Friday, March 23, 2012

நாம் யார் -35

பாகம்-34 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

வேடன்

தொழில் - வேட்டையாடல்

பட்டம் - நாய்க்கன்.

வேட்டுவன்

வகை - (1) மலை வேட்டுவன்.

தொழில் - வேட்டையாடல், பயிரிடல்.

பட்டம் - நாய்க்கன், கவுண்டன்.

(2) பாலை வேட்டுவன் (பண்டைக்காலத்தான்).

மறைந்த குலங்கள்

இறங்கு சாத்து (செட்டிகளுள் ஒரு சாரார்), எயினர் (பாலை வாணர்), கணவாளன்,  நாட்டார் (தென்னார்க்காடு உழவர் வகுப்பார்), மழவர் (மழநாட்டுப் போர்மறவர்), மறமாணிக்கர் (மறக்குடியினர்) முதலியன. இறவுளன், கடம்பன், களப்பாளன்,  காடவன், காடுவெட்டி முதலியனவும் மறைந்த மறந்து போன குலங்கள்.

மலைவாழ் குலங்கள்

காடர் (ஆனைமலை), குன்றுவர் (பழனிமலை),பழியர் (குட மலை), மலையாளி (சேரவரையன் மலை, பச்சைமலை, கொல்லி மலை), மலசர் (ஆனைமலை), மன்னான் (குடமலை), முதுவர் (நீல மலை, ஏலமலை) முதலியன.

புதுக் குலங்கள்

புளியங்காரர் (வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் புளியம்பழக் குத்தகை யெடுப்பவர்), வளுவாதியர் (திருச்சிராப்பள்ளி புதுக் கோட்டைவட்டார வலையருள் ஒரு பிரிவினர்.)

மதமாற்றத்தால் தோன்றிய குலங்கள்

சமணர், பவுத்தர், கிறித்தவர்,முகமதியர்.

மொழிமாற்றத்தால் தோன்றியகுலங்கள்

ஆங்கிலம்-சட்டைக்காரர்.


திரவிடம்- (1) சேரநாட்டுத் தமிழக் குலங்கள்.
                   
                     (2) கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள்.

                     (3) வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள்.

                   (4) நீலமலைத் தமிழக் குலங்கள்.

அந்த நாடுகளின் இருந்த தமிழ் குலங்கள் தான் திராவிடர்கள் மாறாக மலையாளிகளோ , ஆந்திரா மக்களோ , கர்நாடக மக்களோ திராவிடர்கள் இல்லை , இங்கு இருந்து போன தமிழ் குலங்கள் தான் அவர்கள் .

மூவகைத் திரவிடக் குலங்கள்

(1) பெயர் மாறாதவை :  கம்மாளன், பாணன், அடுத்தோன் (குடிமகன்),   வெளுத்தேடன் (வண்ணான்).

(2) பெயர் திரிந்தவை: ஈடிக, கொறச்ச, சோடர்.

(3) பெயர் மாறியவை: ஒக்கலிக, குருப்பு, மங்கல (வாடு).

குலமுயர்த்தும் வழிகள்

ஊண் - புலால் மறுத்தல், பச்சரிசிச்சோறுண்ணல்.

உடை- பிராமணர்போல் கச்சங்கட்டுதல், பிராமணர் அணியும் ஆடையே அணிதல்.

அணி - ஆடவர் பூணூல் அணிதல், பெண்டிர் நூற்கயிற்றில் தாலி கோத்தல்.

குலப்பெயர் - குலப்பெயரை மாற்றுதல் அல்லது பட்டப்பெயரைக் குலப்பெயராக ஆளுதல்.

ஆட்பெயர் - வர்மன் குப்தன் என்னும் கடைசி வார்த்தைகளை கொண்ட வடசொற் பெயர் பூணல்.

பட்டம் - பிள்ளை, முதலியார், செட்டியார் என்னும் பட்டங் கொள்ளுதல்.

மணவுறவு - மேற்குலத்தில் பெண்கொள்ளல்.

மொழி- இயன்ற வரை வடசொல் கலந்து பேசுதல், சமற்கிருதங் கற்றல், சமற்கிருத நூலெழுதுதல், அல்லது செய்யுளியற்றல்.

பழக்கவழக்கம் - ஆடவர் காலையில் சந்தியாவந்தனஞ் செய்தல், கைம்பெண் மணமின்மை.

பூசாரி - இருவகைச் சடங்கிற்கும் பிராமணனையே பூசாரியாகக் கொள்ளுதல்.

ஆரியத்தொடர்புக் கதை-குலமுதல்வன் வேள்வியில் தோன்றின தாகவோ, ஆரியனுக்குப் பிறந்ததாகவோ, கதை கட்டிக்கொள்ளுதல்.

ஒழுக்கம்-பிராமணனுக்குத் தானம் அல்லது தொண்டு செய்தல், இயன்றவரை பிராமணர் சடங்கைப் பின்பற்றல்.

சவ முடிவு - எரிப்பு.

இவற்றுள், எரிப்புத் தவிர, ஆரியச்சார்பான வெல்லாம் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்வனவே. மக்கள்தொகைமிக்க இக்காலத்தில், புதைப்பினும் எரிப்பே பொருளாட்சிச் சிக்கனத்திற் கேற்றதாகும்.

குலப்பட்டம் தோன்றிய வகைகள்

(1) முன்னோர் பதவி - (படை) முதலியார், படையாட்சி.

(2) முன்னோர் வேந்தனால் பெற்ற சிறப்பு - ஏனாதி, காவிதி, வேள்- வேளான், அரசு, எட்டி - செட்டி, முதலி, பிள்ளை.

(3) முன்னோர் அருஞ்செயல் - புலிகடிமால், களம் வென்றான்.

(4) முன்னோர் கொடிவழி - அதிகமான், மலையமான் - மலைமான், வாணன் (வாணகோவரையன்), முத்தரையன் (முத்து ராசு).

(5) ஊர்த்தலைவன் அல்லது குடித்தலைவன் பட்டம் - நாடான், நாட்டான், நாட்டாண்மைக்காரன், ஊராளி, கரையாளன், அம்பலகாரன், மன்றாடி, குடும்பன், கவுண்டன், உடையான்.

(6) தொழில் - பண்ணையாடி, மந்திரி, ஓதுவார், குருக்கள்.

(7) தொழிற் கருவி - சாம்பான் (சாம்பு=பறை).

(8) அறிவு - புலவன், பண்டிதன், பண்டாரம்.

(9) சிற்றரசன் தொடர்பு - வளுவாதி, தொண்டைமான்.

(10) பத்திநெறியாட்சி - ஆண்டி.

(11) வேந்தன் தொடர்பு - தேவன்.

(12) குலவுயர்த்தம் - பிள்ளை, முதலி.

                                                                                                      தொடரும்......................

Thursday, March 22, 2012

நாம் யார் -34


பாகம்-33 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்)

வேளிர் (குறுநில மன்னர்) பதவியும் விருந்தோம்பி வேளாண்மை செய்யும் இயல்புங் கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார்,6ஆம் நுறாறாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்துள்ளனார்.

அவர் தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைஆண்டு வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால் தெரிய வருகின்றது. பல்லவர் கீழ்ப்பட்டிருந்த சோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும் பிடுகு முத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர்வழியினரே.

தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பிய முத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர் வகுப்பினர், முத்தரையரின் படைமறவர் வழிவந்தவராகவே யிருத்தல் வேண்டும்.

கடைக்கழகக் காலத்தில் புல்லியும் பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும் போன்ற கள்வர் கோமான்கள் பலர் இருந்தமை வெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர் வேளிர் மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.

முதலியார்

குலங்கள்

 (1) வேளாண் முதலியார் மூவேந்தர் காலத்திற் படை முதலியாராய் (படைத்தலைவராய்) இருந்தவரின் வழியினர்.

(2) செங்குந்த முதலியார் அல்லது கைக்கோள முதலியார் (சோழர் படை மறவராகவும் படைத் தலைவராகவும் இருந்தவரின் வழியினர்).

(3) அகம்படிய முதலியார் (கொத்தவேலை செய்பவர்).

பட்டங்கள்

(1) இலங்கை யரசியலார் வழங்கும் சிறப்புப் பட்டம்.

(2) தஞ்சை மாவட்டச் சமணருள் ஒரு சாரார்க்கு வழங்கும் பட்டம்.

வண்ணான்

பெயர் விளக்கம் - ஆடைகளை வெளுத்து வண்ணமாக்குபவன்.

பெயர்கள் - வண்ணான், வண்ணத்தான், ஈரங்கொல்லி (ஏகாலி), காழியன்.

பிரிவு - இடம் பற்றியது. பாண்டிய வண்ணான், சோழிய வண்ணான், கொங்க வண்ணான்.

நிலைமை பற்றியது: தீண்டுவான் , தீண்டாதான்.

வல்லம்பன்

இடம் - தஞ்சை திருச்சிராப்பள்ளி மதுரை மாவட்டங்கள்.

தொழில் - பயிர்த்தொழில்.

தலைவன் பட்டம் - சேர்வைகாரன்.

குலப் பட்டம் - அம்பலகாரன்.

வலையன்

பெயர் - வலையன், வலைகாரன், வேடன்,சிவியான், குருவிக்காரன்

தொழில் - வலை வைத்துப் பறவை விலங்குபிடித்தல், ஆறு குளங்களில் மீன் பிடித்தல்.

பிரிவு - பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலகாரன், கம்பளியன்.

குலப் பட்டம் - மூப்பன், சேர்வை, அம்பலகாரன், வன்னியன்.

வாணிகன்

வகை - அறுவை வாணிகன் (சவளிக்கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன்வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன் (இறைச்சிக் கடைகாரன்).

வாணியன்

வாணிகன்-வாணியன்.

வகை- (1) எண்ணெய் வாணியன், (வாணியன், செக்கான்,சக்கரத்தான்).

              (2) இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்).

பட்டம் - மூப்பன், பிள்ளை.

வில்லி

வேடருள் ஒரு பிரிவான் (வில்வேடன்).

வெள்ளாளன்

உழுதுண்ணும் வேளாளனாகிய காராளனுக்குஎதிரானவன், உழுவித்துண்ணும் வேளாளனாகிய வெள்ளாளன்.

களமன் x வெண்களமன்.

வகை- (1) பாண்டி(ய) வெள்ளாளன்.

பிரிவு - கார்காத்த வெள்ளாளன், சிவனிய (சைவ) வெள் ளாளன், கோட்டை வெள்ளாளன், நங்குடி வெள்ளாளன், அரும்பூர் (சிறுகுடி) வெள்ளாளன், நீறு பூசி வெள்ளாளன்.

(2) சோழிய வெள்ளாளன்.

(3) தொண்டைமண்டல வெள்ளாளன்.

(4) துளுவ வெள்ளாளன்.

பட்டம் - பிள்ளை.

(5) கொங்கு வெள்ளாளன்.

பிரிவு-ஆறை நாடு, ஒருவங்க நாடு முதலிய 24 நாடுகள்.

அந்துவன், ஆதி முதலிய 60 குலங்கள்.

தலைவன் பட்டம் - நாட்டுக் கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியார்

குலப்பட்டம் - கவுண்டன்.

காமிண்டன் - கவுண்டன். மிண்டு = வலிமை. மிண்டன் - வல்லோன். காமிண்டன் = காவலன், தலைவன்.

காமிண்டன் - காவண்டன் = கவண்டன்-கவுண்டன்.

(6) அகம்படிய வெள்ளாளன்.

     "கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன்
     மெள்ளமெள்ள வந்து வெள்ளாளன் ஆனானே".

(7) காரைக்காட்டு வெள்ளாளன்.

(8) அரும்புகட்டி வெள்ளாளன்.

(9) கும்பிடு சட்டி வெள்ளாளன்.

(10) ஆறுநாட்டு அல்லது மொட்டை வெள்ளாளன்.

(11) மலைகாணும் வெள்ளாளன்.

(12) சங்குத்தாலி வெள்ளாளன்.

                                                                                                           தொடரும் ..................

Wednesday, March 21, 2012

நாம் யார் -33

பாகம்-32 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பள்ளன்

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின்தென்பாகம்.

தொழில் - பயிர்த்தொழிலும் பண்ணை வேலையும்.

பிரிவு - அம்மாப் பள்ளன், அஞ்ஞாப்பள்ளன், ஆத்தாப்பள்ளன், பணிக்கன், கடையன் முதலிய பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - குடும்பன்,நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன், நாட்டுமூப்பன்.

குலப்பட்டம் - குடும்பன், பண்ணாடி(பண்ணையாடி), மன்றாடி, மூப்பன்.

பள்ளி (வன்னியன்)

இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின் வடபாகம்.

பெயர் - பள்ளி, வன்னியன், செம்பியன்.

தொழில் - பயிர்த்தொழில்,வாணிகம், கொல்லற்று (கொத்த) வேலை, பண்டைநாளில் சிலர் படை மறவர்.

பிரிவு - அரசு, பந்தல்முட்டி, அஞ்சுநாள்,கோவிலர், ஓலை முதலிய பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - கவுண்டன், பட்டக்காரன், கண்டர், சம்புவராயன், நாயகர், நயினார் முதலியன.

குலப் பட்டம் - கவுண்டன், படையாட்சி, நாய்க்கன், பிள்ளை, இராயன் முதலியன.

வன்னி என்பது ஒரு மரவகையைக்குறிப்பின் தென்சொல்; நெருப்பைக் குறிப்பின்வஃனி (vahni) என்னும் வடசொல்.

கதிரவன் திங்கள் நெருப்பு என்னும் முச்சுடரும், முறையே, சோழன் பாண்டியன் சேரன் ஆகிய மூவேந்தர் குலத்திற்கும் முதலாகக் கொள்ளப்பட்டன. பண்டைத் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தது. அவருக்கடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்தாண்டனர். வன்னியைக் காவல் மரமாகக்கொண்ட குறுநில மன்னர், உடையார்பாளையம் வேளைப்போற் சோழநாட்டுப் பகுதிகளைஆண்டிருக்கலாம். வன்னியர் என்பது குறுநில மன்னரையே குறிக்கின்றது. கடம்பர் என்னும் சொல்லைப்போல் வன்னியர் என்பதையுங்கொண்டால். அது தென் சொல்லேயாகும்.கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்திலேயே,வடசொல் தமிழரசர் பெயர் வழக்கில் புகுந்தது;குலப் பிரிவும் தலையெடுத்தது.

இனி, வன்னியன் என்னும் சொல்,கள்ளர் வலையர் முதலிய சில குலத்தாரின் பட்டப்பெயராக வழங்குவதையும் அறிதல் வேண்டும்.சத்திரியன் (க்ஷத்ரிய) என்னும் வடசொல், வல்லபம் என்னும் பொருளதே. ஆதலால், வன்னியர்குல வல்லபர் என்று வழங்குவதே. இக்காலத்திற் கேற்றதும் மோனையழகு அமைந்ததுமாகும்.

பறம்பன்

இடம் - திருநெல்வேலி, மதுரை,புதுக்கோட்டை.

தொழில் - தோல் வேலையும் சுண்ணாம்புக்கல் சுடுதலும், செருப்புத் தைக்கும் தமிழக் குலத்தான் இவனே. செம்மான் (சருமன்) என்பது வடசொல்.

பறையன்

பெயர் - பறையன், புலையன்.

தொழில் - பறையடித்தல், பறையறைந்து விளம்பரஞ் செய்தல், முரட்டுத்துணி நெய்தல், கூலிவேலை செய்தல், பிணஞ்சுடுதல்.

பிரிவு - பல புறமணப் பிரிவுகள்.

பட்டம் - சாம்பான், மூப்பன், பிள்ளை.

பாணன்

பெயர் விளக்கம் - பண் = பாட்டு, இசை. பண் - பாண் - பாணன் = பாடகன், இசைத் தொழிலாளன்.

தொழில் - பண்டு : வாய்ப்பாட்டு, குழலிசை, யாழிசை.

இன்று : தையலும் கூத்தும் (தமிழ்நாடு).

கூடை கட்டல், மீன் பிடித்தல்,பேயோட்டல் (மலையாள நாடு).

பட்டம் - பணிக்கன்.

மறவன்

இடம் - பாண்டிநாடு.

தொழில் - பண்டு : போர்த் தொழில்.

இன்று : காவல், பயிர்த்தொழில்,கல்வித்தொழில்.

பிரிவுகள் - 38

நாட்டார்,மணியக்காரர், காரணர், கொத்தளர், சீத்தல்,சேர்வைகாரர், தோலர், பண்டாரம்,வேடங்கொண்டார், செட்டி, குறிச்சி, வேம்பன்கோட்டை, செம்பிநாடு, குன்றமான் நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஒரியூர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, தும்பை, உப்புக்காடு, அஞ்சுகொத்து, கொண்டையன் கோட்டை, தொண்டைநாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசிகட்டி,கன்னிகட்டி, கயிறு கட்டி, அணிநிலக் கோட்டை.

5 நாடுகள்

செம்பிநாடு, அம்பநாடு, கிழவைநாடு, அகப்பாநாடு, ஆமைநாடு.

5 கோட்டைகள்

செம்பிநாட்டுக் கோட்டை, கொண்டையன்கோட்டை, கருத்தக்கோட்டை, செகக்கோட்டை, அணிநிலக்கோட்டை.

50 கிளைகள்

செம்பியன், வெட்டுவன், வீரமன், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு, அறியாதான், கோபாலன், மங்கலம், சுந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கினியான், வீணியன், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மருவீடு, வாப்பா, நாச்சாண்டி, அமர், கருப்புத்திரன், வெட்டியான், மாப்பான சம்பந்தன், சேதுரு, அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப் பிரை, நங்கண்டா, பாச் சாலன், சாலா, இராக்கி, வன்னி, பண்டாரம், விடிந்தான், கருங்குளத்தான், பறையன்குளத் தான், மகுடி, அம்மியடுக்கி, அடு கலை, எருமைக்குளத் தான், கீரைக்குடியான், இத்தி, விளிந் திட்டான், வயநாடு, வெம்பக்குடி.

கொண்டையன் கோட்டையார் கொத்தும் கிளையும்-ஒன்பது கொத்தும் பதினெண் கிளையும்.

கற்பகக் கொத்து - மருதீசர் கிளை, அகத்தீசர் கிளை.

கமுகங் கொத்து - வீணியன் கிளை,பேர் பெற்றான் கிளை.

