Thursday, March 22, 2012

நாம் யார் -34


பாகம்-33 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

முத்தரையன் (முத்திராசு, முத்திரியன்)

வேளிர் (குறுநில மன்னர்) பதவியும் விருந்தோம்பி வேளாண்மை செய்யும் இயல்புங் கொண்ட முத்தரையர் என்னும் வகுப்பார்,6ஆம் நுறாறாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்துள்ளனார்.

அவர் தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைஆண்டு வந்தவர் என்பது, செந்தலைக் கல்வெட்டால் தெரிய வருகின்றது. பல்லவர் கீழ்ப்பட்டிருந்த சோழர், தஞ்சையை ஆண்டு வந்த பெரும் பிடுகு முத்தரையனை வென்ற செய்தி, திருவாலங் காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

இன்று தஞ்சை திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர் என்பார், பண்டை முத்தரையர்வழியினரே.

தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பிய முத்தரையர் என்னும் பட்டங் கொண்ட கள்ளர் வகுப்பினர், முத்தரையரின் படைமறவர் வழிவந்தவராகவே யிருத்தல் வேண்டும்.

கடைக்கழகக் காலத்தில் புல்லியும் பிற்காலத்தில் திருமங்கை யாழ்வாரும் போன்ற கள்வர் கோமான்கள் பலர் இருந்தமை வெள்ளிடைமலை. ஆயின், முத்தரையர் வேளிர் மரபினர் என்பதே நடுநிலை முடிபாம்.

முதலியார்

குலங்கள்

 (1) வேளாண் முதலியார் மூவேந்தர் காலத்திற் படை முதலியாராய் (படைத்தலைவராய்) இருந்தவரின் வழியினர்.

(2) செங்குந்த முதலியார் அல்லது கைக்கோள முதலியார் (சோழர் படை மறவராகவும் படைத் தலைவராகவும் இருந்தவரின் வழியினர்).

(3) அகம்படிய முதலியார் (கொத்தவேலை செய்பவர்).

பட்டங்கள்

(1) இலங்கை யரசியலார் வழங்கும் சிறப்புப் பட்டம்.

(2) தஞ்சை மாவட்டச் சமணருள் ஒரு சாரார்க்கு வழங்கும் பட்டம்.

வண்ணான்

பெயர் விளக்கம் - ஆடைகளை வெளுத்து வண்ணமாக்குபவன்.

பெயர்கள் - வண்ணான், வண்ணத்தான், ஈரங்கொல்லி (ஏகாலி), காழியன்.

பிரிவு - இடம் பற்றியது. பாண்டிய வண்ணான், சோழிய வண்ணான், கொங்க வண்ணான்.

நிலைமை பற்றியது: தீண்டுவான் , தீண்டாதான்.

வல்லம்பன்

இடம் - தஞ்சை திருச்சிராப்பள்ளி மதுரை மாவட்டங்கள்.

தொழில் - பயிர்த்தொழில்.

தலைவன் பட்டம் - சேர்வைகாரன்.

குலப் பட்டம் - அம்பலகாரன்.

வலையன்

பெயர் - வலையன், வலைகாரன், வேடன்,சிவியான், குருவிக்காரன்

தொழில் - வலை வைத்துப் பறவை விலங்குபிடித்தல், ஆறு குளங்களில் மீன் பிடித்தல்.

பிரிவு - பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலகாரன், கம்பளியன்.

குலப் பட்டம் - மூப்பன், சேர்வை, அம்பலகாரன், வன்னியன்.

வாணிகன்

வகை - அறுவை வாணிகன் (சவளிக்கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன்வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன் (இறைச்சிக் கடைகாரன்).

வாணியன்

வாணிகன்-வாணியன்.

வகை- (1) எண்ணெய் வாணியன், (வாணியன், செக்கான்,சக்கரத்தான்).

              (2) இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்).

பட்டம் - மூப்பன், பிள்ளை.

வில்லி

வேடருள் ஒரு பிரிவான் (வில்வேடன்).

வெள்ளாளன்

உழுதுண்ணும் வேளாளனாகிய காராளனுக்குஎதிரானவன், உழுவித்துண்ணும் வேளாளனாகிய வெள்ளாளன்.

களமன் x வெண்களமன்.

வகை- (1) பாண்டி(ய) வெள்ளாளன்.

பிரிவு - கார்காத்த வெள்ளாளன், சிவனிய (சைவ) வெள் ளாளன், கோட்டை வெள்ளாளன், நங்குடி வெள்ளாளன், அரும்பூர் (சிறுகுடி) வெள்ளாளன், நீறு பூசி வெள்ளாளன்.

