Thursday, March 15, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கு , அரசியல் கட்சிகளும் ஓடி, ஓடி ஓட்டுகள் கேட்கிறது , தேர்தல் ஏற்பாடுகளும் ஜோராக நடக்கிறது , மக்களும் வாக்கு செலுத்தும் மன நிலைக்கு தயார் ஆகிவிட்டனர். நாமும் தொகுதி பக்கம் பார்ப்போமே.

அதிமுக 

அமைச்சர்கள் கூட்டத்தை ஏற்கனவே இறக்கி விட்டு இருந்தது , இப்போது பத்து மாநகராட்சி தலைவர்களையும் இறக்கிவிட்டி ,கட்சியின் தலைவியும் முதல்வரும் களத்தில் இருக்கிறார்கள் , மேலும் 100 க்கு மேலான சட்டமன்ற உறுப்பினர்களும் களத்தில் உள்ளார்கள்.பணமும் தாரளமாக அள்ளி விசுகிறது, அதிகார தோரணையும் அசத்தலாக இருக்கு.சின்ன சின்ன இயக்கங்களை கெஞ்சி ,கூட்டு சேர்த்து உள்ளார்கள் .வழக்கபோல சினிமா நடிகர்களும் உண்டு.

எப்படி உள்ளது இவர்களுக்கான செல்வாக்கு , கிராமங்கள் கடுமையாக எதிர்ப்புகளை கட்டுகிறது , மேலும் நகர்புறம் அமைதியாக இருந்தாலும் வலுவாக வாக்குகள் கிடைக்குமா என்ற பயம் வந்து விட்டது அதிமுகவிற்கு .

சில இடங்களை அமைச்சர்கள் மக்களால் அசிங்க படுத்த யுள்ளார்கள் , பல இடங்களின் வம்பு சண்டை இழுக்க தொண்டர்களை ஏவியும் விடபட்டுள்ளது ,

வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு கேட்டும் ,ஓட்டு போடுவார்கள என தெரியவில்லை. பணமும் அதிகாரமும் மிஞ்சி இருக்கே தவிர அனுசரணை இல்லை .

மதிமுக 

ஏற்கனவே சொல்லிவிட்டோம் போட்டி அதிமுக - மதிமுக தான் என , இவர்களின் பக்கம் நெடுமாறனின் இயக்கமும் , தமிழருவி மணியன் இயக்கமும் , பெரியார் திராவிட கழகமும் , சில இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து பரப்புரை செய்கிறார்கள் ,

இவர்களின் பலமே பேச்சு தான் பல பேச்சாளர்களை களம் இறக்க பட்டுள்ளார்கள் , பல பேச்சுலர்களும் களம் இறங்கி உள்ளார்கள் , அது என்ன பேச்சுலர்கள் , அதான் இணைய தள நண்பர்கள் , தொகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள் மறுமலர்ச்சி கழகம் .

ஒரு பக்கம் வைகோ , ஒரு பக்கம் அவர்களின் கொள்கை பரப்பு சம்பத் , மறுபக்கம் இன்னும் சில பேச்சாளர்கள் , என நல்ல முறையில் விளக்கமாக விவரங்களை எடுத்து வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள் .

வைகோ இந்த தொகுதி காரர் என்பதால் அனைத்து மக்களும் எளிதாக அருகில் வந்து பேசுகிறார்கள் என்பது உண்மை .மக்கள் மாற்றம் கொண்டு வரவேண்டும் என இவர்கள் வைக்கும் துணுக்கு நல்லவே எடுபடுகிறது .

மற்றபடி தொண்டர்களுக்கு சரக்கு பிரியாணி சம்பளம் இது எதுவும் இல்லாமல் ஒரு பண்புள்ள பிரசார உத்திகளை கடைபிடிக்கிறார் . வெற்றி பெறுவார்களா என்றால் இன்னும் இவர்களின் உழைப்பை பொருத்து அமையும் . இறுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் .

ஒரே ஒரு சிக்கல் இவர்களின் பிரச்சாரம் திமுக விற்கு சாதகமாக வாக்குகளை பெற்று தந்து விட கூடாது.

திமுக 

எதோ குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி , முன்னாள் அமைச்சர்கள் இன்னாள் ச.ம.உ கள் , வழக்கபோல சினிமா கவர்ச்சி , பண பலம்,மிரட்டல் போற்றவை துணை கொண்டு களத்தில் இருக்கு ,நோண்டி மாடு காங்கிரஸ் யும் , சமந்தமே இல்லாமல் வி சி க வும் கூட இருந்து தொல்லைகள் தான் அதிகம்.வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கிறார்.

இவர்களின் குறி அதிமுக அல்ல , மாறாக மதிமுக தான் என்பது நல்லாவே மக்களுக்கு தெரிந்து உள்ளது , இவர்களின் முன்னாள்கள் மக்களிடம் வாங்கி கட்டியது தான் மிச்சம் வேறு எந்த பலனும் இல்லை . கடைசி நேரத்தில் பணத்தை வீச்சி மனம் காக்க பாடு படுவார்கள் போல.

தேமுதிக 

விசயகாந்த் குடும்பத்தோட பிரசாரத்திற்கு கிளம்பி விட்டார்கள் , வழக்கம் போல காமெடி காட்சிகள் தான் நிறைந்து இருக்கும் , இவர்களும் திராணிய நிறுவிக்க அனைத்து ச ம உ களையும் இறக்கி விட்டார்கள் , என்ன பயன் யாருக்கும் தேக்க வடக்க தெரியவில்லை , இவர் அதிமுகவிற்கு தான் சாவல் விடுவார்கள் என பார்த்தால் பொது மக்களுக்கு கூட சவால் விடுகிறார் விசயகாந்த்.வேட்பாளர் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கிறார்.

     
மொத்தத்தில் ஆளும் கட்சி வெற்றியின் ஒரு பக்க கயிறை இழுத்து கொண்டும் , சொந்த தொகுதி கட்சி மறுபக்க கயிறை இழுத்து கொண்டும் இருந்தாலும் இன்றைய நிலையில் ஆளும் கட்சி பக்கம் வலுவாக இழுக்க படுகிறது ,
மக்கள் மாற்றம் விரும்பினால் கயிறு பம்பரத்தை சுற்றி விட்டு விடும் என தெரிகிறது , எல்லாம் வாக்களர்களின் கையில் இருக்கு ...

                                                                                                               தொடரும்.......................

Wednesday, March 14, 2012

நாம் யார் -29

பாகம்-28 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

குலங்கள் தோன்றிய வகைகள்

ஆரியர் (பிராமணர்) வருமுன் தோன்றிய குலங்களெல்லாம் தொழில் பற்றியனவே யாம்.

நானிலத் தொழில்

மருதம் - உழவர், முல்லை - ஆயர், குறிஞ்சி - வேட்டுவர்,  நெய்தல் - மீன் பிடியர் (நுளையர்).

