Monday, November 28, 2011

மக்களாட்சி வலைப்பதிவு பக்கம் அறிமுகம்


    வணக்கம் மக்களாட்சி விருப்பிகளே !!
                                    இதை ஒரு அரசியல் படிப்பகமாக , உருவாக்க முனைந்துள்ளோம், உங்களின் ஒத்துழைப்போடு முன் எடுத்துசெல்வோம் , இந்த வலைப்பதிவின் நோக்கம் என்ன ? தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்தல் , தெரிய விசயங்களை தெரிந்து கொள்ளுதல்
    அரசியல் ரீதியாக இன்றைய இளையவர்களுக்கு ஓன்று தெரிவதில்லை , தெரியாயும்  முற்படுவதில்லை , சினிமா வின் மீது உள்ள கவனத்தை அரசியல் அறிய வருவதில்லை ,
    இதைதான் அரசங்களும் , அரசியல்வாதிகளும் எதிர் பார்க்கிறார்கள் , நாம் சினிமா , சினிமா என இருந்தால் , அரசியல் தெரியாமல் இருந்தால்,  இவர்களின் வாழ்வு வளமாக போகும் , நமக்கு அரசியல் அறிவு வந்தால் இவர்களின் பாடு  திண்ட்டமாகும் , என்பதால் சினிமா என்ற போதையில் மக்களை வைத்துள்ளனர்
    அப்படி என்றால் எந்த அரசியல்வாதியும்  நல்லவர் இல்லையா , ஒரு சிலர் இருக்கிறார்கள் , அவர்கள் சினிமா என்னும் போதையில் தள்ளாடும் மக்களிடம் எடுபடாமல் இருக்கிறார்கள் , மேலும் நாம் சினிமா கவர்ச்சி இருந்தால் தான் ஒருவர் அரசியலில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளோம்
    அரசியல்வாதிகள் மட்டும் இந்த நாட்டை பாழ்படுத்தவில்லை நாமும் தேர்ந்துதனே பாழ்படுத்துகிறோம் , அவர்களை தேர்ந்தெடுத்து ,
    ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வரும் ஒரு ஓட்டை போட்டால் நாம் கடமை முடிந்து விட்டதா , அந்த ஓட்டின் வலிமை தெரிந்து என்றாவது ஒருநாளை அதற்கு ஒதுக்கி  சிந்திதோமா?  
    நாம் ஒதுங்க ஒதுங்க அரசியல் மேலும் சாக்கடையாக ஆகும் , மக்கள் என்னும் தெளிந்த நீர் , சாக்கடையின் மீது பாய்ந்து ஒடுனால் எல்லாம் சுத்தமாகும் ,
    சினிமாவை பொழுது போக்காக மக்கள் நினைக்காதவரை , அரசியலை அவர்கள் பொழுது போக்காகத்தான் நடத்துவார்கள் , நாமோ அரசியலை சினிமாவில் தேடுகிறோம் ,
    இங்கே அரசியல் , கலை ,பண்பாடு , அறிவியல் , வாழ்வியல் கூறுகள் பற்றி எழுத யுள்ளோம்
    இது தனி ஒரு மனிதனால் செய்ய முடியாத காரியம் , மேலும் உங்களின் கட்டுரைகளை அனுப்பினாலும் பதிவு செய்வோம் ,
    சிலர் அரசு வேளைகளில் இருப்பதால் அவர்கள் நேரடியாக எழுத முடியாத விசயங்களை " மக்களாட்சி " பெயரில் வெளிஈடுவோம்
    எழுத நேரமில்லதவர்கள் , ஒலி வடிவமாக தங்களின் கருத்துகளை அனுப்பினாலும் அதை எழுத்து வடிவில் பதிவு செய்யோம்
    இது ஒரு கூட்டு முயற்சி , வாருங்கள் மக்களாட்சி பாதையில் கல்கள் தடுக்குகிறது , அவற்றை அப்புறபடுத்துவோம்

1 comment: