பாகம்-1 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
மொத்தத்தில் இவர் தான் முதல் சர்ச்சைக்குறிய
இறுதிகாலம் கொண்ட போராட்ட வீரன்..
பூலி
சந்தித்த போர்கள்
1755-ஆம் ஆண்டு
கப்பம் கட்டாத பாளையக் காரர்கள் மீது , கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படையும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் தாக்குவதற்குப் புறபட்டது.
இதுவரை பூலி முயற்சியால்
பாளையக்காரர்களின் மத்தியில் ஒற்றுமை
நிலவியது , கும்பினிப் படையை பார்த்த உடன் பாளையக்காரர்களில் ஒவ்வருவராக தனக்கு ஏன் வம்பி என ஒதுங்கி கொண்டானர்.
கும்பினிப் படையும் நவாபு படைகளும் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் பயன்படித்தி பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். பூலியின் படைகள் கோட்டையை விட்டு வெளியில்
வரவில்லை , கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.
இந்த
சமயத்தில் ஆங்கிலேய படைகளிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இதை தெரிந்து கொண்ட பூலி மன்னர் உடனடியாக
கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து
சின்னாபின்னமாக்கினார்.
போரில்
தோற்ற ஆங்கிலேயர்கள் மறுபடியும் வருவார்கள் என உணர்ந்த பூலி , மீண்டும்
பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்கிறார்.
ஆனால் பூலி யின் முயற்சி நிறைவேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள்.
சூடுபட்டு போன ஆங்கிலேயர்களும் , நவாப்பும், பாளையக் காரர் சேர்த்து கொண்டு சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம்ஒப்படைத்தனர். பூசுப்கான் பிறப்பால்
மருதநாயகம் என்ற தமிழன்
1755-ஆம் ஆண்டு
நெற்கட்டும் செவல் கோட்டை மீது மாபூஸ்கான் தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.
1756-ஆம் ஆண்டு களக்காடு கோட்டை மீது மாபூஸ்கான் தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.
1757-ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் கோட்டை மீது ஆற்காடு நவாபின் தம்பி தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.
1760ஆம் ஆண்டு
மீண்டும் நெற்கட்டும் செவல் கோட்டை மீது பூசுப்கான் தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.
1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள்
யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பல ஆண்டுகள் போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில்
இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின்
கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயப் படை மெல்ல முன்னேறி தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்கு தப்பிச் சென்றார்.
1762-ஆம் ஆண்டு கோட்டையை விட்டு சென்றா பூலி ரகசியமாக படைகளைத் திரட்டு மீண்டும் தனது கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
1766ஆம் ஆண்டு வாசுதேவ
நல்லூர்க் கோட்டை கேப்டன் பௌட்சன் தலைமையில் ஆன படைகள் முற்றுகையிட்டன.இறுதியில் பூலியே வென்றார்.
1767 ஆம் ஆண்டு ஒரு முறை
தோற்ற போன பூலி , பல முறை தோற்று போன ஆங்கிலேயர் ஒரு குறிகிய
நிலப்பரப்பு உள்ள பாளையத்தை
காப்பற்ற ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர்.
இத்தகைய
பெரும்படையை பூலித்தேவர் நிலைத்து நின்று
போரைத் தொடர்ந்துள்ளார் . ஆனால்
ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் பூலியின்
வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி பூலி தப்பிச் சென்றார்.
பூலியின்
கைது
தப்பிச் சென்றா பூலியை ஆங்கிலேயர்கள் தீவிரமாகத் தேடினர். இறுதியாக பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டார்.
பூலியின் இறுதி
பூலியின் மறைவு என சொல்ல முடியாது , முதல் சர்ச்சைக்குரிய மறைவு இவருடையது, கைது செய்யப்பட்ட பூலியை பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்"
ஆனார் என்ற ஒரு
நம்பிக்கை நிலவுகிறது , ஆம் இன்றும்
சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு
இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மாற்று
கருத்து உள்ளவர்கள் ,பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு
தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால்
ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
நன்று
ReplyDeleteLittle Boy
ReplyDeleteவருக , நன்றி
Thanks for letting us to know the history of the Great Pooli Thevan.
ReplyDelete