முதன் முதல் தோன்றிய குலங்கள் இந்நால்வகைத் தொழில் வகுப்புகளே. இந் நான்கும் உணவு பற்றியனவே.

ஐந்தாம் (நிலையில்லா)நிலத்தொழில்-கவர்வு

முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் வற்றி வறண்ட தனால், அங்குள்ள வேட்டுவர் ஆறலைப்போரும் சூறை கொள்வோருமாக மாறி அம்பெய்வதால் எய்நர்(எயினர்) என்றும், மறமிகையால் மறவர் என்றும்பெயர் பெற்றனர்.

மருதநிலத் தொழில் நான்கு

மருதநில மக்கள்தொகை பெருகிய பின், பண்டமாற்றிற்கு வணிகரும், வழக்குத் தீர்ப்பிற்கும் காவற்கும் ஊர்க்கிழவரும் (தலைவரும்), நோய் நீக்கவும் மழை பெய்விக்கவும் தெய்வத்தை வேண்ட உவச்சனும் (பூசாரியும்), உழவரினின்று பிரிந்தனர்.

ஊர்க் கிழவரே அரசர் குலத்தொடக்கம். ஆட்சிப் பரப்பு விரிய விரிய,வேளிரும் மன்னரும் கோக்களும் வேந்தரும் முறையே தோன்றினர்.

முதற்காலத்தில், நானிலத்திற்கும் பொதுவான பண்டமாற்று மருத நிலத்திலேயே நிகழ்ந்தது. பின்னர் நீர்வாணிகம் தோன்றியபின் நெய்தல் நிலத்திலும் நிகழ்ந்தது.

மருதநிலத்திற் போன்றே ஏனை நிலங்களிலும் குடியிருப்புத் தலைவரும் தேவராளரும் (பூசாரிகளும்) தோன்றினர்.

உவச்சர் வகுப்பினின்றே, நாளடைவில் புலவரும் ஆசிரியரும் துறவியரும் முனிவரும் முதன்முதலாகத் தோன்றினர். கல்வி, உலகியலும்மதவியலும் என இரண்டாகப் பிரிந்தது.

மருதநிலப் பேரூர்ப் பதினெண்கைத்தொழில்கள்

மருதநிலப் பேரூர்களில், உழவிற்குப் பக்கத் துணையாகப் பதினெண் கைத்தொழில்கள் படிப்படியாகத் தோன்றின. பிற நிலக்குடியிருப்புகளிலும், அவ்வந் நிலத்திற் கேற்றவாறு சில கைத் தொழில்கள் தோன்றின.

பற்பல கைத்தொழில்கள்

திணைமயக்கம் ஏற்பட்டபின், நானிலமக்களும் மருதநில நகரங்களிலும் நெய்தல் நிலப்பட்டினங்களிலும் அமர்ந்து, பல்வேறு கருவிப் பொருள்களைக் கொண்டு நாகரிக வாழ்க்கைக் கேற்ற பற்பல தொழில்களைச் செய்து வந்தனர்.

தொழிற் பிரிவுகள்
நாகரிகமும் மக்கள் தொகையும் மிகுந்த பின், எல்லாத் தொழில்களும் அல்லது வகுப்புகளும் இரண்டும் பலவுமாகப் பிரிந்தன.

பெயர் மாற்றங்கள்

மக்கள் பெருநிலப் பரப்பில் படர்ந்து பரவினபின், ஒரே வகுப்பார்க்கே இட வேறு பாட்டால் பெயர் வேறுபாடு ஏற்பட்டது.

தொழில்கள் நிகழும் வகைகள்

விளைப்பு, வளர்ப்பு, பிடிப்பு, தொகுப்பு, புணர்ப்பு, செய்வு, பிரித்தெடுப்பு, பண்டமாற்று, நிலைமாற்று, காப்பு (மாந்தன் காப்பு, தெய்வக்காப்பு) , ஆள்வு, செப்பனீடு, விலக்கு, வாழ்விப்பு, இன் புறுத்தம், ஆய்வு, அறிவிப்பு, உய்ப்பு, உடலுழைப்பு, அழிப்பு முதலியன.

குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள்

(1) நிறம் - வெள்ளாளன் (வெண்களமன்), காராளன் (கருங்களமன்), இருளன்.

(2) இடம் - சோழிய வேளாளன், ஆர்க்காட்டு முதலி, மலையாளி.
திசை - தென்றிசை வெள்ளாளர், மேல்நாட்டான்.

(3) குடியிருப்பு - கோட்டை வெள்ளாளன், தெருவான் (சேரநாட்டுச் சாலியன்).

(4) ஊண் - சைவ (மரக்கறி) வெள்ளாளன், புலையன், தவளை தின்னி (பறையன்).

(5) உடை - தண்டப்புலையன், குளிசீலையாண்டி (கோவணாண்டி).

(6) அணி - பவளங்கட்டி (கொங்கு வெள்ளாளர்). 

(7) தாலி - சிறுதாலி மறவர், ஐந்தாலி (அஞ்சாலி)யிடையர்.
கொண்டைமுடிப்பு-கொண்டை கட்டி வேளாளர்.

(8) கோலம் - பச்சைகுத்தி (குறவர், வேளாளர்), நீறுபூசி (வெள்ளாளன்). 

(9) முதற்கருவி - பொற்கொல்லர், வெண்கலக் கன்னார்.

(10) கருவி - வில்லி, வலையன்.

(11) கருவியளவு - சிறுபாணர், பெரும்பாணர், சின்ன மேளம், பெரியமேளம் (மேளகாரர்).

(12) பண்டமாற்றுப் பொருள் - கூல வாணிகன், இலை வாணியன், எண்ணெய்   வாணியன்.

(13) தொழிற்பிரிவு - தீக்கொல்லன், இரும்புக்கொல்லன், கடைச்சற் கொல்லன்.

தொழில்நுட்பம் - கண்ணுளர், கணிகையர்.

தொழில் வேறுபாடு - கோலியன்.

தெய்வப்பற்று - தேவகணிகையர் (கோவிற் கணிகையர்).

திருத்தொண்டுவகை - பூவாண்டிப் பண்டாரம், உப்பாண்டிப்பண்டாரம்.

பண்பு - மறவன்.

அலுவல் - கணக்கன்.

கல்வி - புலவன், பண்டாரம், ஓதுவான்.

முன்னோர் பதவி - முதலியார் (படைமுதலியார்).

முன்னோர் பட்டம் - முதலி, முதலியார், பிள்ளை.

முன்னோர் வெற்றி - களம் வென்றார்.

முன்னோர் இடம் - செம்பியன் நாட்டார்.

முன்னோர் தொழில் - செங்குந்தர்.

முன்னோர் செயல் - முதுகர் (முதுவர்).

