Tuesday, November 29, 2011

திராவிட முன்னேற்றக் கழகம் -1

திராவிட முன்னேற்றக் கழகம் 

உலக அரசியலை பற்றி பார்க்கும் முன் உள்ளூர் அரசியலை தெரிந்து கொள்வோம் ,முதலில் திமுக வை  பற்றி , தெரிந்து கொள்வோம் , இன்றைய இளையவர்கள் திமுக எதோ கருணாநிதியால் ஆரமிக்கபட்டதாக புரிந்து கொண்டுள்ளனர் , அதான் ஆரம்பகாலம் முதல் பார்ப்போம் 

திராவிடர் கழகத்திலிருந்து சி. என். அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராஜன், மதியழகன், ஈ.வி.கே. சம்பத் ஆகிய ஐந்து பேர் விலகி   1949 ஆம் ஆண்டு  செப்டம்பர் 18 திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள்

அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக அறிஞர் அண்ணா (சி.என்அண்ணாதுரைதேர்ந்தெடுக்கப்பட்டார்கருப்புசிவப்பு வண்ணம் கொண்ட கொடிதி.மு..வின் கொடியாக தேர்வு செய்யப்பட்டது.அண்ணாவின் தலைமையில் அரசியல் இயக்கம் மலர்ந்ததும் தற்போதைய திமுக தலைவரும் முகருணாநிதி அக்கட்சியில் இணைந்தார்ஆரபிக்கும் பொது ஒரு பார்வையாளவரகத்தான் அன்று கருணாநிதி இருந்தார் , ஏன் பெரியாருக்கு உளவு பார்க்க வந்தார் எனவே சொல்லலாம் 

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.பங்கேற்கவில்லை

அரசியல் பதவிகள் முலம் மக்கள் பணியற்றவந்த  ஒரு  அரசியல் கட்சி தேர்தலை புறக்கணித்த்து  , சமிபகாலத்தில்  ஒரு கட்சி இதுபோல புறக்கணித்த்து

ஏன், திமுக இந்த தேர்தலை புறக்கணித்த்து , தென் இந்தியர்களின் கருத்தையறியாமலும் ,ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியாரின் (காங்கிரஸ் )எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை

1953 ஜூலை 14-ல்  மும்முனைப் போராட்டங்களை தி.மு.நடத்தியது

முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு

டால்மியாபுரம் பெயரை “கல்லக்குடி என பெயர் மாற்றக்கோரி போராட்டம் (இந்த போராட்டத்தில் தண்டவளையத்தில் தலைவைத்தவர் தான் கருணாநிதி )

 தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ் என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் 

1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.. 2-வது மாநில மாநாடு
    
 தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது

அப்போது நடந்த தேர்தலில் எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு திருத்தம் வேண்டும்” என்று தி.மு.கூறியது

முதல் முறையாக போட்டியிட்டு  மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது.

1958 மார்ச் 2-ல் தி.மு.மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது


1959- நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.(அன்று முதல் 2011 வரை சென்னை மாநகரை தொடர்ந்து வெற்றி பெற்றது )


19.4.1961-ல் தி.மு..வில் ஏற்பட்ட முதல் பிளவு ,அக்ககட்சியிலிருந்து .வெ.கிசம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார்.

1961-ல் இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக திமுக பேரணி நடத்தியது

 1962- நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.இந்த தேர்தலில் முன் எதிரித்த  இராஜாஜியின் சுதந்திரா கட்சி ,முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.. 50 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்ததேர்தலில் அக்கட்சிப் பொதுச் செயலர் அண்ணாகாஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார்

1963 ஜூன் 8, 9, 10 தேதிகளில் நடைபெற்ற தி.மு.பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டதுஇந்த மாற்றத்தில் தான் மற்ற மாநிலங்களையும் கூட்டு சேர்த்து கொண்டது

தமிழகம்ஆந்திரம்கேரளம்கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமைஒருமைத் தன்மைஅரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது

1963  நவம்பர் 17- இந்தியைஇந்தி பேசாத மக்களின் மீது திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17- எரிப்பதாக தி.மு.அறிவித்தது

1965 சனவரி 26 முதல் இந்தி கட்டயமாக்கப்படுவதை எதிர்த்து சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.

1967-ல் நடைபெற்ற 3-வது பொதுத் தேர்தலில் மொழி பிரச்சனையை முன் வைத்து போட்டியிட்ட தி.மு.. 138 இடங்களை வென்று  முதல் முறையாக ஆட்சியை பிடித்த்து

 1967 பிப்ரவரி 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்திராவிட கட்சிகளின் ஆட்சி ஆரம்பமானது

1969 சனவரி 14 சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது , நாடு என பெயரில் சேர்த்த மாநிலம் தமிழகம் மட்டுமே

1968 சனவரி 23-ல்தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக ஆங்கிலம் , தமிழ் என இரு மொழித் திட்டத்தை அறிவித்தது
தாலிசாதிபுரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டவடிவத்தை நிறைவேற்றினார் அண்ணா

1969 ல் பிப்ரவரி 2 -  அண்ணா மறைந்தார்

1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.
அண்ணன் எப்பாட சவான் திண்ணை எப்பட காலியாகும் என்னும் பழமொழிக்கு ஏற்ப கருணாநிதி இந்த தலைவர் பதவியை உருவாக்கினார் , அதற்கு முன் பொது செயலாளர் பதவியே உயர்ந்தாக இருந்த்து, இந்த பிறகு திமுகவின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமானது என சொல்ல்லாம்

1969-ல் மு.கருணாநிதி தி.மு.தலைவராகவும்இராநெடுஞ்செழியன் பொதுச் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர், இதில் நெடுஞ்செழியன் அண்ணாவிற்கு நிகரனவர்தான் என தொண்டர்கள் ஏற்று கொண்டார்கள் , ஆனால் கருணாநிதி அண்ணாவை விட உயர்ந்தவரகவும் பெரியாருக்கு நிகராகவும் கட்டிகொள்ளவே , தலைவர் பதவியை எடுத்து கொண்டார்

பின் ,முதல் முறையாக மு.கருணாநிதிதமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்

கருணாநிதி கைக்கு வந்த திமுகவை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்  

1 comment:

  1. என்ன மக்களாட்சி திமுக சார்பா

    ReplyDelete