(2) சோழிய வெள்ளாளன்.

(3) தொண்டைமண்டல வெள்ளாளன்.

(4) துளுவ வெள்ளாளன்.

பட்டம் - பிள்ளை.

(5) கொங்கு வெள்ளாளன்.

பிரிவு-ஆறை நாடு, ஒருவங்க நாடு முதலிய 24 நாடுகள்.

அந்துவன், ஆதி முதலிய 60 குலங்கள்.

தலைவன் பட்டம் - நாட்டுக் கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியார்

குலப்பட்டம் - கவுண்டன்.

காமிண்டன் - கவுண்டன். மிண்டு = வலிமை. மிண்டன் - வல்லோன். காமிண்டன் = காவலன், தலைவன்.

காமிண்டன் - காவண்டன் = கவண்டன்-கவுண்டன்.

(6) அகம்படிய வெள்ளாளன்.

     "கள்ளன் மறவன் கனத்ததோர் அகம்படியன்
     மெள்ளமெள்ள வந்து வெள்ளாளன் ஆனானே".

(7) காரைக்காட்டு வெள்ளாளன்.

(8) அரும்புகட்டி வெள்ளாளன்.

(9) கும்பிடு சட்டி வெள்ளாளன்.

(10) ஆறுநாட்டு அல்லது மொட்டை வெள்ளாளன்.

(11) மலைகாணும் வெள்ளாளன்.

(12) சங்குத்தாலி வெள்ளாளன்.

                                                                                                           தொடரும் ..................

2 comments:

  1. வேளாளர் பகுதியில் பறையர்கள் சேர்க்கப்படவில்லை தவிர ,பறையர்கள் ,சாம்பான் ,வள்ளுவன் பற்றிய விளக்கத்தில் பிணம் சுடுதல் அடிமை வேலை செய்தால் போன்று பதிவிட்டுள்ளீர்கள் ,அது தவறு .

    இதோ
    1.அரசர்களுக்கு குருவாக இருந்துள்ளனர் .அது தவிர சோழன் வேளாள பறையன், கோவன்புத்தூர் எனும் கோயம்புத்தூரில் நாட்டு காமுண்டன் அதாவது நாட்டு கவுண்டன் என்னுந் பட்டதோடு இருந்துள்ளனர் ,
    2. உழுபறையர்களாக இருந்துள்ளனர் ,
    3. வள்ளுவ குலா நாட்டார் என்ற பட்டத்தோடு தளபதிகளாக போர் செய்துள்ளனர்,
    4. மன்றாடியார் & சூத்திரராயர் என்ற பட்டத்தோடும் இருந்துள்ளனர்,
    5. தென்காசி பாண்டியர் அதாவது சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422 - 1463) க்கு விந்தையர் எனப்படும் சாம்பவப்பறையர் குருவாக இருந்துள்ளார்.
    6.மீன் வியாபாரி யாக இருந்த சாம்பான்
    7.காவல்பரையன் அல்லது தலையாரி பட்டம் உடைய தலையாரி பறையன்
    ஆதாரம் :- மேலே கூறப்பட்ட்ட அனைத்திற்கும் விதை பாக்கத்தில் போதிய கல்வெட்டு ஆதாரங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது
    https://www.facebook.com/vidhai.paraiyar.history/photos/a.470282873151252.1073741828.470261679820038/571374213042117/?type=3


    8. பரமத்தி அல்லாள இளையநாயகன் சாம்பவார் வள்ளுவ தம்புரானுக்கு கொடுத்த தானங்கள் உரிமைகள் குறித்த பட்டய பதிவு இந்த பட்டயத்தின் படி கி பி 1600 களின் சற்று முன் பின் கொங்கு அரைய நாட்டை ஆண்ட அல்லாள இளைய நாயகன் வள்ளுவ குல சாம்பான் குருவுக்கு தனது ஆட்சிக்கு உட்பட்ட கபிலர் மலையில் ஒரு மடம் ,பழனிமலையில் ஒரு மடம் உண்டு பண்ணி அதன் அதிகாரமும் இவரிடம் அளித்துள்ளான திருகாளத்தியில் உள்ள மடத்தின் அதிகாரமும் குஅவர்க்கு அளித்துள்ளதாக பட்டயம் கூறுகிறது . இதில் வள்ளுவ சாம்பான் தாபிரான் என்று கொடுக்கப்பட்டுள்ளது ,ஆகவே வள்ளுவளும் சாம்பாவ பறையருக்கு தம்பிரான் என்ற பட்டமும் உண்டு என்று பதிவுசெய்கிறது .
    ஆதாரம் :- https://www.facebook.com/saravanan.savaanji/posts/1666934660212482