மல்லிகைக் கொத்து - சேதா கிளை,வாள்வீமன் கிளை.

முந்திரிக் கொத்து - வெட்டுவன் கிளை,அழகுள்ள பாண்டியன் கிளை

ஏலக்கொத்து - குடையன் கிளை, அரசுமான் கிளை.

மிளகுகொத்து - செகமண்டலாதிபன் கிளை, வீர முடிதாங்கினான் கிளை.

நற்சீரகக்கொத்து - நாட்டை வென்றான் கிளை,தருமர்கிளை.

தக்காளிக்கொத்து - சங்கரன் கிளை, சாத்தான் கிளை.

தென்னங்கொத்து - ஒளவை கிளை, சாம்புவன் கிளை.

பட்டம்-தேவன், தலைவன், கரையாளன்,சேர்வைகாரன்.

                                                                                                       தொடரும்....................

Tuesday, March 20, 2012

நாம் யார் -32

பாகம்-31 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

செட்டி


பெயர் விளக்கம் - பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி (எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது. 

பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப் பெயராகவும் கொண்டுள்ளனர்.

(1) வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).

(2) வாணியச் செட்டி.

        தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.

        பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி   என நான்கு.

(3) நாட்டுக் கோட்டைச் செட்டி

     தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.
     பிரிவு - ஒன்பது கோவில்கள்.

(4) நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்) 

(5) காசுக்காரச் செட்டி.

     தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.

(6) பேரிச் செட்டி.

     தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.

    பிரிவு - திருத்தணியார்,அச்சிறுபாக்கத்தார் முதலிய ஐந்து அக மணப்  பிரிவுகள்.

(7) கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்) 

       தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.

(8) மளிகைச் செட்டி. 

      தொழில் - பலசரக்கு விற்பனை.

(9) மஞ்சட்குப்பத்துச் செட்டி

(10) பன்னிரண்டாஞ் செட்டி.

செம்படவன்

தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல்,  ஓடமும் பரிசலும் விடுதல்.

பிரிவு - ஏழ் நாடுகள் அல்லது புறமணப்பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.

குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.

பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனப்பட்டனர்.

தேவடியாள்

தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.

வகைகள் - தேவகணிகையர், நேர்ந்து கொண்டோர், வறுமை யால் அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர், ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர், இவ்வகையாரின் வழியில் வந்தோர்.

தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.

தொண்டைமான்

பெயர் - தொண்டைமான், சுண்ணாம்புக்காரன்.

தொழில் - சுண்ணாம்புக்கல் நீற்றல்,மேளம் தட்டுதல், இசைக் குழலூதல்.

பட்டம் = சோழகன்.

நளவன்

தொழில் - கள்ளிறக்குதல் (யாழ்ப்பாணம்).

பட்டணவன்

இடம் - கிருட்டிணாமுதல் தஞ்சை வரை கடற்கரை.

பெயர் - பட்டணவன், கரையான்.

தொழில் - கடல்மீன் பிடித்தலும் வாணிகமும்.

பிரிவு - பெரிய பட்டணவர் , சின்னப்பட்டணவர்.

பட்டம் - செட்டி.

பண்டாரம்

பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம் போன்ற உயர் பொருள் பேரறிஞன்.

பிரிவு - வெள்ளாளப் பண்டாரம் (கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர் பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).

பணிக்கன்

பெயர் - இல்லத்துப் பிள்ளை.

தொழில் - நெசவும் வாணிகமும்.

பிரிவு - பல புறமண இல்லங்கள்.

பட்டம் - பணிக்கர்.

பணிசெய்வோன் (பணிசவன்)

தொழில் - சாவறிவித்தலும் தாரை ஊதுதலும் இரத்தலும் (சேலம்).

கோவிலில் இசைக்குழல் ஊதுதலும் நட்டுவமும் (திருநெல்வேலி).

பிரிவு - வலங்கை, இடங்கை.

பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.

பரத்தை

பெயர் - விலைமகள், பொதுமகள், வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.

வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.

பரவன்

பெயர் - பரவன், பரதவன், பரதன்.படவன்-பரவன்.

இடம் - தஞ்சைக்குத் தெற்கில் குமரி வரை கடற்கரை.

தொழில் - கடல் மீன் பிடித்தலும் கடல்வாணிகமும்.

பட்டம் - செட்டி.

பரிவாரம்

வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.

தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.

பிரிவு - சின்ன வூழியம் ,பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள்.

பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன்.

                                                                                                       தொடரும்............................

Monday, March 19, 2012

நாம் யார் -31


பாகம்-30 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

ஊராளி

தொழில் - பெரும்பாலும்பயிர்த்தொழில்.

பிரிவு - ஏழ் அகமண நாடுகள். கரை அல்லதுகாணியாட்சி என்னும் புறமண   உட்பிரிவுகள் உண்டு.

பட்டம் - கவுண்டன்.

ஓதுவார்

தொழில் - சிவன் கோவிலில் பூசைசெய்தல்.

இனப் பிரிவு - ஓதுவார், பண்டாரம்,குருக்கள், புலவர்.

பட்டம் - ஓதுவார்.

கடசன்

தொழில் - கூடை முடிதல்,சுண்ணாம்புக்கல் சுடுதல்.

பிரிவு - பட்டங்கட்டி, நீற்றரசன்என்னும் அகமணப் பிரிவுகள்.

பட்டம் - பட்டங்கட்டி, கொத்தன்.

கணக்கன்

தொழில் - ஊர்க்கணக்கு எழுதுதல்.

பிரிவு - சீர், சரடு, கைகாட்டி,சோழியன் என்னும் நான்கு.

பட்டம் - பிள்ளை.

கணிகை (பெண்)

தொழில் - நாடக வரங்கிலும் கோவிலிலும் நடஞ்செய்தல்.

பிரிவு - நாடகக் கணிகை, தேவகணிகை.

கள்ளன்

பெயர் விளக்கம் - வேற்று நாட்டுஆநிரைகளைக் (பசுக்கூட்டங்களைக்களவில் கவருமாறு, சோழ வேந்தரால்ஆளப்பட்ட பாலைநிலத்து வெட்சி மறவர் கள்ளர்அல்லது கள்வர் எனப்பட்டனர்.