முன்னோர் பெயர் - திருவள்ளுவன் (வள்ளுவன்), வாணர்.

ஒழுக்கம் - பரத்தையர், திருமுடிக் கவுண்டர்.

சடங்கு - பன்னிரண்டு நாள்(பள்ளி).

வழக்கம் - பந்தல்முட்டிப் பள்ளி, கைகாட்டி (கணக்கன்), துருவாளர்.

நிகழ்ச்சி - பன்னிரண்டாம் செட்டி.

கதை - கார்காத்தார்.

பட்டம் - உடையான்.

பிரிவுப்பெயர் - இல்லத்துப்பிள்ளை.

முறைப்பெயர் - அம்மாப்பள்ளர், ஆத்தாப்பள்ளர்.

இடமாற்றமும் முன்னோர் செயலும் - பழியர்.

இடமாற்றமும் பெயர் மாற்றமும் - தேன்வன்னியர் (தென்னார்க்காட்டு இருளர்).

இடவேறுபாடும் பெயர் வேறுபாடும் - பரவர், பட்டணவர்,செம்படவர்.

தொகை - ஆயிர வணிகர் (வைசியர்), ஐஞ்ஞூற்றான் (பாணன்).

சின்னம் - ஆனை, ஆந்தை, காடை (கொங்கு வெள்ளாளர்).

விலங்கு பேண்வு - பாகர், வாதுவர் (குதிரை).

விலங்கு பிடிப்பு - நரிக்குறவன்.

விலங்குத்துணை - நாயாடி (வேட்டுவன்), எருதாண்டி.

கலப்பு - மேளகாரன் (இசைவேளாளன்), இளமகன்.

கிளை - சவளக்காரன், காவற்காரன்.

தொகுதி - முக்குலத்தார், அம்பல(க்)காரன்.

மதம் - சிவனியர்(சைவர்), திருமாலியர்(வைணவர்).

மதமாற்றம் - சமணர், பவுத்தர், கிறித்தவர், முகமதியர் (துலுக்கர்).

மதப்பிரிவு - பழஞ்சவையர் (Roman Catholic), சீர்திருத்தச் சவையர் (Protestant).

தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு).

செல்வம் - ஒற்றைச்செக்கான் (வாணியன். இரட்டைச் செக்கான் (வாணியன்).

கட்சி - வலங்கை, இடங்கை (பணிசெய்வோன்).

இடமாற்றம் - குன்னுவர், முதுவர், பச்சைமலையாளியர்.

வரிசை - கடையர்.

அரசன் பெயர் - தொண்டைமான்.

இரப்பு - நோக்கன், பொன்னம்பலத்தார், முடவாண்டி.

                                                                                                               தொடரும்.....................

Tuesday, March 13, 2012

நாம் யார் -28

பாகம்-27 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேவாரப் பதிகங்கள் 

அப்பர், சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரப் பதிகங்கள் மொத்தம் 96,000 என்று சொல்லப்படுகின்றது. இன்று கிடைத்திருப்பவை 796. இவற்றுள் ஒரு சிலவே இராசராசன் காலத்தில் கோவில்களில் பாடப்படும் வழக்கிலிருந்தன.  ஏனைய வற்றின் ஏடுகளையெல்லாம் பிராமணர் தொகுத்து, தில்லையம்பலத்தில் ஓர் அறைக்குளிட்டுப் பூட்டிவிட்டனர். இராசராசன் இம்மருமத்தை யறிந்து, அவ்வறையைத் திறக்கச் சொன்னான். கோவில் சொத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த தில்லை வாழந்தணர் என்னும் மூவாயிரம் பிராமணரும் மறுத்துத் தடுத்தனர். இராசராசன் ஒரு சூழ்ச்சிசெய்து திறந்தான் சிதல் அரித்த ஓர் ஏட்டுக் குவியல் காட்சியளித்தது.  இக்காலத்திற்கு வேண்டியவற்றை மட்டும்வைத்துக்கொண்டு, வேண்டாத வற்றை யெல்லாம் யாமே சிதலரிக்க   விட்டேம்" என்று ஒரு வானுரை யெழுந்தது! 'சூத்திர' வேந்தன் நிலத்தேவரை ஒன்றும்செய்ய இயலவில்லை. 

மூவேந்தர் ஆரிய அடிமை 

கடைக்கழகக் காலத்திலேயே, மூவேந்தரும் வேள்வி மதத்தைத் தழுவி ஆரிய அடிமைகளாய்ப் போய்விட்டதனால், இந்தியாமுழுவதையும் நிலையான ஆரிய அடிமைத்தனத்துள் அமிழ்த்துதன் பொருட்டு, நால்வரண வொழுக்கத்தை நிலை நிறுத்தும் மனுதரும சாத்திரம் என்னும் குலவொழுக்க நூல் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலும் ;கோவிலமைப்பு,  வழிபாட்டு முறை, போற்றியான்(அருச்சகன்) தகுதி, கொண்முடிபு (சித்தாந்தம்),தெய்வச் சிறப்பு, வழிபாட்டின் பயன் முதலியவற்றைவிளக்கிக் கூறும் ஆகமம் என்னும் வழிபாட்டு மறை கி.பி. 6ஆம் நூற்றாண்டிலும் சமற்கிருதத்தில் இயற்றப்பட்டுவிட்டன. சிவனிய ஆகமங்கள் காமிகம் முதல் வாதுளம் வரை 28. காளிவழிபாட்டு மறையைத் தந்திரம் என்பர்.

"தந்த்ரங்கள் ,ஸம்ஹிதை, ஆகமம், தந்த்ரம் என மூவகைப்படும். அவற்றுள் ஸம்ஹிதைகள் வைஷ்ணவர்களாலும், ஆகமங்கள் சைவர்களாலும், தந்த்ரங்கள் சாக்தர்களாலும் போற்றப்படுகின்றன. அவை முற்றிலும் வைதிகக் கொள்கைகளைப் பின்பற்றியன எனக் கூறுதற்கு இடம் இல்லை. அவை தீக்ஷை கொண்டு ஆசிரியனிடமிருந்து கொள்ளத்தக்கன. தந்த்ரங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின்னரே உண்டாயின என்பர்.

ஆகமம் என்னும் சொல்லே, புதிதாக வந்தது அல்லது தோன்றியது என்பதுதான் பொருள்.  எல்லாவகையிலும் ஆரியத்தை எதிர்க்கக்கூடிய தமிழநாகரிகக் கோட்டையான தென்னாடு பிடிபட்டுப்போகவே, இந்தியா முழுதும் மதத்துறையிலுங் குலத்துறையிலும் ஆரிய வயப்பட்டுவிட்டது. பிராமணப்பூசகனே சமற்கிருதத்தில் போற்றி செய்வது, தமிழ்நாட்டுக் கோவில் மரபாயிற்று.

