பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.
முக்குழியாட்டம்
சேலம் வட்டார முறை
விளையாடும் முறை : சென்ற பதிவில் சொன்ன இரு குழியாட்டமும் முக்குழி யாட்டமும் ஒன்றே ,இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமை யுண்டு.
திருச்சிராப்பள்ளி
(1) கருவி : இருகுழி
(2) முறை : மூட்டல் ஒரே தள்
(3) பெயர் : இஷ்டம் அல்லது கிசேபி வெளிமட்டு 'லைன்' அல்லது 'லாக்கு'
தெல் விளையாட்டு
தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.
கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி விளையாட்டு வகையாலும் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு.
ஆயினும், கருவி வேறு பாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறு பட்டதாம்.
தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.
தெல்லுக்காய்( சூட்டுக்கொட்டை )குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெறிக்கப் படுவது என்னும் பொருட் காரணத்தை யுடையது.
முக்குழியாட்டம்
சேலம் வட்டார முறை
விளையாட்டின் பெயர் : சுவரடி யரங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழி வைத்தாடும் கோலியாட்ட வகையே முக்குழியாட்டம்.
விளையாடும் முறை : சென்ற பதிவில் சொன்ன இரு குழியாட்டமும் முக்குழி யாட்டமும் ஒன்றே ,இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமை யுண்டு.
திருச்சிராப்பள்ளி
(1) கருவி : இருகுழி
(2) முறை : மூட்டல் ஒரே தள்
(3) பெயர் : இஷ்டம் அல்லது கிசேபி வெளிமட்டு 'லைன்' அல்லது 'லாக்கு'
சேலம்
(1) கருவி :முக்குழி
(2) முறை :மூட்டல் 3 தள் வரை
(3) பெயர் : முக்குழியாட்டம் வெளி டிப்பு கீர் அல்லது கீறு
தெல் விளையாட்டு
தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.
கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி விளையாட்டு வகையாலும் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு.
ஆயினும், கருவி வேறு பாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறு பட்டதாம்.
![]() |
தெல்லுக்காய் |
இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது
இரு கருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர்
வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும் போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும் போது அது மேனோக்கி நிற்கும்.
இரு கருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர்
வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும் போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும் போது அது மேனோக்கி நிற்கும்.
தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.
தெல்லுக்காய்( சூட்டுக்கொட்டை )குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெறிக்கப் படுவது என்னும் பொருட் காரணத்தை யுடையது.
தொடரும்.....................
No comments:
Post a Comment