை, ஏலமலை) முதலியன.

புதுக் குலங்கள்

புளியங்காரர் (வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் புளியம்பழக் குத்தகை யெடுப்பவர்), வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக் கோட்டைவட்டார வலையருள் ஒரு பிரிவினர்.)

மதமாற்றத்தால் தோன்றிய குலங்கள்

சமணர், பவுத்தர், கிறித்தவர்,முகமதியர்.

மொழிமாற்றத்தால் தோன்றியகுலங்கள்

ஆங்கிலம்-சட்டைக்காரர்.


திரவிடம்- (1) சேரநாட்டுத் தமிழக் குலங்கள்.
                   
                     (2) கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள்.

                     (3) வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள்.

                   (4) நீலமலைத் தமிழக் குலங்கள்.

அந்த நாடுகளின் இருந்த தமிழ் குலங்கள் தான் திராவிடர்கள் மாறாக மலையாளிகளோ , ஆந்திரா மக்களோ , கர்நாடக மக்களோ திராவிடர்கள் இல்லை , இங்கு இருந்து போன தமிழ் குலங்கள் தான் அவர்கள் .

மூவகைத் திரவிடக் குலங்கள்

(1) பெயர் மாறாதவை :  கம்மாளன், பாணன், அடுத்தோன் (குடிமகன்),   வெளுத்தேடன் (வண்ணான்).

(2) பெயர் திரிந்தவை: ஈடிக, கொறச்ச, சோடர்.

(3) பெயர் மாறியவை: ஒக்கலிக, குருப்பு, மங்கல (வாடு).

குலமுயர்த்தும் வழிகள்

ஊண் - புலால் மறுத்தல், பச்சரிசிச்சோறுண்ணல்.

உடை- பிராமணர்போல் கச்சங்கட்டுதல், பிராமணர் அணியும் ஆடையே அணிதல்.

அணி - ஆடவர் பூணூல் அணிதல், பெண்டிர் நூற்கயிற்றில் தாலி கோத்தல்.

குலப்பெயர் - குலப்பெயரை மாற்றுதல் அல்லது பட்டப்பெயரைக் குலப்பெயராக ஆளுதல்.

ஆட்பெயர் - வர்மன் குப்தன் என்னும் கடைசி வார்த்தைகளை கொண்ட வடசொற் பெயர் பூணல்.

பட்டம் - பிள்ளை, முதலியார், செட்டியார் என்னும் பட்டங் கொள்ளுதல்.

மணவுறவு - மேற்குலத்தில் பெண்கொள்ளல்.

மொழி- இயன்ற வரை வடசொல் கலந்து பேசுதல், சமற்கிருதங் கற்றல், சமற்கிருத நூலெழுதுதல், அல்லது செய்யுளியற்றல்.

பழக்கவழக்கம் - ஆடவர் காலையில் சந்தியாவந்தனஞ் செய்தல், கைம்பெண் மணமின்மை.

பூசாரி - இருவகைச் சடங்கிற்கும் பிராமணனையே பூசாரியாகக் கொள்ளுதல்.

ஆரியத்தொடர்புக் கதை-குலமுதல்வன் வேள்வியில் தோன்றின தாகவோ, ஆரியனுக்குப் பிறந்ததாகவோ, கதை கட்டிக்கொள்ளுதல்.

ஒழுக்கம்-பிராமணனுக்குத் தானம் அல்லது தொண்டு செய்தல், இயன்றவரை பிராமணர் சடங்கைப் பின்பற்றல்.

சவ முடிவு - எரிப்பு.

இவற்றுள், எரிப்புத் தவிர, ஆரியச்சார்பான வெல்லாம் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்வனவே. மக்கள்தொகைமிக்க இக்காலத்தில், புதைப்பினும் எரிப்பே பொருளாட்சிச் சிக்கனத்திற் கேற்றதாகும்.

குலப்பட்டம் தோன்றிய வகைகள்

(1) முன்னோர் பதவி - (படை) முதலியார், படையாட்சி.

(2) முன்னோர் வேந்தனால் பெற்ற சிறப்பு - ஏனாதி, காவிதி, வேள்- வேளான், அரசு, எட்டி - செட்டி, முதலி, பிள்ளை.

(3) முன்னோர் அருஞ்செயல் - புலிகடிமால், களம் வென்றான்.

(4) முன்னோர் கொடிவழி - அதிகமான், மலையமான் - மலைமான், வாணன் (வாணகோவரையன்), முத்தரையன் (முத்து ராசு).

(5) ஊர்த்தலைவன் அல்லது குடித்தலைவன் பட்டம் - நாடான், நாட்டான், நாட்டாண்மைக்காரன், ஊராளி, கரையாளன், அம்பலகாரன், மன்றாடி, குடும்பன், கவுண்டன், உடையான்.

(6) தொழில் - பண்ணையாடி, மந்திரி, ஓதுவார், குருக்கள்.

(7) தொழிற் கருவி - சாம்பான் (சாம்பு=பறை).

(8) அறிவு - புலவன், பண்டிதன், பண்டாரம்.

(9) சிற்றரசன் தொடர்பு - வளுவாதி, தொண்டைமான்.

(10) பத்திநெறியாட்சி - ஆண்டி.

(11) வேந்தன் தொடர்பு - தேவன்.

(12) குலவுயர்த்தம் - பிள்ளை, முதலி.

                                                                                                      தொடரும்......................