முதற் பராந்தகச் சோழன் (கி.பி.907-953),வேதம் வல்ல பிராமணர்க்கு வீரநாராயணபுரம் முதலிய ஊர்களை முற்றூட்டாகக் கொடுத்து, பொற்கருப்பைத்தானமும் ஆள்நிறைப் பொன் தானமுஞ் செய்தான்.ஆற்றூர் (ஆத்தூர்), திருத்தவத்துறைக் (லால்குடி) கோவில்களில், பூசைவேளையில் திருப்பதிகம் ஓதப்பிராமணரை அமர்த்தினான்.

முதலாம் இராசராசன் (கி.பி.958-1014) கட்டின தஞ்சைப் பெருவுடையார் கோவிற் கோபுரம்,தாசுமகால் இந்தியாவிற்குத் தருவதினும் பல மடங்கு பெருமை தமிழகத்திற்குத் தருவதாகும். ஆயின் அவனும் அடிமை யானதனால்,  சோழ மார்த்தாண்டசதுர்வேதி மங்கலம் என்னும் திருவியலூரில், ஆள்நிறைப் பொன் தானஞ் செய்தான். அவன்தேவியும் பொற்கருப்பைத் தானஞ் செய்தாள். அவனுக்குக் குருக்களா யிருந்தவர்கள் இலாடம் ( வங்கநாட்டின் ஒரு பகுதி ), காசி ,காசுமீரம் முதலிய வடநாடுகளிலிருந்துவரவழைக்கப்பட்ட பிராமணர்கள். அவர்கள் பெருமடத் தலைவர்களாயிருந்து அரசியலில் மிகுந்தசொற்செல்வு பெற்று விளங்கினர்.

இராசராசன் மகனான முதலாம் இராசேந்திரனும் (கி. பி.1014-42) தஞ்சைப் பெரியகோவிலில் பூசைசெய்து வந்த தன் குருவாகிய சர்வசிவ பண்டிதருக்கும்,  ஆரிய நாட்டிலும் மத்தியநாட்டிலும் கௌட (வங்க) நாட்டிலுமிருந்த அவர் மாணவருக்கும், ஆண்டு தோறும் ஈராயிரங் கலம் நெல் குரவ நுகர்ச்சியாகக் (ஆசாரிய போகமாகக்) கொடுக்குமாறு கட்டளை பிறப்பித்தான்.

கி.பி.1034-ல், எண்ணாயிரம் என்னும்இடத்தில், 300 பிராமண மாணவரும் 10 பிராமணஆசிரியரும் கொண்ட ஓர் இலவச மறைநூல் விடுதிக்கல்லூரி கட்டித் தானஞ் செய்தான்.

வீரராசேந்திரச் சோழன் (கி.பி.1062-67) திருமுக்கூடல் என்னுமிடத்தில், பிராமண மாணவர்க்கு வேதமும் பிறநூற் கலைகளும் கற்பிக்கு மாறு, மருத்துவசாலையொடு கூடிய ஓர் இலவசவிடுதிக் கல்லூரியைக் கட்டிக் கொடுத்தான்.

மூன்றாங் குலோத்துங்கன் (கி.பி.1178-1218) திருவொற்றியூரிற் பிராமண மாணவர்க்குப் பாணினீயம் கற்பிக்குமாறு, வியாகரண தான வியாக்கியான மண்டபம் ஒன்று அமைத்து, அதற்கு 60 வேலி நிலங்கொண்ட குலோத்துங்கன் காவனூர் என்ற ஊரை இறையிலியாக்கினான். அவன் குருவும் இலாட நாட்டுப்பிராமணரே.

பல கோவில்களில் துலாபார மண்டபம் என்றே ஒன்று கட்டப் பட்டிருந்தது. துலாபாரம் என்று ஒரு வரியும் குடிகளிடம் வாங்கப்பட்டது. சோழர்போன்றே பாண்டியரும் ஒழுகினர். சேரரைப் பற்றிச்சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம் குடிகள் பொதுப்பணம், தமிழும் தமிழனும் தளரவும்,பிராமணனும் பிராமணியமும் வளர்ந்தோங்கவும் வாரியிறைக்கப்பட்டது.

கடுங்கோன், காய்சினவழுதி, இளஞ்சேட்சென்னி, நெடுங் கிள்ளி, மாவலி, உதியஞ்சேரலாதன் என்றிருந்த அரசர் தனித்தமிழ்ப் பெயர்களெல்லாம் ஜடில பராந்தகன், விஜயாலயன், பாஸ்கர வர்மன் என வடசொற்பெயர்களாக மாறின.

பாண்டியர் பெயருக்கு முன் மாறவர்மன்ஜடாவர்மன் என்பனவும், சோழர் பெயருக்கு முன் ராஜகேசரி பரகேசரி என்பனவும் அடைமொழிகளாகச் சேர்க்கப்பட்டன.

அரசர் மெய்க்கீர்த்திகள் ஸ்வஸ்திஸ்ரீ என்று தொடங்கின. இடையிடை சமற்கிருதச் சொற்கள் கலந்தன. முன்னும் பின்னும் சமற்கிருதச் சொலவங்களும் (சுலோகங்களும்) அமைந்தன.

சமற்கிருதச் சொற்களும் சொலவங்கள் போன்றே கிரந்த எழுத்தில் வெட்டப்பட்டன. கல்வெட்டுச் சிலாசாசனம் என்றும், செப்பு வெட்டுத் தாமிரசாசனம் என்றும் பெயர் பெற்றன.

மதத்துறை போன்றே மற்றத்துறைகளிலும் மூவேந்தரும் பிராமணர்க்கு எடுப்பார்கைப் பிள்ளைக ளாயினர். தமிழ் சமற்கிருத வார்ப்பகத்தில் வார்க்கப்பட்டது. வடசொல் மிகுந்து, கொச்சை வழக்கும் இலக்கண வழுக்களும் புகுந்து, தமிழ்ப் புலவர் கைகடந்து, பகைவர் ஆட்சிக்குட்பட்டுவிட்டது. அரைகுறையா யிருந்ததும்,தஞ்சை மராட்டிய மன்னராட்சியிலும் நிரம்பிவிட்டது. தஞ்சைச் சரபோசி மன்னர், தம் 'சரசுவதி மகால்' என்னும் கலைக்கூடத்தில் தொகுத்துள்ள 22,000-ற்கு மேற்பட்ட பொத்தகங்களுள் பெரும்பாலன சமற்கிருதமே.