தொழில்-பண்டைநாளில் போர்த்தொழில். இன்று பயிர்த் தொழிலும் கல்வித் தொழிலும்.

பண்டை இடம் - சோழநாடு.

பிரிவு-மேல்நாடு சிறு குடிநாடு முதலிய பத்து அகமண நாடுகள் (மதுரை), பதினால் நாடுகள் (சிவகங்கை). வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன நாட்டின் புறமண உட்பிரிவுகள்.

தலைவன் பட்டம்-அம்பல(க்)காரன், நாட்டான், இராசாளி

குலப் பட்டம்- நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன் முதலியன.

காராளன்

காராளர் உழுதுண்ணும் வேளாளர்.

சேலம் சேர்வராயன் (சேரவரையன்) மலையாளிகளுள் ஒரு சாரர் தம்மைக் காராளர் என்கிறார்கள்.

குசவன்

தொழில் - மட்கலம் வனைதல்.

பட்டம் - வேளான், செட்டி, உடையார்,பிள்ளை.

குடிமகன்

தொழில்- பெரும்பான்மை மயிர்சிரைத்தலும் வெட்டுதலும், சிறுபான்மை மருத்துவமும்அறுவையும் (Surgery).

பிரிவு - தீண்டுவான், தீண்டான்.

பட்டம் - பண்டிதன்.

குலப்பிள்ளை(சாதிப்பிள்ளை)

தொழில் - இரப்பு.

குலம்-  இரப்போன் , நோக்கன் ,கொங்கு வெள்ளாளன் ,முடவாண்டி, கைக்கோளன் ,பொன்னம்பலத்தான், பேரிச்செட்டி ,வீரமுட்டி

குறவன்

தொழில் - வேட்டையாடல், கூடைமுறம்முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல்,திருடல்.

பெண்களின் தொழில் - குறிசொல்லுதல், பச்சை குத்துதல்.

பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன், நாடோடி.

ஊர்க்குறவன் பிரிவு - தப்பை(மூங்கில்வேலை), கொங்கன், உப்பு.

பல அகமணப் பிரிவுகள்.

மலங்குறவன் பிரிவு - குன்றக் குறவன், பூங்குறவன் (வேலன்), காக்கைக் குறவன் (கக்கலன்), பாண்டிக் குறவன் (நாஞ்சில் குறவன்).

நாடோடிகள்-காளிக்கோட்டம் வரை பல்வேறு நாடு சென்று,அந்த அந்த  நாட்டு மொழி பேசி, வெவ்வேறு பெயர் கொண்டு, வேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில்செய்பவர்.

குருவிக்காரன் அல்லது நரிக்குறவன் தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழி பேசுபவன்.

தலைவன் பட்டம்-பெரிய மனிதன்(மனுசன்), ஊராளி, பணிக்கன்.

குலப்பட்டம் - சேர்வைகாரன், பிள்ளை, கவுண்டன் முதலியன.

குறும்பன்

தொழில் - குறும்பாடு மேய்ப்பு, முரட்டுக் கம்பளி நெசவு, தேனெடுப்பு முதலியன.

பிரிவு - காட்டுக் குறும்பு ,நாட்டுக்குறும்பு.

தேன்(ஜேன்) குறும்பு , பன்றிக் குறும்பு முதலியன உட்பிரிவுகள்.

பட்டம் - மூப்பன்.

கைக்கோளன்

பெயர் - கைக்கோளன் (தமிழ்நாட்டின் நடுபகுதி தென் பகுதியும்).

செங்குந்தன் (தமிழ்நாட்டின் வடபாகம்).

கையிற் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன் கைக்கோளன்.

கோலன் - கோளன். குழல்-கோல். கையில் செங்குந்தம் பிடித்திருந்த போர்ப்படையினர் வழிவந்தவர் செங்குந்தர்.

தொழில் - நெசவு.

பிரிவு (சில இடங்களில்) - சோழியன், இறாட்டு, சிறுதாலி, பெருந்தாலி, சீர்பாதம், சேவகவிருத்தி.

நாட்டுப்பிரிவு-72 நாடு.

வழக்கம் - ஒவ்வொரு குடும்பமும் ஒருபெண்ணைக் கோவிலுக்குத் தேவ கணிக்கையாக விடுதலும், அவளொடு செல்வ அல்லது ஏழைப் பிராமணன் கூடுதலும். இவ் வழக்கம் இப்போது நின்றுவிட்டது.

தலைவன் பட்டம் - பெரியதனக்காரன்,பட்டக்காரன், புள்ளிக்காரன்,

குலப்பட்டம் - அடவியார் , நயினார் , முதலியார் , மூப்பர்.

கொல்லன்

வகையும் தொழிலும் - ஐங்கொல்லர்(ஐங்கம்மாளர்).

மரக்கொல்லன் - தச்சன்.

கற்கொல்லன் - கற்றச்சன், கம்மியன்.

பொற்கொல்லன் - தட்டான்,கம்மாளன்.

செப்புக் கொல்லன் - கன்னான்.

இருப்புக் கொல்லன் - கருமான்(கருமகன்), கொல்லன்.

முதன் முதல் தோன்றியவன் மரக்கொல்லனே. ஓரறிவுயிருள்ள மரத்தை வெட்டிக்கொல்வதால், அவன் கொல்லன் எனப்பட்டான்; அவன் தொழில் கொல் எனப்பட்டது. முதல் காலமாகிய கற்காலத்தில், மரத்தினாலும் கல்லாலுமே வீடு கட்டப்பட்டது. அதன் பின்னரே பொன்னும் செம்பும் உறையும் இரும்பும் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்கலக்கன்னாரும் செப்புக் கன்னாருள் அடங்குவர்.

நாட்டுப்பிரிவு - பாண்டியம், சோழியம், கொங்கம் என்னும் மூன்று அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டாண்மைக்காரன், கருமத் தான் (காரியத்தன்).

குலப்பட்டம் - நயினார், பத்தன், ஆச்சாரி(ஆசாரி) என்பது பிராமணரொடு போட்டியிட்ட பிற்காலத்து ஆரியச் சொல்.

கோலியன்

தொழில் - நெசவு

பிரிவு - நாடுகள் என்னும் பெரும்பிரிவும் குப்பங்கள் என்னும் சிறு பிரிவும்.