Thursday, March 22, 2012

நாம் யார் -34


பாகம்-33 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்)

வேளிர் (குறுநில மன்னர்) பதவியும் விருந்தோம்பி வேளாண்மை செய்யும் இயல்புங் கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார்,6ஆம் நுறாறாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்துள்ளனார்.

அவர் தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைஆண்டு வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால் தெரிய வருகின்றது. பல்லவர் கீழ்ப்பட்டிருந்த சோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும் பிடுகு முத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர்வழியினரே.

தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பிய முத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர் வகுப்பினர், முத்தரையரின் படைமறவர் வழிவந்தவராகவே யிருத்தல் வேண்டும்.

கடைக்கழகக் காலத்தில் புல்லியும் பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும் போன்ற கள்வர் கோமான்கள் பலர் இருந்தமை வெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர் வேளிர் மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.

முதலியார்

குலங்கள்

 (1) வேளாண் முதலியார் மூவேந்தர் காலத்திற் படை முதலியாராய் (படைத்தலைவராய்) இருந்தவரின் வழியினர்.

(2) செங்குந்த முதலியார் அல்லது கைக்கோள முதலியார் (சோழர் படை மறவராகவும் படைத் தலைவராகவும் இருந்தவரின் வழியினர்).

(3) அகம்படிய முதலியார் (கொத்தவேலை செய்பவர்).

பட்டங்கள்

(1) இலங்கை யரசியலார் வழங்கும் சிறப்புப் பட்டம்.

(2) தஞ்சை மாவட்டச் சமணருள் ஒரு சாரார்க்கு வழங்கும் பட்டம்.

வண்ணான்

பெயர் விளக்கம் - ஆடைகளை வெளுத்து வண்ணமாக்குபவன்.

பெயர்கள் - வண்ணான், வண்ணத்தான், ஈரங்கொல்லி (ஏகாலி), காழியன்.

பிரிவு - இடம் பற்றியது. பாண்டிய வண்ணான், சோழிய வண்ணான், கொங்க வண்ணான்.

நிலைமை பற்றியது: தீண்டுவான் , தீண்டாதான்.

வல்லம்பன்

இடம் - தஞ்சை திருச்சிராப்பள்ளி மதுரை மாவட்டங்கள்.

தொழில் - பயிர்த்தொழில்.

தலைவன் பட்டம் - சேர்வைகாரன்.

குலப் பட்டம் - அம்பலகாரன்.

வலையன்

பெயர் - வலையன், வலைகாரன், வேடன்,சிவியான், குருவிக்காரன்

தொழில் - வலை வைத்துப் பறவை விலங்குபிடித்தல், ஆறு குளங்களில் மீன் பிடித்தல்.

பிரிவு - பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலகாரன், கம்பளியன்.

குலப் பட்டம் - மூப்பன், சேர்வை, அம்பலகாரன், வன்னியன்.

வாணிகன்

வகை - அறுவை வாணிகன் (சவளிக்கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன்வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன் (இறைச்சிக் கடைகாரன்).

வாணியன்

வாணிகன்-வாணியன்.

வகை- (1) எண்ணெய் வாணியன், (வாணியன், செக்கான்,சக்கரத்தான்).

              (2) இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்).

பட்டம் - மூப்பன், பிள்ளை.

வில்லி

வேடருள் ஒரு பிரிவான் (வில்வேடன்).

வெள்ளாளன்

உழுதுண்ணும் வேளாளனாகிய காராளனுக்குஎதிரானவன், உழுவித்துண்ணும் வேளாளனாகிய வெள்ளாளன்.

களமன் x வெண்களமன்.

வகை- (1) பாண்டி(ய) வெள்ளாளன்.

பிரிவு - கார்காத்த வெள்ளாளன், சிவனிய (சைவ) வெள் ளாளன், கோட்டை வெள்ளாளன், நங்குடி வெள்ளாளன், அரும்பூர் (சிறுகுடி) வெள்ளாளன், நீறு பூசி வெள்ளாளன்.

(2) சோழிய வெள்ளாளன்.

(3) தொண்டைமண்டல வெள்ளாளன்.

(4) துளுவ வெள்ளாளன்.

பட்டம் - பிள்ளை.

(5) கொங்கு வெள்ளாளன்.

பிரிவு-ஆறை நாடு, ஒருவங்க நாடு முதலிய 24 நாடுகள்.

அந்துவன், ஆதி முதலிய 60 குலங்கள்.

தலைவன் பட்டம் - நாட்டுக் கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியார்

குலப்பட்டம் - கவுண்டன்.

காமிண்டன் - கவுண்டன். மிண்டு = வலிமை. மிண்டன் - வல்லோன். காமிண்டன் = காவலன், தலைவன்.

காமிண்டன் - காவண்டன் = கவண்டன்-கவுண்டன்.

(6) அகம்படிய வெள்ளாளன்.

     "கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன்
     மெள்ளமெள்ள வந்து வெள்ளாளன் ஆனானே".

(7) காரைக்காட்டு வெள்ளாளன்.

(8) அரும்புகட்டி வெள்ளாளன்.

(9) கும்பிடு சட்டி வெள்ளாளன்.

(10) ஆறுநாட்டு அல்லது மொட்டை வெள்ளாளன்.

(11) மலைகாணும் வெள்ளாளன்.

(12) சங்குத்தாலி வெள்ளாளன்.

                                                                                                           தொடரும் ..................