கடைக்கழகக் காலத் தொழிற்குலங்கள்

அகவர் (சூதர்) , அங்காடி வணிகர்( நாளங்காடி வணிகர், அல்லங்காடி வணிகர்), அச்சுக்கட்டிகள் , அடியோர் , அண்டர் (இடையர்) , அரசர் (கிழவர், வேளிர், மன்னர், கோக்கள், வேந்தர்), அளவர், ஆட்டு வாணிகர், ஆயர் (கோவலர், கோவர்), ஆறலைகள்வர், இராக்கடைப் பெண்டிர் (தெருப் பொதுமகளிர்), இயவர் (இசைக்கருவியாளர்) ,இலைய முதிடுவார் (இலை வாணியர்), உமணர், உழவர் (கடையர்), உறைகாரர், எயினர், எலிமயிர்நெசவர்,ஓசுநர் (மீகாமர்), ஓவர் (மாகதர்),  கடம்பர், கடிகையர் (நாழிகைக் கணக்கர்), கண்ணுளர், கண்ணுளாளர் (சித்திரகாரர்), கணிகையர் (நாடகக்கணிகையர், கோவிற் கணிகையர்), கணியர், காலக்கணிதர் , கம்மியர் (கம்மாளர்), களமர் (கருங்களமர், வெண்களமர்),  கன்னார் (செப்புக் கன்னார், வெண்கலக் கன்னார்), காழியர் (பிட்டுவாணிகர்), கானவர், கிணைவர் (கிணைப் பொருநர்), கிழியினும் கிடையினும் பல தொழில் செய்வார், குயிலுவர் (தோலிசைக் கருவிகள் செய்வோர்), குறவர், குன்றவர், குறும்பர், கூத்தர், கூலவாணிகர், கூவியர் (அப்ப வாணிகர்), கொல்லர், கோடியர்(கழைக்கூத்தர்), சங்கறுப்போர், சாக்கையர், சாலியர் (நெசவர்) ,  தச்சர்,  துடியர்,தேர்த்தச்சர், தையற்காரர் (துன்னகாரர்,சிப்பியர்), நுண்வினைக் கம்மியர், நுளையர்,பட்டினவர் (மீன்விலைப் பரதவர்), பட்டுச்சாலியர், படையுள் படுவோன் (சின்னமூதி), பரதர்(செட்டிகள்), பரதவர் (பரவர்), பரத்தையர் (இற்பரத்தையர், சேரிப்பரத்தையர்),  பழையர் (கள்விற்கும் வலையர்), பறம்பர் (தோலின் துன்னர்), பறையர் (பறையறைந்து விளம்பரஞ் செய்வோர்), பாசவர் (ஊன் விற்போர்) , பாணர் (இசைப்பாணர்,குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர்), பார்ப்பார், புலையர் , பூ விற்பார், பொருநர் (ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர்), பொன்வாணிகர், மணவர் (வாசவர்), மணிகோப்பார், மணிநகைத் தட்டார், மரக்கலக் கம்மியர், மழவர் (மழநாட்டு மறவர்), மறவர் (பாலை வாணர்), மாலைக்காரர், வண்ணார், வயிரியர் (ஒருவகைக்கூத்தர்), வலைஞர், வள்ளுவர் (அரசர் விளம்பரப்பறையர்) , விலைமகளிர் (சிறுவிலை மகளிர், பெருவிலைமகளிர்),

பார்ப்பார் என்னும் தமிழ்ச்சொல்,கடைக்கழகக் காலத்தில் இல்லறத் தாரான பிராமணர்க்கே வரையறுக்கப்பட்டு விட்டது.சிறப்பாகத் துறவியரைக் குறிக்கும் அந்தணர் என்னும் தமிழ்ச் சொல்லும், முதற்கண் பிராமணப்போலித் துறவியர்க்கு வழங்கி, பின்னர் இல்வாழ்பிராமணர்க்கும் வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு தொழில் முறையில் பகுக்கப்பட்டது பின்னளில் சாதிகளாக மாறிவிட்டது .             
                                                                                                         தொடரும்.........................

Monday, March 12, 2012

நாம் யார் -27

பாகம்-26 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

களப்பாளர் (களப்பிரர்) ஆட்சி

(தோரா. கி.பி. 300-590)

கடைக்கழக முடிவிற்குப்பின் பாண்டிநாட்டை முந்நூற்றாண்டு ஆண்ட, களப்பாளர் வடநாட்டினின்று வந்தவ ரென்றும், பல வகுப்பினரென்றும், பலவாறு சொல்லப்படுகின்றது. அவர் பல வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதி பிராமணர்க்கு அளித்த வேள்விக்குடிப் பட்டையத்தை மறுத்ததனாலும்,  முருக வழி பாட்டினர் என்று சொல்லப்படுவதனாலும், தமிழராகவும் இருந்திருக்கலாம். களப்புதல் = காடு வெட்டித்திருத்துதல். நெல்லை மாவட்டத்திற் சங்கரநயினார் கோவில் வட்டத்தில், களப்பாளர்குளம் என்று ஓர் ஊர் உள்ளது. களப்பிலார் என்பதுகள்ளர் வகுப்பாரின் பட்டங்களுள் ஒன்றாக இருக்கிறது.

பல்லவர் ஆட்சி (சோழநாடு)
(கி.பி.4ஆம் நூற்.- 9ஆம் நூற்.)

பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) 
590 - 920
சோழர் ஆட்சி (சோழநாடு) 
850 - 1279
(சோழபாண்டிநாடுகள்) 
920 - 1190
பாண்டியர் ஆட்சி (பாண்டிநாடு) 
1190 - 1310
மாலிக்குகாபூர் தமிழ்நாட்டுக்கொள்ளையடிப்பு 
1310
மதுரைச் சுலுத்தானியம் 
1329-1377
செஞ்சி - 
(1) நாயக்கர் ஆட்சி 1476-1639
(2) முசல்மானர் ஆட்சி 1639-1659
(3) பீசபூர்-மராத்தியர் ஆட்சி 1677-1690
(4) முசல்மானர் ஆட்சி 1690-1698
(5) பிரெஞ்சியர் ஆட்சி 1750-1761
(6) ஆங்கிலர் ஆட்சி 1761-1947
மதுரை - 
(1) நாயக்கர் ஆட்சி 1529-1736
(2) முகமதியர் ஆட்சி 1736-1772
(3) ஆங்கிலர் ஆட்சி 1772-1947
தஞ்சை - 
(1) நாயக்கர் ஆட்சி 1532-1675
(2) மராட்டியர் ஆட்சி 1675-1855
(3) ஆங்கிலர் ஆட்சி 1855-1947 

சேரநாட்டு அரசர்கள்

கடைக்கழகக் காலத்திலேயே, மேலைச்சேரநாடாகிய குடமலை நாடு, தென்வடலாக வேணாடுகுட்டநாடு ,பொறைநாடு குடநாடு ,கொண்கானநாடு எனப் பலபிரிவுகளைக் கொண்டிருந்தது. அவற்றுள் கொண்கானநாட்டை நன்னனும், ஏனையவற்றை உதியன் மரபினரும், பொறையன் மரபினருமான இருவேறு சேரர்குடிக்கிளையினரும் ஆண்டுவந்தனர்.