பட்டம் - 'ஈசன்' என்னும் வடசொல் அடைமொழி.

சவளக்காரன்

தொழில் - ஓடம் விடுதல், பயிர் விளைத்தல், இசைக்குழல் ஊதல், ஈட்டிப் போர்புரிதல், தாதுக்கனி தோண்டுதல்.

பட்டம் - படையாட்சி (பயிர்த்தொழிலாளர்) , அண்ணாவி (இசைத்தொழிலாளர்).

சாயக்காரன்

தொழில் - சாயங் காய்ச்சுதல்.

சாலியன்

தொழில் - நெசவு.

பிரிவு - 24 புறமணவீடுகள்.

பட்டம் - அடவியார்.

சான்றான் (சாணான்)

பெயர்: சான்றோர் = போர்மறவர்.

சான்றோர்-சான்றார்

தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டி காய்ச்சுதல், வாணிகம் செய்தல், குடிக்காவல், படைக்கலம் பயிற்றல்.

பிரிவு - கருக்குமட்டையன், மேனாட்டான்,  கொடிக்கால், நட்டாத்தி, பிழுக்கை.

ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை.

குலப்பட்டம்-நாடார்,  சேர்வைகாரன். முக்குந்தன்.

சிங்கன்

தொழில் - வேட்டையாடல்.

                                                                                           தொடரும் .................................

Sunday, March 18, 2012

நாம் யார் -30

பாகம்-29 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

நால்வரணத் தோற்றமும் விளக்கமும்

குலங்கள் இயற்கையாகத் தொழில் பற்றியே தோன்றின. மாந்தன் வாழ்கைக்குப் பல்வேறு பொருள்கள் வேண்டியிருப்பதால், அவற்றை யெல்லாம் விளைவிக்கவோ தேடவோ செய்யவோ பல்வேறு குலங்கள் ஏற்பட்டன. அப் பொருள்களுள், இன்றியமை யாதவற்றிற்கு முன்னும்,தேவையான வற்றிற்குப் பின்னும், இன்புறுத்துவனவற்றிற்கு அதன் பின்னும், நாகரிகச் சிறப்புப் பற்றியவற்றிற்கு இறுதியிலும் குலங்கள்எழுந்தன.

பல்வேறு பொருள்களையும் ஒரு வழித்தொகுத்தற்குப் பண்டமாற்றுத் தொழிலும், அவற்றைக் காத்தற்குக் காவல் தொழிலும், அவைதோன்றிய அன்றே அமைந்தன. தெய்வ வழிபாடும்,நோயும் துன்பமும் இன்றிக் காக்கும் காவல்பற்றித் தோன்றியதே.

"மகனறிவு தந்தை யறிவு" என்றமுறைப்படி, தந்தையின் தொழில் திறமையும் மனப்பான்மையும் இயற்கையாகவே மகனுக்கமைவதாலும்,மக்கள்தொகை மிகாத தொடக்கக் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் சொல்லளவிலுந் தோன்றாமை யாலும், எல்லாத் தொழில்களும் தொல்வரவாகவே தொடர்ந்து செய்யப் பட்டு வந்தன.தலைமுறை மிக மிகத் தொல்வரவுத் தொழில் திறமை மிகுவதனாலும், அத் தொடர்ச்சி மேன்மேலும் போற்றப்பட்டு வந்தது. ஒருவன் தன் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு, எச் சமையத்திலும் தொழில் மாற முடியுமேனும், அதற்கேதுவான நிலைமை அக்காலத்தில் ஏற்படவில்லை.

உழவனை உயர்த்திய பழங்காலம் 

துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம்,அதிகாரம் முதலியன பற்றியன்றி, பிறப்பினால்ஏற்றத்தாழ்வு எவருக்கும் ஏற்றிக் கூறப்படவில்லை.

எல்லா உயிர்வாழ்க்கைக்கும்இன்றியமையாத உணவை விளைப்பதனாலும், நிலையாகக்குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமை யாகவிறுத்து அரசை நிலைநிறுத்துவதனாலும்,போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருது வெற்றியுண்டாக்கு வதனாலும், இரப்போர்க் கீந்துதுறப் போர்க்குத் துணையா யிருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே  உயர்ந்த குடிவாணனாகவும்தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப்பக்கத் துணை வராகவே கருதப்பட்டனர்.

வெளிநாட்டு அரும்பொருள்களையெல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக் கவ்வப்போது பணமுதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன்,உழவனுக்கடுத்த படியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரராலும் பகைவராலும் அதிகாரி களாலும் கடுவிலங்குகளாலும், உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமற் காக்கும் அரசன், பணிவகையில் வணிகனுக்கு அடுத்த படியாகவும்,அதிகார வகையிற் கண்கண்ட கடவுளாகவும்கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணிபுரி பவனும், ஆக்கவழிப் பாற்றலுள்ளவனுமான அந்தணன், இறைவனுக் கடுத்தபடி தெய்வத் தன்மையுள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம் உழவு, வாணிகம், காவல், கல்விஎன்னும் நாற் றொழிலே தலைமையாகக்கொள்ளப்பட்டு, எல்லாக் கைத்தொழில் களும்உழவுள் அடக்கப்பட்டன.

வேளாளர் வணிகர் அரசர் அந்தணர் என்பதே வரலாற்று முறையாயினும், அந்தணர்க்கும் அரசர்க்கும் சிறப்புக் கொடுத்தற்பொருட்டு அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என எதிர்முறையிற் கூறினர்.

இந் நாற்பாற் பகுப்பையே, பிராமணர் ,சத்திரியர் ,வைசியர் சூத்திரர் எனத் திரித்தனர் ஆரியப் பூசாரியர்.

இற்றைப் பிறவிக் குலங்கள்

அகம்படியன்

தொழில் - பண்டைநாளில் மறவர்குலமன்னர் மாளிகைகளில் அகம்படித் தொண்டு(இல்லப்பணி) செய்தவர். இன்று தென்மாவட்டங்களிற் பயிர்த்தொழிலும்வடார்க்காட்டு மாவட்டத் திற் கொத்த (கட்டட)வேலையும் செய்பவர்.

பிரிவு - ஐவழி நாட்டான்,கோட்டைப்பட்டு முதலிய பன்னீரக மணப் பிரிவுகள் (Endogamoussteps).