    தயவு செய்து பறையர்,சாம்பான் செய்த தொழில்கல் & அவர்களுக்கான பட்டங்களை இங்கு திருத்தி சரியாக போடவும் அதற்காகவே இந்த ஆதாரங்களை கொடுத்துள்ளோம்

    ReplyDelete
  2. 300 ஆண்டுகளுக்கு முன் மராத்திய படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த முக்குலத்தினர் வல்லம்பர் ஆவர். அச்சமயம் காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர். பின்னர் மருது மன்னர்கள் ஆண்டபோது இப்பகுதிகளை வல்லம்பரிடமே கொடுத்தனர். இன்றைய தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராயவரம், கல்லூர், புதுப்பட்டி,கோட்டையூர், வேலங்குடி கண்டனூர் பள்ளத்தூர் போன்ற பகுதிகளில் இவர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.

    வரலாறு தொகு

    வல்லம்பரினம் வில் அம்பு வீச்சில் தனி திறமை கொண்ட சந்ததியினரால் உருவாகியதால் வில்லம்பர் என்பதே மருவி வல்லம்பர் ஆனது[மேற்கோள் தேவை]. ஒரே வில்லில் பன்னிரெண்டு அம்புகளை விடும் திறமை கொண்டு இருந்தனர். நாட்டுக்காக போரிடுவது, நாட்டின் எல்லையை காப்பது, கள்ளரிடம் திருடரிடம் மற்றும் கொள்ளையரிடம் இருந்து குடிமக்களை காப்பது என்பதே இவர்களின் தலையாய கடமைகள். சேர்வார மன்னர்களால் மகிழ்ந்து இவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதி நாடுகள் பத்து. அந்த நாடுகளில் வாழும் இவர்கள் நாட்டார்கள் எனவும் அதன் தலைவர்கள் அம்பலம் எனவும் அழைக்கப்பட்டனர்.

    அச்சமயம் கிழக்கு பகுதியில் ஏத்து நாடு 84 கிராமங்களை கொண்டது மகாண நாடு காரைக்குடியை சுற்றியுள்ள மேற்கு பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர். மருது மன்னர்கள் ஆண்டவரை இப்பகுதி இவர்கள் வசமே இருந்தது. ஆங்கிலயர்கள் வருகைக்கு பின் இவர்கள் அபாயகமானவர்கள் ஆக கருதப்பட்டு துண்டாடப்பட்டனர். கீழை நாடு மேலை நாடு என இவர்கள் அவர்கள் பாணியில் பங்காளிகளுக்குள் நாட்டார்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் மோதிக்கொண்டனர்.ஆங்கிலயர்கள் வருகைக்கு பின் இவர்கள் வில் அம்புக்கு வேலையில்லாமல் வருமானத்துக்கும் வழியில்லாமல் முழு மூச்சில் விவசாயத்தில் காணியில் இறங்கினர், பாதிப் பேரை மூளை சலவை செய்து குடும்பத்துக்கு பணத்தைக் கொடுத்து மலாயா பர்மா என ஆங்கிலயர்கள் கொண்டு சென்றனர் ஆனால் இளைய சமுதாயத்தில் பெரும்பான்மையினோர் நேதாஜியின் இராணுவப் படையில் சேர்ந்தனர் வீர மரணம் அடைந்தோர் அதிகம்.

    கொங்கு மண்டல சதகங்கள் தொகு
    கொங்கு வேளாளர் குலத்துப்பாடல்: பாடல் 3[1]

    கனமலையில் வில்லம்பர் பதுமைகுல வேளாளர்

    கனவாள ஓதாளரும்
    காவேரி நதிகுலன் ஆரியகுலத் தரும்

    காவைகுலர் ஆவைகுலரும்
    கனத்த தாரணிகுலர் சந்திரகுல ரிந்திரகுலர்

    கனவேம்பன் மேதிகுலரும்
    காரணப் பதுமைகுலர் பூரகுலர் பாண்டிகுலர்

    காரைகுலர் பூச்சைகுலரும்
    கதிர்குலவு மலையகுலர் காமகுலர் சோமகுலர்

    கதித்திடும் அழகர்குலமும்
    கனமேவு வௌ்ளிகுலர் தனியகுலர் தம்முடன்

    கற்பித்த சக்திகுலரும்
    கனத்தகுலர் பாலகுலர் பாத்தியகுலர் பரதகுலர்

    கருமேவு கொல்லிகுலரும்
    காங்கயநன் னாட்டிலுயர் பரஞ்சைநகர் விழியகுலர்

    கனவேத்தி னாககுலரும்
    கந்தமுயர் வேதகுலர்

    ReplyDelete