கீழைச் சேரநாடாகிய கொங்குநாட்டின் தென்பகுதியான தகடூர் நாட்டை, அதிகமான் மரபினரான சேரர்குடிக் கிளையினர் ஆண்டு வந்தனர். வடபகுதியின் மேற்பாகத்துக் குடகுநாட்டைக் கோசரும், எஞ்சிய பாகத்தை எருமையூரன் ,இருங்கோவேள் ,கங்கர் கட்டியர் ஆகியோரும்ஆண்டுவந்தனர்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மேலைச்சேரர்குடிக் கிளைகள் நேர்வழித் தொடர்ச்சியற்றன. அதன் பின், பெருமாள் மரபினர் சிலர் ஆண்டு வந்தனர். அவருள் மூவர் குறிப்பிடத்தக்கவர்.

முதலாம் சேரமான் பெருமாள் (667 - 712)

இவர் பெருமாக் கோதை என்னும் இயற்பெயரையும் கழறிற் றறிவார் என்னும் சிறப்புப் பெயரையும் உடைய சிவனடியார்.

நாலாம் குலசேகரப் பெருமாள் (754 - 98)

இவர் குலசேகராழ்வார் என்னும் திருமாலடியார்.

இரண்டாம் சேரமான்பெருமாள் (798 - 834)

இவர் ஓர் 'இசலாம்' அடியார். நாட்டைப்பன்னிருவர்க்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு மெக்கா சென்றுவிட்டார். 

பன்னிரு நாடுகளாவன :

(1) கோழிக்கோடு 

(2) வள்ளுவநாடு 

(3) கொச்சி 

(4) திருவிதங்கூர்(திருவதங்கோடு) (10)பெய்ப்பூர்

(5) குறும்பரநாடு 

(6) கோட்டயம் 

(7) சிரக்கல்

(8) கடத்தநாடு

(9) பாலக்காடு

(10)பெய்ப்பூர்

(11) பரப்பநாடு (ஒரு பகுதி)

(12) பரப்பநாடு (மற்றொருபகுதி)

சேரநாட்டுத் தமிழ், 10ஆம்நூற்றாண்டிற்குப் பின் கொடுந் தமிழாகத்திரிந்து, 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் திரவிடமாக மாறிவிட்டது. சேர (சேரல) நாடும் மொழியும் கேரளம் எனப்பட்டன.

சேரல்-சேரலம்-கேரளம்.

கொங்குநாட்டு அரசுகள்

அதிகர் (அதிகமானர்) , கங்கர், கட்டியர் என்னும் மும்மரபினரும், கடைக் கழகக்காலத்திலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை,பேரரசர்க்கு அடங்கியும் அடங்காதும்,கொங்குநாட்டின் பகுதிகளை ஆண்டு வந்தனர்.

சோழர் ஆட்சி - 1004-1303

இடையிற் பாண்டியர் மீயாட்சி - 1265-1300

சோழராட்சிக்குப் பின், கேரளராட்சியும் ,ஒய்சளராட்சியும் விசயநகர நாயக்கராட்சியும் ,உடையாராட்சியும், ஐதரலிதிப்பு சுலுத்தானாட்சியும் சில சில காலம் நடைபெற்றன.

ஆங்கிலராட்சி-1799-1947

இந்திய விடுதலையும் ஒன்றியமும் (Union)(1947).

கேரள நாட்டுச் சிற்றரையங்களும்இந்திய ஒன்றியத்திற் கலந்தன.
   
                                                                                                                தொடரும் .....................

Saturday, March 10, 2012

நாம் யார் -26

பாகம்-25 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பழந்தமிழ் வேந்தரைப் பழித்தல்

மாவலி என்பவன் பாரதக் காலத்திற்குமுற்பட்டுச் செங்கோலாட்சி செய்த மாபெரும் சேர வேந்தன். சேர நாட்டுத் தமிழரின் பின், அவர் வழி யினரான மலையாளியர், இன்றும் அவ் வேந்தனைஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியாய்க் கொண்டாடி வருகின்றனர். பிராமணர் அவனை ஓர்அசுரனாக்கி, அவன் திருமாலால் கொல்லப்பட்டதாகக் கதையுங் கட்டிவிட்டனர்.

மாவலியின் மகன் பிள்ளை பேர்த்தியான உழை, கண்ணபிரானின் மகன் பிள்ளை பேரனான அநிருத்தனை மணந்தாள்.மாவலியின் மரபில் வந்த சீர்த்தியை, கோவலன் காலத்துக் கிள்ளிவளவன் மணந்தான். சோழநாட்டின் ஒரு பகுதியான நடுநாட்டை 14ஆம் நூற்றாண்டுவரை, வாண கோவரையர் என்னும் மாவலி மரபினர் சிற்றரசராக இருந்த ஆண்டுவந்தனர்.

வடநாட்டிலும் தென்னாட்டிலும் பலஅரசரும் அறிஞரும் பிராமணியத்தை எதிர்த்ததனால், அசுரன் என்னுஞ் சொற்குக் கொடியவன் என்னும்பொருளை ஊட்டிவிட்டனர்.

தமிழர் ஒற்றுமைக் குலைவு

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்,ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக்காரிக்கண்ணனார், மூவேந்தர்க்குள்ளும் ஓரளவு ஒற்றுமை யிருந்த கடைக்கழகக் காலம்வரை, அந்நியர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முடியவில்லை. அதன் பின்னரே,ஒன்றன் பின் ஒன்றாகப் பல அயலாட்சிகள் தோன்றி, மூவேந்தரும் மறைந்தனர். அன்று மூவேந்தர் ஒற்றுமையைக் குலைத்த ஏஎதிரிகள் கூட்டம்,இன்றும் தமிழரிடையிருந்து ஒற்றுமையைக் குலைத்துவருகின்றது.

நடுநிலை திறம்பல்

தானங்களெல்லாம் பிராமணர்க்கே செய்யப்பட்டன.  தாமப்பல் கண்ணனார் சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பிராமணர்க்குத் தனிச் சலுகை காட்டியுள்ளான் .

தமிழ்க்கு இழிவு 

தமிழ் வழிபாட்டிற்கும் சடங்கிற்கும் தகாத மொழியென்று தள்ளப்பட்டது.

பிராமணர் தமிழகம் வந்து தமிழரையண்டித் தமிழாலேயே வாழினும், தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்த வேண்டுமென்றே தேவை இல்லாத வடசொற்களைப் புகுத்தினர்.