பட்டம் - அதிகாரி, சேர்வைகாரன்,பிள்ளை, முதலியார்.

"கள்ளன் மறவன் கனத்தோர்அகம்படியன்" என்னும் பழமொழி, குலந்தோன்றியவழியைக் காட்டும்.

அம்பல(க்)காரன்

தொழில் - பயிர்த்தொழிலும்ஊர்காவலும்.

பிரிவு - முத்திரியன் (முத்தரையன்),காவல்காரன், வன்னியன், வலையன் என்னும் நாலகமணப்பிரிவுகள்.

பட்டம் - சேர்வைகாரன், முத்தரையன்(முத்தரசன்), அம்பல காரன், மழவராயன் (மழவரையன்),வன்னியன், மூப்பன்.

அளவன்

தொழில் - உப்பளத்தில் உப்புவிளைத்தல்.

பட்டம் - பண்ணையன், மூப்பன்.

இடையன்

பெயர் - அண்டன், ஆயன்(ஆன்வல்லவன்),இடையன், குடவன், கோவன் (கோன், கோனான்), கோவலன், தொறுவன், பொதுவன்.

தொழில்-ஆடுமேய்ப்பு, மாடுமேய்ப்பு,ஆனைந்து (பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்)விற்பு.

பிரிவு - தொழிற் பிரிவு: ஆட்டிடையன்,மாட்டிடையன் (ஆனாயன்).

குலப் பிரிவு : கல்கட்டி, பாசி முதலியஇருபது பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலக்காரன்,மந்திரி (மந்தையாரி), கீடாரி (கிடையாரி).

குலப்பட்டம் - கோன் (கோனான்),பிள்ளை, கரையாளன், சேர்வை, மணியக்காரன்,முக்கந்தன், மந்திரி.

"இடையனில் ஆண்டியு மில்லை,குயவனில் தாதனுமில்லை."

இருளன்

பெயர் - இருளர் (நீலமலை), வில்லியர்(செங்கழுநீர்ப்பட்டு தென்னார்க்காடுமாவட்டங்கள்), தேன் வன்னியர் (தேன்படையாட்சி), வனப் பள்ளியர்(வ.ஆ.மா.).

பிரிவு - புறமணப் (Exogamous)பிரிவுகள்.

பட்டம் - நாய்க்கன், பூசாலி (பூசாரி).

தொழில் - தோட்டவேலை, தேனெடுத்தல்,மீன் பிடித்தல்.

உடையான்

தொழில் - பயிர்த்தொழில்

பிரிவு - நத்தமான், மலைமான்,சுதர்மான், உடையான். ஒவ்வொன்றிற்கும் காணிஎன்னும் அகமணப் பிரிவுகளுண்டு.

பட்டம் - உடையார், நயினார், மூப்பன்,பண்டாரியார், பண்டாரத்தார், பாளையத்தார்,காவற்காரர்.

உப்பரவன் (உப்பளவன்)

பெயர் - உப்பிலியன்(தமிழ்நாடு),உப்பரன் (தெலுங்கு நாடு), உப்பாரன் (கன்னடநாடு).

தொழில் - உப்பு விளைத்தல்.

தலைவன் பட்டம் - பட்டக்காரன்.

குலப்பட்டம் - செட்டி.

உவச்சன் (பூசாரி)

தொழில் - காளிகோவிற் பூசை.

பிரிவு - மாராயன், பாண்டி முதலியஐம்பிரிவுகள்.

பட்டம் - புலவன்.

                                                                                                            தொடரும்..........................

Saturday, March 17, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

இடைத் தேர்தல் கடைசி கட்ட பிரசாரம் முடிந்தது , இனி வாக்கு பதிவும் எண்ணிக்கை மட்டுமே பாக்கி உள்ளது.

கலக்கல் கலிங்கப்பட்டி 

சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராம தான் இந்த கலிங்கப்பட்டி , கூடுதல் தகவல் , மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிறந்த ஊரும் இதுதான் ,
பல நாள்களாக ஆளும் கட்சி அதிமுக தேர்தல் பணிக்குழு இந்த கிராமத்தில் தங்கி வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுவந்தார்கள்.

பல நாள்களாக இந்த கிராம மக்களிடம் என்ன என்னமோ பேசி பார்த்தார்கள் , சினிமா நடிகர்களை கொண்டுவந்து காண்பித்தார்கள் , திமுக பெரும் தலைகள் , அதிமுக பெரும் தலைகள், தேமுதிக தலைவரும் மனைவி யும் வாக்கு சேகரித்து பார்த்தார்கள், இந்த கலிங்கப்பட்டி மக்கள் தீர்க்கமாக உள்ளூர் தலைவரான வைகோவின் மதிமுகவிற்கு வாக்கு என வாக்கு சேகரிக்கும் எதிர் அணியிடம் நேரடியாகவே சொல்லி விட்டார்கள் , இதை கேட்ட அதிமுக ஆளும் தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியோடு பணம் பட்டுவாடவை துவங்கியது .

கலிங்கபட்டியில் பணம் விநியோகம் செய்த அதிமுக நிர்வாகி 
பல முறை வாக்களர்களுக்கு பணம் கொடுத்தும் யாரும் வாங்குவதாக தெரியவில்லை ,நேற்று காலையில் ஒரு குடும்பத்தில் வலுகட்டாயமாக பணத்தை திணித்த அதிமுகவினரை காவல் துறையிடம் பிடித்து கொடுத்தார்கள் கலிங்கப்பட்டி கிராம வாசிகள் .அப்படியென்றால் கலக்கல் தானே . ஒரு அரசியல் கட்சி தலைவரின் ஊரிலே இவ்வளவு துணிந்து பணம் விநியோகம் செய்கிறார்கள் என்றால் தொகுதி முழுவதும் ??? திமுக திருமங்கலம் போர்முலவை மிஞ்சி விட்டது அதிமுக

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் 

சென்னை பல்லாவரம் அதிமுக வை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் இடைத்தேர்தல் பணிக்காக இன்று கலிங்கப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளார் .

