திராவிட முன்னேற்றக் கழகம்
திமுகவை பற்றிய முதல் பதிவின் தொடர்ச்சி ,
1971-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது,மு.கருணாநிதி, 2-வது முறையாக முதல்வர் பொறுப்போற்றார்.
1972 அக்டோபர் 14-ல் தி.மு.க.வில் ஏற்பட்ட இரண்டாவது பிளவு , கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது பதிப்பை ஏற்படித்தியது ,
1974 ஏப்ரல் 20-ல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
1975 ஜுன் 25-ல் இந்திய அரசு(காங்கிரஸ் கட்சியின் அரசு ) அவசரநிலை அறிவிக்கப்பட்டதை யடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது
1977 ஜூலை 4-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது, திமுகவில் இருந்து பிரிந்த எம் ஜி ஆர் அமோக வெற்றி பெற்றார்
1980-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. யார் அவசர நிலை பயன்படித்தி திமுகவினரை பாதிப்புக்கு உள்ளக்கினார்களோ , அதே காங்கிரஸ் உடன் கூட்டணிவைத்து தன் மீது சுமத்த பட்ட சர்கரிய கமிசன் குற்ற சட்டை சமாளித்தார்
இந்த தேர்தலில் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது,
1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது
1983 ஆகஸ்ட் 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்
1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது
1986 டிசம்பர் 9-ல் இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக, மீண்டும் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்தது ,
1989 டிசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது
1991 சனவரி 30 -தி.மு.க. அரசு இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி பதவி நீக்கம் செய்யப்பட்டது,
இதற்கு பிறகு மாறிமாறி திமுக , அதிமுக ஆட்சி தக்கவைத்துள்ளது ,முதல் பகுதி திமுக அண்ணா வின் வழிகட்டலோடு மக்களோடு பயணித்தது , இரண்டம் கட்டமாக கருணாநிதி கைக்கு வந்த திமுக பெரும் போராட்டத்தோடு , இரண்டாம் கட்ட தலைவர்களின் செயல்பாடுகளால் பயணித்தது
அடுத்து இப்போது உள்ள மூன்றாம் கட்ட திமுகவின் நிலை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்
இதற்கு பிறகு மாறிமாறி திமுக , அதிமுக ஆட்சி தக்கவைத்துள்ளது ,முதல் பகுதி திமுக அண்ணா வின் வழிகட்டலோடு மக்களோடு பயணித்தது , இரண்டம் கட்டமாக கருணாநிதி கைக்கு வந்த திமுக பெரும் போராட்டத்தோடு , இரண்டாம் கட்ட தலைவர்களின் செயல்பாடுகளால் பயணித்தது
அடுத்து இப்போது உள்ள மூன்றாம் கட்ட திமுகவின் நிலை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்
No comments:
Post a Comment