வடசொல் வழக்கு

தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் செய்யுட்கு வட சொல் வேண்டியதே யில்லை. ஆனலும், வேதத்திலும் இதிகாச புராணங்களிலும் நூற்றுக்கணக்கான தென் சொற்களிருப்பதனாலும், அக் காலத்தில் வரலாற்றையும் மாந்தனூலையும் துணைக்கொண்ட மொழியாராய்ச்சி யின்மையாலும், வட மொழியிலுள்ள தென் சொற்களை யெல்லாம் வடசொல் என்றே கருதினதனாலும், வடமொழி தேவமொழியாதலால் ஒரு மொழி யினின்றும் கடன் கொள்ளாதென்னும் தவறான கருத்துப் புகுத்தப் பட்ட தனாலும்,  வடமொழி வெறியரானபிராமணர் ஒருசில வேண்டாத வடசொற் களைத் தமிழில் புதிதாகப் புகுத்தினார்.

இலக்கியத் துறை

வீட்டின்பம் அளிக்கும் இறைவனைச் சிவன் அல்லது திருமால் என்னும் பெயரில் வணங்கி வந்ததனால், தமிழரே அறம் பொருளின்பம் வீடென்னும் நாற்பொருளை வகுத்தவராவர்.சிறு தெய்வங்கட்குக் காவு கொடுத்து வேள்வி வளர்க்கும் ஆரியர்க்கு, விண்ணுலகப் பேறேயன்றி வீடுபேறில்லை.

ஒரு நாடகக் கதையை அல்லது பனுவலைஅமைக்கும் போது அல்லது இயற்றும் போது, அக் கதைதலைவனின் குலத்திற் கேற்பப் பொருளை வகுக்க வேண்டுமன்பது, நூன்முறை யாகிவிட்டது. இதைக் கழகப் பாண்டியருள் ஒருவனும் நாடக நூலாசிரியனுமான மதிவாணனும் கடியாது மதிவீணனாயினன்.  

                                                                                                                   தொடரும்.............

நாம் யார் -25

பாகம்-24 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பிராமண வுயர்த்தம்

தொடக்கத்தில் பூணூலும் குண்டிகையும் முக்கோலும் மணையும் கொண்டு திரியும் நாடோடிப் பிராமணர்க்கும், பின்னர் வேத மோதிய எல்லாப் பிராமணர்க்கும், தமிழ்த் துறவியர்க்குரியஅந்தணன் முனிவன் என்னும் பெயர்களை மட்டுமன்றி,இறைவனுக்குரிய பகவன் கடவுள் என்னும் பெயர்களையும், ஆரியரும் தமிழரும் வழங்கத்தலைப்பட்டு விட்டனர்.

தம்மை அந்தணரென்று பெருமையாகச் சொல்லிக் கொண்ட கபிலர், வேதம் ஓதினவரோ இல்லையோ . பொதுவாக, பார்ப்பான் என்னும் பெயர் இல்லறத்தார்க்கும் , அந்தணன் என்னும் பெயர் துறவறத்தார்க்கும் உரியனவாகும். வேள்வித்துறை முற்றிப் பார்ப்பன வாகை சூடிய,சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனும், அந்தணன் என்னும் பெயரை மேற்கொள்ளவில்லை.

நால்வரணம் நிலைநாட்டப்பட்டது

நால்வரணக் கொள்கையை நன்றாக நாட்டுதற்கு, மதுரைக் கோட்டை மதில் நான்கிலும், வெண்மை செம்மை பொன்மை கருமை ஆகிய நானிற வரணப் பூதவடிவுகளும், முறையே வரையப்பட் டிருந்தன.

நாடகம் பார்ப்பவர் அனைவரும் காணுமாறு, நால்வரணப் பூதங்களையும் வரைந்த வண்ணப்படம் நாடக அரங்கின் மேல் வைக்கப்பட்டது.

தொழிலாளரைத்தாழ்த்தல் 

பாண்டியன் பெயரொடு வரிசை பெற்றவனாயிருந்தும், "விலங்குநடைச் செலவு" என்னுந் தொடருக்கு, "இழிகுலத் தோனாதலின்,உயர்ந்தோர் வந்தவிட மெங்கும் விலங்கிநடத்தல்." என்று குறிப்புரைகாரரும், "மேன்மக்களைக் கண்டு ஒதுங்கி நடத்தல்" என்று அடியார்க்கு நல்லாரும் உரை வரைந்துள்ளனர். இதனால், அக்காலத்திலேயே, ஆரியர்ச்சூழ்ச்சியால் சில தமிழ் வகுப்பாரிடைப்பிணக்கேற்பட்டிருந்ததாகத் தெரிகின்றது.

தனியின வாழ்வு (Apartheid)

பிராமணர் தமிழரொடு கலந்து குடியிராது, தனித் தெருவிலும் தனிச் சேரியிலும் தனியூரிலுமேகுடியிருப்பது வழக்கம். அவர் தம் குடியிருப்புப் பகுதியை அக்கிரகாரம் என்பர். மயிலைநாதர்அதைப் பார்ப்பனச் சேரி என்பர். பிராமணர் குடியிருப்பிற்கு வேந்தர் கொடுத்த தனியூர் சதுர்வேதிமங்கலம் எனப்படும். மதுரைக்குக் கிழக்கேயுள்ள வேம்பற்றூர், கடைக்கழகக் காலத்தில் பிராமணர்க்குப் பிரமதேயமாகக் குலசேகரன் என்னும் பாண்டியனால் கொடுக்கப்பட்ட தென்றும்,அதனால் அது குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றதென்றும் சொல்லப்படுகின்றது.வேந்தர் அரசியலதிகாரிகட்குப் பட்டம் வழங்கும்போதும், பிராமணர்க்குப் பிரமராயன் அல்லது பிரமமாராயன் என்று வழங்குவதே மரபு.எல்லா வகையிலும் பிரிந்தும் தனித்தும் வாழ்வதே பிராமணர் வழக்கம். சுடுகாடு கூட அவர்க்குத் தனியாகவுண்டு.

இனங்காத்தல்

சேரன் செங்குட்டுவன் தன் வடநாட்டுச் செலவிடையில் நீலமலையில் தங்கியிருந்த போது,சில வழிப்போக்குப் பிராமணர் அவனிடம் சென்று,தம்மை வானியங்கும் சித்தர்போல் காட்டி, "நீபனி மலைக்குச் செல்வதாயின், அங்குள்ள பிராமணரைக் காத்தல் வேண்டும்" என்றுகட்டளையிட்டுச் சென்றனர். முத்தமிழ் நாட்டாருள்ளும் பிராமணர்க்கு முந்தியடிமைப்பட்டவரும் முற்றும் அடிமைப் பட்டவரும் சேரநாட்டாரே.

நூற்றுக்கணக்கினரும் ஆயிரக்கணக்கினருமான பிராமணர் கொழுக்க வுண்டு காலங் கழிக்குமாறு, வேந்தரைக் கொண்டு பெரு வேள்விகள் வேட்பதும் வேட்பிப்பதும், இனங்காத்தலை ஒரு பயனாகக் கொண்டதே.

                                                                                                 தொடரும்..............................