பண பட்டுவாட செய்த அதிமுக கூட்டத்தோடு பிடிபட்ட பொது இவரும் உடன் இருந்து இருக்கிறார் , மக்கள் இவர் மீது பய . அந்த மக்களுக்கு இவர் யார் என்றே தெரியாது ,இவர் வைகோவின் வீட்டை நோக்கி ஓட , அங்கு இருந்த வைகோ மக்களை சமாதான படித்தி தாக்குதலில் இருந்து இந்த சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங்  அவர்களை காப்பாற்றி உள்ளார் , பின் காவல் துறை உதவியோடு இடத்தை களை செய்து விட்டார் , சமஉ

தாம்பரம் குபேர ஜெயசங்கர் 


யார் இந்த குபேர , இவர் யாருமில்லை கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம்பரம் நகராட்சி மதிமுக வேட்பாளராக களம் இறக்க பட்டவர் , கடைசி நேரத்தில் பணத்துக்கு ஏமாந்து அதிமுகவில் இணைந்து விட்டார்,முன்னாள் மதிமுக காரர் , இவர் அமைச்சர் டி.கே.எம். சின்னையா வின் கீழ் இடைதேர்தல் பணிக்காக கலிங்கப்பட்டி கிராமத்தில் பண பட்டுவாடவில் ஈடுபட்டுள்ளார் , கிராம மக்களிடம் பிடிபட்ட இவரை கூட்டத்தில் சிலர் தாக்கிவிட , இவரும் வைகோவை நோக்கி ஒடி தஞ்சம் புகுந்து உள்ளார் , முன்னாள் தலைவர் என்ற பாசத்தில் தலைவரே என்னை உங்க ஊர் பொது மக்கள அடைத்து விட்டார்கள் என வைகோவிடம் முறை இட்ட இந்த குபேர வை ,வைகோ மக்களிடம் இருந்து காத்து உள்ளார்.

அதிமுக தேர்தல் பணியாளர்கள் 

கலிங்கப்பட்டி வாக்காளர் களிடம் பணம் விநியோகம் செய்த அதிமுக தேர்தல் பணியாளர்கள் நிர்வாகிகளை கண்டித்தும் ,காவல் துறையிடம் பிடித்து கொடுத்தும் பொது மக்கள் செய்வதை பார்த்த ஒருவர் பொது மக்கள் மீது ஒரு அதிமுக நிர்வாகி தனது வாகனம் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட மக்களின் கோபம் அதிகமாக .அத்திரம் அடைந்த பொது மக்கள் அதிமுக வினர் மீது தாக்குதலை ஆரமிக்க சிதறி ஓடிய அதிமுக நிர்வாகிகள் .

அதிமுக நிர்வாகி ஒருவர் பெரிய சாக்கடையில் மீது இருந்த சிறிய பாலத்திற்கு கீழ் ஒழிய முற்பட்டு சாக்காட்டில் புரண்டு எழுந்து ஓடி விட்டார் .

மற்றொருவர் தங்கி இருந்த இடத்தில் கழிவறையில் ஒழிய முற்பட பொது மக்களிடம் பிடி பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்க பட்டார்

இன்னும் ஒருவர் ஊர் பொது மக்களுக்கு பயந்து கிணற்றில் குதித்து விட்டார் , அவரையும் கைப்பற்றி காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள்.

இன்னும் இரு அதிமுக நிர்வாகிகள் பணத்தோடு காட்டு வழியே ஓடு போனார்கள் , போனார்கள் வெறுமன போக வேண்டியது தானே ,காட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களிடம் பொய் , தங்கள் கையில் வைத்து இருந்த பணத்தை மறுபடியும் அவர்களிடம் கொடுத்து, இந்தாங்க அம்மா இதை வச்சிகொங்க ரெட்ட இலைக்கு ஓட்டு போடுங்க என கேட்க , அங்கு இருந்த பெண்கள் ஓன்று திரட்டு கையில் வைத்து இருந்த களைவெட்டிகளை காட்டி விரட்ட மீண்டும் ஓட்டம் பிடித்த அதிமுகவினர்.
மொத்தத்தில் கலிங்கப்பட்டி கலவர பூமியாக மாறிவிட்டது .

கோபால் சாமி 

இந்த கோபால்சாமி ,அதிமுகவை சார்ந்த ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,இவர்தான் இந்த கலிங்கப்பட்டி வட்டார இடைதேர்தல் பணி குழு விற்கு தலைமை இவர்தான் பொது மக்கள் மீது வாகனம் ஏற்ற முயற்சி செய்தவர் , ஆனால் இவர் தப்பித்து ஓடி விட இவரின் வாகன ஒட்டினர் மட்டும் மக்களிடம் மாட்டி கொண்டார் , தனது கட்சி தொண்டர்கள் , தன்னை நம்பி வந்த வெளியூர் கட்சி நிர்வாகிகளை நடு தெருவில் விட்டு விட்டு இவர் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார் ,வார பத்திரிக்கையில் இவரை பற்றி பெரிய நம்பிக்கையில் செய்தியெல்லாம் போட்டார்கள் வாக்கு சேகரித்து தருவார் என , பொது மக்களுக்கு பயந்து ஒட்டி விட்டார் இன்று .

தனது கட்சி தொண்டனுக்கே துணை போகத சட்டமன்ற உறுப்பினர் , தனது தொகுதியில் மக்களுக்கு எப்படி துணையாக இருப்பார் ???????

மக்களின் எழுச்சியில் மதிமுக வெல்லுமா ?

சங்கரன்கோவில் தொகுதி முழுவது மக்கள் பணத்திற்கும் , இலவசத்திற்கு மயங்க வில்லை , மக்களிடம் நல்ல ஒரு எழுச்சி தெரிகிறது , இந்த எழுச்சியில் மதிமுக வெல்லுமா வாக்குகளை அள்ளுமா என தெரியவில்லை ,

வாக்கு பதிவை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறலாம் , யார் வென்றாலும் பெரிய வாக்கு வித்தியாசம் ஓன்று இருக்காது போல தொகுதி நிலவரம் இருக்கிறது , ஆளும் கட்சி மீது பெரிய அதிருப்தி நிலவுகிறது , எந்த அளவிற்கு எதிர் அணிக்கு வாக்காக மாறும் என பொறுத்து இருந்து பார்ப்போம் , மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்கு அளித்தால் நிச்சியம் பம்பரம் கோட்டையில் சுற்றுவது உறுதி ...

                                                                                                         தொடரும்............................