Thursday, March 8, 2012

நாம் யார் -24

பாகம்-23 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

கட்டியர்

கங்கநாட்டிற்குக் கிழக்கிலிருந்தபண்டைக் குணகொங்குப் பகுதியைக் கங்கர்ஆண்டுவந்ததாகத் தெரிகின்றது.

வடக்கில் பல்லவர் தலையெடுத்த பின்பும், தெற்கில் அதிகமானர் கை தாழ்ந்த பின்புமே? கங்கநாடும் கட்டிநாடும் தெற்கே தள்ளி வந்திருத்தல் வேண்டும்.

காவிரிப்பூம்பட்டினம் கடலில்மூழ்கியது

சேரன் செங்குட்டுவன் பத்தினித்தெய்வத்திற்குப் படிமை நிறுவி விழா வெடுத்தபின், காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது.அன்றோ அதற்குச் சற்றுமுன்போ குமரியாறும் கடலுள்மூழ்கிற்று. அதன்பின் தமிழகத்தின் தென்னெல்லையும் கடலாயிற்று.

கடைக்கழக் கால வாணிக வளர்ச்சி
நில வணிகமும் நீர்வணிகமும் கடைக்கழகக் காலத்தில் பெரு வளர்ச்சி யடைந்திருந்தது.

சட்டை யணிந்த வரும் பாதக்கூடு (boots) மாட்டிய வருமான மேலையாசியரும் மேனாட்டாரும், மிளகு பொதிகள் கொண்டு செல்லும் கோவேறு கழுதைச் சாத்தொடு கூடி, மலைபடு செல்வமுல் கடல் படு செல்வமுமான பல அரும்பொருள்களை, அரசன் நிறுத்தியவிற்படைஞர் இரவும் பகலுங் காத்திருக்கும் சுங்கப்பெருவழிகளிற் சென்று விற்றுத் திரிந்தனர்.

கடாரம் (பர்மா ) , மலையா முதலிய கீழை நாடுகட்கும், சுமதுரை சாலி (சாவகம்) முதலிய கீழைத்தீவுகட்கும், நீர்வாணிகர் சென்று வணிகம் செய்து வந்தனர். அவர் இக்காலத்து நாட்டுக்கோட்டைச் செட்டிமார்போல் தங்கள் குடும்பங்களை இங்கேயே விட்டுச் சென்றனர்.

கீழ்கரை யிலிருந்த கொற்கை தொண்டி புகார் முதலிய துறை நகரங்களுள், புகார் மிகப்பெரிதாகவும் உலகிலேயே தலைசிறந்த தாகவும் இருந்தது. அது காவிரிக் கயவாயில் அமைந்த அழகிய துறைநகரமாதலால் காவிரிப்பூம்பட்டினம் என்றும், அவ்வாறு கடலிற் புகும் இடத்திலிருந்ததனால் புகார் என்றும் பெயர் பெற்றது. துறைநகரைப் பட்டினம்என்பது பண்டை வழக்கு.  

பாண்டியன் உரோம நாட்டுத் தொடர்பு

பாண்டியன் அகத்தசு (Augustus-கி.மு.44 - கி.பி.14) என்னும் உரோம நாட்டுப் பேரரசனுக்குத் தூது விடுத்ததாகவும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏற்கெனவே இரு நாடுகட்கும் இடையே இருந்த வாணிகத்தொடர்பொடு

தூதாண்மைத் தொடர்பும் ஏற்பட்ட தன் விளைவாக, ஒரு சிறு உரோமக் குடியேற்றம் மதுரையில் அமைந்ததாகவும், பாண்டியன் மெய் காவற்படை உரோமப் பொருநரைக் கொண்டிருந்ததாகவும் தெரிகின்றது. மதுரை மாநகர்க் கோட்டை வாயிலையும், கோவலன் காலத்தில் உரோமப்படைஞர் காத்து நின்றது.

ஏமாற்று

நோயால் இறந்த அரசருடம்பைப்பிராமணன் தருப்பையிற் கிடத்தி வாளால் வெட்டி, அவருயிரை விண்ணுலகத்திற் கேற்றும் வாள் போழ்ந்தடக்கலும்; பாலைக் கௌதமனார், பத்துப் பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வி வேட்கையில், தம் மனைவி யாருடன் விண்ணுலகடைந்தா ரென்பதும்; பாண்டியன் அரசியற் பணியாளர் வார்த்திகனைச் சிறையிலடைத்தவுடன், காளிகோயிற் கதவம் தானே சாத்திக்கொண்ட தென்பதும் துணிச்சலான ஏமாற்றுவினைகளாம்.

பொருள் கவர்வு

தமிழ வேந்தரின் பொற்செல்வப் பெருக்கையும் ஏமாளித் தன்மையையுங் கண்ட பிராமணர், அவரிடமிருந்து இயன்றவரை பொன்னும் நிலமும் பறிக்கத் திட்டமிட்டுப் பதினாறு தானங்கள் வகுத்துள்ளனர். அவையாவன:

(1)துலாபுருடதானம் ஆள்நிறைப் பொற்கொடை.
(2)இரணிய கருப்பதானம் பொற் கருப்பைக் கொடை.

(3) 
பிரமாண்ட தானம் பொன் நிலவுருண்டைக் கொடை.
(4) 
கல்ப பாதப தானம் விண்மரப் பொற்கொடை
(5) 
கோசகசிரம் ஆயிர ஆக் கொடை.
(6) 
இரணிய காமதேனு தானம் பொன்னாக் கொடை.
(7) 
இரணியாசுவ தானம் பொற்குதிரைக் கொடை.
(8) 
இரணியாசுவரத தானம் பொற்குதிரைத் தேர்க்கொடை.
(9) 
ஏமாத்தித தானம் பொன்யானைத் தேர்க் கொடை.
(10) 
பஞ்சலாங்குல பூதானம் ஐயேர் நிலக்கொடை.
(11) 
தரா தானம் பொன்நிலக் கொடை.
(12) 
விசுவ சக்கர தானம் வியனுல காழிப் பொற்கொடை.
(13) 
மகா கல்ப லதா தானம் பெருவிண்கொடிப் பொற்கொடை.
(14) 
சப்த சாகர தானம் எழுகடற் கொடை.
(15) 
இரத்தினதேனு தானம் மணிப்பொன் னாக்கொடை.
(16) 
மகா பூத கடதானம் ஐம்பூதப் பொற்கலக் கொடை.

 எழுகடற் கொடை என்பது நன்னீர்,உவர்நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு ஆகியவற்றை எழு குண்டங்களில் நிரப்பிச்சடங்குசெய்து கொடுப்பது.

பிராமணருக்குக் கொடுக்கும் நிலத்திற்குப் பிரமதாயம் என்றும்,ஊர்க்குப் பிரமதேயம் என்றும் பெயர்.

                                                                                                   தொடரும்..............................